சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, June 25, 2013

சூடு ஆறிப் போன தில்லுமுல்லு

எப்பொழுதும் பரபரப்பாக படங்கள் பார்த்து விமர்சனங்கள் எழுதிக் கொண்டிந்த நான் இரண்டு வாரங்களாக வந்த வேலைகள் காரணமாக எழுத முடியவில்லை. எப்பொழுதாவது இது போல் நடப்பதுண்டு.


சென்ற வாரம் அம்மாவும் அப்பாவும் சென்னை வந்திருந்தார்கள். அப்பா கூட அடிக்கடி சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால் அம்மா பல வருடங்களுக்கு ஒரு முறை தான் வருவார். அவர்களுக்காக அபிராமி மாலில் ரீக்ளைனர் டிக்கெட் வாங்கி தில்லுமுல்லு படம் பார்த்தேன். அந்த சீட்டில் அமர்ந்து படம் பார்த்ததில் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம். வித்தியாச அனுபவமும் கூட. எனக்கு அதுவே போதும்.

படம் பார்க்கும் போது பயமாகவே இருந்தது. பழைய தில்லுமுல்லுவை போட்டு குழப்பியடித்திருப்பார்களோ என்று நினைத்தேன். அதுபோல் இல்லாமல் காப்பாற்றியதே படத்தின் வெற்றி.


படம் துவங்கும் முன்பே பழைய தில்லுமுல்லுவை மனதிலிருந்து கழற்றி வைத்து விட்டேன். ரஜினி, தேங்காய் சீனிவாசன், மாதவி, கிளாசிக் காமெடி என எல்லாமே நினைவில் இருந்தால் படத்தினை ரசிக்க முடியாது.

படத்தின் சீன்களை ஒரளவுக்கு பழைய படத்திலிருந்து மாற்றி யோசித்து இருக்கிறார்கள். கதை கருமாந்திரம் எல்லாம் எதுக்கு அதான் பழைய தில்லுமுல்லுவிலேயே தெரியுமே.

சிவாவின் நடிப்பு சென்னை 600028 படத்திலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்படத்தை ரசித்துப் பார்த்தேன். கலகலப்பில் கூட சந்தானம் வரும் வரை படத்தை காப்பாற்றியவர் சிவா தான். ஆனால் இந்த படத்திலும் அதே பாணி நடிப்பு எனக்கு லேசாக அலுப்புத் தட்ட ஆரம்பித்து இருக்கிறது. ஸ்டைலை மாற்றிக் கொள்ளாவிட்டால் கஷ்டம் சாரே.


இஷா தல்வார் தட்டத்தின் மறயத்து படத்தில் பிரமாதமாக நடித்து இருந்தால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் வரும் முத்துச்சிப்பி போலோரு என்ற பாடலை என் செல்லில் டவுன்லோடிட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து ரசித்து வருகிறேன்.

ஆனால் அதே தல்வார் இந்த படத்தில் சற்று ஙொய் என காட்சியளிக்கிறார். இரண்டிற்குமான வித்தியாசம் என்னவென்றால் அந்த படத்தில் சற்று வெட்கத்துடன் இருப்பதும் இந்த படத்தில் நாம் மாதவியுடன் அவரை ஒப்பிட்டுப் பார்ப்பதும் தான். வெட்கப்படும் பெண்ணை எந்த ஆணுக்குத் தான் பிடிக்காது. இனி அவரின் நினைவுகளுக்கு எனக்கு முத்துச்சிப்பி பாடல் மட்டும் போதும்.

பிரகாஷ்ராஜ் முருக பக்தராக வழக்கம் போல் அடவு கட்டுகிறார். பெரிய மனிதர் போலவும் அதே சமயம் சற்று அம்மாஞ்சி போலவும் நடிப்பது சற்று சிரமம் தான். ஆனால் இரண்டையும் அலேக்காக தூக்கிச் சாப்பிடுகிறார்.


கோவை சரளா சென்னை ஸ்லாங்கில் வெளுத்துக் கட்டுகிறார். நாக்கில் அலகைக் குத்தி பேச சிரமப்படும் போது சற்று சத்தமாகவே சிரித்தேன். அது போல் இளவரசுவும் சில காட்சிகளில் நகைக்க வைக்கிறார்.

பரோட்டா சூரி வருகிறார் சற்று கலங்கலான போட்டுக் கொடுத்தல் வேலையை செவ்வனே செய்கிறார். பழைய தில்லுமுல்லுவில் வரும் சிறுவன் கதாபாத்திரத்தின் மாற்று வடிவமைப்பு தான் இந்த பாத்திரம்.

படத்தின் மிகப் பெரும் பலங்களில் ஒன்று சிவாவின் டயலாக் காமெடிகள் பூரிக்கிழங்குக்காக புருஸ்லீ மேல சத்தியம் என பின்னுகிறார். நமக்கு அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது. இதுக்கு மேல வசனங்களை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சிபியின் ஜெராக்ஸாகத் தான் இருக்க வேண்டும்.

அது போல அந்த கணேஷ் வசந்த் காமெடி சூப்பரோ சூப்பர். மாடியில் ஏறி அடிவாங்கும் காமெடி சற்று மொக்கை என்றாலும் சத்தம் போட்டு சிரித்து ரசித்தேன். ஹோட்டலில் பார்சல் வாங்கிப் போகும் போது இன்னும் சிரிப்பு தான்.

இடையில் சில படங்களில் கடுப்பேற்றியிருந்த சந்தானம் எல்லாவற்றிற்கும் சேர்த்து இந்த படத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறார். வந்ததிலிருந்து படம் முடியும் வரை சந்தானம் ஆட்சி தான். அதிலும் ஆங்க்ரி பேர்ட் மூக்கன் என்ற வார்த்தை இன்று எங்கள் அலுவலகத்தில் பல பேருடைய பட்டப் பெயர்.

இதெல்லாம் படம் வெளியான அன்று பதிவிட்டு இருந்தால் படிக்க நன்றாக இருந்திருக்கும். இப்ப எல்லார் விமர்சனங்களையும் படித்த பின்பு இன்று படிக்க போராகத்தான் இருக்கும். ஆறின காப்பி சுவை சற்று குறைவாகத் தான் இருக்கும். இருந்தாலும் நறுக்குன்னு இருக்கும்னு நினைக்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்
 

20 comments:

  1. சிவா கொஞ்சம் நடிப்பு ஸ்டைலை மாத்திக்கிட்டா நல்லா இருக்கும். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நெம்ப நன்றிங்கோ

      Delete
  2. நீங்கள் சொல்வது சரிதான்.... பழைய தில்லுமுல்லுவை மனதில் வைத்துக்கொண்டே பார்த்தால் கொஞ்சம் போராகத்தான் இருந்திருக்கும்... விமர்சனம் லேட்டா வந்தாலும் நச்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  3. ஸ்வாமி, ’ஆறிப்போன’என்பது படத்தைக் குறிப்பிடுகின்றதா அல்லது லேட்டாக வந்த பதிவைக் குறிப்பிடுகின்றதா?

    ReplyDelete
    Replies
    1. நாதா, இது டூஇன் ஒன் தலைப்பு. படித்தவர்களின் மனநிலைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம்

      Delete
  4. அது மலை... இது மடு... அவ்வளவே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  5. பல வருஷம் கழிச்சு வந்த படத்தையே ரசிக்குறோம்,ஆறிப்போன பதிவை ரசிக்க மாட்டோமா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றி கோகுல்

      Delete
  6. நான் படம் பெயருக்கு ஏற்றபடி கொஞ்சம் தில்லு நிறைய முல்லு என்று எழுதினேன் யாரோ ஒரு anonymous நண்பர் கடித்து குதறிவிட்டார்..இனிமே படம் நால்லா இல்லைஎன்றாலும் சூப்பர் என்று எழுத வேண்டும் போல்....என்ன கொடுமையோ?

    ReplyDelete
    Replies
    1. அடையாளம் தெரியாமல் கலாய்க்கும் போது கோழைகளுக்கு கூட வீரம் பொத்துக் கொண்டு தான் வரும். இதெல்லாம் சகஜம் என்று போய்ட்டே இருக்க வேண்டியது தான்.

      Delete
  7. ஆமாண்ணே ரொம்ப நாள் கழிச்சு விமர்சனம் பன்றிங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தம்பி, நன்றி

      Delete
  8. அப்போ இந்தப் படத்தை பார்க்கணுமே...!

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாமே

      Delete
  9. Ena than review vanthalum im waiting for urs :)

    I dont lie the movie. Only prakashraj saved the full movie .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்

      Delete
  10. விமர்சனம் கண்டுகொண்டேன். படம் பார்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...