சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, June 22, 2013

ரயில் பயணங்களில்

சமீபத்திய பதிவு : சிங்கப்பூர் வேலை வாய்ப்பு
இப்பொழுது எல்லாம் ரயில் பயணம் என்பது நியாயமாக பணம் கொடுத்து செல்பவனுக்கு கிட்டாது என்றே தோன்றுகிறது. திங்கள் கிழமை சொந்த ஊரில் நடக்கும் திருமணத்திற்காக நாளை இரவு திருவாரூர் செல்ல வேண்டியிருந்தது. பல வருடங்களாகவே ஊருக்கு பேருந்திலோ அல்லது காரிலோ மட்டும் சென்று கொண்டிருந்ததால் மாறுதலுக்காக இந்த முறை ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்ய ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள முன்பதிவு நிலையத்திற்கு காலை 07.00 மணிக்கெல்லாம் சென்றேன். 


நண்பர்கள் தட்கலில் எடுக்கும் முறையே ஏற்கனவே சொல்லி அறிவுறுத்தியிருந்ததால் சீக்கிரம் சென்ற நான் அங்குள்ள கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். எனக்கு முன்னால் 80 பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். அடப்பாவிகளா என்று நினைத்துக் கொண்டு நானும் வரிசையில் நின்றேன். 7மணியிலிருந்து வரிசையில் நின்று 9மணிக்கு என்முறை வந்தது. சென்று முன்பதிவு விண்ணப்பத்தை கொடுத்தால், வெயிட்டிங் லிஸ்ட் 40 என்றார்கள். கடுப்பாகி விட்டது, அவர்களிடம் என்ன சொல்வது, முனகிக் கொண்டே வெளியில் வந்தேன்.


என் நண்பன் ஒருவனிடம் இதுபோல் டிக்கெட் எடுக்கப்போய் வந்த கதையை சொன்னேன். உடன் அவன் ஒரு ரயில் டிக்கெட் ஏஜெண்ட் நம்பரை கொடுத்து தொடர்பு கொள்ள சொன்னான். நான் அந்த நம்பரில் உள்ளவரிடம் கேட்டால் டிக்கெட் தயார் என்று் கூடுதலாக ரூ200 கொடுத்தால் டிக்கெட் கிடைக்கும் என்றும் கூறினான். இதற்கு நான் பேருந்திலேயே செல்லத்தயார் என்று கூறி விட்டு வந்து விட்டேன்.

எவ்வளவோ வட இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு அலுவல் காரணமாக பலமுறை சென்றிருக்கிறேன். அந்தப் பயணங்கள் பெரும்பாலும் நான் மட்டுமே செல்லும்படி இருக்கும். எனவே துணைக்கு மாவீரன் நெப்போலியன் அல்லது VSOP ஆகியோர் கூல்டிரிங்ஸ் பாட்டில்களில் மிக்ஸ் பண்ணி என்னுடன் இருப்பர். கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து இந்த முறை ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து அதுவும் திருமணமாகி இத்தனை நாட்களில் முதன்முறையாக என் மனைவியுடன் செல்லலாம் என்று அதுவும் மிஸ்ஸானதால் வந்த கடுப்பு இது.


சிறுவயதில் விடுமுறைக்காக திருவாரூரிலிருந்து சென்னை வந்து விடுமுறை நாட்களை மாமா வீட்டில் கழித்து விட்டு திரும்பி செங்கோட்டை பாஸஞ்சரில் மயிலாடுதுறை வரை வந்து அங்கிருந்து மயிலாடுதுறையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் ரயிலில் ஏறி திருவாரூர் செல்வோம்.

அந்தப் பயணத்தில் திருவாரூரிலிருந்து சென்னை செல்லும் போதும், சென்னையிலிருந்து மயிலாடுதுறை வரையும் உள்ள பயணம் இருட்டில் இருப்பதால் அவ்வளவாக ஈர்க்காது. ஆனால் காலை 06.00 மணிக்கு மயிலாடுதுறையில் இறங்கி பல் துலக்கிய பிறகு ரயில் நிலையத்தில் காலை சிற்றுண்டியாக இட்லி வடை அப்பா வாங்கித்தருவார். அதை ரயில் நிலையத்தில் அமர்ந்து சாப்பிடும் போது, அடடா அதன் சுவையே தனி. பிறகு 07.00 ரயில் மயிலாடுதுறையிலிருந்து புறப்படும். அது செல்லும் பாதையே மிகுந்த ரசனையாக இருக்கும்.


ஆற்றுப்பாலங்கள், இரு பக்கமும் தோப்புகள் என சுற்றுப்புறமும் அந்த காலை ரம்மியமான சூழ்நிலையும் அருமையாக இருக்கும். பிறகு +2 முடித்த பிறகு நான் படிப்பதற்காக சென்னைக்கு வந்து இங்கேயே தங்கி விட்டதாலும் பேருந்து பயணம் மட்டுமே வகுப்பு நேரத்திற்குரிய வசதியாக அமைந்து விட்டதால் அப்போதிலிருந்து பேருந்து பயணம் மட்டுமே. இப்பொழுதெல்லாம் கார் அல்லது ஆம்னி பஸ் மட்டுமே.

தற்பொழுது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை பிராட்கேஜ் பணிகள் நடப்பதால் ரயில்கள் மயிலாடுதுறையிலிருந்து கும்போணம், தஞ்சாவூர் வழியாக திருவாரூர் செல்கின்றன. மீண்டும் இந்த மார்க்கத்தில் ரயில் பயணம் துவங்கிய பின்பே நான் அந்த பயண சுகத்தை அனுபவிக்க முடியும்.


ஆரூர் மூனா செந்தில்

 டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு, இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியது. ரயில் முன்பதிவு சிக்கல்களில் இன்று வரை மாற்றமில்லை.

19 comments:

  1. அதே அதே... (ஆ)அப்படித்தான்...

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி நன்றி தனபாலன்

      Delete
  2. எனக்கும் ரயில் பயணம் எட்டாக்கனியே! என்ன பண்ணலாம்.., சொந்தமா ஒரு ட்ரெயின் வாங்கிடலாம்ன்னு இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி வாங்கினா எனக்கு இஞ்சின் டிரைவர் வேலை போட்டுக் கொடுங்க

      Delete
  3. செந்தில் அண்ணா ,

    எழுதுவதை ரொம்ப குறைத்து விட்டிர்கள் ,நேரம் இருக்கும் பொது அடிக்கடி எழுதுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி காயத்ரி. மூன்று வாரமாக சொந்தக்காரர்கள் திருமணம், கிரகப்பிரவேசம், மருத்துவமனை என வேலை இருந்ததால் எழுத முடியவில்லை. இனி கண்டிப்பாக எழுத முயற்சிக்கிறேனம்மா.

      Delete
  4. ஹாஹா எங்க போனாலும் நெப்போலியன விட மாற்றின்களே அண்ணே

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது நண்பா, 15 வருட நண்பன், விட்டுக் கொடுக்க முடியாதே.

      Delete
  5. Ena Thala cinema reviewa kannom pls panunga . Unga rasiganin anbu vendukoooooool :P

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், சில வாரங்களாக வேலைப்பளு, கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.

      Delete
  6. //ரூ200 கொடுத்தால் டிக்கெட் கிடைக்கும் என்றும் கூறினான். இதற்கு நான் பேருந்திலேயே செல்லத்தயார் என்று கூறி விட்டு வந்து விட்டேன்.//

    பேருந்தில் VSOP கலந்து குடிப்பது மட்டும் ரொம்ப நியமான செயலா ??நீங்கள் செய்ததை போல், எல்லாரும் செய்ய ஆரம்பித்தால் பேருந்து/ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்பதை யோசியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி, குடிக்காமல் முன் வரிசையில் உள்ள பெண்மணியின் காலை சுரண்டினால் ஒத்துக் கொள்வீர்களா, குடிகாரர்களில் சிலர் மட்டுமே சலம்புபவர்கள். நல்லவன் கெட்டவன் என்பது நடத்தையில் உள்ளது. அதை மட்டும் புரிந்துக் கொள்ளுங்கள்.

      Delete
    2. மிகச்சரி! நீங்கள் சொல்வது போல நடத்தையில்தான் எல்லாமே உள்ளது. ஆனால் செய்யும் செயல் நல்லதாகவும் இருக்க வேண்டும் அல்லவா? மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதற்காக நீங்கள் பேருந்தில் அவ்வாறு செய்வதென்பது அபத்தம். அதுவே மற்றவர்க்குக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும் இல்லையா?

      Delete
  7. பஸ் கட்டணத்தை விட குறைவு என்பதால் எப்போதும் பயணிகள் அதிகம் ரயிலை விரும்புகின்றனரோ? எனக்கும் ரயில் அலர்ஜியாகிவிட்டது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
  8. ஆமா நீங்க railway -இல் தானே வேலை செய்றீங்க.. உங்களுக்கே இந்த நிலைமையா?..

    online option முயற்சி செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. அட இது வேலையில் சேர்வதற்கு முன்பு அதாவது மூன்று வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம், இப்பல்லாம் EQ தான்.

      Delete
  9. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'உங்கள் எழுத்துகளில் யதார்த்தம் இருக்கிறது.. சுவராஷ்யம் குறையாமல் உள்ளது.. உண்மையை அப்படியே போட்டு உடைக்கிறீர்கள்.. அந்த வகையில் ரசித்துப் படிக்க முடிகிறது.. தொடர்ந்து எழுதுங்கள்..!

    வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்கம் பழனி

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...