சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, June 17, 2013

பஞ்சேந்திரியா - திருவாரூர் அலப்பறைகளும் க்கூ கவிதைகளும்

ஒரு வாரம் தொய்வு விழுந்தால் மீண்டும் எழுதுவதற்கு மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. சென்ற வாரம் ஊருக்கு சென்றிருந்ததால் இணையம் பக்கம் வர முடியவில்லை. வெள்ளி முதல் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன், எழுதுவதற்கு வாய்ப்புகள் பிடிபடவேயில்லை. எனவே தான் இன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சேந்திரியா.


சென்ற வாரம் இரண்டு திருமணங்கள் ஊரில் நடந்தன. மிக நெருங்கிய நண்பனின் திருமணம் ஒன்று, அத்தைப் பையனின் திருமணம் மற்றொன்று. பல வருடங்களுக்கு பிறகு பல நண்பர்களையும் சொந்தக்காரர்களையும் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி தான்.

முதல் திருமணம் திருவாரூரிலும் மற்றொரு திருமணம் திருப்பனந்தாளிலும் ஒரே நாளில் இரண்டு மணிநேர வித்தியாசத்தில் நடந்தன. காலையில் அவசர அவசரமாக முதல் கல்யாணத்தை முடித்து அடுத்த திருமணத்திற்கு காரில் சென்று இரண்டு பக்கமும் நல்ல பெயரை வாங்கி விட்டோம்.


நண்பனின் கல்யாணம் காதல் திருமணமானதால் இரண்டு வீட்டினரிடமும் பெரிய ஈடுபாடில்லை. நாங்களே எல்லா வேலைக்கும் முன்னிற்க வேண்டியிருந்தது. முதல் நாள் நள்ளிரவில் மாப்பிள்ளையின் அண்ணனையும் மண்டபத்தை விட்டு துரத்தும் அளவுக்கு பிரச்சனை.

முதல் கல்யாணம் நல்லபடியாக முடிந்ததும் அத்தைப் பையனின் திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பனந்தாளுக்கு சென்றோம். அம்மாவும் அப்பாவும் முதல்நாளே சென்று இருந்தனர். நானும் தம்பியும் மட்டுமே காரில் சென்று சரியான நேரத்தில் அடைந்தோம். முழுவதும் உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


பல வருடங்கள் கழித்து ஒன்று கூடியதால் மற்றவர்களுடன் அளவளாவியதே பெரிய மகிழ்ச்சியை தந்தது. அந்த திருமணத்தை முடித்து விட்டு நானும் தம்பியும் மட்டும் திருவாரூர் திரும்பினர். அம்மாவும் அப்பாவும் மாப்பிள்ளையின் ஊரான கன்னியாக்குறிச்சிக்கு சென்றனர். மறுநாள் கறிவிருந்தும் வரவேற்பும் அங்கு ஏற்பாடாகியிருந்தது.

மறுநாள் காலையிலேயே தம்பிகள் மற்றும் மச்சான்கள் ஒன்று கூடியிருந்தனர். கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது. பெரியப்பா மற்றும் சித்தப்பாகள் தனியாவர்த்தனம் வாசிக்க நாங்கள் அந்த போக்குவரத்தே இல்லாத கிராமத்தில் இருந்த கடைக்குள் நுழைந்தோம்.


இதில் பெரிய போதை அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நெருங்கிய சொந்தங்களுடன் இதுபோல் நேரத்தை செலவிடுவது பல வருடங்களுக்கு நினைவுகளை சுமக்க வசதியாக இருக்கும்.

அத்தைகள், மாமன்கள், சித்தப்பாக்கள், சித்திகள், பெரியப்பா, பங்காளிகள், மச்சான்கள் என அனைவரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டு இருந்தோம். கறிவிருந்தும் பிரமாதம். இதற்கென இரண்டு மாதங்களுக்கு முன்பே 20 ஆடுகள் வாங்கி வளர்க்கப்பட்டன. மட்டன் பிரியாணி, ரத்தப் பொரியல், தலைக்கறி கூட்டு, சிக்கன் கிரேவி, மீன் வறுவல் என ஏக தடபுடல் தான்.


அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு அத்தைப் பையனின் திருமணத்தில் கலந்து கொள்ளும் வரையில் இந்த சந்திப்பு எங்கள் சொந்த பிணைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

----------------------------------------------------------------

லிங்குசாமியின் லிங்கூ என்ற ஹைக்கூ என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டாலும் வெளியிட்டார். முகநூலில் எல்லோரும் ஒரு இக்கூவை வைத்து தாளிக்க ஆரம்பித்தனர். நானும் என் பங்குக்கு தாளித்தது இது. இனிமேல் யாரும் க்கூ என்று புத்தகம் வெளியிடவே மாட்டார்கள்.

செல்வின் சிங்கூ, மெட்ராஸ் பவன் சிவா சிங்கூ, நாகராஜசோழன் நாங்கூ, கேபிள் சங்கூ, கேஆர்பி செங்கூ, பட்டிக்காட்டான் ஜெய்கூ, நக்கீரன் நங்கூ, கோகுலத்தில் சூரியன் வெங்கட் வெங்கூ என போட்டு தாளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பயணித்தேன் அவள் நினைவுடனே
பேருந்து நிறுத்தம் வந்தது கூட தெரியாமல்
தூரத்தில் நடத்துனர் குரல்
சாவுகிராக்கி ஸ்டாப்பிங்ல இறங்க மாட்டியா # செங்கூ

பள்ளி செல்லும் குழந்தை
அப்பாவிடம் கேட்டு வாங்கி
போட்டு சென்ற சப்பாத்துவை
விளையாடும் போது தொலைத்து விட்டு
வெறும் காலில் நடந்து வந்து
வாங்கப் போவது அடியா உதையா? # செங்கூ

வெயிலில் அலைந்து
ஊரெல்லாம் திரிந்து
விதைநெல் வாங்கி வந்து
வயலைப் பார்த்தால்
நிலமெல்லாம் களை # செங்கூ

கொட்டும் மழையில்
ஓடும் ரயிலில்
ஜன்னலோரத்தில்
சாரலில் நனைந்து
கொண்டே நான் # செங்கூ

மாடு போட்டா சாணம்
அதுவே ஆடு போட்டா புழுக்கை
அவ்வளவு தான் வாழ்க்கை # செங்கூ

ரெண்டு நாளைக்கு முன்னாடி
முந்தாநாளாம்
இன்னையிலிருந்து ரெண்டு நாள்
கழிச்சி நாளன்னைக்காம் # செங்கூ

சைக்கிளை ஓட்டி இறங்கி
கீழப் பாத்தா தரை
வெறும் கட்டாந்தரை # செங்கூ

பக்கத்து வீட்டு பாப்பா
இருப்பா ரொம்ப கருப்பா
இதைப் பத்தி சொன்னா
என்னைப் பாத்து மொறைப்பா # செங்கூ

மூத்திர சந்தில் மல்லிகை வாசம்
ஜாஸ்மின் செண்ட்டு போட்டு
ஒன்னுக்கடிச்சவன் யாரோ # செங்கூ

இன்று நல்லபடியாக துவங்கியிருக்கிறேன் இந்த வாரத்திற்குள் இன்னும் மூன்று பதிவாவது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்

ஆரூர் மூனா செந்தில்


22 comments:

  1. அண்ணேன்...ஆரூர் அண்ணேன் .. உங்க செங்கூ கவிதைகள் அத்தனையும் அருமை ..இப்படி நீங்க நிறைய எழுதி ஜப்பானுக்கு அனுப்புங் அவிங்கதான்..ஹைக்கூ ஹைக்கூ னு குதிக்கிராயிங்க...இதப்படிச்சானுங்க அப்புறம் குதிக்கவோ நடக்கவோ மாட்டாயிங்க...

    ReplyDelete
    Replies
    1. சரிதான் அண்ணே, நாளைக்கு போஸ்ட் பண்ணிடுவோம்

      Delete
  2. முதல் ஃபோட்டோவுல இப்படி முறைச்சுக்கிட்டு ஃபோஸ் குடுக்குறீங்களே பக்கத்துல இருக்குற பாப்பா பயப்படலியா?!

    ReplyDelete
    Replies
    1. அது என் தம்பி மகள் தான். நம்மளைப் பார்த்தா அவளுக்கு காமெடி பீஸாதான் தெரியும்

      Delete
  3. நினைவுகளும் செங்கூ கவிதைகளும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
  4. சிவாவின் பெயர் சிவகூ என்று மாற்ற பட்டுள்ளதை பதிவு செய்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு, நானும் மக்களுக்கு இதை வழிமொழிகிறேன்

      Delete
  5. இனிய நினைவுகள்... செங்கூ மேலும் கூவட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  6. பேஸ்புக்கில் இந்த ங்கூ தொல்லை தாங்க முடியலை.... பதிவிலயுமா?

    ReplyDelete
    Replies
    1. விதை நான் போட்டது, இதென்ன பெருமையா, கடமை.

      Delete
  7. அழகிய நினைவுகள்...

    அதுவும் உங்கள் செங்கூவைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  8. இனிய திருமண விருந்து.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி

      Delete
  9. கறி விருந்து .. நாவெல்லாம் உமிழ் நீர்..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த விருந்துக்கு சொல்றேன், வாங்க அசத்திப்புடலாம்

      Delete
  10. இரண்டு மாதங்களுக்கு முன்பே 20 ஆடுகள் வாங்கி வளர்க்கப்பட்டன \\

    தொலைநோக்குப்பார்வை?

    ReplyDelete
    Replies
    1. இருக்காதா பின்னே, கறிவிருந்துனா ஊருக்கே சாப்பாடு போடனுமே.

      Delete
  11. IAM WAITING FOR U R SHAREMARKET EXPEREIENCE PLS UPDATE.

    ReplyDelete
  12. படங்கள் மூலமே சாரத்தை உணர்ந்து கொண்டேன்...

    கீழே உள்ள சில்லறைவரிகள் அருமை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...