மீன் வாங்குவதற்காக காசிமேடு செல்வது நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. தோழர் மணிகண்டவேல் அறிமுகப்படுத்தியதால் இரண்டு வாரங்களுக்கு முன்பு காசிமேடு மீன் சந்தைக்கு செல்லத் தொடங்கினேன்.
நமது ஏரியாவில் உள்ள சந்தைக்கும் காசிமேடு சந்தைக்குமான மீன் விலையின் வித்தியாசம் ஆச்சரியத்தை கொடுக்கிறது. நல்ல தரமான சங்கரா மீன் 30 கிலோ அடங்கிய கூடை 1000 ரூபாய் வரை கிடைக்கிறது.
அதை வாங்கி இதர செலவுகளுடன் கணக்குப் பார்த்தால் கூட கிலோ 50 ரூபாய் கணக்கு தான் வருகிறது. சங்கரா மீன் கிலோ 200ரூபாய்க்கு கிடைக்கிறது. நாலு கிலோ எடையுள்ள திருக்கை மீன் 150 ரூபாய். நாலு கிலோ இறால் 450 ரூபாய்.
என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் பிரித்துக் கொள்ளும் போது சல்லிசான விலையில் வாங்கி மீனாக தின்று ஜமாய்க்கிறேன். என்ன காலையில் 4 மணிக்கு எழுந்து தயாராகி நண்பர்களை ஒன்று சேர்த்து அழைத்துப் போய் சேரும் போது 5 மணியாகி விடும்.
ஆறு மணி வரை சந்தை விலையை கவனித்து வாங்கினால் நல்ல லாபம் தான், சென்னையில் உள்ள நண்பர்கள் ஒரு குழு சேர்த்துக் கொண்டு வாங்கினால் உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
----------------------------------------------------
உங்க அலப்பறைக்கு அளவே கிடையாதா பொண்ணுங்களா
----------------------------------------------------
வெள்ளியன்று அதிகாலை காசிமேடு சென்ற களைப்பால் தூங்கிவிட்டேன். பத்தரை மணிக்கு எழுந்து அவசர அவசரமாக ஊரிலிருந்து வந்திருந்த தம்பியையும் அழைத்துக் கொண்டு அரங்கிற்கு செல்லும் போது மணி 11.30. அரங்கிலும் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது.
நான் முன்பே விமர்சனத்தை படித்து விட்டதால் ஆர்வமுடன் நுழைந்தேன். படம் துவங்கி சில நிமிடங்களிலேயே என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து விட்டதால் சப்பென்று ஆகிவிட்டது.
நானே யூகிக்கும் அளவுக்கு திருப்பங்கள் இருந்தன. ஆனால் என்னுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்த ஒரு காலேஜ் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் கவுண்ட்டர் கொடுத்து கலாய்த்துக் கொண்டே இருந்தது, எனக்கு என் பால்ய காலத்து நினைவுகளை கிளறி விட்டது.
இப்படித்தான் நானும் என் 20க்கும் மேற்பட்ட நண்பர்களும் கொளத்தூர் கங்காவில் முதல்நாள் முதல் காட்சி ஹேராம் பார்க்க போய் வரிசையில் நின்று மன்னன் பட ரஜினி கவுண்டமணி ஸ்டைலில் கலாட்டா செய்து டிக்கெட் வாங்கி கிழித்த லாட்டரி டிக்கெட்டுகளை விசிறியடித்து பார்க்கத் துவங்கினோம்.
நேரம் ஆக ஆக மண்டையை பிய்த்துக் கொண்டு ஓப்பாரி வைத்து அலப்பறை செய்து பிறகு போலீஸ் வந்து கலாட்டா ஆனது எல்லாம் நினைவுக்கு வந்தது. டீன்ஏஜ் கலாட்டாக்கள் என்றுமே இனிமையானவை தான்.
----------------------------------------------------
கலி முத்திடுச்சி பாட்டி
----------------------------------------------------
நான் பணிபுரியும் பிரிவில் மார்கழி மாதம் தோறும் தினசரி பூஜையும் பிறகு பிரசாதமும் வழங்கப்படும். பொங்கல், இனிப்பு, சுண்டல், வடை, கலந்த சாதம் என தடபுடலாக இருக்கும். வரிசையில் நின்று தான் வாங்கி சாப்பிட வேண்டும்.
உயர் அதிகாரிகள் வரை சங்கோஜப்படாமல் நின்று வாழையிலையில் சுடச்சுட பிரசாத்தை வாங்கி தின்னும் போது சமத்துவம் பொங்கி வழியும். நானும் என் நண்பர்களும் வரிசையில் நின்று கலாட்டா செய்து வாங்கி ஒர்க்கிங் டேபிளில் வைத்து சாப்பிடுவோம். இந்த சம்பவங்கள் பால்ய வயதின் வினாயகர் சதுர்த்தி பொங்கல், சுண்டலுக்கு என் நினைவுகளை அழைத்துச் செல்லும்.
இன்று கூட ரவாப்புட்டு, கடலைப்பருப்பு சுண்டல், மசால் வடை, வெண்பொங்கல், தேங்காய் சாதம் என ஒரு வெட்டு வெட்டினேன். அப்புறம் எங்கேயிருந்து வேலை செய்ய. படிப்பவர்களுக்கு நாவில் எச்சில் ஊறினால் நான் பொறுப்பல்ல.
ஆரூர் மூனா
மீன் அவ்ளோ கம்மியா இங்க ஒரு கிலோவே 150 200 ன்னு விக்கிறானுங்க
ReplyDeleteதொட்டால் தொடரும் எனது ப்ளோகில் மட்டும் இமேஜ் பெருசா வருதே ஏன்???
Shrink to fit கொடுத்தா வராது
Deleteசெந்தில் காசிமேடு வரும் போது கால் பண்ணுங்க நானும் வரேன்
ReplyDeleteகண்டிப்பாக சேது
Deleteஎன்ஜாய் மக்களே.. காசிமேடு ராக்ஸ்...
ReplyDeleteநன்றி மணிகண்டவேல்
Deleteதினமும் நல்லாவே வெட்டுங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்
Deleteகாசிமேடு விஷயம் உண்மையில் யோசிக்க வேண்டியதே நண்பா அப்புறம் உங்க எடை குறைப்பு முயற்சி என்ன ஆனது ?
ReplyDeleteஆமாம் நண்பா. எடை குறைப்பு துவங்கி விட்டது, விரைவில் அதற்கான நல்ல பதில் உங்களுக்கு கிடைக்கும்.
Deleteஆஹா இவ்ளோ சல்லிசா மீனா..பல்லாவரத்திலிருந்து காசிமேடு எவ்ளோ தூரம்.ஒரு முறை வாங்கி பார்க்கணும்..
ReplyDeleteகாலையில் 5 மணிக்கு நீங்கள் சென்றால் சல்லிசா கிடைக்கும்.
Deleteபெரிய வஜ்ரம் என்ன விலை???
ReplyDeleteஒரு கிலோ 200 ரூபாய் வரும்
DeletePls also share tips for buying fish in Kasi medu.. it will be useful for us, please write a separate blog on this. Thanks Senthil.
ReplyDelete- Kumar kannan
கண்டிப்பாக. நன்றி கண்ணன்
Delete