இந்த படத்தை மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யம் குறையாமல் சீட்நுனியில் அமர்ந்து பார்த்து ரசிக்க ஆசை உண்டெனில் தயவு செய்து இந்த இடத்துடன் இந்த பதிவை மூடி வைத்து விட்டு வேறுவேலை பார்க்கச் செல்லவும். இப்போதைக்கு படம் பார்க்கும் எண்ணம் இல்லையெனில் மேற்கொண்டு படிக்கவும். இந்த படத்தின் எல்லா விமர்சனத்திற்கும் இந்த கருத்து பொருந்தும்.
நான் கூட காலையில் நண்பர் செங்கோவியின் விமர்சனத்தை படித்து விட்டே சினிமாவுக்கு சென்றேன். என்னுடன் பார்த்து ரசித்த மற்றவர்களை விட எனக்கு சுவாரஸ்யம் ஒரு மாற்று குறைவாகத்தான் கிடைத்தது.
ரொம்ப நாட்களாக தமிழ்சினிமா கையில் வைத்து இருந்த இடையில் மறந்திருந்த எம்ஜிஆர் காலத்து நாயகன். அது ஒன்னுமில்லீங்க சமுதாயத்துக்கு நல்லது செய்ய நினைக்கும் நாயகன்.
தனக்கு சம்பந்தமேயில்லாத ஆனால் நாட்டினை சிறுமைப்படுத்தும் சமூகத்தின் கேடு ஒன்றினை புத்திசாலித்தனத்துடன் களைகிறார். அந்த நேரம் பார்த்து எனக்கு உச்சா வந்ததால் திரையரங்கில் இடைவேளை விடுகிறார்கள்.
இடைவேளைக்கு பிறகு அந்த சமூகத்தின் கேடு நாயகனிடம் விளையாட்டு காட்டி வம்பு வளர்க்கிறது. கடைசியில் நாயகனிடம் வழக்கம் போல அடி வாங்கி செத்து மடிகிறது. படம் ஆரம்பித்து இரண்டரை மணிநேரம் ஆனதாலும் எனக்கு பசி வந்து விட்டதாலும் அத்துடன் படத்தை முடித்து நம்மை அனுப்பி வைக்கிறார்கள்.
இதுக்கு மேல வௌக்குனா உங்களுக்கு சுவாரஸ்யம் போயிடும் மக்கா.
படம் மிகச்சிறந்த எண்டர்டெயினர். அதில் சந்தேகமே வேண்டாம். ஆரம்பம் முதல் முடிவு வரை டெம்போவை குறைக்காமல் கொண்டு சென்றதிலேயே இயக்குனர் வெற்றி பெற்று விடுகிறார்.
இயக்குனர் சரவணன் முதல் படமாக இயக்கியது தெலுகில் கணேஷ். படம் பிளாப். இரண்டாவது தான் எஙகேயும் எப்போதும். அதனால் இந்த படத்திற்குரிய எதிர்பார்ப்பு எனக்கு சற்று குறைவாகத்தான் இருந்தது.
என் எண்ணம் எல்லாத்தையும் படம் அடித்து நொறுக்கி விட்டது. மேக்கிங்கில் மிரட்டியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
தெலுகில் முதல் படத்திலும் இரண்டாவது படத்திலும் வாரிசு நடிகர்களான என்டிஆர், ராம்சரண் ஆகியோரின் அறிமுகக் காட்சியினை பார்த்து மிரண்டு போய் கொளப்பாக்கம் முனீஸ்வரன் கோயில் பூசாரியிடம் மந்திரித்து விட்டு வந்தவன் நான்.
ஆனால் இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் அறிமுகக் காட்சியில் எதார்த்தத்தை கண்டு வியந்து தான் போனேன். அந்த ஹீரோயிசம் இல்லாத எளிமையை படம் முழுதும் கண்டேன், ரசித்தேன்.
சுரபி ஒரு டெல்லி குல்பி. அப்படியே ப்ரெஷ்ஷாக இருக்கிறார். நான் வேண்டிக் கொள்வது எல்லாம் இந்த பொண்ணு தெலுகு பக்கம் போயிடக் கூடாதுன்னு தான்.
இப்படித்தான் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஒரு பொண்ணு பார்க்க செம செம செம பிகராக இருந்தது. தமிழில் கவனிக்கப்படாமல் தெலுகு பக்கம் போய் அவர்களின் வில்லங்க ட்ரீட்மெண்ட்டால் வத்திப் போய் வசீகரம் இழந்து முன்னணி நாயகி என்ற நிலையை அடைந்தார். வேறு யாருமல்ல சமந்தா தான் அவர்.
நாயகி சென்னையிலேயே தங்கி தமிழ் படங்களில் மட்டும் நடித்து முன்னணி நடிகையாக ஆக அருள் புரிவாய் கருணைக்கடலே.
வம்சி கிருஷ்ணா தெலுகில் பல வருடங்களாக அடியாள் பாத்திரத்தில் வந்து பிறகு சின்ன சின்ன வில்லன் கதா பாத்திரங்களில் நடித்து முன்னணி வில்லனாக ப்ரமோட் ஆகியவர். தமிழில் தடையற தாக்க படத்திற்கு பிறகு கிடைத்த இந்த வாய்ப்பை பிரமாதமான பெர்பார்மன்ஸ் மூலம் தக்க வைத்துள்ளார்.
படத்தின் பாடல்களில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் மான்டேஜ் ஆக இருப்பது நன்றாகவே இருக்கிறது. இசையும், பின்னணி இசையும் ரசிக்கும் படியே இருக்கின்றன.
கயிறு கட்டி பறந்து பறந்து அடிக்கும் ஆக்சன் காட்சிகள் போல் அல்லாமல் இயல்பாக சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்.
அந்த காதல் போர்ஷன் வெகு இயல்பாக ரசிக்கும் படி இருக்கிறது. நாயகியை விட நாயகியின் தங்கையாக வருபவர் முகத்தில் அதிக எக்ஸ்பிரசன்களை கொடுக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அது போல் படத்தின் ஒவ்வொரு காதல் காட்சியிலும் படத்தின் வேறொரு சம்பவத்தின் லிங்கை வைத்து பாதிக்கு பிறகு ஒவ்வொன்றாக இணைப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.
மொத்தத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு. உங்களுக்கும் தான்.
ஆரூர் மூனா
பாஸ் தெலுங்கு தான் தெலுகு வா ...?
ReplyDelete//வில்லங்க ட்ரீட்மெண்ட்டால்// :)
விக்ரம் பிரபுவிடம் பெண்ணின் நளினம் இருப்பதாய் தெரிவது நேக்கு மட்டுந்தானா ...?
டிரைலர்ல வரும் ஒரு பாட்டு - எ .எ படத்தின் மாசமா பாட்டை நினைவுபடுத்துகின்றது .
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான், இது போல் தான் தெலுகு பாலகிருஷ்ணாவுக்கும் இருக்கும். அதாவது தொடையிடுக்கில் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக பின்பக்கம் வளைவாக இருக்கும். டக்இன் பண்ணிப் பார்த்தால் அந்த நளினம் தெளிவாகத் தெரியும். சிபிராஜ்க்கு கூட அந்த பிரச்சனை உண்டு.
Deleteநன்றி சுரேஷ்
ReplyDelete//நான் கூட காலையில் நண்பர் செங்கோவியின் விமர்சனத்தை படித்து விட்டே சினிமாவுக்கு சென்றேன். என்னுடன் பார்த்து ரசித்த மற்றவர்களை விட எனக்கு சுவாரஸ்யம் ஒரு மாற்று குறைவாகத்தான் கிடைத்தது.//
ReplyDeleteவிமர்சனம் எழுதி முடிக்கவும் ஓவரா எதிர்பார்ப்பை கிளப்புகிறோமோ, இதைப் படித்துவிட்டு பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம் அடைவார்களோ என்று நினைத்தேன். அப்படியே ஆகிவிட்டது..கொஞ்சம் அவநம்பிக்கையோடு போனதாலேயே ரொம்ப ரசிக்க முடிந்தது.
//நாயகியை விட நாயகியின் தங்கையாக வருபவர் முகத்தில் அதிக எக்ஸ்பிரசன்களை கொடுக்கிறார்.// நிறைய நல்ல படங்களில் ஹீரோயினை விட கூட வருபவர்கள் அழகாக இருக்கும் மர்மம் நமக்கு விளங்கவேயில்லை.
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteதிருப்தி என்றால் சரி தான்... நன்றி...
ReplyDeleteஅண்ணே உங்கள நம்பி' படத்துக்கு போறேன்.....
ReplyDeleteநீங்களே திருப்தி பட்டிருப்பதால், கண்டிப்பாக படம் நல்லாதான் இருக்கும்.. சீக்கிரம் பார்த்துவிட வேண்டியதுதான்..
ReplyDeleteஎன்னுடைய தளத்தில் இன்று: இலவசமாக சிகிளீனர் புதிய பதிப்பு தரவிறக்கம் செய்ய
Hello Sir,
ReplyDeleteI have read your review and gone for the movie today matinee show, disappointed and worthless movie, please do not support these kind of mokkai movies,
Me too boss. How these mokkai films getting positive reviews from bloggers like senthil and senkovi?
DeleteConfused :(
சரிய சொன்னீங்க அண்ணே எனக்கும் படம் பிடித்து இருந்தது
ReplyDelete