மக்களின் அறியாமையினை ஒரு நபர் எந்த அளவுக்கு பயன்படுத்தி
வாழ்க்கையில் உயர முடியும் என்பதற்கு உதாரணம் ஹரியானா மாநில முன்னாள்
முதல்வரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான தேவிலால்.
இவர் அரியானா மாநிலத்தின் பெருமான்மையினமான சாட் இனத்தை
சேர்ந்தவர். இதனால் அந்த இனமக்கள் தேவிலாலை தங்களது பெருந்தலைவராக
கருதினார்கள். சாட் இனத்தினர் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டவர்கள்.
எனவே தேவிலால் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் முக்கிய தலைவராகவும்
திகழ்ந்து வந்தார்.
அரியானா மாநிலத்தில் அசைக்க
முடியாத சக்தியாக இருந்த அவர் பலமுறை அங்கு முதல்-மந்திரியாக
இருந்துள்ளார். 1989-ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது அரியானா
முதல்-மந்திரியாக இருந்த தேவிலால் துணைப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
விவசாயிகள் நிறைந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசி மக்களை ஒரு நிலையில் நிறுத்தி விட்டு உரையாற்றியதன் சாராம்சம்.
"நமது மாநிலம் இதற்கு முன்பாக பசுமையோடு இருந்தது. ஆனால் பாருங்கள் இப்போது வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் நம் மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா,"
மக்கள் : தெரியாது, தெரியாது
"மத்திய அரசாங்கம் அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைக்கிறது. அந்த நீரைப் பயன்படுத்தி மின்சாரத்தை எடுத்து விட்டு பிறகு வெறும் சக்கை நீரை மட்டும் நமக்கு தருகிறது. அந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் பார்த்தால் விவசாயம் எப்படி செழிப்பாக நடைபெறும்."
அவ்வளவு தான் மறுநாள் அத்தனை விவசாயிகளும் கடப்பாறை மண்வெட்டி சகிதம் அணைக்கட்டை உடைக்க கிளம்பி விட்டார்கள்.
வாழ்க ஜனநாயகம்
------------------------------------------------------
என் தெலுகு நண்பர் சொல்லக் கேட்டது.
ஆந்திராவில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம். தெனாலி என்ற நகரில் கடந்த 27 வருடங்களாக காந்தி சிலை ஒரு இருந்து வந்தது. போன வருடம் அந்த சிலைக்கு மிக அருகில் ஒரு மதுபானக்கடை துவக்கப்பட்டது.
முதலில் சாதாரணமாக இருந்த இந்த விஷயம் ஒரு காந்தியவாதியின் முயற்சியால் சிறிது சிறிதாக மக்களின் கவனம் பெற்று பெருதரப்பட்ட மக்களின் அதிருப்திக்கு ஆளானது.
போராட்டம் பெரிதாக வெடித்து கடையடைப்பு பேருந்துகள் மறியல் என கலவரமானது, விஷயத்தை கவனிக்க அந்த இடத்திற்கு கலெக்டர் வந்தார். மக்களின் கோரிக்கைகளை கவனமாக கேட்டு அறிந்தார். பிறகு மக்களிடம் இந்த விஷயத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்து கிளம்பி விட்டார்.
சில நாட்களில் கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் மாற்றப்பட்டது.
சற்று தள்ளி இருந்த பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது மதுபானக்கடை இல்லை. காந்தி சிலை.
வாழ்க ஜனநாயகம்.
------------------------------------------------
அதோ இதோவென்று புத்தக கண்காட்சி நெருங்கி விட்டது, புத்தகங்கள் வாங்குவதற்கென பட்ஜெட்டும் ஒதுக்கியாச்சி. ஆனால் பாருங்கள் நான் வாங்க வேண்டுமென நினைத்த அனைத்து புத்தகங்களையும் வாங்கியாச்சி, அருமையான கிளாசிக் புத்தகங்கள் உட்பட. அனைத்தையும் படித்து அடுக்கியும் வைச்சாச்சி.
இப்போது வாங்க என்னிடம் பட்டியல் ஏதும் இல்லை. படிக்க இன்ட்ரட்டிங்காக இருக்கும் புத்தகங்களின் விவரங்களை இணையத்தில் இருந்து எடுத்தாலும் வாங்கிய பின் சொதப்பி விடுமோ என சந்தேகம் வேறு இருக்கிறது.
பெரியாரின் அனைத்து புத்தகங்களும், சுஜாதாவின் ஏறக்குறைய அனைத்து புத்தகங்களும், சாண்டில்யன், கல்கி, சுந்தர ராமசாமி, தி.ஜா ஆகியோர்களின் அனைத்து புத்தகங்களும் கைவசம் இருக்கிறது. சாரு, ஜெமோ கூட தான்.
இது தவிர தாங்கள் படித்த சிறந்த புத்தகங்களின் பட்டியலை என்னிடம் பகிர்ந்தால் இந்த ஆண்டு வாங்க உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி
ஆரூர் மூனா
அடப்பாவமே.. இப்படியும் மக்கள் இருப்பாங்களா?
ReplyDeleteஇருந்தாங்களே
Deleteஜனநாயக கேலிக்கூத்துக்கள் சிந்திக்க வைத்தது! புத்தக கண்காட்சிக்கு சில வருடங்களாக வர முடிவதில்லை! இந்த வருடம் பார்ப்போம்! நன்றி! நீங்கள் படித்த நல்ல புத்தகங்களை பகிர்ந்தால் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்குமே! நன்றி!
ReplyDeleteநீங்கள் இதற்கு முன்பு புத்தக கண்காட்சியின் சமயத்தில் நான் எழுதிய பதிவுகளை படித்தாலே போதும். அனைத்து புத்தகங்களின் பட்டியலும் கிடைக்கும்.
Deleteவிவசாயம் செழிப்பாக விவசாயிகள் அணைக்கட்டை உடைக்க...
ReplyDeleteமாற்றப்பட்டது காந்தி சிலை...
வாழ்க ஜனஜனநாயகம்...
அரே ஓ சாம்பா
Deleteஇதுபோன்று உண்மையிலேயே நடந்ததா??
ReplyDeleteஆமாங்க ஜெயக்குமார் சார். என் சக சீனியர் கொலீக் சொன்ன தகவல் இது.
Delete1989-ல் அப்போது இருந்த ஜனதா கட்சியினர் சுமார் 140 இடங்களில் வெற்றிபெற்றிருந்தனர். பிஜெபி சுமார் 90 இடங்களில் வெற்றி. அந்த ஜனதா கட்சி பிஜெபி.. மற்றும் கம்யூனிஸ்ட்களின் ஆதரவில் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தார்கள். அந்த ஜனதாவின் தோழமைக் கட்சியான் திமுகவிற்கு 2 இடங்களே... ஒன்று நாகை....மற்றது வடசென்னை என்றே நினைவு.
ReplyDelete…
…1988 வரை காங்கிரஸில் இருந்த வி.பி.சிங் அந்த ஜனதா கட்சியில் இணைந்தார். தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவிக்கு நடந்த போட்டியில் சந்திரசேகரும் இருந்தார். அவரை வெளியேற்ற வி.பி.சிங் தேவிலாலுடன் கைகோர்த்தார். தேவிலால் ஒரு அப்பாவி....சாதாரண விவசாயி....
…
…தேவிலாலை பிரதமராக ஒரு மனதாக தேர்ந்தெடுத்தார்கள். தேவிலால் ஒரு அப்பாவியாச்சே....தன் பதவியை வி.பி.சிங்கிற்கு விட்டுக்கொடுத்து துணைப் பிரதமராக இருந்தார். இந்த தில்லுமுல்லுவை சந்திரசேகர் ரசிக்கவில்லை.
…
…அந்த அப்பாவி தேவிலால் தான் பதவி ஏற்றவுடன் கலந்துகொண்ட முதல் விழா எதுவென்று தெரியுமா?
…
…நம்ம கனிமொழி அக்காவின் முதல் திருமணவிழாவிற்கு தனிவிமானத்தில் வந்தார்.
…
…வரலாறு முக்கியம் அமைச்சரே....!
…
…புத்தகக் கண்காட்சியில் இதுபோன்ற வரலாறைக் கூறும் புத்தகங்கள் இருந்தால் வாங்கவும்.
தகவலுக்கு நன்றி ராவணன், வரலாற்றுப் பக்கம் என் கவனத்தை திசை திருப்புகிறேன்
Deleteஅவசியம் வாங்க வேண்டிய இலக்கிய படைப்பு:
ReplyDeleteஒரு பிங் நிற சிறுத்தையின் மத்யான வேலை
எழுத்து - திரு.சிவா விலை - 7,000 பக்கங்கள் 20.
நீங்க தமன்னா மாதிரி பளீர் வெளுப்பாச்சே, பிங் கலர் எப்படி வந்துச்சு சிவா.
Delete6174 நாவல் படிச்சிட்டிங்களா நண்பரே..
ReplyDeleteஇல்லை நண்பா, இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் தான் வாங்க வேண்டும்
Deleteஎன்னுடைய "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்" என்ற சிறுகதைத் தொகுதி வெளியாகிறது நண்பரே! நிதி ஒதுக்கீடு செய்துவிடுங்கள்!
ReplyDeleteவாங்கி விடுகிறேன் செல்லப்பா சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக சொன்னிர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Delete// அனைத்தையும் படித்து அடுக்கியும் வைச்சாச்சி. //
ReplyDeleteநல்லதா போச்சு... நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்... அப்படியே உங்களுக்கு ஒரு பரிந்துரை லிஸ்டும் தர்றேன்...
லிஸ்ட்டோடு வா பிரபா.
Deleteதிவ்யபிரபந்தம், திருவாசகம்னு முயற்சி செய்யலாமே
ReplyDeleteஆமாம், அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாவிதான்
ReplyDeleteஉங்களுக்கு லிஸ்ட் போட்டு தர்ற அளவுக்கு நம்ம புத்தக உலகம் பெரிசு கிடையாது. கொஞ்சம் கொஞ்சம் கல்கி, சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன் அப்படி இப்படின்னு ஒப்பேத்திகிட்டு இருக்கேன். இப்போ நம்ம பட்ஜெட்டுல பெரும்பகுதி கம்ப்யூட்டர்ல டிசைனிங் தொடர்பான புத்தகங்கள் வாங்குறதுதான். புத்தகம் பார்த்து சமைக்கிறது மாதிரி புத்தகம் படித்து டிசைன் செய்து அதுவும் நல்லா இருக்குன்னுடுறாங்க.
ReplyDeleteஉங்களுக்கு வர்ற லிஸ்டை ப்ளாக்ல போடுங்க. பலருக்கும் உபயோகமா இருக்கும். (முக்கியமா எனக்கு.... ஏன்னா இந்த வருஷமும் புத்தக கண்காட்சிக்கு வரலாம்னு இருக்கேன்.)
-----------------------------------------------
2007 ல் புத்தக கண்காட்சி பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் இருந்த தனியார் பள்ளியில் நடைபெற்றது. அப்போது அதன் அருகிலேயே மண்டபம் சாலையில் ஒரு கட்டிடத்தில் சுமார் 1 மாத காலம் பணி இருந்தது. மாலை வேலை முடிந்ததும் பொடி நடையாக நியூ ஆவடி ரோடு வழியாக வந்து கண்காட்சியில் நுழைந்துவிடுவேன். அப்போதெல்லாம் நம்ம பைனான்ஸ் நிலைமை ரொம்ப வீக். தட்டுத்தடுமாறி ரெண்டு புத்தகம் வாங்கினேன். குமுதம் ஸ்டாலில் அவங்க குலதெய்வ கோயில் தொடர்பான புத்தகம் இலவசம்னு தெரிந்ததும் போய் க்யூவுல நின்னு வாங்குனோம். (இலவசத்தை தப்புன்னு சொல்லி பதிவு போட்டுகிட்டே இப்படியும் வேலை செஞ்சிருக்கோம்.)
ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் திருவாரூரில் ராசம்மாள் மண்டபத்துல நடக்குற கண்காட்சியோட திருப்தி அடைஞ்சுடுறது.
-------------------------------------
போன வருஷம் 2013ல் ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கும் புத்தகம் வாங்க வந்தேன். அங்க நான் வந்தது பெரிய சோக கதை. அதை பதிவா போட்டுடணும்னு நினைச்சேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சு. எப்படியும் இந்த வருஷ புத்தக கண்காட்சி ஆரம்பமாகுறதுக்கு முன்னால போட்டுடுவேன்னு நினைக்குறேன்.
தெனாலி என்ற நகரில் கடந்த 27 வருடங்களாக காந்தி சிலை ஒரு இருந்து வந்தது...
ReplyDeleteசிலை ஒன்று என வர வேண்டும் அண்ணா... வாழ்க இந்திய சனநாயகம்.... நல்ல பதிவு...
அ.முத்துலிங்கம் சிறுகதைகள் நல்லாயிருக்கும்...வாசுதேவநாதரின் இரண்டாம் இடம்...
ReplyDeleteALL S.Ramakrishnan books are good one..!!!
ReplyDelete// அனைத்தையும் படித்து அடுக்கியும் வைச்சாச்சி. //
ReplyDeleteபடித்து முடித்த சுஜாதா ,ஜெமோ &சாரு - களை கடனாக கொடுத்தால் நன்றாக இருக்கும்... :)