சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, March 7, 2014

நான் ஒரு திமுக-காங்கிரஸ் எதிர்ப்பாளன்

திமுக இணையதள விசுவாசிகள் இரண்டு பேரு மாயவரத்துல மமகவுக்கு ஓதுக்கப்பட்டுள்ளதுனு அறிவிச்சவுடனே வெற்றியை வாங்கி திமுக கூட்டணிக்கு கொடுப்பது போல் கொடுக்கும் பில்ட்அப் இருக்கே. என்னமோ இவங்க ரெண்டு பேரு ஓட்டு மட்டும் தான் மாயவர எம்பி எலக்சனை முடிவு செய்வது போல்.


மமக என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களின் அங்கீகாரம் பெற்ற கட்சி என்பது போல் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு சப்பைக் கட்டு வேறு கட்டுகிறார்கள். ஏன் மற்ற கட்சிகளில் இஸ்லாமியர்களே இல்லையா. 

படித்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி வேறு மதத்தினராக இருந்தாலும் சரி மதம் பார்த்து ஓட்டு போட மாட்டார்கள். இது முதியவர்கள் அதிகம் ஓட்டளிக்கும் தேர்தல் அல்ல. முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள், படித்தவர்கள் தான் வெற்றித் தோல்வியை முடிவு செய்யப் போவது.

கண்டிப்பாக நல்லவர்களை தேர்தெடுக்கும் விதமாகத்தான் இளைஞர்கள் ஓட்டு போடப் போகிறார்கள். தமிழகத்தின் இரண்டாவது இடத்தில் என்று குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்கு வங்கி திமுகவுக்கு இருக்கலாம். ஆனால் அது இந்த தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு இல்லை என்பது தான் நிஜம்.


போன திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாசெ முதல் வசெ வரை போட்ட ஆட்டம் இருக்கிறதே. தமிழ்நாட்டில் தமிழனாய் இருந்த ஒவ்வொருவனும் சுண்ணாம்பாய் ஆன காலகட்டம் அது.

சென்னையில் வீடு கட்டுவதற்காக எந்த தெருவின் ஓரத்திலும் மண், செங்கல், ஜல்லி கொட்ட வேண்டும் என்றாலும் திமுக கவுன்சிலரின் அடிப்பொடிகளுக்கு கமிஷன் வெட்ட வேண்டும். ஏண்டா திமுகவுக்கு மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப் போட்டோம் என்று ஒவ்வொரு சென்னைவாசியும் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டான்.

 ஒவ்வொரு கவுன்சிலர்களும் குறுநில மன்னர்களாகவே வலம் வந்தார்கள். மேயராக இருந்த மா.சு மட்டும் நல்லவராக இருந்து என்ன பயன். 

மற்ற மாவட்டங்களிலும் திமுகவின் மா.செ க்கள் தான் சிற்றரசர்களாக திழ்ந்தார்கள். அந்தந்த மாவட்டத்தில் எந்த பெரிய சொத்து பரிவர்த்தனையிலும் ஒரு பர்சன்ட்டேஜ் அவர்களுக்கு சென்று விடும். பிறகு கட்டப்பஞ்சாயத்துகள் கணக்கில் அடக்க முடியாதது. எனக்கு தெரிந்து எனது மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்துகள் ஏகப்பட்டது. 

திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு திமுக மாசெ, அதுவும் மாவட்டத்தின் அசைக்க முடியாத அளவுக்கு ஆட்பலமும் ஏகே47 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களையும் கொண்ட ஒரு மாசெ வை வீட்டில் கையெறி குண்டுகள் வீசி கொலை செய்தது இவர்களின் சட்டம் ஒழுங்குக்கு ஒரு உதாரணம்.

 அந்த கொலைக்கு காரணமானவர்கள் என்று சந்தேகப்பட்ட அதிமுகவை சேர்ந்த குடும்பத்தினர் வீட்டினை அன்றைய தினமே ஜேசிபி வைத்து இடித்து தள்ளி கொக்கரித்தது இன்னும் ஒரு உதாரணம்.

இதற்கப்புறம் நமது ஈரக்குலையை அறுத்த ஈழம் பிரச்சனையில் நடத்திய நாடக உண்ணாவிரதம், கலைஞர் டிவி விசாரணையை மட்டுப்படுத்த வேண்டி ஒரு போலி ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டம், குடும்ப அரசியல் என  இன்னும் இருக்கிறது.

இவருக்கு ஒட்டுப் போடலாம் என்று சொல்லும் அளவுக்கு நான் எந்தக் கட்சியையும் உங்களுக்கு பரிந்துரைக்கவில்லை. ஆனால் திமுகவுக்கு மட்டும் போட்டு விடாதீர்கள் என்று கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

திமுக கூட்டணி இந்த பாராளுமன்றத்தில் மண்ணை கவ்வி விட்டால் இணையதள விசுவாசிகள் எப்படி வெளியில் தைரியமாக உலா வருவார்கள். ஒருவேளை புளிய மரம் இருக்கும் தைரியத்திலா.

இந்த கட்டுரையை வைத்து நான் அதிமுககாரன், இல்லை பாஜக விசுவாசி என்று எல்லாம் எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் ஒரு திமுக-காங்கிரஸ் எதிர்ப்பாளன்,

துரதிஷ்டவசமாக முன்னாள் ஆதரவாளனும் கூட.

ஆரூர் மூனா

37 comments:

  1. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே மதுரையில் போட்ட ஆட்டம் இந்த பூமி தாங்காது

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நண்பா

      Delete
  2. நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. இந்த தீர்ப்பை மட்டும் மாத்த முடியாது

      Delete
  3. மதுரையில் உறவினர்(கள்) பட்ட பாடு இருக்கே...! வேணாம்... எல்லா பாஷையிலும் திட்ட வேண்டி வரும்...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் அவர்கள் எதிரிகளே

      Delete
  4. இன்தம்மா ஆட்சில அப்படி என்ன கொட்டிகடக்குது

    ReplyDelete
    Replies
    1. இதிலும் ஏதுமில்லை

      Delete
  5. இணையதள திமுக கூட்டம் தலைவனுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பச்சோந்திகள், அம்மாவுக்கும் மோடிஜிக்கும் வாழ்த்துப்பதிவு இப்பவே ட்ராப்டில் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆனா இது சரியா இருக்காதே

      Delete
  6. ams.com enna aachchu? 16/2/14 muthal paarkkave mudiyalle...........

    ReplyDelete
    Replies
    1. வேலை அதிகம்ணே

      Delete
  7. அப்போ யாருக்கு ஓட்டு போடலாம்னு சொல்றீங்க?!! எளிய மக்கள் கட்சிக்கு(ஆம் ஆத்மி) போடலாங்களா?

    ReplyDelete
    Replies
    1. எவன் நல்லவனோ அவனுக்கு போடலாம்ணே

      Delete
  8. நல்லவனை(ரை) தேர்ந்தெடுங்கள். இல்லையெனில், இருக்கவே இருக்கு, None of the above. அது முதலிடம் பெற்றால், கண்டிப்பாக தேர்தல் கமிஷனும் சிந்திக்கும், கட்சிகளும் சிந்திக்கும். மாற்றம் என்பதைத் தவிர அனைத்தும் மாறக்கூடியதே.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  9. என்ன தயக்கம் ?
    அதிமுக அல்லது பிஜேபி க்கு வாக்கு அளிக்க வேண்டியது தான்..

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிப்பட்டு வராதே. நேட்டோவாய நமஹ.

      Delete
  10. நானும் ஒரு முன்னால் திமுக வெறியன் தான்..போன ஆட்சியல் இவர்கள் போட்ட ஆட்டத்தினால் இப்போது எதிரி.

    நீங்கள் சொல்வது போல் யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்பதை விட...யாருக்கு (திமுக & காங்கிரஸ்) ஒட்டு போட கூடாது என்பதில் வெறியோடு இருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒரே அலைவரிசையில் இருக்கோம் போல

      Delete
  11. இந்த தேர்தலில் தி.மு,க மொத்தமாக கூட்டணியும் சேர்த்து 4 தொகுதிகள் ஜெயிச்சா அந்த கட்சி இன்னும் உசிரோட இருக்குன்னு அர்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்க அவ்வள எதிர்பாக்குறீங்களா

      Delete
  12. ///துரதிஷ்டவசமாக முன்னாள் ஆதரவாளனும் கூட.///

    நீங்கள் மட்டுமல்ல பலரின் நிலையும் இதுதான்

    ReplyDelete
    Replies
    1. திமுக எதிர்ப்பாளர் பட்டியல் எடுத்தா நாமளே ஒரு கட்சி ஆரம்பிச்சி ஆட்சியை பிடிச்சிடலாம் போல.

      Delete
  13. கருணாநிதியின் இலக்கியம், திரைவசனம் மேடைப் பேச்சு ஆகியவற்றால் கவரப்பட்டவர்கள், கருணாநிதியின் ஆட்சியை அகற்றியவர் என்கிற ஒரே காரணம் தவிர்த்து பிற காரணம் எதுவும் இல்லாமல் எம்ஜிஆரை எதிரியாகப் பார்த்தது தவறு என்று என்னைப் போன்றோர் பலர் உணர்ந்துள்ளோம், கருணாநிதியை ஒப்பிட்டு ஜெ - விலக்கப்பட வேண்டும் என்பதற்கும் என்னால் பெரிய காரணங்கள் தெரியவில்லை, ஆத்துல போற தண்ணிய யார் குடிச்ச என்ன என்பது என் மனநிலை. ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் காணாமல் போக வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை

    ReplyDelete
    Replies
    1. நம் எல்லோரின் கருத்தும் ஒரே மாதிரி இருப்பது மகிழ்ச்சி

      Delete
  14. நான் ஒரு திமுக-காங்கிரஸ் எதிர்ப்பாளன், ...அண்ணே இப்புடி சொன்னா நம்மல அதிமுக காரன்னு சொல்லிபுடுராய்ங்க......

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் இணைய திமுக புள்ளிகளின் கைங்கரியம் தான்

      Delete
  15. அ.தி.மு.க. ஆதரவாளர் இல்லையே?!

    ReplyDelete
    Replies
    1. நீங்களே எழுப்பி விட்டுடுவீங்க போல இருக்கே

      Delete
  16. இந்த முறை என் வோட்டு நோட்டாவுக்குதான்! எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

    ReplyDelete
    Replies
    1. நோட்டாவாய நமஹ

      Delete
  17. EACH AND EVERY VOTE POLLED TO DMK WILL FAVOR CONGRESS EVEN THE DMK IS A PART IN BJP OR ANY NON CONGRESS GOVERNMENT.. EACH PARTY HI-COMMAND FAMILY HAVE VISIBLE INVISIBLE VAST BUSINESS TIE UPS AND THEY NEVER GIVE UP EACH OTHER. MANY OF US DONT KNOW ABOUT MANY HAPPENINGS ALL OVER TAMILNADU IN LAST GOVERNMENT REGIME ESPECIALLY IN MADURAI...
    EVERY INDIVIDUAL TAMILIAN SHOULD HAVE A SINGLE MOTTO THAT THE DMK AND CONGRESS SHOULD NOT BE LIFTED UP. IF WE DO THIS MISTAKE AGAIN, WE PURPOSELY MAKE OUR CHILDREN AND FORTH COMING GENERATION AS SLAVES... AND SHAMELESS TOOO...............

    ReplyDelete
  18. மற்ற கட்சிகள் மேல் பெரிதாக கோவம் வரவில்லை ஏன் என்றால் அவர்கள் மேல் பெரிய நம்பிகை என்றும் வைத்தது இல்லை .. ஆனால் பெரிதும் நம்பிய திமுக ஏமாற்றிய போது தாங்க முடியவில்லை அவரகள் இன்னும் அதை உணர்ததாக தெரியவில்லை... எதிரியை விட நம்பிகை துரோகி ஆபத்தானவன்...

    ஒரு காலத்தில் கலைஞரின் கரகரத்த குரலை கேட்டு மெய் மறந்தது பொய் இப்போது எரிச்சல் தான் வருகிறது... சுயநலம் 60 வருட உழைப்பை அழித்து விட்டது ...

    ReplyDelete
  19. மனிதர்களுக்கு வயதாக வயதாகத் தன் குடும்பத்தின் மேல் தான் கவனம் திரும்பும் என்பதை நாம் அறிவோம். கலைஞரும் இதற்கு விதிவிலக்கில்லை. எனவே, அவருடைய கட்சிக்குப் போடும் ஒவ்வொரு வோட்டும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைக்காமல் இருப்பதற்குப் பயன் தருமேயன்றி, நாட்டுக்குப் பலன் தராது என்பது கண்கூடு. எப்படி இருந்த பெருந்தகையாளர் இப்படி ஆகிவிட்டார் என்று நினைத்தால் பாவமாக இருக்கிறது.

    ReplyDelete
  20. இணையத்தில் வேறு எந்த கட்சியையும் விட திமுகவிற்கு தான் எதிர்ப்பு அதிகம் ஆக இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை. என்னை பொறுத்த வரைக்கும் நான்
    திமுக ஆதரவாளன் இல்லை என்றாலும் அதிமுக எதிர்ப்பாளன். இந்த மூன்று வருடங்களில் அந்த அம்மா உருப்படியா செஞ்சது ஒன்னும் இல்ல. திமுக ஆரம்பிச்ச எல்லாம் திட்டங்களையும் நிப்பாட்னது தவிர. என்னுடைய ஒட்டு AAPக்கு தான். நான் பரிந்துரை செய்வதும் AAP தான்.

    ReplyDelete
  21. மச்சி, நம் இருவருக்கும் நிறைய அலைவரிசை ஒத்துப்போகுது என்று அடிக்கடி சொல்வேன், அது போலத்தான் இதுவும், என்ன நீங்க எதிர்பாளனாக மாறிவிட்டீர்கள், நான் கட்சியே மாறிவிட்டேன்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...