சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, March 21, 2014

குக்கூ - சினிமா விமர்சனம்

ஏகப்பட்ட வேலைகளும் அழுத்தங்களும் இருந்ததால் இன்று சினிமாவுக்கு போவது சந்தேகமாகவே இருந்தது. வட்டியும் முதலும் தொடரின் காரணத்தால் ராஜு முருகனுக்காகவே படம் பார்க்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தேன். 

 

இரு மனதாக இருந்த போது நண்பர் மயில் ராவணன் காலையிலேயே மெசேஜ் அனுப்பியிருந்தார். மதியம் 12மணிக்கு அழைக்கவும் செய்தார். நான் டிராபிக்கில் இருந்ததால் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி போனை வைத்தேன். பிறகு யோசித்து அவருக்காகவே படம் பார்க்க சென்றேன்.
 படம் பார்க்கும் போதும் அழைத்தார். ஆக இந்த விமர்சனம் நண்பர் மயில்ராவணனுக்காக.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. படம் பார்க்கும் போது கதாபாத்திரங்களுடன் நானும் பயணிப்பேன். சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது அவர்களுடனே இருப்பேன். அந்த மனஉணர்வுகளுக்கு சரியான தீனி இந்த படம்.


நாயகனும் நாயகியும் மாற்றுத் திறனாளிகள். இருவரும் அதனை வைத்து பிழைக்க நினைக்காமல் உழைத்து பிழைக்கிறார்கள். அவர்கள் சார்உலகில் மகிழ்வுடன் பயணிக்கிறார்கள்.

சில அலைவரிசை புரிதல்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். பார்வையற்ற நாயகியின் பணத்தாசை பிடித்த அண்ணனின் கட்டாயத்தினாலும் வாழ்வின் சூழலினாலும் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா என்பதே படம்.


இது போன்ற மென்சோகப் படங்களில் சோகத்தை இன்னும் திணிக்கிறேன் என்று கொடுமையான க்ளைமாக்ஸை கொடுத்து பார்ப்பவர்களை ரணகளமாக்கி விடுவார்கள்.

அதைத்தான் நானும் நினைத்தேன், படத்தை தவிர்க்க நினைத்த காரணங்களுள் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த அங்காடி தெரு படத்தில் நேர்ந்தது போல இதிலும் எதுவும் நடந்து விடக்கூடாது என்று நினைத்தேன். அப்படி எதையும் செய்யாத நண்பர் ராஜுமுருகனுக்கு பூங்கொத்துகள் அர்ப்பணம்.

மனிதனின் மனஉணர்வுகள் மிகவும் நுட்பமானவை, அவற்றை சரியாக கட்டுரையாக்கம் செய்வதில் வல்லவரான ராஜுமுருகன், படமாக்குவதிலும் முதல் படத்திலேயே பர்ஸ்ட் கிளாஸை தாண்டி இருக்கிறார். 


நாயகனாக தினேஷ், முதல் படத்தைப் போலவே பர்பார்மன்ஸில் அசத்தியிருக்கிறார். கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும்.

நாயகியாக மாளவிகா, நல்ல நடிப்பு, இயல்பான அழகு, தெறிக்கும் எக்ஸ்பிரசன் என பட்டையை கிளப்புகிறார். நமக்கு பேரழகிகளை விட பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றம் தான் பிடிக்கும். அதனாலேயே இவர் இன்னும் கவனிக்கப்படுவார்.

நாயகனின் பார்வையற்ற நண்பர் இயல்பாக சிறப்பாக பெர்பார்மஸில் அசத்தியுள்ளார். சந்தானத்திற்கு நிகரான டைமிங் கவுண்ட்டர் கொடுத்து அரங்கை கலகலக்க வைக்கிறார். 

எனக்கு மான்டேஜ் பாடல்கள் தான் பிடிக்கும். இருவரின் புரிதல்களை, மனஓட்டத்தை சிறு சிறு காட்சிகளாக எடுத்து ஒரே பாடலில் பார்க்கும் போது மனது ரெக்கை கட்டி பறக்கும். 

நிறைய மலையாள படங்களில் காதல் பாடல்கள் மான்டேஜ் பாடல்களாகத் தான் இருக்கும். அதற்காகவே நிறைய மலையாள பாடல்களை பார்ப்பேன். அதே போல் இந்த படத்திலும் பாடல்கள் மான்டேஜ் இருப்பது என்னை இன்னும் படத்திற்குள் ஈர்த்தது.

படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பங்களிப்பை வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த எம்ஜியார் நடிகர், குபேரன் சந்திரபாபு, இளையராஜா காதல் சோக பாடல்களுக்கு  பணம் தந்து ரசிக்கும் நபர், பிஎம், ரயிலில் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் பயணம் செய்யும் நபர் என ஒவ்வொருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்காக போலி பொதுச்சேவை செய்யும் நபர்களை ஒரு காட்சியில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கிறார் இயக்குனர். அந்த ஒரு காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

படத்தில் கிறிஸ்துவராக வரும் நாயகி எப்படி பொட்டு அணிகிறார் என்று தான் புரியவில்லை. சென்னையில் பொதுவாக ஆர்சி மற்றும் பெந்தகோஸ்து பிரிவு கிறிஸ்துவர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் இருவருமே நெற்றியில் பொட்டு வைக்க மாட்டார்கள். பின்ன எப்படி ஒரு வேளை எனக்கு தெரியாமல் இன்னுமொரு பிரிவும் இருக்குமோ.

முதல் பாதி வட்டியும் முதலும் படிப்பது போலவே எனக்கு தெரிந்தது. அவ்வளவு பேரின்பம். இரண்டாம் பாதி சற்று அலுப்பையும் அயற்சியையும் தருகிறது. க்ளைமாக்ஸ் ஓவர் சோகத்திற்கு வித்திடுகிறது.

இருந்தாலும் இந்த படத்தின் முயற்சிக்காகவும், பெண்மையை போற்றியதற்காகவும், என் ஊர்க்காரரான ராஜுமுருகனுக்காகவும், மான்டேஜ் பாடல்களுக்காகவும் இன்னொரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆரூர் மூனா

26 comments:

  1. நன்றி செந்தில் சார் நானும் சோகமான படங்கள் பார்க்க ஆசையிருந்தாலும் அது மனதை கஷ்டபடுத்தும் என்பதால் தவிர்த்து விட நினைப்பதுண்டு. இந்த படம் பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன் காரணம் ஒன்று வட்டியும் முதலும் இரண்டு நம் ஊர்க்காரர் மூன்று மாற்று திறனாளிகள் கதை

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பார்த்து மகிழுங்கள், நன்றி சரவணன் சார்.

      Delete
  2. ANNAN MUNA avargaluku RC christian poddu vaika maddankanu neenga paathingalaa.ungaluku onnu solluren RC(ROMEN CATHELIC) EVARGAL ORU HINDU ENNAVELLAM SEIVARKALO AANAITHUM SEIVARGAL.ELLAM THERINTHA MATHIRI ELUTHATHIRGAL

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்த வரை என்று தான் சொல்லியிருக்கிறேன், ஏன் தலைவரே இந்த பொங்கல்.

      Delete
  3. எனக்கு ஒரு பழக்கம் உண்டு. படம் பார்க்கும் போது கதாபாத்திரங்களுடன் நானும் பயணிப்பேன். சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது அவர்களுடனே இருப்பேன். அந்த மனஉணர்வுகளுக்கு சரியான தீனி இந்த படம்.
    >> கண்ணுக்கு வேர்க்குமா?? :(

    ReplyDelete
    Replies
    1. வேர்த்துக் கொட்டும். நன்றி நண்பா.

      Delete
  4. இவ்வளவு சொன்ன பின்... பார்க்க வேண்டும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் நன்றி தனபாலன்.

      Delete
  5. சோகமா.. மீ எஸ்கேப்..

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஒரு உணர்வு தான் பார்த்து மகிழுங்கள்.

      Delete
  6. ரொம்ப நன்றி நண்பா உங்கள் விமர்சனத்திற்கு.. நேற்று காலையிலேர்ந்து உங்க வலைத்தளத்தை refresh செஞ்சு பாத்துகிட்டே இருந்தேன்.இன்னிக்கு எப்புடியும் பாத்துடுறேன். ராஜு முருகன் சினிமாவிலும் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அண்ணே, உங்க ரசிப்புக்கும் எழுத்துக்கும் வாழ்த்துக்கள். குறும்படம் பத்தி எனி தகவல்?

    ReplyDelete
    Replies
    1. மே மாசம் துவக்குறோம்

      Delete
  8. சென்னையில் பொதுவாக ஆர்சி மற்றும் பெந்தகோஸ்து பிரிவு கிறிஸ்துவர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் இருவருமே நெற்றியில் பொட்டு வைக்க மாட்டார்கள். //

    இல்லீங்க. RC கிறீஸ்த்துவர்கள் தலையில் பூ, நெற்றியில் பொட்டு என இந்து சகோதரிகளைப் போலவே வைப்பார்கள். ஒரேயொரு வித்தியாசம் உச்சி நெற்றியில் வைக்கும் சுமங்கலி பொட்டு வைக்க மாட்டார்கள். CSI மற்றும் பெந்தகோஸ்த்து பிரிவுகளைச் சார்ந்தவர்கள் பூ, பொட்டு எதையும் வைக்கமாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி ஜோசப்

      Delete
    2. Sir South side Sumangli Pottum vaipanga sir

      Delete
  9. உங்க ஊர்காரர் என்பதால் குறைகள் கம்மியா சொல்லி இருக்குற மாதிரி படுது.

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்கக்கா, படம் பாருங்கள் அப்புறம் புரியும்.

      Delete
  10. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் சொல்லுகிறது! பார்த்துவிடுவோம்! பொட்டு வைக்கும் கிறித்தவர்களை பார்த்து இருக்கிறேன்! எந்த பிரிவு என்று தெரியாது. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
  11. :சில வருடங்களுக்கு முன் தன் மகன் ஜானியை ஹீரோவாக வைத்து ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு பூஜைபோட்டார் சக்கரவர்த்தி. 18 வயசு என்ற படத்தை ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்திலும், சந்திரபாபு என்ற படத்தை லிங்குசாமியின் உதவியாளரான ராஜுமுருகன் என்ற புதுமுக இயக்குநரை வைத்தும் தொடங்கினார்.

    18 வயசு படம் 2012 ஆம் வருடம் வெளியானது. 15 நாட்கள் படப்பிடிப்பி நடைபெற்றநிலையில் சந்திரபாபு படத்தை ட்ராப் பண்ணிவிட்டார் சக்கரவர்த்தி. அதற்கு அவர் சொன்ன காரணம்..அந்த டைரக்டருக்கு படம் எடுக்கத் தெரியலை என்பதுதான். அன்று அவரால் படம் எடுக்கத் தெரியலை என்று குற்றம்சாட்டப்பட்ட ராஜுமுருகன்தான் இன்றைய குக்கூ படத்தின் இயக்குநர் "
    உண்மை தான் ராஜு முருகன்னுக்கு படம் எடுக்கத் தெரியலை

    ReplyDelete
  12. இயக்குனர் திருவாரூரின் எந்த பகுதியை சேர்ந்தவர். அவரது புகைப்படம் இருந்தால் வலையேற்றவும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. http://www.thehindu.com/multimedia/dynamic/01178/CM16RAJU_MURUGAN_1178693g.jpg

      Delete
  13. cinema was good and classic.But climax unbelievable and hero seems to look like a begger

    ReplyDelete
  14. படம் அருமை, இதுபோல படங்கள் தமிழில் தொடர நாம் வரவேற்போம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...