எப்போதோ வந்திருந்த மதயானை கூட்டம் படத்தினை இந்த வாரம் தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. எனக்கு ஆச்சரியம், மதுரைப்பகுதி மக்கள் இடையே நான் பார்த்த சடங்குகள் சம்பிரதாயங்கள் வரை மிக நுணுக்கமாக படத்தில் இடம் பெற்று இருக்கிறது.
என் வீட்டு விசேசங்களில் குறைந்தது ஐம்பது முதல் எழுபது மோதிரங்கள் வரை மொய்யாக வரும். அதனை என் அப்பா கவனமாக ஒரு டயரியில் குறித்து வைத்து பத்திரங்கள் வைக்கும் லாக்கரில் வைத்திருப்பார்.
அதே போல் அவர்கள் வீட்டு விசேசங்களில் பவுன் குறையாமல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அங்கேயே தகராறுகள் துவங்கும். இல்லாவிடில் அவர்கள் வீட்டு அடுத்த விசேசங்களுக்கு அழைக்காமல் அவமானப்படுத்துவார்கள்.
ஒருவர் ஒரு குடும்பத்து விசேசத்திற்கு வரவில்லையென்றால் அவன் ஒதுக்கப்பட்டு இருக்கார் என மற்றவர்கள் பேசிக் கொண்டு அப்படியே காதுவழி செய்தியாக நூறு மைல் பயணிக்கும்.
ஒரு முறை நான் சென்னையில் படித்துக் கொண்டு இருக்கும் போது எங்கப்பா மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்த போது என் மாமன் ஒருவர் கிரகப்பிரவேசம் வைத்து இருந்தார்.
அம்மாவின் தாலியை அடகு வைத்து ரெண்டு வெள்ளி குத்து விளக்குகள் வாங்கிச் சென்று வைத்தும், நாங்கள் குறைவாக செய்ததாக நினைத்துக் கொண்டு மறுநாள் நடந்த கறிவிருந்துக்கு எங்கள் குடும்பத்தை மட்டும் அழைக்காமல் அவமானப்படுத்தினார்.
தன் அண்ணன் இது போல் செய்ததால் கோவமடைந்த அம்மா ரொம்ப நாள் அவருடன் பேசாமலேயிருந்தார். பிறகு தாத்தாவின் மரணத்தில் தான் இருவரும் பேசிக் கொண்டனர்.
ஆனால் அதே மரணத்தில் தான் நானும் என் பங்காளிகளும் அந்த மாமனுடனே சேர்ந்து மகாதியானத்தில் இறங்கி விட்டு சுடுகாட்டிலேயே போட்டு பொரட்டி எடுத்தோம் பழைய பகைக்காக.
இதையே சாக்காக வைத்து அவரின் மகன்களும் இன்னும் இருவது வருடங்கள் கழித்து எங்களை பழிவாங்க அலைவார்கள் என்பதும் தெரிந்த விசயமே. நாம் தான் நாசூக்காக பலவீனமான ஆட்களுடன் சொந்தங்கள் வீட்டு விசேசங்களுக்கு செல்லக் கூடாது.
நான் சொல்ல வருவது எல்லாம் எங்கள் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் அது அப்படியே பிசகாமல் படத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிறது, தங்கை மகனாக இருந்தாலும் வீம்புக்காக அடிப்பது வெட்டுவது. மற்ற குடும்பத்து ஆட்களை ஊர் பொறுப்புக்கு வர விடாமல் பார்த்துக் கொள்வது, சொத்து வெளியில் போய் விடக்கூடாது என்பதற்காக வயதான ஆண்களுக்கு சின்னப் பெண்களை கட்டிக் கொடுப்பது,
மாமன்கள் சம்மதம் பெற்று தான் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, எந்த விசேசங்கள் நடந்தாலும் அதற்கு கறிவிருந்து வைப்பது என பார்த்து பார்த்து தென் தமிழக மக்களின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஆவணம் செய்திருக்கிறார் இயக்குனர்.
மற்றபடி வன்முறை சார்ந்தே படம் நகர்வது, க்ளைமாக்ஸ், அண்ணனின் கண்ணீருக்காக மனம் மாறும் விஜி சந்திரசேகர் என சில இடங்கள் மட்டுமே நெருடுகிறது.
இது படத்தின் விமர்சனமுமல்ல, அந்த சாதி சடங்குகளை தூக்கிப் பிடிக்கவும் இல்லை. என் குடும்பத்தில் நடந்த சீர் செய்யும் பிரச்சனைகளை போன்ற சம்பவங்களைப் பார்த்ததும் அதனை ஒப்பிட்டு எழுதிய கட்டுரை தான் இது.
ஆரூர் மூனா
முடிவில் சொன்னது எதிர்ப்பார்க்கவே இல்லை... ஆனாலும் இந்த சின்னச் சின்ன... அளவிற்கு மீறாத... உறவுகளின் உரசல்கள் (பிரச்சனை...?) கிராமத்தில் கூட குறைந்து கொண்ட வருகிறதே... இது நல்லதா...? கெட்டதா...?
ReplyDeleteசச்சரவுகள் குறையக் குறைய நெருக்கமும் குறைகிறது. இது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. மக்கள் தனித்தீவுகளாக வாழப் பழகி விடுவார்கள் கிராமங்களில்.
Deleteமுதல் படம் சூப்பர். வெட்டுதல், அடித்தல் தவிர சண்டை, சமாதானம், கோபம்லாம் இருந்தால்தான் உறவுக்கு அழகு
ReplyDeleteசண்டை பரவாயில்லை, காழ்ப்புணர்வுகள் இருந்தால் என்ன செய்வது.
Deleteஅந்த படத்தில் காட்டப்பட்ட சடங்கு சம்பிராதயங்கள் அனைத்துமே உண்மை இவ்வளவு டீடைலாக சொல்லியதற்கே இயக்குனரை பாராட்டலாம்..ஒரு நூற்றாண்டு கழித்து ஜாதியெல்லாம் பொருட்டல்ல?...?! என்றான பின்னர் அந்த ஜாதிமக்கள் தான் எப்படி இருந்தோம் தன்னுடைய சடங்கு முறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த படத்தை பார்த்தாலே போதும்...கல்யாணமும் இருக்கு கருமாரியும் இருக்கு..ஆவணம்
ReplyDeleteநன்றி கார்த்திக் கவி.
Deleteமாமாவாக வரும் அந்த மீசைக்காரர் சூப்பராக நடித்திருப்பார்... ஒரு முறை ஊருக்குச் சென்றபோது பேருந்தில் பார்த்தேன்...
ReplyDeleteநன்றி ஸ்பை
Deleteதமிழின் சிறந்த மேக்கிங் வரிசையில் இந்தப்படத்துக்கும் இடமுண்டு..... ஜாதி வன்முறை எல்லாம் மேட்டரே இல்ல ஜி..... படத்த படமா பாக்கணும் நல்லா இருந்தா சந்தோஷம்தான் அந்த வகையில் என்னை சந்தோஷப்படுத்திய படம் :)
ReplyDeleteநன்றி வருண்
Deleteவீராத்தேவர் கேரக்டரில் வந்தவர் வேறு யாருமல்ல எழுத்தாளர் வேல ராமமூர்த்தி மிகச்சிறந்த நடிப்பு......இப்படத்தின் உண்மை கதைகளம்
ReplyDeleteகமுதி ஆனால் இயக்குனர் தேனி போடியை தேர்ந்தெடுத்திருக்கிறார்
தகவலுக்கு நன்றி நண்பா.
Deletevery good film
ReplyDelete