பிரியாணி வாவ். எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் இருந்த காரணத்தால் அடிக்கடி நான் அங்கு சென்று வருவேன். ஐதராபாத்தில் லக்டிகபூல் என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் தான் நான் வழக்கமாக தங்குவேன், அங்கு சென்றது முதல் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் நமக்கு பிரியாணி தான். ஹோட்டல்காரர்கள் சாப்பாடு நேரத்தில் என்ன வேண்டும் என்று கேட்காமல் பிரியாணியை அனுப்பி விடுவார்கள், இந்தியாவில் வேறு எந்த ஊரில் சாப்பிடும் பிரியாணியை விட ஐதராபாத்தில் உள்ள பிரியாணிக்கு மட்டும் அந்த சுவை வருகிறதோ தெரியவில்லை, அங்கு ஓரு கடை தான் என்றில்லை, எந்த கடையில் சாப்பிட்டாலும் அந்த சுவை வரும்.
அதிலும் செகந்திராபாத்தில் உள்ள பாரடைஸ் ஹோட்டல் தான் மிகுந்த பேமஸ். நள்ளிரவு, விடியற்காலை நேரத்திலும் அங்கு சுடச்சுட பிரியாணி கிடைக்கும். மதிய நேரத்தில் அலுவலகத்திலேயே கேண்டீன் இருக்கும். நண்பர்கள் சாப்பிட அழைப்பார்கள், நான் அவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பிரியாணி சாப்பிட வந்து விடுவேன். அதிலும் அங்கு மட்டும் தான் பிரியாணியில் எந்த ஒரு மசாலாவும் வாயில் பிடிபடாது, அப்படியே எடுத்து சாப்பிடும் வகையில் இருக்கும். பட்டை, ஏலக்காய், இலை இது போன்ற எதுவும் சிக்காது. ஆனால் அவற்றின் வாசம், சுவை மட்டும் இருக்கும்.
அது மட்டும் இல்லை, ஒரு முறை சென்னை ஏர்போர்ட் எதிரில் உள்ள பகுதியில் மிலிட்டரி ரம் கிடைக்கும், ஒரு முறை நானும் என் நண்பன் எட்வினும் ஒரு புல் ரம் வாங்கி அங்குள்ள ஒரு மைதானத்தில் ஒரு ஏழு மணியளவில் ஆரம்பித்தோம், எட்டு மணிக்கு முடிந்தது, பைக் எடுத்து ரூமுக்கு வரும் போது ஏர்போரட் எதிரில் வரும் போது நான் பிரியாணி சாப்பிட்டு போகலாம் என்று கூறினேன். அவன் சுவையான பிரியாணி என்றால் ஐதராபாத் தான் போக வேணடியிருக்கும் என்று கூறினான். போதையில், விடுறா வண்டியை ஏர்போர்ட்டுக்கு என்று கூறி பைக்கை பார்க் செய்து விட்டு அப்பொழுது இருந்த ஏர்டெக்கான் விமானத்தில் அந்த நிலையிலேயே ஏறி ஐதராபாத் சென்றோம். ஏறுவதற்கு முன் அங்குள்ள எனது நண்பன் சீனிவாசலுவுக்கு போன் செய்து விட்டதால் அவன் கார் எடுத்து வந்து ஏர்போர்ட்டில் நின்றான். வண்டியில் ஏறினோம்.
நேரே பாரடைஸ் ஹோட்டல் சென்றோம். வழியில் பத்தவில்லை என்பதால் அங்கு ஆளுக்கு ஒரு குவாட்டரை சாய்த்து விட்டு பிரியாணியை புல் கட்டு கட்டிவிட்டு கையில் பார்சலும் வாங்கிக் கொண்டு திரும்பி ஏர்போர்ட் வந்தோம். அப்பொழுது 11 மணிக்கு ஒரு விமானம் இருந்தது, டிக்கெட்டும் இருந்ததால் புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வந்து விட்டோம். பிறகு என்ன மறுநாள் முழுக்க சென்னையில் ஐதராபாத் பிரியாணி தான். ஆனாலும் சென்று வந்த செலவுக்கு பங்கு போடும் போது சண்டை போட்டு மாலை சமாதானத்திற்கு மீண்டும் சரக்கு போட்டது தனிக்கதை.
ஆரூர் முனா செந்திலு
மொத ஓ சி சாப்பாடு!!
ReplyDelete///சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமொத ஓ சி சாப்பாடு!!///
வாங்கண்ணே வணக்கம், கொஞ்ச நாள் இந்தப்பக்கமே வரலியே
ருசியான பதிவு
ReplyDeletetamilmanam 3 vote
ReplyDeleteசுத்த சைவம் என்பதால் அந்த ஓட்டலில் veg fried rice சாப்பிட்டு நண்பர்களை கடுப்பேத்தியது நினைவுகளில் மீண்டும் உலா உங்கள் பதிவால்
ReplyDelete///suryajeeva said...
ReplyDeleteசுத்த சைவம் என்பதால் அந்த ஓட்டலில் veg fried rice சாப்பிட்டு நண்பர்களை கடுப்பேத்தியது நினைவுகளில் மீண்டும் உலா உங்கள் பதிவால்///
மிக்க நன்றி சூர்யா
மாப்ள அவனா நீ...காபிக்கு இமாச்சல் போற ஆளா...கலக்கல்ய்யா!
ReplyDelete/// விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள அவனா நீ...காபிக்கு இமாச்சல் போற ஆளா...கலக்கல்ய்யா!///
மாமா, அது போதையில பண்ண கலாட்டா, அதில் சில சம்பவங்கள் எனக்கு மறுநாள் மற்றவர்கள் சொல்லித்தான் தெரியும்.
முதல் பாகத்தில் சரக்கடிக்கும் பழக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை... இரண்டாவது பாகத்தில் பாட்டில் பாட்டிலா உள்ளே தள்ளியிருக்கீங்க... இடையில இந்தப்பழக்கம் எப்படி ஆரம்பமானதுன்னு சொல்லவே இல்லையே...
ReplyDelete///Philosophy Prabhakaran said...
ReplyDeleteமுதல் பாகத்தில் சரக்கடிக்கும் பழக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை... இரண்டாவது பாகத்தில் பாட்டில் பாட்டிலா உள்ளே தள்ளியிருக்கீங்க... இடையில இந்தப்பழக்கம் எப்படி ஆரம்பமானதுன்னு சொல்லவே இல்லையே...///
அண்ணே உங்களுக்காக 3ம் பகுதியில் சரக்கு ஆரம்பித்த கதையையும் கிளைக்கதையாக சேர்த்து விடுகிறேன்.