சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, September 21, 2011

தவிர்க்கவே முடியாத 'எங்கேயும் எப்போதும்'

என்னடா இது இப்படி ஒரு படம் நானெல்லாம் சிறு வயதில் ஒரு உணர்ச்சி களஞ்சியம், எந்த படத்திலாவது சோககாட்சிகள் வந்தால் அழுது விடுவேன் சிறு வயதில் என்னை எல்லோரும் கிண்டல் செய்வார்கள், பிறகு பால்ய வயதில் அது சுத்தமாக நின்று போனது, அதன் பிறகு யாராவது சினிமா பார்க்கும் போது அழுதால் அவர்களை நானே ஓட்டி எடுத்து விடுவேன், மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெயில் படம் பார்த்து அழுதேன், அதன் பிறகு அங்காடி தெரு, அவ்வளவு தான்,

இத்தனைக்கும் எங்கேயும் எப்போதும் படம் வெளியான அன்றே நான் எனது ஓபிசி சர்டிபிகேட் விஷயமாக திருவாருர் சென்றிருந்ததால் அங்குள்ள நடேஷ் தியேட்டரில் படம் பார்த்தேன், துவக்கத்திலேயே பஸ் விபத்து நடப்பதை காட்டியிருந்தாலும் கதைக்குள் சென்ற பிறகு அதுவும் அநத மரணங்களை பார்த்த பிறகு தியேட்டரில் அழுதேன், பிறகு யாராவது நான் அழுவதை பார்க்கிறார்களா ரகசியமாக திரும்பி பார்த்தால் தியேட்டரில் உள்ள வெகுஜன மக்கள் அழுது கண்களை துடைத்துக் கொண்டிருந்தனர், சரி நாமும் மக்களுடன் கலந்து விட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்.

இப்பொழுது
சென்னை வந்து விட்டேன், நான் சென்னை ஐசிஎப்பில் படித்தவன், என்னுடன் அங்கு படித்தவர்களுக்கு இப்பொழுது தென் மேற்கு ரயில்வேயில் பணிபுரிவதற்கான ஆர்டர் வந்து கொண்டு இருக்கிறது, நான் ஆர்ஆர்பி தேர்வில் தேர்ச்சியடைந்து விட்டதால் நான் அதற்கு விண்ணப்பிக்கவில்லை, ஏனெனில் நான் தேர்வெழுதி கிடைத்த வேலையில் அவர்கள் கொடுக்கும் வேலையின் சம்பளத்தை விட பத்தாயிரம் ருபாய் அதிகம். எனது நண்பர்களுக்காக அவர்களின் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்காக செல்லும் போது என்னையும் அழைத்ததால் சென்றிருந்தேன்,

அவர்களின் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்ததால் நீண்ட நேரம் அரட்டையடித்து விட்டு சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து அம்பத்துர் ராக்கி திரையங்கிற்கு சென்றோம். மிகுந்த கலாட்டாவோடு துவங்கிய படம், நான் ஏற்கனவே பார்த்த படம் என்றாலும் மீண்டும் படத்தின் இறுதிகாட்சியில் அழுது விட்டேன். நண்பர்கள் பார்த்து விட்டு என்னை ஓட்டி எடுத்து விட்டார்கள்.

அதனால் தான் சொல்கிறேன். படம் உண்மையில் நம் உணர்வுகளை தட்டியெழுப்புகிறது. கண்டிப்பாக நான் மீண்டும் பலமுறை பார்ப்பேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
என்னா படம்யா


ஆரூர் முனா செந்திலு




4 comments:

  1. அழுதாத்தான் ரசிகன். அழுகை வராத ஆளுன்னா நீங்க எழுத வந்திருக்க மாட்டீங்க.

    அழுதீங்க, சரி. படத்தெப் பத்தி ஒன்னுமே சொல்லலியே? அழாத மர-தமிழர்களையே அழவெச்ச படம்; 'வெயில்', 'அங்காடித் தெரு' மாதிரி அழவெச்சதால இதுவும் ஒரு வெற்றிப்படம்ங்றீங்களோ?

    ReplyDelete
  2. எத்தனையோ மொக்கை சினிமாக்களை பார்த்தவன் இந்த சினிமாவை மிஸ் பண்ணிட்டேன்...

    ReplyDelete
  3. உங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் வாய்க்கால் தகராறு போல...

    ReplyDelete
  4. நானும் ஐ.சி.எப்.பில்தான் படிச்சேன்.. நீங்க எந்த பேட்ஜ்?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...