சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, September 13, 2011

கிடைத்தது மத்திய அரசு வேலை

ஒரு வழியாக அதோ இதோ என்று என்னை ஏமாற்றிக் கொண்டிருந்த ரயில்வே வேலை கிடைத்தே விட்டது. நான் 2000-ம் ஆண்டு ரயில்வேயில் அப்ரென்டிஸ் முடித்தவன். அன்றிலிருந்து நேற்று வரை சீனியாரிட்டி படி வேலை வரவில்லை. அதற்குள் நான் வேறு துறைக்கு வேலைக்கு சென்று விட்டேன். பிறகு சொந்தமாக பிஸினஸ் செய்து வந்தேன். இதற்கிடையில் நான் கடந்த ஜனவரியில் ரயில்வேயில் செக்ஷன் இஞ்சினியர் வேலைக்கு நுழைவுத்தேர்வு எழுதினேன். தேர்வு முடிவுகள் வர தாமதமானதால் நான் அதைப்பற்றி மறந்தும் விட்டேன். நேற்று ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால் செக்ஷன் இஞ்சினியர் வேலைக்கு நான் தேர்வாகி விட்டதாக அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.

சந்தோஷம்.

இன்றிலிருந்து நான் மத்திய அரசு ஊழியர். அதுவும் ரயில்வே ஊழியர். நேற்று இரவிலிருந்து பார்ட்டிகள் தொடங்கி விட்டது. நேற்று வரை தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட இன்று தொடர்பு கொண்டு வாழ்த்துகின்றனர். பார்ட்டிக்கு நாள் குறிக்கின்றனர். இப்பொழுது கூட நான் பார்ட்டியில் பிஸி.
சரி நண்பர்களே. பார்ட்டி முடிந்ததும் சந்திப்போம்.


நன்றி


ஆரூர் முனா செந்திலு




11 comments:

  1. வாழ்த்துக்கள் இன்ஜினியர் சார். தங்கள் பணியை வெற்றிகரமாக ஆரம்பியுங்கள் தோழா.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே!!

    தொடர்பில் இல்லாதவனெல்லாம் தொஅர்புக்கு வருவான்.. இதெல்லாம் சகஜம்தானே,, ஜமாய்ங்க!!

    ( இப்போ நான் மனுஷனா?? )

    ReplyDelete
  3. காந்தி பனங்கூர் said...

    வாழ்த்துக்கள் இன்ஜினியர் சார். தங்கள் பணியை வெற்றிகரமாக ஆரம்பியுங்கள் தோழா.

    ///

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. கறுவல் said...
    வாழ்த்துக்கள் நண்பரே!!
    தொடர்பில் இல்லாதவனெல்லாம் தொஅர்புக்கு வருவான்.. இதெல்லாம் சகஜம்தானே,, ஜமாய்ங்க!!
    ( இப்போ நான் மனுஷனா?? )
    /////

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. All the very best for your new job...Enjoy...

    ReplyDelete
  6. Rajkumar said...

    All the very best for your new job...Enjoy...
    / / /

    thanks for your comment

    ReplyDelete
  7. அமுதா கிருஷ்ணா said...

    வாழ்த்துக்கள்.
    /////

    நன்றி, அமுதா.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சார் .உங்கள் கனவுகள் நினைவாகட்டும் .
    எல்லா நேரத்திலும் சிரமம் இன்றி உங்கள் பணி தொடரட்டும்......மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சார்!!.. ரயில்வேயில் உங்கள் வாழ்க்கை இனிக்கட்டும்!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...