சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, September 26, 2011

நானும் என் பிரியாணியும் - பகுதி 1

பிரியாணி. இந்த ஒரு வார்த்தை, அதன் ருசி என் வாழ்வில் ஏற்படுத்திய கிளர்ச்சிகள், மாற்றங்கள், நடந்த சுவையான சம்பவங்கள் இவற்றை தொகுத்து வழங்குகிறேன்,


சிறுவயதில் எனக்கு திருவாரூரில் என் அப்பா டீலக்ஸ் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தரும் பிரியாணி, அடடா அதன் சுவை மாதம் இருமுறை வாங்கித்தருவார்,நானும் என் தம்பியும் போட்டிப்போட்டு திருப்தியுடன் சாப்பிடுவோம், நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு தெரிந்த வரையில் இந்த ஒரு கடை பிரியாணியை மட்டும் தான் சாப்பிட்டு இருக்கிறேன், பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு படிக்க சென்னை ஐசிஎப் வந்து விட்டேன். எனக்கான வெளியுலக வாசலை திறந்து விட்டது இந்த காலக்கட்டம் தான். சென்னையில் ஏராளமான பிரியாணி கடைகள், தோன்றும் போதெல்லாம் பிரியாணி தான். இருந்தாலும் அது, படித்த காலகக்கட்டம். மேலும் இந்த குடிப்பழக்கம் என்னிடம் இல்லாத நாட்கள் அவை, அந்த சமயத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள மகேஷ் ஓட்டல் பிரியாணி, அயனாவரம் நூர் ஹோட்டல் பிரியாணி. பெரம்பூரில் ரயில்வே கீழ்ப்பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு அசைவ ஹோட்டல் பிரியாணி(அதன் பெயர்ப் பலகையில் ராஜ்கிரண் தொடைக்கறி கடிப்பது போல் ஓவியம் தீட்டப்பட்டிருக்கும்) ஐசிஎப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடை பிரியாணி ஆகியவை எங்கள் பகுதியில் மிகவும் புகழ் பெற்றவை.


படிப்பு முடிந்த பிறகு ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இடம் அது, 2001 முதல் நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த 2009 வரை நான் இருந்த நிலையே வேறு, நிர்வாக அலுவலர் என்பதால் அந்த நிறுவனத்திற்கு வரும் வெளியூர், வெளிநாட்டு விருந்தினர்களை விமான நிலையத்தில் பிக்அப் செய்ய கார் அனுப்புவது முதல் அவர்க்ள் தங்கியிருக்க விருந்தினர் இல்லம் ஏற்பாடு செய்வது, அவர்களது அலுவல் பணி முடியும் வரை உடன் இருப்பது, சென்னையை சுற்றிப்பார்க்க உறுதுணையாக இருப்பது, திருப்பி ஏர்போர்ட்டில் இறக்கி விடும் வரை என்னுடைய பொறுப்பு. அந்த நாட்களில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது என்னுடைய பொறுப்பு என்பதால் எனக்கு பிடித்த கடையில் பிரியாணி வாங்க வண்டி ஓட்டுனரை அனுப்புவேன். இது வாரம் மூன்று நாட்கள் குறைந்தது இருக்கும் என்பதால் என் பிரியாணி நண்பன் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான். ஊருக்கு திரும்பி சென்ற விருந்தினர்கள் எல்லாம் என்னையும், பிரியாணியையும் மறக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பும் அளவுக்கு அவர்களையும் பிரியாணி பிரியன் ஆக மாற்றியவன் நான்.


இன்னும் தொடரலாம் தான் ஆனால் ஒரே நாளில் எல்லாவற்றையும் மீண்டும் யோசித்து தட்டச்சு செய்வது சிறிது அலுப்பை கொடுக்கிறது. எனவே மீதியை நாளை தொடருகிறேன்.


ஆரூர் முனா செந்திலு





3 comments:

  1. பிரியாணி சாப்பிட்டமாதிரியே இருந்தது

    ReplyDelete
  2. பிரியாமணிக்கு ஆசைப்பட வேண்டிய வயசில் பிரியாணிக்கு ஆசை பட்டிருக்கீங்க... தொடர்ந்து எழுதுங்க பிரியாணி கதையை...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...