சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, January 6, 2012

சத்யஜித் ரே...

சத்யஜித்ரே 1921ம் ஆண்டு மே 2ந்தேதி கொல்கத்தாவில் பிறந்தார். தந்தை பெயர் சுகுமார்ராய். தாயார் சுப்ரபா. பாடகி. பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் சாந்தினிகேதன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஓவியக்கலை பயின்றார். சத்யஜித்ரே தயாரித்த "தேவி" என்ற படத்தில் சார்மிளா டாகூர். இளம் வயதிலேயே திரைப்படத்துறையிலும், இசையிலும் நாட்டம் உடையவர், சத்யஜித்ரே. இதனால் 1950ம் ஆண்டு அவர் லண்டனுக்குச் சென்றார். அங்கே உலகின் மிகச்சிறந்த படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா படத்தின் நுட்பங்களை நன்கு கற்றறிந்தவராய் இந்தியா திரும்பினார்.

தனது முதல் படமான "பாதர் பாஞ்சாலி"யை தயாரிக்கத் தொடங்கினார். படத்தை முடிப்பதற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டார். பல இடங்களில் கடன் வாங்கினார். மனைவியின் நகைகளை அடகு வைத்தார். இறுதியில், மேற்கு வங்காள அரசின் பண உதவியுடன் படத்தை முடித்து `ரிலீஸ்' செய்தார். முதலில், தியேட்டர்களில் கூட்டமே இல்லை. முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் கூட்டம் அதிகரித்தது. நாட்கள் செல்ல செல்ல படத்தின் புகழ் பரவியது. அதன் பிறகு கொட்டகை நிறைந்த காட்சிகளாக படம் நீண்ட காலம் ஓடியது.

அந்த ஆண்டு, ஜனாதிபதியின் தங்கப்பதக்கம், "பாதர் பாஞ்சாலி"க்கு கிடைத்தது. பின்னர் பல்வேறு நாடுகளில் நடந்த உலகப்பட விழாக்களுக்கு "பாதர் பாஞ்சாலி" அனுப்பப்பட்டு பல பரிசுகளைப் பெற்றது. தொடர்ந்து அவர் தயாரித்த "அப்ராஜிதோ", "அபூர் சன் சார்", "சாருலதா", "ஜல் சாகர்", "தேவி", "ஆஷானி சங்கேத்", "ஜன ஆரண்யா" முதலான படங்கள் உலக நாடுகளில் திரையிடப்பட்டு, சத்யஜித்ரேக்கு உலகப் புகழை தேடித்தந்தன.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சத்யஜித்ரே முழுக்க முழுக்க யதார்த்தமான முறையில் படம் தயாரித்து உலகப்புகழ் பெற்றவர். "டைரக்டர்களின் டைரக்டர்" என்று போற்றப்பட்டார். 1955ம் ஆண்டில் இவர் தயாரித்த "பாதர் பாஞ்சாலி" என்ற வங்காளி மொழிப்படம், உலகப் பட விழாக்களில் திரையிடப் பட்டு பரிசுகள் பெற்றது.


சத்யஜித்ரே திரை உலகுக்கு செய்த சேவையைப் பாராட்டி, 1989ல் அன்றைய பிரான்ஸ் அதிபர் மிட்ரண்ட் பதக்கம் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் தயாரித்த எல்லா படங்களுமே, அகில உலகிலும் திரையிடப்பட்டு, பரிசும், பாராட்டும் பெற் றன. உலக திரைப்பட அரங்கில் அவர் தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு, இந்திய திரைப்படங்களுக்கும் கவுரவத்தைத் தேடிக்கொடுத்தார்.

திரைப்பட டைரக்ஷன் மட்டுமின்றி, இசை அமைப்பு, ஓவியம் தீட்டுதல், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுதல் ஆகியவற்றிலும் சத்யஜித்ரே வல்லவர். சத்யஜித்ரே தயாரித்து டைரக்டு செய்த படங்களில் பெரும் பாலானவற்றுக்கு அவரே இசை அமைத்தார். அவர் தயாரித்த படங்களில் பெரும்பாலானவை வங்க மொழிப்படங்கள். ஒரு சில படங்கள் மட்டும் இந்தியில் வெளிவந்தன. செய்தி படங்களும் (டாக்குமெண்டரி) குழந்தைகளுக்கான படங்களும் தயாரித்தார்.

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி லண்டன் பல்கலைக்கழகமும், இந்தியாவில் டெல்லி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. அதோடு 1959ல் "பத்மஸ்ரீ" பட்டமும், 1965ல் "பத்மபூஷண்" பட்டமும், 1976ல் "பத்ம விபூஷன்" பட்டமும் அவருக்கு கிடைத்தன.

உலக அளவில் சிறந்த சினிமா படங்கள், திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருது "ஆஸ்கார்" விருது ஆகும். சிறந்த டைரக்டருக்கான "ஆஸ்கார்" விருதை சத்யஜித்ரேக்கு வழங்க ஆஸ்கார் குழு முடிவு செய்தது. 1991ம் ஆண்டு இறுதியில் இது அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் `ஆஸ்கார்' விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள சத்யஜித்ரேக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேரில் சென்று இந்த விருதை பெற சத்யஜித்ரே விரும்பினார். ஆனால் சத்யஜித்ரேக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாரடைப்பு காரணமாக உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் ஆஸ்கார் பரிசை அவரிடம் ஒப்படைக்க லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 2 பேர் கொண்ட "ஆஸ்கார் குழு" கொல்கத்தாவுக்கு வந்தது. சினிமா உலகுக்கு சத்யஜித்ரே செய்த சிறப்பான சேவைகளை பாராட்டி தங்கத்தினால் ஆன "ஆஸ்கார்" விருதை அவரிடம் இந்த குழுவினர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஒப்படைத்தனர். சத்யஜித்ரேயின் குடும்பத்தினர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது. படுத்த படுக்கையில் இருந்த சத்யஜித்ரே கண்களில் கண்ணீர் மல்க "ஆஸ்கார்" பரிசை பெற்றுக்கொண்டு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்ததான "பாரத ரத்னா" விருது சத்யஜித்ரேக்கு வழங்கப்பட்டது. சத்யஜித்ரே ஆற்றியுள்ள தொண்டுகளுக்காக அவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்படுகிறது என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்திய சினிமாத்துறையில் "ஆஸ்கார் விருது", "பாரத ரத்னா" விருது ஆகிய இரண்டு மிகப்பெரிய விருதுகளை பெற்றவர் சத்யஜித்ரே ஒருவர்தான். "பாரத ரத்னா" விருது கிடைத்ததை யொட்டி சத்யஜித்ரே தயாரித்த புகழ் பெற்ற சினிமா படங்கள் டெலிவிஷனில் ஒருவார காலம் ஒளிபரப்பப்பட்டன.

சுமார் 3 மாத காலம் ஆஸ்பத்திரியிலேயே இருந்த சத்யஜித்ரே உடல் நிலையில் அவ்வப்போது முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும் அபாய கட்டத்திலேயே இருந்து வந்தார். மூச்சு திணறல் காரணமாக அவர் அவதிப்பட்டார். 23.4.1992 அன்று அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. மாலை 5.45 மணிக்கு உயிர் பிரிந்தது. சத்யஜித்ரே உடல் கொல்கத்தாவில் உள்ள நந்தன் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஆரூர் முனா செந்திலு

9 comments:

  1. மிக நல்ல கட்டுரை தலைவரே...

    ReplyDelete
  2. /// கே.ஆர்.பி.செந்தில் said...

    மிக நல்ல கட்டுரை தலைவரே.. ///

    நன்றிண்ணே.

    ReplyDelete
  3. /// மோகன் குமார் said...

    Arumai ///

    நன்றிண்ணே, பொங்கலுக்கு ஊருக்கா?

    ReplyDelete
  4. /// மோகன் குமார் said...

    Illai. Chennai thaan ///

    நான் குடும்பத்தோட கிளம்பியாச்சு அண்ணே. 15 நாள் ஊரில் டேரா.

    ReplyDelete
  5. நம்மவர்களுக்கு இவர் போன்ற வல்லவர்களை பற்றி அதிகம் தெரியாது. சற்றேனும் தெரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. /// கக்கு - மாணிக்கம் said...

    நம்மவர்களுக்கு இவர் போன்ற வல்லவர்களை பற்றி அதிகம் தெரியாது. சற்றேனும் தெரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றிகள். ///

    அண்ணே வணக்கம்ணே.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...