சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, February 10, 2012

ருத்ரபூமி - Journey 2 The Mysterious Island - சினிமா விமர்சனம்



ஏற்கனவே பலர் தோனி படம் பார்த்து விமர்சனம் எழுதி விட்டதால் அதனை தவிர்த்து இன்று 8 படங்கள் ரிலீசாகியிருந்தன, சரி நம்ம ராக் நடிச்ச படமாச்சே என்று Journey 2 - The Mysterious Island (ருத்ரபூமி) படத்திற்கு சென்றேன். இது 3D படம்.

படத்தின் கதை, கதாநாயகன் சேன் அவனது அம்மா மற்றும் அம்மாவின் இரண்டாவது கணவர் ஹாக் (தி ராக்(Dwayne Johnson)) ஆகியோருடன் வசித்து வருகிறான். அவனுக்கு ஹாக்கை பிடிக்கவில்லை. சேனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதனை மொழிப்பெயர்க்க ஹாக் உதவுகிறார். அந்த மெசேஜின் படி ஒரு தீவுக்கு அவர்கள் செல்ல முயல்கின்றனர். அதற்கு அவர்களை கொண்டு விட ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி அதில் சேன், ஹாக், பைலட் மற்றும் அவரது மகள் ஆகியோர் செல்கின்றனர். ஹெலிகாப்டர் சூறாவளியில் சிக்கி உடைந்து கடலில் விழுகின்றது, அனைவரும் நீந்தி அந்த தீவுக்கு செல்கின்றனர். அந்த தீவு வினோதமானது, மிகச்சிறிய விலங்குகள் மிகப்பெரியதாகவும், மிகப்பெரிய விலங்குகள் மிகச்சிறியதாகவும் இருக்கின்றன. அங்கு சேனின் தாத்தா இருக்கிறார். அந்த தீவு 140 வருடங்களுக்கு கடலின் உள்ளேயும் 140 வருடங்களுக்கு கடலுக்கு மேலேயும் இருக்கிறது. ஹாக் அந்த தீவு இரண்டு நாட்களுக்குள் கடலில் மூழ்கப் போவதை கண்டுபிடிக்கிறார். அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதே கதை.

காதில் பூவை சுற்றிக் கொண்டு லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய பேன்டஸி படம் இது. அது 3Dல் படம் அள்ளுகிறது. குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

அவர்கள் அந்த தீவுக்குள் நுழைந்தவுடன் தென்படும் மிகச்சிறிய யானையை பார்த்ததும் பிரமிப்புக்குள் மூழ்குகிறோம். அது போல் மிகப்பெரிய பல்லி, மிகப்பெரிய தேனீ, மிகப்பெரிய எறும்பு எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

ராக் சேனுக்கு காதலியை கவர்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் போது அவரது மார்பில் ஒரு காயை எடுத்து அடிக்க அது எகிறி வந்து நம் முகத்தில் விழுவது போல் வருவது, தான் பலசாலி என்று கூறி மிகப்பெரிய பல்லியை முகத்தில் குத்தி பல்லியை கோவப்படுத்துவது என ராக் அசத்துகிறார். அது போல் சேனாக வரும் (Josh Hutcherson) நன்றாக நடித்துள்ளார். அந்த பைலட்டாக வரும் (Luis Guzman) காமெடியில் அசத்துகிறார். பைலட்டின் பெண்ணும் (Vanessa Hudgens) ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு இருக்கிறார்.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் சென்றால் ரசித்து வரலாம். படமும் மிகச்சிறிய படம் தான் மொத்தமே 01.30 மணிநேரம் தான் ஓடுகிறது.

ஆரூர் மூனா செந்தில்


19 comments:

  1. முதல் ஆளா எழுதினா தான் விமர்சனம் எழுதனும்னு இருக்கீங்க போல. இன்னிக்கு தோனி பார்த்துட்டு நீங்க விமர்சனம் எழுதிருந்தா இந்த பதிவுக்கு கிடைக்கும் ஹிட்ஸ் விட, நீங்க விரும்புற மாதிரி அதிகம் கிடைச்சிருக்கும்

    ReplyDelete
  2. சினிமா விமர்ச்சனம் களை கட்டுகிறது... கலக்குங்க...

    காலையில் நான் அலைக்கும் போது தியேட்டர்ல இருந்தது இப்ப தெரிகிறது...

    ReplyDelete
  3. புதுப்படத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு சூப்பரான விமர்சனம்..ஆவலை துண்டும் எழுத்துக்கள் என்று அசத்துரீங்க..தொடரட்டும் தங்கள் பணி..நன்றிகள்.

    சைக்கோ திரை விமர்சனம்

    ReplyDelete
  4. சிபியை முந்தி விமர்சனம் போடுவதில் வல்லவர் ஆகி விட்டீர்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. படித்தேன் ந்னறாக இரு்நதது ,

    ReplyDelete
  6. வேகமான விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  7. இதுக்காக தான் என்கிட்டே கதை கேட்டிங்களா...?????
    :))))))

    ReplyDelete
  8. ருத்ரபூமி..நல்லா வக்கிறாங்க பேரு. விமர்சனம் ரொம்ப சிறுசா போச்சே!!

    ReplyDelete
  9. //NAAI-NAKKS said...
    இதுக்காக தான் என்கிட்டே கதை கேட்டிங்களா...?????
    :))))))//

    சாம்பிராணி போடுற ஆளு வந்தாச்சி..

    ReplyDelete
  10. /// மோகன் குமார் said...

    முதல் ஆளா எழுதினா தான் விமர்சனம் எழுதனும்னு இருக்கீங்க போல. இன்னிக்கு தோனி பார்த்துட்டு நீங்க விமர்சனம் எழுதிருந்தா இந்த பதிவுக்கு கிடைக்கும் ஹிட்ஸ் விட, நீங்க விரும்புற மாதிரி அதிகம் கிடைச்சிருக்கும் ///

    இல்லைண்ணே, படம் கதை என்னன்னு தெரியரதுக்கு முன்னாடி பார்த்தா தான் பார்க்கவே முடியுது. படத்தின் கதை தெரிந்து விடுகிறதா, அதனால் தான் முதல் ஷோ செல்கிறேன்.

    ReplyDelete
  11. /// சங்கவி said...

    சினிமா விமர்ச்சனம் களை கட்டுகிறது... கலக்குங்க...

    காலையில் நான் அலைக்கும் போது தியேட்டர்ல இருந்தது இப்ப தெரிகிறது.. ///

    நன்றி சதீஷ், காலையில நீங்க அழைக்கும் போது இப்படத்தின் இன்டர்வெல்லில் இருந்தேன்.

    ReplyDelete
  12. /// Kumaran said...

    புதுப்படத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு சூப்பரான விமர்சனம்..ஆவலை துண்டும் எழுத்துக்கள் என்று அசத்துரீங்க..தொடரட்டும் தங்கள் பணி..நன்றிகள். ///

    நன்றி குமரன்

    ReplyDelete
  13. /// கோவை நேரம் said...

    சிபியை முந்தி விமர்சனம் போடுவதில் வல்லவர் ஆகி விட்டீர்..வாழ்த்துக்கள் ///

    சிபி அண்ணனை முந்த முடியுமா இது சும்மா தற்காலிகமாத்தான் ஜீவா.

    ReplyDelete
  14. /// மயில்வாகனா said...

    படித்தேன் ந்னறாக இரு்நதது , ///

    நன்றி மயில்வாகனன்

    ReplyDelete
  15. /// ஹாலிவுட்ரசிகன் said...

    வேகமான விமர்சனம். நன்றி. ///

    நன்றி ஹாலிவுட் ரசிகன்

    ReplyDelete
  16. /// NAAI-NAKKS said...

    இதுக்காக தான் என்கிட்டே கதை கேட்டிங்களா...?????
    :)))))) ///

    நீங்க சொன்னது MK தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படத்தின் கதையில்லையா?

    ReplyDelete
  17. படம் பார்க்கலாம் போல...இன்றைக்கு போக வேண்டியதுதான்...

    ReplyDelete
  18. /// ! சிவகுமார் ! said...

    ருத்ரபூமி..நல்லா வக்கிறாங்க பேரு. விமர்சனம் ரொம்ப சிறுசா போச்சே!! ///

    இல்லை சிவா நேற்று ஒரு வேலையின் காரணமாக செங்கல்பட்டு வரை போகவேண்டியிருந்ததால் அவசர அவசரமாக பதிவு போட்டு சென்று விட்டேன்.

    ReplyDelete
  19. /// வீடு K.S.சுரேஸ்குமார் said...

    படம் பார்க்கலாம் போல...இன்றைக்கு போக வேண்டியதுதான்... ///

    லாஜிக் பார்க்காம பார்க்கலாம் சுரேஷ்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...