சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, March 19, 2012

ஆனந்த விகடனின் அங்கீகாரம்

கொஞ்சம் சாரிங்கப்பா, இது போன வாரமே போட்டிருக்க வேண்டிய பதிவு. ஆனால் திருவாரூரில் 15 நாட்கள் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இன்று தான் சென்னை வர முடிந்தது. அங்கு திருமண ஏற்பாடுகள், வரவேற்பு ஏற்பாடுகள், கறி விருந்து ஏற்பாடு என ஏக பிஸி. சகோதரன் திருமணத்திற்காக திருப்பதி சென்று விட்டு புதன் இரவு முழுவதும் கார் ஓட்டி விட்டு வியாழன் அன்று காலை திருவாரூரில் இறங்கினேன்.

மெட்ராஸ் பவன் சிவக்குமாரிடம் இருந்து போன் வந்தது. என்னவென்று தெரியாமல் போனை எடுத்தேன். சிவா தான் ஆனந்த விகடனில் என் போட்டோவைப் போட்டு எனது வலைப்பூ பற்றி என் விகடன் சென்னை பதிப்பு வலையோசையில் வந்திருப்பதை சொன்னார். சந்தோஷமாக இருந்தது. உடனடியாக அங்கு யாரிடமும் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. திருவாரூரில் சென்னைப் பதிப்பு கிடைக்காததால் அதனைப் பற்றி விரிவாக சொல்ல முடியவில்லை. சென்னையில் இருந்த சக நண்பர்களுக்கு போன் செய்தால் எல்லாம் முதல் நாள் இரவு தண்ணியடித்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தனும் போனை எடுக்கவில்லை, பிறகு தான் சிவா தன்னுடைய நண்பேன்டா வலைப்பூவில் பகிர்ந்திருப்பதை சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.

எழுத்தாளர்கள், எழுத வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாக வைத்திருப்பவர்கள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளர்கள், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வி எழுதி பதில் வாங்குபவர்கள் என பலருக்கும் தன்னுடைய புகைப்படம் மற்றும் தன்னுடைய எழுத்துக்கள் ஒரு பெரிய பத்திரிக்கையில் அதுவும் விகடன் போன்ற பத்திரிக்கையில் வர வேண்டும் என்பது மிகப்பெரிய அவாவாக இருக்கும். நான் இது வரை எந்த பத்திரிக்கைக்கும் வாசகர் கடிதம் கூட போட்டதில்லை. நகைச்சுவைத்துணுக்குகள் எழுதியதில்லை. அந்த பக்கமே நான் வந்ததில்லை. புத்தகங்களை படிப்பதோடு சரி. ஆனால் அதில் மட்டும் நான் மிகப்பெரிய ஆள். ஒரு புத்தகம் வாங்கி விட்டால் அலுவலகத்திற்கு லீவு போட்டாவது படித்து முடித்து விடுவேன். என்னிடம் இருக்கும் அனைத்து புத்தகங்களும் நான் படித்து முடித்தவை தான்.

எழுதுவதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. அதுமட்டுமில்லாம நாம பேசிக்கலா கொஞ்சம் (கொஞ்சமா இல்ல அதிகமாவே ஹி ஹி ஹி) சோம்பேறி. அதனால் முயற்சிக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வலைப்பூ என்று ஒன்று இருக்கிறது என்று தெரிந்த பிறகு அதனை படிக்க ஆரம்பித்த பிறகு அதில் பலரது கட்டுரைகளை படித்த பிறகு தான் நானும் எழுதலாம் என்று தைரியம் வந்தது. சும்மா ரெண்டு வரி, மூணு வரி போட்டு எல்லாம் பதிவெழுதினேன். அதற்கு மேல் எழுத வரவில்லை. பிறகு கொஞ்ச கொஞ்சமாக வளர்த்து கொண்டு இன்று எனக்கு பிடித்த மாதிரியாக எழுதுகிறேன். இன்னும் நன்றாக எழுத முயற்சிக்க வேண்டும். அவ்வளவு தான். நமக்கு அண்ணா நகர் பிளாட் எல்லாம் வேண்டாங்க.

அதுவும் நம்ம பதிவர்களில் சிலர் கூட நானாக எழுதிப் போட்டு தான் ஆனந்த விகடனில் வந்ததாக கூறினார்களாம். நான் அப்படி எழுதிப் போடவேயில்லை. அவர்களாகத்தான் என் மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பி விவரங்கள் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். இன்னும் சிலர் இதற்கு முன் வலையோசையில் வந்தவர்கள் எல்லாம் பல வருடங்கள் பதிவெழுதியதால் விகடனில் வந்திருக்கார்கள். நான் தான் ஒரு வருடத்திலேயே வந்து விட்டதாக கூறினார்களாம். நானா போய் விகடனில் அவசரமாக போடுங்கள் என்று கேட்டேன். அவர்களாக போட்டார்கள். அவ்வளவு தான்.
(திருப்பதியில் மச்சான் சதீஸ் மற்றும் அவரின் மகள்களுடன்)

அந்த விஷயத்தை விடுங்கள். இன்று காலை தான் சென்னையில வந்து இறங்கினேன். விகடனில் போட்டோ வந்திருந்ததால் சென்னையில் உள்ளவர்கள் அனைவருக்கும் நம்மை தெரிந்திருக்கும், கோயம்பேட்டில் இறங்கியதும் யாராவது ஒருவர் வந்து நீங்க தானே ஆனந்த விகடனில் வந்தவர் என்று கையைக் கொடுப்பார்கள், ஆட்டேகிராப் (சும்மா ஒரு பேராசை தான்) என்று நம்பினேன். ஆனால் பாருங்கள். நான் வந்து இறங்கியது விடியற்காலை 4 மணிக்கு, எனவே கூட்டமில்லை, அதனால் யாரும் நம்மை வரவேற்கவில்லை என்று மனதை தேத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். யாரும் என்னை அடையாளம் தெரியவில்லை என்று வருத்தமாகத்தான் இருக்கிறது. (அப்பாடா இன்னிக்கி ராத்திரி சரக்கடிக்க காரணம் கிடைத்து விட்டது.)

----------------------------------------------

கூடுதல் செய்தி என்னவென்றால் வடசென்னைப் பக்கம் வரும் சவுத் இந்தியன் போஸ்ட் என்ற பத்திரிக்கையிலும் என்னைப் பற்றியும் விகடனில் வந்துள்ளதைப் பற்றியும் வந்துள்ளது. இரண்டாவது பத்திரிக்கை செய்தி. சந்தோஷம், மகிழ்ச்சி.


அதுவும் என் நண்பன் முன்பே பார்த்து விட்டு போன் செய்தான், எடுத்து வைடா என்று சொல்லி விட்டு இன்று காலை அவனிடம் போன் செய்து பேப்பரைக் கொடுடா என்றால் அவன் வடையில் எண்ணெய் துடைத்த மாதிரி ஒரு பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றான். வெளங்கிடும்.
-------------------------------

நாளை முதல் தினமும் வழக்கம் போல் பதிவெழுதி உங்களை படிக்க வைத்து கொல்வது என்று முடிவெடுத்து விட்டேன். நன்றி

சிவாவின் பதிவில் வந்து பின்னூட்டமிட்டு வாழ்த்திய நாய் நக்ஸ் நக்கீரன், விக்கியண்ணன், சிபி அண்ணன், மோகன் குமார் அண்ணன், வீடு சுரேஷ், பன்னிக்குட்டி ராமசாமி, வெளங்காதவன், ராஜ் மற்றும் போனில் வாழ்த்திய மோகன் குமார் அண்ணன், அஞ்சாசிங்கம் செல்வின், உணவு உலகம் சங்கரலிங்கம் அய்யா, பிலாசபி பிரபா (யோவ் பிரபா போன் பண்ணி வாழ்த்து சொன்னியா இல்ல கலாய்ச்சியா அன்னைக்கு போதையில் இருந்தால் ஒன்னும் வெளங்கலய்யா), மற்றும் இதனை படித்து விட்டு பின்னூட்டமிடப் போகும் அனைவருக்கும் , முக்கியமா பதிவெல்லாம் போட்டு கலக்கிய மெட்ராஸ் பவன் சிவாவுக்கு ஸ்பெஷல் நன்றி நன்றி நன்றி.

ஆரூர் மூனா செந்தில்

26 comments:

  1. வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. வாழ்த்துகள் செந்தில்!அண்ணா நகர்ல பிளாட் கொடுத்தா சும்மா வாங்கிக்கய்யா...காசா..பணமா...!

    ReplyDelete
  3. /// வீடு K.S.சுரேஸ்குமார் said...

    வாழ்த்துகள் செந்தில்!அண்ணா நகர்ல பிளாட் கொடுத்தா சும்மா வாங்கிக்கய்யா...காசா..பணமா...! ///

    அந்த பிளாட் என்றைக்கும் என் தானைத்தலைவன் நக்கீரனுக்குத்தான். அவராப் பார்த்து ஓரமா ஒக்கார்ந்துக்கன்னா ஒக்கார்ந்துக்குவேன்.

    ReplyDelete
  4. விகடன் வலையோசையில் இடம் பிடித்ததற்கு என் வாழ்த்துக்கள் செந்தில்..
    உங்கள் எளிமையான எழுத்துகள் தான் உங்களுடைய பிளஸ் பாயிண்ட்....
    எல்லோருக்கும் புரியறமாதிரி பேச்சு தமிழ்ல தொடர்ந்து நிறைய எழுதுங்க.....

    ReplyDelete
  5. /// ராஜ் said...

    விகடன் வலையோசையில் இடம் பிடித்ததற்கு என் வாழ்த்துக்கள் செந்தில்..
    உங்கள் எளிமையான எழுத்துகள் தான் உங்களுடைய பிளஸ் பாயிண்ட்....
    எல்லோருக்கும் புரியறமாதிரி பேச்சு தமிழ்ல தொடர்ந்து நிறைய எழுதுங்க..... ///

    கண்டிப்பாக உங்களுக்காக எழுதுவேன் ராஜ், உங்கள் ராஜ்ஜியத்தை நடத்துங்கள்.

    ReplyDelete
  6. Yoooowwwwwww
    senthilu....
    Ennaium....
    1 aala mathichathukku
    nanri...

    Beauty ennaanna...
    En kitta serntha paru....
    Appave...nee
    periya aal
    aakitteyya....

    VAZHTHUKKAL....

    ReplyDelete
  7. Naan sonna mathiri...
    Ezhutha aarampicha paru.....
    Athaan

    VIKATEN-KU

    therichirukku......

    VAZHUTHUKKAL....

    intha vazhthu
    enakku......

    He...he....he....he....he....he....he...

    ReplyDelete
  8. அசுர வேகத்தில் வளர்ச்சி... மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. //என்னிடம் இருக்கும் அனைத்து புத்தகங்களும் நான் படித்து முடித்தவை தான்.//

    இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கா உங்களுக்கு? நாங்க வாங்குன புத்தகம் எல்லாம் பரண்ல ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கு ஓய்!!

    ReplyDelete
  10. மற்றொரு இதழிலும் கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துகள். அது என்ன வடசென்னையில் சவுத் இந்தியன் போஸ்ட்? வட இந்தியன் போஸ்ட் இல்லையா?

    ReplyDelete
  11. //இன்று காலை அவனிடம் போன் செய்து பேப்பரைக் கொடுடா என்றால் அவன் வடையில் எண்ணெய் துடைத்த மாதிரி ஒரு பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றான். வெளங்கிடும்.//

    ஹா..ஹா. செம தமாசு. அதாவது கெடச்சதேன்னு சந்தோசப்படலாம்!!

    ReplyDelete
  12. எழுத வந்த ஒரு வருடத்திலேயே விகடனால் கவனிக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்றால் அதற்க்கு உங்கள் உழைப்பே காரணம்..
    வாழ்த்துக்கள் செந்தில்.. !!

    ReplyDelete
  13. /// NAAI-NAKKS said...

    Yoooowwwwwww
    senthilu....
    Ennaium....
    1 aala mathichathukku
    nanri...

    Beauty ennaanna...
    En kitta serntha paru....
    Appave...nee
    periya aal
    aakitteyya....

    VAZHTHUKKAL.... ///

    யோவ் பெரிய மனுசா உன் வாயிலேயிருந்து நல்ல வார்த்தையா வந்திருக்கு, அதுக்கே உன் வாயில் சர்க்கரையை கொட்டணும். கிண்டலா சொன்னாலும் நீ குரு தான்யா.

    ReplyDelete
  14. /// Philosophy Prabhakaran said...

    அசுர வேகத்தில் வளர்ச்சி... மனமார்ந்த வாழ்த்துக்கள்... ///

    ரைட்டு பிரபா, பார்ட்டி வச்சிடுவோம். ரெடியாக இருக்கவும்.

    ReplyDelete
  15. /// ! சிவகுமார் ! said...

    இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கா உங்களுக்கு? நாங்க வாங்குன புத்தகம் எல்லாம் பரண்ல ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கு ஓய்!! ///

    ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து படிச்சி டயர்டாவுங்க ஓய்.

    ReplyDelete
  16. /// ! சிவகுமார் ! said...

    மற்றொரு இதழிலும் கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துகள். அது என்ன வடசென்னையில் சவுத் இந்தியன் போஸ்ட்? வட இந்தியன் போஸ்ட் இல்லையா? ///

    வட சென்னையாயிருந்தாலும், வடபழனியாயிருந்தாலும் அது சவுத் இந்தியா தான் இல்லையா # டவுட்டு

    ReplyDelete
  17. /// திண்டுக்கல் தனபாலன் said...

    வாழ்த்துக்கள் நண்பரே ! ///

    நன்றி தனபாலன்

    ReplyDelete
  18. /// பிரசன்னா கண்ணன் said...

    எழுத வந்த ஒரு வருடத்திலேயே விகடனால் கவனிக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்றால் அதற்க்கு உங்கள் உழைப்பே காரணம்..
    வாழ்த்துக்கள் செந்தில்.. !! ///

    மிக்க நன்றி பிரசன்னா கண்ணன்.

    ReplyDelete
  19. வாழ்த்துகள்..

    ReplyDelete
  20. வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. ஆ.வி.யின் அங்கீகாரம் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால் நீங்கள் ஸ்பெஷல் என்று அர்த்தம். வாழ்த்துகள் தோழர்!

    ReplyDelete
  22. /// tsekar said...

    வாழ்த்துகள்.. ///

    நன்றி சேகர்

    ReplyDelete
  23. /// யுவகிருஷ்ணா said...

    ஆ.வி.யின் அங்கீகாரம் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால் நீங்கள் ஸ்பெஷல் என்று அர்த்தம். வாழ்த்துகள் தோழர்! ///

    மிக்க நன்றி யுவகிருஷ்ணா.

    ReplyDelete
  24. /// சங்கவி said...

    வாழ்த்துக்கள்... ///

    நன்றி சங்கவி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...