சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, September 2, 2013

மேன்மக்கள் அவர்கள் மட்டும் தான், நான் இல்லை

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் மகாதியானத்தில் இருந்த போது பொங்கியதற்கு இன்னைக்கு ஒருத்தர் படையல் வச்சிருக்கார். இப்ப என்ன பிரச்சனைனா இதற்கு பதில் என்னிடம் இருந்து எப்படி வரும் என மிகப் பெரும்பாலானோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


என் நலம் விரும்பிகளும் நலம் விரும்பாதவர்களும் இதில் அடக்கம். ஆனால் எனக்கு உடன்பாடே இல்லை. நான் எனக்குள் ஒரு ஆன்மீக சக்தி அரும்பத் தொடங்கியிருக்கிறது. என் கால்கள் என்னை இமயமலைக்கு வா வா என்று இழுக்கத் தொடங்கியிரு்க்கின்றன.

இந்த நிலையில் நான் இதற்கு பதிலாக பெரிய பதிவாக போட்டு கன்னாபின்னாவென்று திட்டுவது தவறு. கோவம் ஆன்மீகத்திற்கு சத்ரு. அதனால் இதற்கு கோவப்பட வேண்டாம் என்று யாம் முடிவெடுத்திருக்கிறோம்.


எவ்வளவு நாள் தான் இப்படி கோவப்பட்டு கோவப்பட்டு நம்மை நாமே அழித்துக் கொள்வது. உலகில் சமாதானத்தை வேண்டி ஒரு ஆசிரமம் அமைக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். என் குருநாதர் ஆலோசனைப்படி ஆசிரமத்திற்கு கேமரா வைத்த செல்போன் தடை செய்ய இருக்கிறேன்.அதனால் நான் கோவப்பட்டு பொங்கியெழுந்து கன்னாபின்னாவென்று திட்டி பதிவு போடுவேன். நீங்கள் சண்டையை என்ஜாய் செய்யலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் அது நடக்காது. இனி எங்குமே நோ கோவம். ஒன்லி சமாதானம்.


அது மட்டுமில்லாமல் எனக்கு ஸ்கிரீன் சாட் எல்லாம் எடுத்துப் போட்டு பதிவெழுத மாட்டேன். ஏன்னா அது எனக்கு தெரியாது. இனிமேல் எனக்கு தெரிந்தது எல்லாம் தியானம், மகாதியானம், ஆன்மீகம், சமாதானம் மட்டுமே.

பக்தகோடிகளே இனிமேல் கோவப்படாதீர்கள். மற்றவருக்கு அமைதியையே போதியுங்கள். அதுதான் நமக்கு வேண்டும். மதமாச்சரியங்கள் கடந்து ஒருவர் மீது ஒருவர் அன்பையே செலுத்துங்கள்.

உங்கள் ஊர்களிலும் ஆசிரமங்கள் அமைக்க வேண்டுமா உடனடியாக எனது நேரடி சீடர் நக்கீரனை தொடர்பு கொள்ளுங்கள். அவரும் இரண்டு நாட்களாக என்னுடன் சுற்றி மகாதியானத்தினை கற்று கொண்டு பாதி ஆன்மீகவாதியாகி உள்ளார்.

அதனால் அந்த பதிவிற்கு திருப்பி பதிலளித்து நாம் நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். நண்பர்களே அமைதியை விரும்புங்கள். மகாதியானம் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் சமாதானமாகும்.

அதனால் அவர்களே மேன்மக்களாக இருந்து விட்டு போகட்டும். நாம் கீழ்மக்களாகவே இருந்து விடுவோம். சமாதானத்தை வேண்டி நான் இதற்கு ஓட்டளிக்கமாட்டேன் என்று என் ஆசிரமத்தின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.

ஆரூர் மூனா செந்திலானந்தா

86 comments:

 1. இதுக்கு பேசாம அவர்களை நான்கு வார்த்தை திட்டியிருக்கலாம் ... செம நக்கல் பதிவு பாஸ்

  ReplyDelete
  Replies
  1. அன்பே சிவம், ஏன் இந்த கொலைவெறி

   Delete
 2. செந்திலானந்தா...

  மச்சி இது நல்லாயிருக்கே....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சங்கவியானந்தா

   Delete
 3. அது எப்படி பாஸ் 500, 1000 வோட் எல்லாம் போடுறது ?? சொல்லிகுடுங்க பாஸ் ..

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு நீங்க எங்க கொள்கை பிடித்து ஆசிரமத்தில் இணைந்தால் கற்றுக் கொடுக்கப்படும்

   Delete
 4. //என் குருநாதர் ஆலோசனைப்படி ஆசிரமத்திற்கு கேமரா வைத்த செல்போன் தடை செய்ய இருக்கிறேன்.
  //
  கேமேராவே வரலாமா ?

  ReplyDelete
  Replies
  1. வந்தால் நறுக்கப்படும்

   Delete
 5. பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடத்தியதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜீம்

   Delete
 6. ஓம் செந்திலானந்த மகா குருவே போற்றி
  ஓம் நக்சானந்த நலம் தருவாய் போற்றி போற்றி !!!

  குருவின் பாதையில் என்றும்
  தொடருவோம்

  சமாதானமே சன்மார்க்கமே ...

  ReplyDelete
  Replies
  1. அருமை சீடா உமக்கு அயல்நாட்டு ஆசிரம உரிமை வழங்கப்படுகிறது

   Delete
 7. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

  மச்சி இதை சேர்த்துகொள்ளவும்.....வேறொன்றும் இல்லை குரான் வசனம் இது நமது நெருங்கிய நண்பர் சொன்னது அவர் என் பேரைப் போட்டுடாதிங்கய்யான்னு சொன்னார்...அப்புறம் அவரை காச்சி எடுத்துவிடுவார்களாம்.

  ReplyDelete
  Replies
  1. ரகசியம் இவ்விடம் காக்கப்படும்

   Delete
 8. அதுதான்..நா அப்பவே பதிவர் சந்திப்பில் கேட்டேன் என்ன அண்ணேன் கழுத்துல மாலை...? இப்படினு தெரிஞ்சியிருந்தா...நானும் சின்ன சிஷ்யனா சேர்ந்து இருப்பேனே

  ReplyDelete
  Replies
  1. வருக வருக, அனைவருக்கும் இடமுண்டு

   Delete
 9. Enakkum Issu Issu endru thaan ketkiradhu :)

  Sema ROFL post Boss :D

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருண்

   Delete
 10. இது நீங்கள் மகாதியானத்தில் இருந்தபோது எழுதியதா இல்லை சும்மா தியானத்தில் இருந்தபோது எழுதியதா??

  ReplyDelete
  Replies
  1. மகாதியானம் நண்பரே, ஆன்மீகத்தின் உச்சம் அதுதான்,

   Delete
 11. தங்கள் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் அனுமதி உண்டா...???

  மறைச்சிடுவீங்களா...????

  ReplyDelete
  Replies
  1. ஆசிரமத்தின் நோக்கமே மாறிவிடும் போல இருக்கே இந்த ஆளை உள்ளே விட்டா

   Delete
 12. ஸ்வாமி! வணக்கம், அடியேனுக்கும் தங்கள் ஆசிரமத்தில் இடமிருக்குமா? நான் செல்போன் எல்லாம் கொண்டு வரமாட்டேன். ஆனால் என் கை மணிக்கூட்டில் காமிரா வைச்சிருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. தவறு நடக்கும் போது யாரையும் பக்கத்தில் வைத்திருக்காத போது பயம் எதற்கு

   Delete
 13. நாய் நக்ஸ் அண்ணனின் ஆலோசனை ஏற்று கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. நீர் நக்கீரனின் சீடரா தம்பி

   Delete
 14. இந்த ஆன்மீக விசயத்திலும் வடக்கு தான் வாழ்கிறது .(வடக்கே இமய மலை)ஏன் நம்ம பல்லாவரம் மலை,வண்டலூர் மலை என்ன பாவம் செய்தது.உங்கள் மிக சிறிய கிளை ஆசிரமங்களை இங்கே நிறுவி என் போன்ற மிக எளியோர்க்கும் அருள் பாலிக்கலாமே.கோரிக்கையை ஏற்றுகொள்ளவும் .

  ReplyDelete
  Replies
  1. கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது, நீர் தான் அந்த கிளைகளின் பொறுப்பாளர்

   Delete
 15. நல்லவேளை பாஸ்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த குடுமிப்புடி சண்டை மாதிரி ஆக்கிடாம நீங்க ரொம்ப டீஸன்ட்டுன்னு சொல்லாம சொல்லிட்டீக...!!! நீங்க சூரியன் மாதிரி சாமீ... ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன்.... அய்யய்யோ ஆனா மூனா தி.மு.க.வுல சேந்திட்டாரான்னு எவனாவது கேட்டிரப்போறான்... எப்படியோ மேட்டர் முடிஞ்சா சரிதான்...
  உங்களுக்கும் சாந்தியும்(மூணாவது தெரு சாந்தி இல்லே சாமீ... இது அமைதி!!!) சமாதானமும் உண்டாவதாக!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆசீர்வாதம் கிடைத்தே பெரும் பாக்கியம்

   Delete
  2. இதுதான்யா... இந்த அடக்கம்தான்யா... மகாதியானத்தின் உச்சம்ன்றது... சாமீ மலையேறீட்டீகளா?...

   Delete
  3. இன்னும் மணியாகலை

   Delete
 16. மேன்மக்கள் என்றால் நித்தியானந்தா போன்றவர்களை ஏக இறைவன் என்று கும்மியடித்து வணங்குபவர்களா?

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் வைத்துக் கொள்ளலாம்

   Delete
 17. ஆனா மூனா சேனாவை பார்த்து மேன்மக்களுக்கு என்ன உதறல்?

  எங்கேயாவது அடியில் கையை வைத்துவிட்டாரா?

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே நம்ம மேல ஏகப்பட்ட புகார் இருக்கு, அதுல இது வேறயா

   Delete
 18. நல்ல முடிவு, கீப்பிட் அப்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலிங்கானந்தா

   Delete
 19. \\ஆரூர் மூனா செந்திலானந்தா\\நித்ய அஜால் குஜாலானந்தா............. இந்த பேரு வேணுமின்னா யூஸ் பண்ணிக்கோங்க....... No payment needed for copy right!!

  ReplyDelete
  Replies
  1. பெயர் நல்லா இருக்கு. என்னுடைய அந்தரங்க சீடருக்கு இந்த பட்டத்தை கொடுத்து விடுவோம்

   Delete
 20. உங்க பதிவுகளுக்கு 35 கள்ள ஒட்டு நீங்களே போடுறீங்கன்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க, நிஜமா பாஸ்??!! What is purpose behind this??!!

  ReplyDelete
  Replies
  1. அதுல ஏகப்பட்ட நுண்ணரசியல் இருக்கு பாஸ். அதை சொல்லனும்னா ஒரு பதிவு பத்தாது

   Delete
 21. உங்க பேர் செந்தில்ங்கறதால செந்திலானந்தான்னு வச்சுகிட்டீங்க.. ஆனந்த்ன்னே பேருள்ள நாங்கெல்லாம் எப்படி பேர வச்சிக்கிறதாம்? நீங்களே சொல்லுங்க குருவே..

  ReplyDelete
  Replies
  1. ஆனந்தானந்தா... அலைஸ் ஆவியானந்தா .. இதுல எதுக்கு குரு வரணும் குருவின் சிஷ்யன் போதாதா... :-)

   Delete
  2. பெயரிலேயே ஆனந்தா வைத்து இருக்கும் நீங்கள் ஒரு டபுளானந்தா

   Delete
  3. அவ்வளவு தான சீனு.

   Delete
  4. அப்படியே ஆகட்டும் குருவே..

   Delete
 22. /////கோவை ஆவிSeptember 2, 2013 at 8:36 PM

  உங்க பேர் செந்தில்ங்கறதால செந்திலானந்தான்னு வச்சுகிட்டீங்க.. ஆனந்த்ன்னே பேருள்ள நாங்கெல்லாம் எப்படி பேர வச்சிக்கிறதாம்? நீங்களே சொல்லுங்க குருவே.. ///

  குரு அவர்கள் மகாதியானத்தில் உள்ளார்...

  உங்கள் பெயரை ஆனந்தியானந்தா என்று வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அப்படியும் வைத்துக் கொள்ளலாம்

   Delete
 23. இனிமேல் எனக்கு தெரிந்தது எல்லாம் தியானம், மகாதியானம், ஆன்மீகம், சமாதானம் மட்டுமே.

  நேற்று காவி உடையில பார்த்தப்பவே தெரிந்தது இப்ப ஏடாகூடாமா ஏதாவது எழுதிவீங்கன்னு...................

  நீங்க டெராராக இருந்தால் தான் பதிவுலகத்துக்கு நல்லது

  ReplyDelete
  Replies
  1. வேணும்னா டெரரானந்தா ஆகிட்டு போறேன்

   Delete
 24. ENAKKU ISHHKKU ISHHKKU ENRUDHAAN KAETKIRADHU................

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் அப்படித்தான் கேட்கிறதா. எனக்கும் அப்படித்தான் கேட்கிறது

   Delete
 25. குருஜி உங்கள் ஆஸ்தான சீடர் நக்கீரானந்தாவை நம்பாதீர்கள்,தலைமைப்பதவியை விரும்புவதாக ரகசிய தகவல்..!!

  உங்கள் மீது சாந்தியும் சாமாதானியும் வரட்டும்..!
  செந்திலானந்தா சரணம் சரணம்,ஓம் சாந்தி, ஓம் சாந்தி..

  ReplyDelete
  Replies
  1. வரட்டும், வரட்டும் நடப்பது எல்லாம் நன்மைக்கே

   Delete
 26. சுவாமிஜி தம 12 ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

  ReplyDelete
  Replies
  1. நடத்துங்கள், ஓம் சாந்தி சாந்தி

   Delete
 27. அண்ணே எது எப்படியோ உங்க எழுத்து சூப்பர்... இதுவரை நீங்க எழுதின எழுத்துக்கள்ல எந்த அளவுக்கு உழைப்பு கொடுத்து இருக்கீங்கன்னு தெரியாது, இத கண்டிப்பா அசால்ட்டா தன எழுதி இருப்பீங்க... உங்க ரைட் அப் சூப்பர்ப்..

  ஒருவேள எனக்கும் ஆன்ம ஞானம் வந்துட்டா எனக்கும் எழுத்து நல்லா வருமோ.... ?

  ReplyDelete
  Replies
  1. ஆன்ம ஞானம் தானா பெற முடியாது. குருவிடம் 12 மண்டலங்கள் பயிற்சி பெற்றால் தான் கிடைக்கும், நக்கீரன் தங்களுக்கு அது கிடைக்க உதவுவார்.

   Delete
 28. மீண்டும் லெளகீக வாழ்க்கைக்கு எப்போது திரும்புவீர்கள் குருவே !

  ReplyDelete
  Replies
  1. மகாதியானத்திலிருந்து இறங்கியவுடன் லௌகீக வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியது தான்

   Delete
 29. குருவே... தாங்கள் பொறுக்கிகள் என்று சொன்னது அவர்களைத்தான் என்று எப்படி கனகச்சிதமாக கண்டுபிடித்தார்கள் குருவே...

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் மேன்மக்கள் அல்லவா

   Delete
 30. என்னாச்சி , எதோ தகராறு மட்டும் தெரியுது ...

  ReplyDelete
  Replies
  1. என்னங்க பாஸ், உங்களுக்கு நுண்ணரசியல் பற்றிய அறிவு வளரனும் பாஸ்

   Delete
 31. அதில் கொடுமை என்னவென்றால் சுவனம் எல்லாம் அட்வைஸ் பண்ண வந்துவிட்டார்கள்.
  (சாத்தான் வேதம் ஓதிய கதைதான். வாஞ்சூரும் வந்தா முழுமை பெற்றிருக்கும் )

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கும் அன்பையே தருவோம்

   Delete
 32. இன்றைய (03/09/2013) சென்னை தினமணியில் பதிவர்கள் சந்திப்பு பற்றிய புகைப்படம் வெளியிட்டு இருக்கிறேன்.
  பார்க்கவும். தினமணி.காமில் E பேப்பரிலும் பார்க்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழரே

   Delete
 33. பதிவைவிட பதிவுக்கு வந்திருக்கிற கமெண்ட்டும், அதுக்கு நீங்களும் நண்பர்களும் கொடுத்திருக்கிற கமெண்ட்டும் சூப்பரா போயிட்டிருக்கு...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுப்புடு

   Delete
 34. மேன்மக்கள்... கீழ்மக்கள்...
  எல்லாம் மனப்"பிராந்தி" தான்!

  ReplyDelete
  Replies
  1. இதற்கு தான் பெரியவர் நீங்க வேணும்கிறது. உங்களுக்கு உண்மை புரியுது, மற்றவர்களுக்கு தெரியலையே

   Delete
  2. பெரியமனுஷன் பெரியமனுஷந்தான்யா....அஜிஸ்-க்கு தலை வணங்கி...பெரிய வணக்கம் ....

   Delete
 35. இந்த விளையாட்டுக்கு நான் வரலை

  ReplyDelete
  Replies
  1. வாங்க சும்மாத்தானே விளையாடுவோம்

   Delete
 36. வணக்கம் குரு...எல்லா ஆனந்தாக்களும் காவி உடையில இருப்பாங்க..ஆனா நீங்க பச்சைக்கலர்ல உடுத்தி இருக்கும் போதே நினைச்சேன்,,, புதுசா ஒரு ஆஸ்ரமம் திறக்கப்போறீங்கன்னு...
  வாழ்த்துக்கள்...நித்தியானந்தாவிற்கு ஒரு ரஞ்சிதா கிடைச்ச மாதிரி தங்களுக்கு ஒரு அமலா பாலோ , ஆவின் பாலோ கிடைக்க வாழ்த்துக்கிறேன்...
  அப்புறம் மறக்காம ஆஸ்ரமத்துல கேமரா ஜாமர் வச்சிடுங்க...இல்லேனா நக்கீரன் ல வீடியோவா வந்திடுவீங்க...

  ReplyDelete
  Replies
  1. நக்கீரன்ல வீடியோவா வந்தாலும் விளம்பரம் தானே. சந்தோசப்படுவோம். ஜெய் போலோநாத்.

   Delete
 37. ஆணிவேறாய் அஸ்திவாரமாய் இருந்து
  மிகச் சிறப்பாக பதிவர் சந்திப்பினை
  நடத்திக் கொடுத்தமைக்கு
  எங்கள் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி அய்யா

   Delete
 38. ஆசிரமத்தில பொருளாளர் போஸ்ட் ஏதும் காலியா இருக்குமா ?

  ReplyDelete
  Replies
  1. அதை யாமே வைத்துக் கொள்ளும் ஆலோசனையில் உள்ளோம்

   Delete
 39. Replies
  1. ஆமாம்ங்க திருத்துறைப்பூண்டி பேருந்தில் பயணம் செய்தால் அரைமணி நேரம் தான் ஆகும். 15 கிமீ தான்

   Delete
 40. //aamaanga............15k,m thaan//

  adhaan aanmeegam kodikatti parakkuthu

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...