சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, July 4, 2013

சாதியின் பெயரால் இன்னொரு உயிரை இழக்க வேண்டாம்

சாதி வெறிபுடிச்ச திருட்டு தே..... பயலுவளா, அநியாயமா வாழ வேண்டிய ஒரு வாலிபனின் உயிரையும் அவன் காதலையும் பறிச்சிட்டீங்களே. உங்களையெல்லாம் சாணிய கரைச்சி செருப்பால் அடிச்சாலும் தப்பில்லடா.

இனிமே இணையத்துல வன்னியன், தேவன், கவுண்டன், நாடார்னு எவனாவது வந்தான். .....ம்மால உனக்கு முதல் செருப்படி என்னிடமிருந்துதான். சாதி, மதவெறி புடிச்ச மொண்ண நாய்களா ப்ப்பீத்துண்ண போங்கடா.


இளவரசன் மரணம் குறித்த செய்தியைப் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உடனடி உணர்வின் காரணமாக முகநூலில் பகிர்ந்தது இது.

இப்பொழுது விலாவரியாக யோசித்துப் பார்க்கிறேன். இந்த சம்பவங்களுக்கு நாமும் ஒரு வகையில் காரணம். எல்லோருக்கும் ஒரு விதத்தில் சாதிக்காரன் என்ற எண்ணம் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்படுவதுண்டு. எனக்கு கூட சில சம்பவங்களில் இது போல் ஏற்பட்டு இருக்கிறது.

நான் இதற்கு முன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் வேலைக்கு வரும் விண்ணப்பங்களில் எனது சாதி இருந்தால் அதற்கு நான் முன்னுரிமை கொடுத்து இருக்கிறேன். வெளி மாநிலங்களில் ஏதாவது ஓரு தமிழரை சந்திக்க நேரும் போது அவரை எந்த மாவட்டத்துக்காரர் என்று விசாரிக்கும் போது அவர் தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம் தேனி என அறிய நேர்ந்தால் நீங்கள் இந்த சாதிக்காரரா என வினவுவதுண்டு.

இன்று அதெல்லாம் யோசித்துப் பார்த்தால் எனக்கே என்னை அசிங்கமாக தெரிகிறது. நல்லவேளை என் சாதிப்பற்று அத்துடன் முடிந்து விட்டது.

நான் காதல் திருமணம் செய்தவன். என் மனைவி என் சாதியோ, என் மொழியோ, என் மாநிலமோ கிடையாது. எந்த சூழ்நிலையிலும் சாதி முன்னுக்கு வரவேயில்லை. என் அப்பாவும் அம்மாவும் கூட எங்கள் காதலை அங்கீகரித்து முன்னின்று பத்துபைசா வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து வைத்தார்கள்.

என் தம்பி கூட அப்படித்தான் திருமணம் செய்துக் கொண்டான். இதற்கே அவனை நினைத்து எனக்கு பெருமிதம் தான்.

சாதி மறுப்பு வேண்டும் என்று கூறும் நபர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்த புரட்சியும் முதலில் தன்னிடம் இருந்து தான் துவங்க வேண்டும். இங்கு ஊடகங்களில் முன்னிறுத்தப்படும் சாதி அரசியலில் ஒரு ஆதாயம் மட்டுமே காரணமாக இருக்கிறது.

போதுமடா, இளவரசனின் மரணத்திற்கு பிறகாவது பொதுவில் சாதி அரசியல் பேசப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மனிதாபிமானத்திற்கு முன் சாதியும் மதமும் மண்டியிட்டு தான் இருக்க வேண்டும்.

சாதி, மதம் சார்ந்த எந்த இயக்கத்திற்கும் கட்சிக்கும் நாம் ஆதரவளிக்கக்கூடாது. எந்த கடவுளும் மனிதனுக்கு மிஞ்சியது கிடையாது. படித்தவர்கள் ஆகிய நாம் தான் பகுத்தறிந்து இது போன்ற விஷக்கிருமிகளை புறக்கணிக்க வேண்டும்.

இவர்கள் கட்சியும் இயக்கமும் நடத்துவது அவர்கள் வளரத்தானே தவிர நமக்கு பிரயோஜனமாக எதுவும் செய்வதற்கு இல்லை. என்றுமே நான் அரசியல் பதிவுகள் எழுதுவது இல்லை. இல்லை ஆனால் இது போன்ற சம்பவங்கள் தான் எழுத தூண்டுகின்றன.

என் சாதியையும் என் மதத்தையும் நான் துறந்து விட்டேன். இனிவரும் காலங்களிலும் என் சந்ததிகள் எந்த சூழ்நிலையிலும் சாதி சார்ந்து இருக்க மாட்டார்கள். நான் துவங்கி விட்டேன். எனக்கு பிறகு என் தம்பியும் கூட.

நீங்கள் எப்போது துவங்கப் போகிறீர்கள் மனிதர்களே.

ஆரூர் மூனா செந்தில்

49 comments:

 1. well said-நல்லா சொன்னீங்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராபின்சன்

   Delete
 2. மாம்ஸ்....நானும் கலப்பு திருமணம் செய்தவன் தான்...ஆனால் என் பொண்ணு படிக்கிற பள்ளிக்கூடத்துல சாதி சான்றிதழ் கேட்கிறாங்க...எப்படி ஒழிப்பது...

  ReplyDelete
  Replies
  1. அரசு வேலைக்கு கூட சாதி சான்றிதழ் அவசியமில்லை. இட ஒதுக்கீடு வேண்டுமென்றால் தான் சாதி சான்றிதழ் தேவைப்படும். கமல் கூட அவரது மகள்களுக்கு பள்ளியில் சேர்க்கும் போது சாதியை குறிப்பிடவில்லை.

   Delete
 3. மச்சி குழந்தையில் இருந்து சாதிப் பெருமை பேசும் கூட்டத்தில் இருந்து வந்தாலும் நாம் வாழும் சூழல், பழகும் நண்பர்களைப் பொறுத்தே நம்முடைய பகுத்தறிவு ஆக்கப்பூர்வமாகவும், பரந்த சிந்தனையுடன் சிந்திக்கின்றது.ஒருவர் இல்லாமல் இன்னோருவர் வாழ முடியாது என்பதை உணர்ந்தாலே போதும்.சமுதாயம் ஒரு உயர்ந்த சமுதாயமாகவும் உயரும்.

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்ன மச்சி

   Delete
 4. நெஞ்சு பொறுக்குதில்லையே! சாதிவெறி ஒரு அப்பாவித் தமிழனைப பலி கொண்டு விட்டது. செல்வி. ஜெயலலிதா இந்தக் கொலையில் அல்லது தற்கொலைக்கு உடந்தையானவ்ர்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரையும் கம்பி எண்ண வைக்க வேண்டும். முதலில் சாதிக்கட்சிகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வியாசன்

   Delete
 5. கோவைநேரம்
  மாப்ள தெரியாமதான் கேட்குறீங்களா...? சாதி தெரிவிக்க விரும்பாத பிரிவு ஒன்று இருக்கு ஆனால் பிற்காலத்தில் அரசு வேலை வாய்ப்பு கிடைக்க இடையூராக இருக்கும் என்று கருதுகின்றேன். சாதி தெரிவிக்க விரும்பாதவர்களுக்கு அரசு குறைந்த பட்சம் மிகவும் பிற்படுத்தபட்டவர்களுக்குறிய சலுகை தரலாம்.

  ReplyDelete
  Replies
  1. நானும் இதையே நினைக்கிறேன் மச்சி

   Delete
  2. அப்படி எதாவது ஜி ஓ இருக்கா..? கண்டிப்பா சான்றிதழ் கேட்கிறாங்களே...

   Delete
 6. நீங்கள் எப்போது துவங்கப் போகிறீர்கள் மனிதர்களே.
  உங்களுக்கு வாழ்த்துகள் உங்களின் யோசனைக்குப் மனிதம் போற்றும் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன் அண்ணே

   Delete
 7. இளவரசனின் மரணத்திற்கு பிறகாவது பொதுவில் சாதி அரசியல் பேசப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மனிதாபிமானத்திற்கு முன் சாதியும் மதமும் மண்டியிட்டு தான் இருக்க வேண்டும்.

  சாதி, மதம் சார்ந்த எந்த இயக்கத்திற்கும் கட்சிக்கும் நாம் ஆதரவளிக்கக்கூடாது. எந்த கடவுளும் மனிதனுக்கு மிஞ்சியது கிடையாது. படித்தவர்கள் ஆகிய நாம் தான் பகுத்தறிந்து இது போன்ற விஷக்கிருமிகளை புறக்கணிக்க வேண்டும்.

  இதைவிட அதிகமாய் இந்த விஷயத்திற்கான முற்றுப்புள்ளியை யாரும் வைத்துவிடமுடியாது. சரியான நேர்கோண சிந்தனை...

  நீங்கள் முதலில் உணர்ச்சிவசப்பட்டு கூறியதும்(திட்டியதும்) சரியே... பின்னர் யோசித்து எழுதியிருப்பதும் மிகச்சரியானதே...

  சாதியை கொண்டு சங்கமும் அரசியலும் நடத்தும் கூட்டங்கள் பாகுபாடில்லாமல் ஒழித்துக்கட்டப்படவேண்டும்... இல்லை மக்களால் அடையாளம் தெரியாமல் போகுமளவுக்கு புறக்கணிக்கப்படவேண்டும்... இரண்டுமே நடப்பது சந்தேகம்தான் படிப்பறிவு எவ்வளவு வளர்ந்தாலும் சாதிப்பற்று ஒழியாத நம் சமுதாயத்தில்...
  அடுத்த தலைமுறையையாவது சாதி இல்லாமல் வாழவிடுவார்களா என்பதும் தெரியவில்லை...
  பார்க்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சாய்ரோஸ்

   Delete
 8. மூனா,

  இவ்வளவு வெளிப்படையாக கோபத்தினை,ஆதங்கத்தினையும் சமீபக்காலத்தில் யாரும் காட்டிப்பார்க்கவில்லை என்னையே கொஞ்சம் வெட்கப்பட வைத்துவிட்டது(அது என்ன என்னையேனுலாம் கேட்டகப்படாது),காரணம் முன்ன எல்லாம் பொங்கிட்டு இருப்பேன்ன்,இப்போ என்னமோ நீர்த்துப்போயிட்டேன் போல, உணர்ச்சி வசப்பட்டா தான் மனிதன் ,உணர்ச்சி செத்துப்போயிட்டா பொணம்,நீர் மனிதனய்யா! பாராட்டுக்கள்!

  இந்த ஜாதிவெறி தூமைங்களை எல்லாம் லேசா கலாய்ச்சதுக்கே ஒரு சிலர் "இணையத்தில புரட்சி பண்ண" கிளம்பிட்டாங்கன்னு கலாய்க்கிறாங்க,ஆனால் இப்படி மீண்டும் மீண்டும் உயிரிழப்பு ஏற்படுவதைப்பார்த்தால், முதலில் இந்த நடுநிலை போர்வைப்போர்த்திக்கொண்டு வியாக்கியானம் பேசுறவனுங்களை "போர்வை போர்த்தி சாத்தனும்" போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வவ்வால்

   Delete
  2. Thank u for your reply vavval

   Delete
 9. மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.
  http://www.hooraan.blogspot.com/2013/07/blog-post.html

  ReplyDelete
 10. சாதி தவறு தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

  ஆனா இந்த வித்யா பொண்ணை நினைத்தால் வயிறு எரியுது. இளவரசன் மரணத்திற்கு ஒரு வகையில் அந்த பொண்ணும் தானே காரணம். கடைசி வரை அவங்க அம்மா பார்த்து கொள்வார்களா? தன் பொண்ணுடைய சந்தோசத்தை கெடுத்து, பிரித்து தன்னுடன் வைத்து கொள்வதில் அவ்வளவு ஆனந்தமா அந்த அம்மாவுக்கு?

  அந்த இருவரும் இனிமேல் நிம்மதியாக இருக்க தான் முடியுமா? என்ன கருமம்டா இது.

  திறந்த மனதுடன் உங்கள் தவறை ஒத்துகொள்வதிலேயே நீங்கள் திருந்தி விட்டீர்கள் என்பது மிக நன்றாக புரிகிறது. ஒரு 5 சதவீதத்தினரே உங்களை போன்று உள்ளனர். மீதம் அனைவரும் சாதி வெறி பிடித்த கூட்டமே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா

   Delete
 11. சிறப்பு...! பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்

   Delete
 12. //எல்லோருக்கும் ஒரு விதத்தில் சாதிக்காரன் என்ற எண்ணம் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்படுவதுண்டு. எனக்கு கூட சில சம்பவங்களில் இது போல் ஏற்பட்டு இருக்கிறது.//

  //சாதி வெறிபுடிச்ச திருட்டு தே..... பயலுவளா//

  அப்ப நீங்க முன்னாள் 'திருட்டு தே..... பய'? :)))))))))))

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீனு. என்னே உங்கள் கண்டுபிடிப்பு, உமக்கு நோபல் பரிசு தரணுமய்யா

   Delete
 13. இந்தக் 'தற்கொலை' அல்லது படுகொலைக்கு நீதியான, நியாயமான விசாரணை வேண்டி வலைப்பதிவர்கள் அனைவரின் சார்பிலும் தமிழ்நாட்டில் வாழ்கிற யாராவது தமிழக அரசுக்கு எழுத வேண்டும். அதற்கு என்னுடைய ஆதரவு உண்டு.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக செய்வோம் வியாசன்

   Delete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. I don't know how to congrats you. I am like you who married other state girl in 1980. But I never had a problem or issues raised from my caste (CBT & Periyar Dt Majority Caste).

  Even though my name is different here, few of our friends in our blog world know that (who I am and what caste I belong). My family accept me within 6 months and my parents live with me up to the end (both passed away).

  My friends helped me a lot at that critical time. My relatives accept me. Accept me means they invite our family for all occasions and participate in our family functions too.

  But the fate is - When I came to U.S my caste name is my last name. (which I don't want) This is because of our passport agencies. My father's name is with caste name and passport agency mentioned my last name as father's name.

  My first employer has no space to put my last name in their database (it is more that 35 characters). So they put my father's name as middle name and my caste as last name.

  I tried to edit and there may me some typo.

  ReplyDelete
 16. I don't know how to congrats you. I am like you who married other state girl in 1980. But I never had a problem or issues raised from my caste (CBT & Periyar Dt Majority Caste).

  Even though my name is different here, few of our friends in our blog world know that (who I am and what caste I belong). My family accept me within 6 months and I parents live with me up to the end (both passed away).

  My friends helped me a lot at that critical time. My relatives accept me. Accept me means they invite our family for all occasions and participate in our family functions too.

  But the fate is - When I came to U.S my caste name is my last name. (which I don't want) This is because of our passport agencies. My father's name is with caste name and passport agency mentioned my last name as father's name.

  My first employer has no space to put my last name in their database (it is more that 35 characters). So they put my father's name as middle name and my caste as last name.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சந்தோஷ்

   Delete
 17. may be some typo in my previous comment, sorry for that

  ReplyDelete
 18. சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி நிரஞ்சன் தம்பி

   Delete
 19. பள்ளியில் சாதி சான்றிதழ் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை, நான் கொடுத்ததில்லை, இதர பிரிவு என்றிட்டுக் கொண்டார்கள். நட்டப்பட்டது இட ஒதுக்கீடு மட்டும், போய் விட்டு போகுது, இந்த இட ஒதுக்கீட்டை வைத்து நான் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை என என் பெற்றோர் அன்றே அறிந்தவர் போலும், இட ஒதுக்கீட்டு பிரியர்கள் தான் சாதி சான்றிதழ் வேண்டுவோர். சாதி உயர்வு பேசுவோர் ஏன் நடுவில் உட்கார்ந்து கொண்டு, இட ஒதுக்கீட்டை விட்டு புட்டு தாமும் பார்ப்பான் எனக் கூறிவிடலாமே, இட ஒதுக்கீட்டை விரும்புவோர், தலித்களை வெறுக்காமல் அவர்களோடு கலப்புறலாமே. அது வேண்டும் இது வேண்டாம், நல்ல கதை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி நிரஞ்சன் தம்பி

   Delete
 20. நானும் கலப்புத் திருமணம்தான். வெவ்வேற மொழி. ஆனால் மதம் மட்டும் ஒன்று.

  நல்லவேளை சாதி கேக்காத நாட்டில் இருப்பதால் மகளுக்குப் பிரச்சனை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா

   Delete
 21. மாற்றம் நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும். என் மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜோதிஜி

   Delete
 22. நீங்கள் எப்போது துவங்கப் போகிறீர்கள் மனிதர்களே.
  >>
  மனசு ஏங்குது. ஆனா, பிள்ளாஇங்க கல்யாணம்ன்னு வரும்போதுதான் இந்த நிலைப்பாடு அடிச்சுக்குது உறவுகள் தூற்றும்ன்னு

  ReplyDelete
  Replies
  1. இந்த ஒரு இடத்தில் தான் சாதி வெற்றி பெறுது.

   Delete
 23. நல்ல முயற்சி தான் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. வணக்கம் சகோ .. நான் உங்களுடைய ப்ளாக் தொடர்ந்து படித்து வருகிறேன். இன்று நீங்கள் சொன்ன வார்த்தை உங்களை மிகவும் மரியாதைக்கு உரியவராக நினைக்கிறேன். யாரும் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை. ஜாதி மறுப்பு வெறும் பேச்சு மட்டுமே. இன்று நானும் என்னை நினைத்து வெட்க படுகிறேன். வாய் கிழிய ஜாதி மறுப்பு பேசும் நான், என் நண்பர் நீ எஸ் சி யானு கேட்கும் போது , உடனே மறுப்பு தெரிவித்து என் ஜாதி பெருமையை ஒரு மணி நேரம் பேசினேன். இப்போ நினைத்து வெட்க படுகிறேன்.
  நன்றி.....

  ReplyDelete
 25. என்ன சொல்றது அண்ணா ...

  "மனிதத்தை கொன்றவர்கள் மனிதனை (இளவரசனை) கொன்றுவிட்டார்கள் "

  அன்பில்லாத பிணங்கள் நடமாடும் உலகில் காதல் நாறும் - கருவாடு மனக்கும்.

  ReplyDelete

 26. வணக்கம்!

  சாதி சமய சழக்குகளைத் தீயிட்ட
  நீதி படைப்போம் நிலைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 27. சாதியை பள்ளிகளில் கட்டாயம் சொன்னால்தான் சேர்த்துக் கொள்வதுபோல் பேர் சொல்கிறார்கள்.. பள்ளிகளில் சேர்க்கும்போது சாதி குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. இதற்கு அரசானை கூட உள்ளது. பள்ளியில் கேட்பதற்கான காரணம் பிற்காலத்தில் எனக்கு சாதிக்குரிய சலுகைகள் கிடைக்கவில்லை நீங்கள் வேண்டுமென்றே சாதிகளை குறிப்பிட வில்லை என்று சண்டையிடக் கூடும்.உண்மையில் சாதியை குறிப்பிட வில்லை என்றால் முற்படுத்தப் பட்டவர் பிரிவில் சேர்க்கப் படுவிடுவார்கள்.. சலுகைகள் வேண்டாம் என்று சொல்பவர் மிக சொற்பமே.சாதி மறுப்பு பேசுபவர்களில் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் சேர்க்கும்போது சாதி குறிப்பிட தயங்குவதில்லை. அறிவுதான் சாதியை ஏற்காது .மனதோ சாதியை விடாது.கடைசியில் பெரும்பாலும் மனமே வெல்கிறது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...