சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, November 5, 2012

கும்பகோணம் டிகிரி காபியின் தில்லுமுல்லு


சென்ற வாரம் காரில் திருவாரூரிலிருந்து சென்னைக்கு வந்தேன். வரும் வழியில் திண்டிவனத்தை தாண்டியதும் செங்கல்பட்டு வரை 8க்கும் மேற்பட்ட கும்பகோணம் டிகிரி காபி கடை என்ற பெயரில் கடைகள் இருந்தன. ஒரு கடையில் காபி குடித்துப் பார்த்தால் கன்றாவியாக இருந்தது. கும்பகோணத்திலேயே டிகிரி காபி பல இடங்களில் வாயில வைக்க சகிக்காது. கும்பகோணம் டிகிரி காபி என்று பெயர் வைத்தால் என்று வியாபாரம் நன்றாக நடக்கும் என்று எவன் கண்டுபிடித்தானோ அவனை கல்லால் தான் அடிக்க வேண்டும். டீக்கடையின் பரப்பளவை விட பெயர்ப்பலகையின் பரப்பளவு பெரியதாக இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒரு செட்டிநாட்டு கடையின் வாசலிலும் கும்பகோணம் டிகிரி காபி கடை என்ற பெயர்ப்பலகை இருந்தது. என்ன கொடுமைடா சாமி.

இவ்வளவு தான் விஷயம், இதனை பஞ்சேந்திரியாவில் ஒரு பகுதியாக போட தட்டச்சு செய்தேன். என் நண்பன் ஒருவன் சீனாவிலிருந்து போன் செய்தான். நான் எழுதும் பதிவுகள் ராவாக இருப்பதாகவும், அதனை சற்று கற்பனை கலந்து எழுதிப் பார் என்று சொன்னான். அதற்கான முயற்சி தான். இது சற்று நீட்டி முழக்கி ஒரு பதிவாக தயார் செய்து விட்டேன். நன்றாக இருந்தால் ரசியுங்கள். மொக்கையாக இருந்தால் காறித்துப்புங்கள். நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.

----------------------------------------


எங்கள் வீட்டில் நடந்த விசேசத்திற்காக வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கடும் மழைக்கிடையே ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நானும் சென்னை திரும்ப பேருந்து இருக்கையை முன்பதிவு செய்ய பேருந்து நிலையம் வந்தேன். நான் பார்த்த நாள் முதலே தைலம்மை திரையரங்கின் எதிர்புறம் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவனை காணும். அடுத்த வாரிசு வரும் வரை இடம் காலியாக இருக்கும் என நினைக்கிறேன். நல்ல வியாபார இடம். எவனுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ.

பேருந்து நுழையும் இடத்தில் அதே பழைய மூத்திர வாசனை. அதை தாண்டி வந்து முன்பதிவு கவுண்ட்டருக்கு முன் நின்றேன். ஆள் அரவமின்றி இருந்த கவுண்ட்டரில் ஓட்டை ஃபேனுக்கு முன்னாடி அமர்ந்திருந்தவன் சுகமாக காது குடைந்து கொண்டிருந்தான். நான் வந்து அவன் சுகத்தை கெடுத்த கடுப்பில் முன்பதிவு செய்ததும் பத்து ரூபாய் குறைந்ததற்கு டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு என்னை சில்லறை வாங்கி வரச் சொன்னான். பத்து ரூபாய்க்காக ஒரு குங்குமம் புத்தகத்தை வாங்க வைத்து புண்ணியம் தேடிக் கொண்டான்.

டிக்கெட்டை பெற்றுக் கொண்டதும் மீண்டும் அதே மூத்திர வாசனை இடத்தை கடந்து தைலம்மை திரையரங்கின் முன் காலியாக இருந்த இடத்தை பெருமூச்சு விட்டு பொறாமையாக பார்த்துக் கொண்டே வண்டியை கிளப்பி வீடு வந்தடைந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் மாமா ஒருவர் அப்பாவுக்கு போன் செய்து நான் சென்னை செல்கிறேன், என்னுடன் வரச் சொல்லுங்கள் என்று சொல்லவே மீண்டும் அதே வழிப் பயணத்தில் சென்று காது குடைந்த புண்ணியவானிடம் டிக்கெட் கான்சல் என்று சொல்லவே முணுமுணுத்துக் கொண்டே பணத்தை திருப்பிக் கொடுத்தான்.

மதியம் வீட்டுக்கு கார் வந்தது.

நிற்க. . இந்த இடத்திலிருந்து திண்டிவனம் வந்தது வரை நான் சொல்ல வேண்டுமானால் நாவல் தான் போட வேண்டும். எனவே கார் திண்டிவனம் வரும் வரை படிக்கும் அனைவரும் தூங்கி விடவும்.

எழுந்திருக. வண்டி பாண்டி வழியாக திண்டிவனத்தை வந்தடைந்தது. கண்ணாடி முழுவதும் ஏற்றி விட்டிருந்தாலும் காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. எப்படி என விழிக்க கூடாது. ஏசி ஓடிக் கொண்டிருந்தது. திண்டிவனத்தை கடந்து ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது.

மேல்மருவத்தூர் வந்தது. ஊரில் ஒரே சிவப்பு உடை தரித்து மக்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஏதோ கம்யூனிஸ்ட் மாநாட்டு பொதுக்கூட்டம் போல. மாநாடு நடக்கும் பகுதியை தாண்டியதும் ஒரே இருட்டு காரின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம் எதிரில் வந்த வண்டிகளும் விளக்கை எரியவிட்டுக் கொண்டே சென்றன. மின்சார தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் இந்த மாநிலத்தில் இதெல்லாம் தேவையா.

ஒரு மேம்பாலத்தில் ஏறிய போது மதுராந்தகம் ஏரி இடது பக்கம் வந்தது. ஏரியில் தண்ணியே இல்லை. வலது பக்கம் ஊர் இருந்தது, அதுதான் மதுராந்தகம். ஆனால் அந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. பின்னே கார்களில் செல்பவர்கள் விளக்கை எரிய விட்டுக் கொண்டிருந்தால் எப்படி நகருக்கு மின்சாரம் கிடைக்கும். அவர்களை விட்டுவிடுவோம். பாவம் அவர்கள் விபரமில்லாதவர்கள்.

மதுராந்தகம் தாண்டியதும் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஏற்கனவே இரண்டு கும்பகோணம் டிகிரி காபி கடையை தவற விட்டு வந்த அடுத்த கடையில் கண்டிப்பாக குடித்து விட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். அதன்படி அடுத்ததாக மிகப்பெரிய பெயர்ப்பலகையை உடைய கும்பகோணம் டிகிரி காப்பி கடையை கண்டோம்.

வண்டியை இடம் பக்கம் ஒடித்து திருப்பி வண்டியை நிப்பாட்டினால் அடப்பாவிகளா அது டீக்கடை. பெயர்ப்பலகையை பாதியாக உடைத்து வைத்தால் கூட உள்ளே வைக்கமுடியாது. அந்த கடையில் பாதி பங்க்கு கடை.

டீக்கிளாஸில் காபியை கொடுத்தார்கள். கருமம் நாலாவது முறை வடிகட்டிய டிக்காசனாக இருக்கும் போல இருக்கிறது. அதற்கு மேல் கசப்புக்கு ஏதோ புளியங்கொட்டையை அரைத்து போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். பாதி குடித்து விட்டு கிளாஸை அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.

நானெல்லாம் குடித்து மட்டையானாலும் மிச்சமிருக்கும் சரக்கை குடிப்பதற்காக வாந்தியெடுத்து விட்டு வந்து முழுவதும் சரக்கடித்து விட்டு மட்டையாகும் ஆள். நானே பாதி கிளாஸ் காபியை வைத்து விட்டு வந்து விட்டேன் என்றால் அது எந்த அளவுக்கு கன்றாவியாக இருக்கும் என்பதை நீங்களே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கும்பகோணம் காபி கடை என்று பெயர் போட்டால் காபி விற்கும் என்ற ட்ரிக்கை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. மவனே அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் மூஞ்ச தார்ரோட்டில் வச்சி தேய்ச்சிப்புட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.

அதற்கு அப்புறம் வண்டி கிளம்பியது. சென்னை வரும் வரை நடந்தை சொல்ல வேண்டுமென்றால் நான் நாவலின் இரண்டாம் பாகம் போட வேண்டி வரும் எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

ஆரூர் மூனா செந்தில்

67 comments:

 1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............................................

  இது அந்த சீனா காரனுக்கு..............
  :-))))))))))))

  ReplyDelete
 2. முதல்ல செந்திலுக்கு ஒரு போன்-ஐ போடணும்.......

  ReplyDelete
  Replies
  1. தெய்வமே, நானே ஊருக்குள்ள நக்கீரன் ப்ரெண்டு நானுன்னு சொல்லி தாதா போல் வலம் வந்துகிட்டு இருக்கேன். என்னையே சோதிக்கலாமா நீங்க.

   Delete
 3. THe coffee shop located in "karunkuzhi"( while coming towards chennai, this will be after you pass maduranthakam) is the genuine one. They have excellent coffee. Recently they have opened up another branch, I forgot the location. So try the coffee here, you will not be disappointed.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி அழகன்

   Delete
 4. சகோ.செந்தில்

  அதிகமா சொந்த கதைய தான் போடுவீங்க போல..தேங்காயை ஏற்றுமதி செய்ததில் பத்து லட்சம் தரவில்லை என்று உங்கள் பதிவில் படித்ததாக நினைவு....பணம் கிடைத்து விட்டதா..?

  நன்றி !!!

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்க பாஸ். ஒரு டாக்குமெண்ட்டில் தவறு செய்து விட்டதால் இன்னும் கேஸ் இழுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

   Delete
 5. //எப்படி என விழிக்க கூடாது. ஏசி ஓடிக் கொண்டிருந்தது. //

  ஹா ஹா ஹா நாலா தான் எழுதி இருக்கீங்க .. காறித் தப்ப வேண்டியத் அந்த காப்பி கட காரணத் தான்

  ReplyDelete
 6. நானும் திருவாரூர் காரன் தான், தைலம்மை தியேட்டருக்கு எதிர்புறம் என்றால் எந்த இட்முனு சொன்னிங்கனா உங்க பேர சொல்லி நான் பிழைச்சுப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. தைலம்மை தியேட்டருக்கு எதிரில் SVT புக்கிங் ஆபீஸ் பக்கத்தில ஒரு சந்து போகுமே. ஆங் எனக்கு போட்டி வேறயா, போங்க பாஸ் இதுக்கு மேல தேடிக் கண்டுபிடிச்சிக்கங்க.

   Delete
 7. இந்தமாதிரி ஒன்லைனை பதிவாக தேற்றுவதற்கு சொல்லிக்கொடுத்தது சீனா நண்பரா அல்லது ஏழு வருட பாரம்பரிய பதிவரா ???

  ஆனாலும் நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு செந்திலு... கற்பனைன்னு நீங்களே சொல்லிட்டீங்க பார்த்தீங்களா...

  // மேல்மருவத்தூர் வந்தது. ஊரில் ஒரே சிவப்பு உடை தரித்து மக்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஏதோ கம்யூனிஸ்ட் மாநாட்டு பொதுக்கூட்டம் போல. //

  சாக்கியுடைய கொண்டை தெரிகிறது...

  ReplyDelete
  Replies
  1. கொண்டைய மறச்சிக்கிறேன் பிரபா.

   Delete
 8. மூனா,

  ஒரு காப்பி குடிச்ச கதையை ஒரு தமிழ் "காப்பி"யம் ஆக்கிட்டீரே :-))

  நல்ல டிகிரி காபி கடையும் இருக்கு. திண்டிவனத்துக்கு முன்னரே வீடூர் அணைனு போர்ட் வச்சிருக்கும் இடத்திற்கு எதிரில் ஒரு டிகிரி காபி கடையில் காபி நல்லா இருக்கு, பித்தளை தபரா செட்டில் காபி கொடுக்கிறாங்க. 20 ரூ முழு காபி,மினி 15 ரூ.

  நானும் தான் டிகிரி காபி குடிச்சேன் ,ஆனால் பதிவா போட்டு தேத்த தோனலையே அவ்வ் :-((

  ReplyDelete
  Replies
  1. நன்றி வவ்வால். நீங்கள் சொன்ன இடத்தில் காபி குடித்து பார்த்து விட்டு அடுத்த பதிவை போடுகிறேன்.

   Delete


 9. உங்க காப்பி புராணம் அருமை!!!

  நானும் மேல்மருவத்தூர் பக்கம் வந்தபோது நாலைஞ்சு கும்பகோணம் காப்பி பார்த்தும் பரிட்சை செய்ய தில் வரலை:(

  சென்னையிலேயே பில்ராத் ஹாஸ்பிடல் பக்கம் ஒரு சங்கீதா இருக்கு பாருங்க அதைத் தொட்டடுத்து கும்பகோணம் டிகிரி காப்பி ஒன்னு இருக்கு. அங்கே குடிச்சுப் பார்த்தேன். ஓரளவு சுமாராய், பரவாயில்லாம இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசி கோபால் அம்மா. உங்கள் தில் சூப்பர். நானும் சென்னையில் உள்ள கும்பகோணம் டிகிரி காபி கடையில் குடித்துப் பார்க்கிறேன்.

   Delete
 10. நன்றி பழனி கந்தசாமி அய்யா.

  ReplyDelete
 11. காப்பி (செய்யப்படாத)பதிவு நல்லா இருக்கு.
  பெரும்பாலும் கடைகளில் டீ குடிப்பதே நல்லது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முரளிதரன். அதென்னவோ காபியை கண்டால் நாக்கு ஊற ஆரம்பித்து விடுகிறது.

   Delete
 12. Replies
  1. நன்றி மாப்ள.

   Delete
 13. ////////
  என்ன ஒரு ஆச்சரியம் எதிரில் வந்த வண்டிகளும் விளக்கை எரியவிட்டுக் கொண்டே சென்றன. மின்சார தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் இந்த மாநிலத்தில் இதெல்லாம் தேவையா.
  /////////

  விவரம் இல்லாத பசங்க... கரண்ட் எப்படி மிச்சப்படுத்தனும் அப்படின்னு ஒரு பதிவு போடுங்க...

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவுக்கு தலைப்பை தேத்திக்கொடுத்தாச்சி. நன்றி மாப்ள

   Delete
 14. ///////
  என் நண்பன் ஒருவன் சீனாவிலிருந்து போன் செய்தான். நான் எழுதும் பதிவுகள் ராவாக இருப்பதாகவும், அதனை சற்று கற்பனை கலந்து எழுதிப் பார் என்று சொன்னான். அதற்கான முயற்சி தான்
  ///////////


  இன்னும் மிக்ஸிங்கில் சரியான அளவு தேவை...

  ReplyDelete
  Replies
  1. சரக்கை சர்வ சாதாரணமாக மிக்ஸ் செய்யிறோம். இதுல கதைக்காக மாட்டேங்குதே.

   Delete
 15. இன்னும் இதுபோல
  தலப்பாகட்டு பிரியாணி...
  ஹைதராபாத் பிரியாணி,
  திருநெல்வேலி அல்வா..
  திருப்பதி லட்டு

  என்ற பெயர்களிலும் இதே கண்ராவிதான் நடந்துக்கொணடிருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. அதென்னமோ கரெக்ட்டு தான்.

   Delete
 16. நிற்க...எந்திரிக்க....
  ////////////////////////
  நீ..என்ன பெரிய பி.டி.மாஸ்டரா...?ராசுக்கோலு!
  பேச்சு நடையில் இருந்திருந்தா செம பதிவாயிருந்திருக்கும்...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தலைவரே. இன்னும் கொஞ்சம் வீங்குற மாதிரி கூட கொட்டலாம் தப்பேயில்லை.

   Delete
 17. Vanakkammne nalla pathivu... adikkadi ithupola eludhunganne...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாணிக்.

   Delete
 18. நிஜ சம்பவங்கள் பற்றிய பதிவுகளில் மட்டும் கற்பனை வேண்டாம் செந்தில். அது நம்ம ஸ்டைலுக்கு ஒத்தே வராது.

  ReplyDelete
  Replies
  1. புரியுது மாத்திடுவோம் சிவா.

   Delete
 19. //இந்தமாதிரி ஒன்லைனை பதிவாக தேற்றுவதற்கு சொல்லிக்கொடுத்தது சீனா நண்பரா அல்லது ஏழு வருட பாரம்பரிய பதிவரா ???//

  என்னது பாரம்பரியமா?

  ReplyDelete
  Replies
  1. பின்ன அவரு தமிழ் கம்ப்யூட்டர் டைப்பிங் காலத்திலேர்ந்து பிளாக்கு எழுதிக்கிட்டு இருக்காரு.

   Delete
 20. நல்லா இருக்குவே காப்பி

  ReplyDelete
  Replies
  1. அந்த கன்றாவி காபிய குடிச்சிப் பாத்தாதாங்க கஷ்டம் தெரியும்.

   Delete
 21. சென்னை - திண்டிவனம் சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள ‘ஹை வே இன்’ ஹோட்டலுக்கு எதிரே உள்ளதுதான் முதலில் ஆரம்பித்த ‘கும்பகோணம் டிகிரி காப்பி’ கடை. இங்கு பித்தளை டம்பளரிலும்(வட்டா) காப்பி தருகிறார்கள். கார் நிறுத்த இடம் இல்லை என்பதால் சாலையின் ஒரத்திலேயே நிறைய கார்கள் நிற்பதைப் பார்க்கலாம். இப்போது சிறிது தூரம் தள்ளி தெற்கே அதே வரிசையில் இன்னொரு கிளை திறந்துள்ளார்கள். இங்கு கார்கள் நிறுத்த வசதி உண்டு,அடுத்த தடவை ஊருக்கு செல்லும்போது, முயற்சித்துப் பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தகவலுக்கு நன்றி நடன சபாபதி அய்யா, அடுத்தமுறை கண்டிப்பாக சென்று சுவைக்கிறேன்.

   Delete
 22. aiya kumbakonam filter coffee franchisee edukalam nu pathen they give advertisement and ask deposit 2 lakh just i read your coffee experience i drop that business thanks

  ReplyDelete
  Replies
  1. காபிக்கடைக்கு ரெண்டு லட்சம் எல்லாம் ஓவருங்க. இப்ப நடத்துறங்க எல்லாம் பர்மிசன் வாங்கிட்டா செய்யறானுங்க.

   Delete
 23. aiya trans enterprises nu oru dubakur mlm company marupadiyum chennai la business panni cheat pannikitu irukanga i will give trace address and send you aiya if posble write in your blog and save people

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக, விவரங்கள் கொடுத்தால் எழுதுகிறேன்.

   Delete
 24. சரிங்க சார்.

  ReplyDelete
 25. முதல் டிகிரி காப்பி என்றால் என்ன? என விளக்கம் தரவும். நான் இலங்கையன் அங்கு இப்படி ஒன்று கேள்விப்படவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதென்ன டிகிரி காபி?டிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும் பால். இதை லேக்டோ மீட்டர்
   போட்டு டிகிரி உறுதிப்படுத்தியே வாங்குவார்கள். அதில் போட்டால் தான், அது டிகிரி காபி. கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும் சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிட
   வேண்டும். ஆடை சூழாத பால் பாதி, பில்டரில் ஊறிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று... பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில் உடம்பு நரம்புகள் கிளர்ந்து எழும்.

   Delete
  2. நீங்களே அப்படியொரு உண்மையான கும்பகோணம் டிகிரி காப்பிக்கடையைத் திறக்கக்கூடாது ? உங்களுக்குத்தான் டிகிரி காப்பி என்றால் என்னவென்று தெரிகிறதே !

   பதிவில் மூத்திர வாசனையென்று எழுதியிருக்கிறீர்கள். இப்படி எழுதும் உங்களுக்கு ஒரு ஞானியின் மனது. முற்றும் துறந்த முனிவருக்கு, அதாவது, ஞானிக்கு உலகத்தில் எல்லாமே வாசனையாகத்தான் இருக்குமில்லையா?

   Delete
  3. முற்றும் துறந்தவருக்குத்தான் முனிவர் என்று பெயர். எனக்குத்தான் எல்லையில்லா ஆசையிருக்கிறதே. வாரம் இருமுறை ஆப் அடிக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் அசைவத்தை முழுங்க வேண்டும். இத்யாதி, இத்யாதி இன்னும் பல. நம்மளை போய் முனிவரு, கினிவருன்னுகிட்டு.

   Delete
  4. ஆனா மூத்திர வாசனை என்றெழுதுவதை நிறுத்தி மூத்திர நாற்றமெனலாம். (தற்காலத் தமிழில் நாற்றமென்றால் துர்நாற்றம்தான்). சும்மா சொன்னேன்.

   Delete
 26. தங்கள் வர்ணிப்பும், விளக்கமும் அருமை! இப்படித் தயாரித்தால் அது சிறப்பாகவே
  இருக்கும் நம்புகிறேன்.
  கறந்த சூடு ஆறாத பால், காப்பிக் கடைகளில் சாத்தியமா?
  உங்களைப் போன்ற ரசிகர்களை அவர்கள் ஏமாற்றக் கூடாது. இதை காப்பிக்கடை நடத்துவோர்
  படித்தால் மாற்றம் வரும்.

  அன்றைய மணியனின் கதைகளில் "அந்த மாமியின் காப்பியை மறக்கவே முடியாது" இப்படி ஒரு வரியிருக்கும்.அனுபவமின்மையால் என்னால் அதை உணரமுடியவில்லை.
  இப்போ தான் புரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. அது போன்ற காபி வீடுகளில் மட்டும் தான் கிடைக்கும். வணிகநோக்கத்துடன் நடத்தப்படும் கடைகளில் எதிர்ப்பார்ப்பது நியாயமில்லைதான். ஆனால் சில கடைகளில் பால் எப்படியிருந்தாலும் முதல் தர டிகாஷனை எடுத்து காபி போட்டு தருகிறார்கள். அது கூட டிகிரி காபிக்கு நிகராகத்தான் இருக்கிறது.

   Delete
 27. நான் திண்டுகல்லுக்கு பக்கம் பாஸ்.. டிகிரி காபிங்கர சமாச்சாரமே எனக்கு இப்பதான் தெரியும்.. // பின்னே கார்களில் செல்பவர்கள் விளக்கை எரிய விட்டுக் கொண்டிருந்தால் எப்படி நகருக்கு மின்சாரம் கிடைக்கும். அவர்களை விட்டுவிடுவோம். பாவம் அவர்கள் விபரமில்லாதவர்கள். // என்னமா கரரணம் கண்டுபிடிகிரிங்க பாஸ்... சூப்பர்..

  ReplyDelete
 28. டிகிரி காப்பிக்கு விளக்கம் அருமை செந்தில்.. உங்களுக்கு சொந்த அனுபவமே அதிகம் அதையே பதிவாக போடுங்கள். கற்பனை உங்களுக்கு தேவயில்லைன்னு நினைக்கிறேன்.!!

  ReplyDelete
  Replies
  1. ஆலோசனைக்கு நன்றி காட்டான். சிறுசிறு தவறுகளில் இருந்து தான் நம்முடைய குறையை உணர முடியும். உணர்ந்து கொள்கிறேன்.

   Delete
 29. இப்படித்தான் நிறைய பேரு ஏமாத்தறானுங்க! நாமதான் உசாரா இருக்கணும்! ஆமாம் கும்ப கோணம் டிகிரி காபின்னா என்ன? ஒரு ரெசிபி தர்றீங்களா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க சுரேஷ்.

   Delete
 30. சாரி செந்தில் உங்கவிளக்கத்தை படிக்காம கமெண்ட் போட்டுட்டேன்! இப்ப படிச்சிட்டேன்! தேங்க்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லீங்கோ.

   Delete
 31. டிகிரி காப்பி அனுபவம் சுவைக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதேவி.

   Delete
 32. நல்ல சுவை...

  நல்ல பகிர்வு...

  ReplyDelete
 33. திரு. ஆனா மூனா செனா,

  டிகிரி காபி போலவே மீட்டர் காபி ன்னு ஒன்னும் இருக்கு. (லாக்டோ மீட்டர் ல வர மீட்டர்தானா இதுவும்னு தெரியல).
  ஆனா இதுக்கு தஞ்சாவூர் விளக்கம் என்னன்னா குவளையையும் வட்டாவையும் நல்லா ரெண்டு முழு கை உயர வித்தியாசத்துல* வச்சிக்கிட்டு பால்+சர்க்கரை கரைசலைஅங்கிருந்து(குவளைலலேர்ந்து) குறி பார்த்து (காபி டிகாஷன் இருக்குற) வட்டாவுக்கு இடப்பெயர்ச்சி செய்தால் அதோட பேர்தான் மீட்டர் காபி.

  இது தஞ்சாவூர் அய்யங்கடைத்தெரு காஃபி பேலஸ் - மேத்தா கடை - ஓட்டலிலும் அவர்களது எல்லை அம்மன் கோவில் தெரு கிளையிலையும் கிடைத்துக்கொண்டிருந்தது. நேரம் அமைந்தால் முயற்சிக்கவும்.

  *ரெண்டு முழு கை உயர வித்தியாசத்துல* = ஏறக்குறைய ஒரு மீட்டர் உயரம்.

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

  ReplyDelete
 34. https://www.facebook.com/onlycoffee4u

  ReplyDelete
 35. ஒன்லி காபி-உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!
  thanks yaanan(யாணன்)
  https://www.facebook.com/karthik.vaigai

  பலரும் சொன்னார்கள். நான் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஓரு நாள் காண நேர்ந்தபோது ஆச்சரியப்பட்டுப்போனேன்.
  .
  அந்தக் கடையில் காபி அருந்துவதில் அப்படி ஒரு ஆனந்தம் பெறுகிறார்கள், பயணிகள். சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகப் பகுதியில் வலதுபுறம் அமைந்துள்ளது, ஒன்லி காபி. (only coffee)
  .
  கார்கள் வந்து ஓரம்கட்டியபடியே உள்ளன. காபிக்கு டோக்கன் வாங்க வேண்டும். சில நிமிடங்கள் காக்க வேண்டும். தயாரானதும் நம்பர் சொல்லி கூப்பிடுகிறார்கள். நாம்தான் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு காபியின் விலை 22/-ரூபாய். நன்கு தேய்த்து துலக்கப்பட்ட பித்தளை டபராசெட்டில், காபி தருகிறார்கள். சீனியா, சுகர் பிரீயா எனக் கேட்டுப் போடுகிறார்கள். பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், கும்பகோணம் டிகிரி காபி. அங்கு அதை அருந்தலாம். ஒரு காபி, அருந்தினால் மினிடிபன் சாப்பிட்ட திருப்தி.
  .
  கடையின் வாசலில் இயற்கையாய் அமைந்த கிணறு, ஒரு அழகு. அதைச்சுற்றி அழகிய கோலங்கள். அருகில் ஒரு துளசி மாடம். குழந்தைகள் விளையாட ஊஞ்சல். ஒரு அண்டாவில்….நன்னாரி சுவை, தாழம்பூ மணம் கலந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். பின்பக்கம் உயர்தரமான கழிவறைகள். அங்கே என்னை கவர்ந்த விஷயம்…இங்கு தண்ணீர் சிக்கனம் தேவையில்லை என்ற குறிப்பு. நீண்டதூரம் காரில் பயணிக்கும் பெண்கள் தூய்மையான கழிவறை வசதியைக்கண்டு மகிழ்கிறார்கள். குழந்தைகள் சற்றே ஓடியாடி விளையாடுகிறார்கள்.
  .
  கடையின் உள்ளே…விற்பனைக்கு நூல்கள், நொறுக்குத்தீனிகள் உண்டு. வெறும் காபியை வைத்து ஒரு கடை. அதற்கெனத் தனி அடையாளம். அபாரமான வெற்றி. எப்படி சாத்தியமானது…?
  .
  அதன் நிறுவனர்கள் டி.ஆர்.ஸ்ரீவட்சன், மற்றும் அனிதாவை ஒரு நிகழ்வில் சந்தித்தபோது சொன்னார்கள். நாங்கள் இருவரும் ஒரு தனியார் வங்கி ஒன்றில் பணிசெய்துகொண்டிருந்தோம். அங்கே ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது பணி இழக்க நேர்ந்தது. திரும்பவும், வேறு பணி தேடுவதா? தொழில் செய்வதா? என யோசித்தபோது.. சென்னையில் இருந்து காரில் பயணிக்கும் போது, அல்லது தொலைவில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு சற்றே ஒரு ரிலாக்ஸ் தரும் வகையில் மதுராந்தகத்தில் ஒரு தரமான காபி ஷாப் வைத்தால் என்ன? என முடிவு செய்தோம். எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில் என்பதால், பில்டர் காபி குறித்த நுட்பங்களை எங்கள் குடும்பங்களில் இருந்து ஓரளவு முன்னரே அறிந்திருந்ததாலும், அனிதாவும் எனது முடிவை சரி என ஏற்றுக்கொண்டார்.
  .
  முதலில் ஐம்பது சதுர அடியில் (7-9-2009) நான்கு ஆண்டுகளுக்கு முன் சின்னதாய் ஒரு கடை ஆரம்பித்தோம். முதல் பதினைந்து நாட்கள் ஒரு கார் கூட, எங்கள் கடையின் முன்னால் நிற்கவில்லை. இருந்தாலும் எங்கள் காபியின் மீது நம்பிக்கை இருந்தது. பின்னர் ஒரு கார், இரண்டு கார்கள் நின்றன. இப்போது மூன்று கிளைகளாக விரிந்து வளர்ந்திருக்கிறது ஒன்லி காபி. பலர் பணி செய்கிறார்கள். எனச் சின்னதாய் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
  .
  இப்போது மதுராந்தகத்துக்கு அருகில் சென்னையில் இருந்து செல்லும் போது இடதுபுறம் கார் நிறுத்தி காபி அருந்துவதற்கு வசதியாய் ஒரு கடை திறந்துள்ளார்கள். அது கேரள பாணி கலைநயத்தோடு அமைந்துள்ளது. ஒன்லி காபிக்கு, வாடிக்கையாளர்களாக பல வி.ஐ.பிகளும் சில வி.வி.ஐ.பிக்களும் உண்டாம்.
  .
  ஒன்லி காபியின் வெற்றிக்குபின்… இப்போது என் ஹச் 45 தேசிய நெடுஞ்சாலையில் காளானைப்போல் நூற்றுக்கும் மேலான காபி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்லி காபி போலவே இங்கு கும்பகோணம் பில்டர் காபி கிடைக்கும் என நீல வண்ணத்தில் பலகையும் பளிச்சிடுகின்றன என்பது கூடுதல் சுவரஸ்சியம்.
  Photo: ஒன்லி காபி-உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!
  Posted on 22/05/2013 by yaanan(யாணன்)
  Standard


  t.r.srivatsan

  பலரும் சொன்னார்கள். நான் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஓரு நாள் காண நேர்ந்தபோது ஆச்சரியப்பட்டுப்போனேன்.
  .
  அந்தக் கடையில் காபி அருந்துவதில் அப்படி ஒரு ஆனந்தம் பெறுகிறார்கள், பயணிகள். சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகப் பகுதியில் வலதுபுறம் அமைந்துள்ளது, ஒன்லி காபி. (only coffee)
  .

  ReplyDelete

 36. .
  கார்கள் வந்து ஓரம்கட்டியபடியே உள்ளன. காபிக்கு டோக்கன் வாங்க வேண்டும். சில நிமிடங்கள் காக்க வேண்டும். தயாரானதும் நம்பர் சொல்லி கூப்பிடுகிறார்கள். நாம்தான் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு காபியின் விலை 22/-ரூபாய். நன்கு தேய்த்து துலக்கப்பட்ட பித்தளை டபராசெட்டில், காபி தருகிறார்கள். சீனியா, சுகர் பிரீயா எனக் கேட்டுப் போடுகிறார்கள். பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், கும்பகோணம் டிகிரி காபி. அங்கு அதை அருந்தலாம். ஒரு காபி, அருந்தினால் மினிடிபன் சாப்பிட்ட திருப்தி.
  .
  கடையின் வாசலில் இயற்கையாய் அமைந்த கிணறு, ஒரு அழகு. அதைச்சுற்றி அழகிய கோலங்கள். அருகில் ஒரு துளசி மாடம். குழந்தைகள் விளையாட ஊஞ்சல். ஒரு அண்டாவில்….நன்னாரி சுவை, தாழம்பூ மணம் கலந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். பின்பக்கம் உயர்தரமான கழிவறைகள். அங்கே என்னை கவர்ந்த விஷயம்…இங்கு தண்ணீர் சிக்கனம் தேவையில்லை என்ற குறிப்பு. நீண்டதூரம் காரில் பயணிக்கும் பெண்கள் தூய்மையான கழிவறை வசதியைக்கண்டு மகிழ்கிறார்கள். குழந்தைகள் சற்றே ஓடியாடி விளையாடுகிறார்கள்.
  .
  கடையின் உள்ளே…விற்பனைக்கு நூல்கள், நொறுக்குத்தீனிகள் உண்டு. வெறும் காபியை வைத்து ஒரு கடை. அதற்கெனத் தனி அடையாளம். அபாரமான வெற்றி. எப்படி சாத்தியமானது…?
  .
  அதன் நிறுவனர்கள் டி.ஆர்.ஸ்ரீவட்சன், மற்றும் அனிதாவை ஒரு நிகழ்வில் சந்தித்தபோது சொன்னார்கள். நாங்கள் இருவரும் ஒரு தனியார் வங்கி ஒன்றில் பணிசெய்துகொண்டிருந்தோம். அங்கே ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது பணி இழக்க நேர்ந்தது. திரும்பவும், வேறு பணி தேடுவதா? தொழில் செய்வதா? என யோசித்தபோது.. சென்னையில் இருந்து காரில் பயணிக்கும் போது, அல்லது தொலைவில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு சற்றே ஒரு ரிலாக்ஸ் தரும் வகையில் மதுராந்தகத்தில் ஒரு தரமான காபி ஷாப் வைத்தால் என்ன? என முடிவு செய்தோம். எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில் என்பதால், பில்டர் காபி குறித்த நுட்பங்களை எங்கள் குடும்பங்களில் இருந்து ஓரளவு முன்னரே அறிந்திருந்ததாலும், அனிதாவும் எனது முடிவை சரி என ஏற்றுக்கொண்டார்.
  .
  முதலில் ஐம்பது சதுர அடியில் (7-9-2009) நான்கு ஆண்டுகளுக்கு முன் சின்னதாய் ஒரு கடை ஆரம்பித்தோம். முதல் பதினைந்து நாட்கள் ஒரு கார் கூட, எங்கள் கடையின் முன்னால் நிற்கவில்லை. இருந்தாலும் எங்கள் காபியின் மீது நம்பிக்கை இருந்தது. பின்னர் ஒரு கார், இரண்டு கார்கள் நின்றன. இப்போது மூன்று கிளைகளாக விரிந்து வளர்ந்திருக்கிறது ஒன்லி காபி. பலர் பணி செய்கிறார்கள். எனச் சின்னதாய் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
  .
  இப்போது மதுராந்தகத்துக்கு அருகில் சென்னையில் இருந்து செல்லும் போது இடதுபுறம் கார் நிறுத்தி காபி அருந்துவதற்கு வசதியாய் ஒரு கடை திறந்துள்ளார்கள். அது கேரள பாணி கலைநயத்தோடு அமைந்துள்ளது. ஒன்லி காபிக்கு, வாடிக்கையாளர்களாக பல வி.ஐ.பிகளும் சில வி.வி.ஐ.பிக்களும் உண்டாம்.
  .
  ஒன்லி காபியின் வெற்றிக்குபின்… இப்போது என் ஹச் 45 தேசிய நெடுஞ்சாலையில் காளானைப்போல் நூற்றுக்கும் மேலான காபி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்லி காபி போலவே இங்கு கும்பகோணம் பில்டர் காபி கிடைக்கும் என நீல வண்ணத்தில் பலகையும் பளிச்சிடுகின்றன என்பது கூடுதல் சுவரஸ்சியம்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...