சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, July 29, 2013

பதிவர் சந்திப்பு வரவேற்பு குழு, உணவு ஏற்பாட்டுக் குழு விவரங்கள்

வரவேற்பு குழு

சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சிறப்பான முறையில் பதிவர் சந்திப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எந்த விஷயத்திலும் சிறு குறை கூட வந்து விடக் கூடாது என்று பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.

எல்லாப் பொறுப்புகளையும் ஒருவரே செய்து சிரமப்படாமல் இருக்க பொறுப்புகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வரவேற்புக் குழுவில் பகுதி வாரியாக வரவேற்புக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள்

1. பெண் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை அண்ணன் பாலகணேஷூம், தோழி. சசிகலாவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.


2. கோவை, ஈரோடு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். சதீஷ் சங்கவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

3. திருப்பூர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். வீடு சுரேஷ் குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.


4. மதுரை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். தமிழ்வாசி பிரகாஷ் ஏற்றுக் கொண்டுள்ளார்.

5. பாண்டிச்சேரி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். கோகுல் மனதில் கோகுல்  ஏற்றுக் கொண்டுள்ளார்.

5. வெளிமாநிலம் மற்றும் இதர பகுதிகளில் உள்ள பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். திண்டுக்கல் தனபாலன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த மொத்த பொறுப்புகளையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான ஏற்பாடுகள், தங்கும் வசதி, தேவைப்படின் வாகன வசதி போன்றவற்றை செய்யும் பொறுப்பை அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், ஆரூர் மூனா செந்தில் அடங்கிய குழு ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

நேரடியாக வருகையை உறுதிபடுத்த விரும்பும் பதிவர்கள்

    சிவக்குமார் – madrasminnal@gmail.com
    ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
    அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com

என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் தகவலை அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

-------------------------------

உணவு ஏற்பாட்டுக் குழு

பதிவர் சந்திப்புக்கு வருகை தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதி செய்து அதில் அசைவம் சைவம் எத்தனைப் பேர் என்ற கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய சிறப்பான உணவு வகைகளை சிறந்த கேட்டரிங் குழுவிடம் ஆர்டர் கொடுத்து உணவுகளை பெறுவது, பந்தியில் பறிமாறுவது, விழா நடைபெறும் மண்டபத்தில் குடிதண்ணீர் ஏற்பாடு செய்தல், காலை இடைவேளையில் குளிர்பானம் தருதல், மாலை இடைவேளையில் சிற்றுண்டியும் காபியும் தருதல் போன்ற ஏற்பாடுகளை செய்ய

காணாமல் போன கனவுகள் ராஜி
கேஆர்பி செந்தில்
கேபிள் சங்கர்
சிராஜூதீன்
ரஹீம் கஸாலி
அஞ்சாசிங்கம் செல்வின்
மெட்ராஸ் பவன் சிவக்குமார்
பிலாசபி பிரபாகரன்
ஆரூர் மூனா செந்தில்

ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருக்கிறார்கள். மெனு மட்டும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மெனு முடிவானதும் அறிவிக்கப்படும்.


ஆரூர் மூனா செந்தில்

55 comments:

  1. என்ன குழு அமைச்சாச்சா????

    ReplyDelete
    Replies
    1. பின்ன என்ன மந்திரி சபையா அமைச்சிருக்கோம். சென்ற ஆண்டு கலந்து கொண்ட பதிவர்கள் பட்டியல் பிரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. தயாரானதும், மதுரை பக்க பதிவர்கள் பட்டியலை தங்களுக்கு அனுப்புகிறேன். வேலையை துவக்குங்கள்.

      Delete
    2. லிஸ்டை அனுப்புங்க.... ஆரம்பிச்சிருவோம் செந்தில்...

      Delete
    3. இந்த வார இறுதிக்குள் அனுப்புகிறேன் பிரகாஷ்

      Delete
  2. ஈரோடு என்றதும் புத்தகத் திருவிழாதான் நினைவுக்கு வரும். இப்போதெல்லாம் அதன் வரிசையில் வலைப்பதிவர் திருவிழாவும் நினைவுக்கு வருகிறது. இரண்டு ஆண்டுகள் கலந்துகொண்ட நினைவுகள் நிழலாடுகின்றன. இந்த ஆண்டும் கலந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் முனைவரே, தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

      Delete
  3. அன்பின் செந்தில் - முழு மூச்சுடன் பணி புரிய இளஞ்சிங்கங்கள் தயாராகி விட்டார்கள் போலிருக்கிறது - என்னால் தான் எதிலும் கலந்து கொள்ள இயலாது - பரவாய் இல்லை - அத்தனை நிகழ்வுகளையும் வீடியோ எடுத்து யூ ட்யூபில் இடுவதற்கு ஆவன செய்யவும். வந்திருக்கும் பதிவர்களின் பெயர் வயது வீட்டு முகவரி பதிவின் பெயர் - தளத்தின் முகவரி, சமூக தளங்களின் பெயர் மற்றும் முகவரி - அலைபேசி / தொலைபேசி எண் - இன்னும் தேவையான தகவல்கள் ( படிப்பு - செய்யும் பணி - பணி புரியும் அலுவலகம் - முகவரி தொலைபேசி எண் ) - இயன்ற வரை சேகரித்து ஒரு புத்தகமாகப் போடவும். நல்வாழ்த்துகள் 0 நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆலோசனைக்கு நன்றி சீனா அய்யா, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்.

      Delete
  4. அண்ணே தஞ்சை பக்கத்துக்கு யாரு?

    ReplyDelete
    Replies

    1. ஏன் தம்பி என்னைப் பார்த்தா தஞ்சாவூர்க்காரன் மாதிரி தெரியலையா, மெயிலை எனக்கு அனுப்பவும். தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      Delete
  5. பட்டியலை அனுப்பவும்...

    dindiguldhanabalan@yahoo.com

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இந்த வார இறுதிக்குள் பட்டியல் தயாராகிவிடும். தயாரானதும் தங்களுக்கு அனுப்புகிறேன் தனபாலன், நன்றி.

      Delete
  6. செந்தில் ஒரு விசயத்தில் இறங்கினால் ஒன்னரை டன் வெயிட்டுதானோ? திட்டமிடுதல் அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோதிஜி, தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      Delete
    2. தொடர்பு கொண்டு பேசி விட்டேன்... ஜோதிஜி அவர்களும் வருகிறார்...

      Delete
    3. நன்றி தனபாலன்

      Delete
  7. Replies
    1. யோவ் வாத்தியாரு, என்ன இன்னிக்கி வரைக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு வரவில்லை. வேலைப்பளு அதிகமோ

      Delete
  8. மச்சி ஜமாய்ச்சிடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு மச்சி. இந்த முறை அசத்திப்புடுவோம்.

      Delete
  9. வணக்கம்

    பதிவர் சந்திப்பு மிகச் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் வெளி நாட்டில்(மலேசியாவில் இருந்து எனது வாழ்த்துக்களை கூறுகிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்

      Delete
  10. செந்தில், சென்ற வருடம் போல இந்த வருடமும் அதிக சிறப்போடு விழா அமைய வாழ்த்துக்கள் சீனா சார் அவர்களின் கருத்தும் மிக ஏற்புடையதே

    ReplyDelete
    Replies
    1. செய்கிறோம் நன்றி மாணிக்கம் அண்ணே

      Delete
  11. கலகல பதிவர்கள் கொண்டாட்டம் ஆரம்பம்......வாழ்த்துக்கள், விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள், சீனா அய்யா சொன்னதையும் சற்று கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கவனிக்கிறோம் நன்றி மனோ.

      Delete
  12. //பதிவர் சந்திப்புக்கு வருகை தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதி செய்து அதில் அசைவம் சைவம் எத்தனைப் பேர் என்ற கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய சிறப்பான உணவு வகைகளை சிறந்த கேட்டரிங் குழுவிடம் ஆர்டர் கொடுத்து //

    கலக்குங்கப்பு.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இவ்வளவு பிசியான கால கட்டத்திலும் கூட பதிவர் சந்திப்பை நடத்தனம்னு நினைக்கிறதே பெரிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிமாறன். தாங்கள் வருகை தர மறக்க வேண்டாம்.

      Delete
  13. சென்னையில் நடக்கும் பதிவர் திருவிழாவிற்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் நன்கொடை அனுப்புவதாக இருக்கிறேன். யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதனையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ. விவரங்களை நான் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன்.

      Delete
    2. பொருளாளர் திரு. பட்டிக்காட்டான் ஜெய் அவர்கள் தங்களை தொடர்பு கொள்வார்.

      Delete
  14. நன்றி கண்ணதாசன் அண்ணே

    ReplyDelete
  15. ELAMGO sir please send me a test mail to pattikattaan@gmail.com from your mail ID, i'll send you the a/c details for transfer/deposit.

    thanks & regards
    Jey

    ReplyDelete
  16. ஒரு முக்கியமான குழு அமைக்க மறந்துவிட்டோம் .. நக்கீரன் கண்காணிப்பு குழு ......... நக்கீரனை எந்த வேலையும் செய்யவிடாமல் பார்த்துகொள்வது அந்த குழுவின் வேலையாக ஒப்படைக்கலாம் .. இதுக்கு யாரெல்லாம் தயார்ன்னு கேட்டு முடிவு பண்ணுங்க ...............

    ReplyDelete
    Replies
    1. நக்கீரன் கண்காணிப்பு குழுவுக்கு நீங்க பொறுப்பேத்துக்கிறீங்களா என்று கேட்டா எல்லோருமே ஹலோ ஹலோ சிக்னல் கிடைக்கல அப்புறம் பேசுங்க அப்படினு போனை கட் பண்ணிடுறாங்க. என்ன செய்ய.

      Delete
  17. மீ ப்ரெஸென்ட் ஸார்!
    ஃப்லைட் டிக்கெட் புக் பண்ணியாச்சுப்பா!
    நேர்லே மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வருக அஜீஸ், தங்கள் வரவு நல்வரவாகுக.

      Delete
  18. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தாங்கள் கலந்து கொள்ளவில்லையா நண்பா

      Delete
    2. வேலை பளு அதிகம் இருப்பதால்.... முயற்சிக்கிறேன் செந்தில்.......

      Delete
    3. ஞாயிறு அன்று தான் சந்திப்பு. கண்டிப்பாக கலந்துக்கலாம் மணிகண்டன்

      Delete
    4. பதிவர் அல்லாதவர்கள் கலந்து கொள்ளலாமா ?? நான் வெறும் வாசகன் மட்டுமே ???

      Delete
    5. கண்டிப்பாக கலந்து கொள்ளலாம்

      Delete
  19. சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஏங்க அவ்வளவு தானா, பந்தி பொறுப்பாளர் நீங்க தான். சென்ற முறை மாதிரி என் சட்டையில தண்ணி தெளிப்பீங்கன்னு எதிர்பார்த்தேன். அன்றைய நாள் முழுவதும் நீங்கள் தான் எங்களை வேலை வாங்கனும்.

      Delete
  20. Replies
    1. நன்றி ரஹ்மான்

      Delete
  21. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மரா, பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முயற்சிக்கவும்

      Delete
  22. மிகச்சிறப்பான விஷயம்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாசுதேவன், உங்களுக்கென இருக்கை ஒதுக்கப்பட்டு விட்டது.

      Delete
  23. செந்தில் அண்ணா நான் ப்ளாக் படிக்கமட்டும் செய்வேன், பதிவு எழுதுறதில்ல. எப்பயாவது கமெண்ட்ஸ் போடறதுண்டு. உங்க எல்லாரையும் பார்க்கணும்னு ஆசை தான். நானும் பதிவர் சந்திப்புக்கு வரலாமா?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வரலாம். அதற்கு முன்பு மின்னஞ்சல் மூலம் தங்களது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

      Delete
  24. ஊர் கூடி தேர் இழுப்பது போல், நல்ல முயற்சி.
    திறம்பட செயலாற்றுகின்றீர்கள் வாழ்த்துகள்.

    நானும் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...