சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, April 24, 2013

கதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ்

கடந்த சனியன்று திருமதி தமிழ் படத்திற்கு போவதற்காக முன்பே சிவா என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் கேட்ட சமயத்தில் வேலை இல்லாததால் ஒத்துக் கொண்டேன். மறுநாள் என் தம்பி ஒரு வேலை காரணமாக சனியன்று திருவாரூரிலிருந்து வருவதாக தகவல் வந்தது.


இருந்தாலும் சிவாவுக்காக காலையில் அந்த வேலையை வைத்துக் கொண்டு மதியம் சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு செய்தேன். வெள்ளியன்று மேலும் ஒருவர் திருவாரூரிலிருந்து வருவதாக தெரிய வரவே சிவாவுக்கு போன் போட்டு இன்னும் ஒரு டிக்கெட் கூடுதலாக எடுக்க வேண்டும் என்றேன்.

சிவாவோ சீனு முன்பே டிக்கெட் எடுத்து விட்டான். வேணுமென்றால் நாம் கவுண்ட்டரில் நேரடியாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதன் படி முடிவு செய்து சனியன்று நானும் இன்னும் இரு தம்பிகளும் திருநின்றவூர் சென்று அந்த வேலையை முடிக்கவே 12.30 ஆகி விட்டது.


ஊரிலிருந்து வந்தவர்களோ திருவாரூரில் குடிக்க குடும்பத்தினர் தடா போட்டிருப்பதால் கண்டிப்பாக இங்கு குடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வேறு வழியில்லாமல் நானும் இணைந்து திருநின்றவூரிலேயே ஒரு அளவுக்கு சுருதி ஏற்றிக் கொண்டோம். அங்கிருந்து ரயிலில் ஏறி சென்ட்ரலில் இறங்கும் போது 2.30 ஆகியிருந்தது.

எங்களுடன் நண்பன் அசோக் இணைந்து கொண்டான். சுருதி இறங்கிப் போனதால் மீண்டும் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கத் தொடங்கினர். சென்ட்ரலில் இருந்து கால் டாக்ஸி பிடித்து ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் இறங்கிக் கொண்டு மறுபடியும் கச்சேரி ஆரம்பித்தது. செல்வின் போன் செய்து இருப்பிடம் அறிந்து எங்களுடன் இணைந்து கொண்டார்.


எல்லாத்தையும் முடித்து விட்டு திரையரங்கு செல்வதற்குள் படத்தை போட்டிருந்ததால் பதிவர் குழுவினர் படம் பார்க்க உள்ளே சென்றிருந்தனர். ஏகப்பட்ட போதையுடன் ஐவர் குழு (நான், செல்வின், என் தம்பி பிரபு, ஒன்று விட்ட தம்பி மணி, நண்பன் அசோக்) உள்ளே நுழைந்தோம்.

இரண்டு டிக்கெட் கூடுதலாக எடுத்தோம். படம் போட்டு 15 நிமிடம் கழித்து நுழைந்த எங்களுக்கு B வரிசை. இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்த குழுவுக்கு D வரிசை. என்ன வாழ்க்கைடா இது.

நுழைந்ததும் நான் பார்த்த காட்சி பாதி போதையை சர்ரென இறக்கி விட்டது. பின்னே உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு ராஜகுமாரன் பஞ்ச் டயலாக் பேசியதை பார்த்ததும் இறங்கவில்லையென்றால் போதைக்கு என்ன மரியாதை.


முன் வரிசையில் பதிவர் குழு அமர்ந்திருக்க பின் வரிசையில் ஐவர் குழு அமர்ந்திருந்தது. போதை இறங்கியதும் அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்தது. கூட இருந்தவர்கள் தாறுமாறாக கத்தத் தொடங்கினார்கள்.

படம் போட்டு 15 நிமிடம் கழித்து தான் உற்று நோக்கினேன். தியேட்டரில் அமர்ந்திருந்தவர்களில் பாதிப் பேர் மட்டையாகி இருந்தார்கள். மீதி பேர் தனிமை தேடி வந்த காதல் ஜோடிகள்.

அரைமணி நேரத்தில் என்னுடன் வந்திருந்தவர்கள் படம் பார்த்த கடுப்புடன் பசியும் சேர்ந்து கொள்ள சத்தம் போட ஆரம்பித்தார்கள். என்னை நாலு நாள் பட்டினி கூட போடு ஆனால் படத்தை விட்டு வெளியேறலாம் என்று கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

ஐவர் குழுவில் மூவரை மட்டும் வெளியேச் சொல்லி விட்டு நானும் செல்வினும் மட்டும் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தோம். அவர்கள் விட்டால் போதுமென்று காலில் விழுந்து வெளியேறி வெறியை தீர்க்க ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள பாருக்குள் தஞ்சமடைந்தார்கள்.

அதன் பிறகு தான் எனக்கு சோதனையே ஆரம்பித்தது. பின்னே படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும். ராஜகுமாரன் பீடி அடித்து கறுத்துப் போன அந்த உதட்டில் என் தலைவன் ராமராஜனை விட இரண்டு மடங்கு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வந்தால் என்ன நடக்கும், எனக்கு ஏழரை தான் தொடங்கும்.

கத்தினேன், கதறினேன் அரங்கில் கேட்பாரில்லை. பின்னே நான் மட்டும் வெளியே சென்று விட்டால் அவர்களின் கொடுமையை பங்கு போடுவது யார். என்னுடன் வந்தவர்கள் சந்தோஷமாக ஸ்பென்சரில் அனுபவித்துக் கொண்டிருக்க நான் மட்டும் விழி பிதுங்கி இருந்த கொடுமையை யாரிடம் சொல்லி கதற.

இன்டர்வெல் விட்டதும் ஒரே தாவில் வெளியில் வந்தோம். எங்களைத் தவிர வேறு யாரும் அரங்கை விட்டு வெளியே வரவில்லை. படம் பார்த்த பாதிப்பு தான். நாங்கள் மட்டும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தோம். நானும் செல்வினும் தான் சற்று டரியலாக இருந்தோம்.

போட்டோ செஷன் முடிந்ததும் நானும் செல்வினும் வெளியேறுவதாக சொல்ல எங்களுடன் வெளியில் வருவதாக கணேஷூம், அரசனும் சொன்னார்கள். ஆனால் எங்களை கட்டுப்படுத்த முடியாத சிவா அவர்கள் இருவரையும் கதறக் கதற உள்ளே இழுத்துச் சென்றார்.

அந்தகூபம், கும்பிபாகம் போன்ற தண்டனைகளை அனாயசமாக தாண்டிய  நான் இந்த கொடுமையை தாங்க முடியாமல் நெருப்பில் விழுந்த புழுவைப் போல் துடித்ததை ரசித்த சிவா எங்கிருந்தாலும் வாழ்க.

ஆரூர் மூனா செந்தில்
 

30 comments:

  1. டேய், எங்களால முடியலடா... இன்டர்வெல் விடுங்கடா...

    இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. எங்களை பரிதாபமாக பார்த்த உங்களுக்கு நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  2. குரு நீங்க தப்பிச்சிட்டிங்க என்று சொல்லாதிங்க, மீதி பாதியில் தான் எண்ணற்ற திருப்பங்களும், காணக்கிடைக்காத அரிய காட்சிகளும் இருந்தது. தவற விட்ட உங்களை எண்ணி தான் மனம் கனத்து போனது ...

    ReplyDelete
    Replies
    1. பாதி வரைக்கும் பார்த்ததற்கே எனக்கு பாரில் 2000 ரூவா செலவாச்சி. முழுசும் பார்த்திருந்தேன். என் டவுசரை கழட்டியிருப்பாங்க

      Delete
    2. விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைப்பா உங்களுக்கு..!!

      Delete
    3. அரசனின் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். வெளியே சொல்ல முடியாதுல்ல.

      Delete
  3. உமக்கு தைரியம் ஜாஸ்திப்பா..!

    ReplyDelete
    Replies
    1. அப்பப்ப இது மாதிரி துன்பக் கடல்ல குதிக்கிறது தான். ஆனா இது துயரக் கடலா போயிடுச்சி

      Delete
  4. படம் முடிஞ்சதும் எனக்குக் கூட உங்களைத் தேடி ஓடிவரணும்னுதான் தோணிச்சு! ஆனா... அம்மா போன் பண்ணி உடனே வரச் சொன்னதால (அட... அந்த ‘அம்மா’ இல்லீங்க, எங்கம்மாதான்!) வீட்டுக்கு ஓட வேண்டியதாயிடுச்சு! எத்தனையோ சோதனைகளை சந்திச்சு மீண்ட என்னாலகூட இந்த சோதனையோட பாதிப்புலருந்து இன்னும் விடுபட முடியலே தம்பீ...!

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி உங்களுக்கும் சேம் பிளட்டுன்னு தெரியும்ணே.

      Delete
  5. ஹா ஹா பதிவர்களை மிரண்டு ஓட வைத்த காவியத் தலைவன் சோலார் ஸ்டார் வாழ்க

    ReplyDelete
    Replies
    1. அடுத்த படம் நடிக்காத வரைக்கும் வாழ்க, வாழ்க.

      Delete
  6. மறுபடி தாக சாந்தி ஆரம்பம்?!!!

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ அப்படி இல்லீங்க. ஜனவரியில் இருந்து இது வரை 4 முறை தான் ஆகியிருக்கு.

      Delete
    2. நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்.

      அவன நிறுத்த சொல்லு இவன நிறுத்த சொல்லுனு கதை விட கூடாது :-)

      Delete
    3. தினமும் ஆப் உட்னு இருந்தவனுக்கு நாலு மாசத்துக்கு நாலு முறை பெரிய விசயம் தானுங்கோ

      Delete
    4. சரி சரி.. இதோட நிறுத்திக்கணும்.. கொஞ்சம் இருங்க நான் கொஞ்சம் போட்டுட்டு வரேன் :)

      Delete
    5. நீங்க மட்டும் என்சாய் பண்றீகளோ, நடத்துங்க எசமான் நடத்துங்க.

      Delete
  7. பாஸ் தெரிஞ்சே இந்த மாதிரி படத்துக்கு போகலாமா, அந்த காசில ரெண்டு புல் வாங்கியிருக்கலாமே. விதி யாரை விட்டது.

    ReplyDelete
    Replies
    1. மொக்கைப் படத்தை பார்க்கலாம், ஆனா சூர மொக்கைக்கு போனா என் கதி தான்.

      Delete
  8. திருமதி தமிழ் பார்ட் 2 விரைவில் உங்களை அன்புடன் வரவேற்க போகிறது.

    ReplyDelete
    Replies
    1. தூக்க மாத்திரை வாங்கி வச்சிருக்கேன். எப்ப கூப்பிடுகிறீர்களோ வந்து திரையரங்க வாசலில் போட்டு விட்டு தியேட்டரில் தூங்கி விடுவேன்.

      Delete
  9. உயிரோடு வெளியே வந்ததே பெரிய விஷாயமாச்சேய்யா எப்பிடியும் அன்னைக்கு ஒரு ஃபுல்லு காளியாகிருக்கும் ச்சே காலியாகிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு புல்லா நீங்க வேற மிச்சத்தை நான் எங்க போய் சொல்றது

      Delete
  10. திருமதி தமிழ் பார்ட் 2 விரைவில் உங்களை அன்புடன் வரவேற்க போகிறது.//

    சாவனும்னு முடிவெடுத்தா போயி தனியா சாவுங்கப்பா ஹி ஹி...

    ReplyDelete
    Replies
    1. நாட்டாமை சரியான தீர்ப்பு

      Delete
  11. ட்ரைலரிலேயே ராஜகுமாரனைப் பார்க்க சகிக்கல. நீங்க இண்டர்வல் வரைக்கும் தாக்குப் பிடிச்சிரிக்கீங்கன்னா, அதீத துணிச்சல்தான் செந்தில். ஆனால், நீங்க முழுப் படத்துக்கும் தியேட்டர்ல இருந்திருந்தா, உங்க நண்பர்கள் 108-ஐ கண்டிப்பா கூப்பிட்ட்ருபாங்க..

    ReplyDelete
  12. குழுவில் சென்ற அனைவரும் விமர்சித்து விட்டார்கள்... நீங்களும் கதற வைத்து விட்டீர்கள்... ஹா... ஹா....

    ReplyDelete
  13. உண்மைய சொல்லுங்க ஒரு வேளை ராஜகுமாரன் நடிக்காமல் வேறு யாராவது நடித்து இருந்தால் படம் நன்றாக இருந்து இருக்குமா? பார்த்திபன்?!!

    ReplyDelete
  14. பயங்கர த்ரில்லர் படம் போல இருக்கே. பலபேரை பயமுறுத்தி இருக்கே.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...