சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, April 4, 2013

கேடியும் கில்லாடியும்

பத்து நாட்களுக்கு பிறகு பதிவு. கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்ததே எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு சிறு உடல்நலக்கோளாறு. சரியாகி வர இவ்வளவு நாளாகி விட்டது. விவரமறிந்து நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியோ நன்றி.


இந்த படத்தை கடந்த வெள்ளியன்றே பார்த்து விட்டேன். ஆனால் அன்றிலிருந்து உடல்நலக்குறைவின் தீவிரம் அதிகமானதால் பதிவெழுத முடியவில்லை. பரவாயில்லை, இன்று எழுதித் தள்ளிவிடுவோம் என்று அமர்ந்து விட்டேன்.

படத்தை பற்றி சொல்வதற்கு முன்பு படத்தில் வந்த ஒரு காட்சியை யாரும் இதனுடன் ஒப்பிட்டு பார்த்திருக்க மாட்டார்கள். எனவே முதல் முதலாக நான் தான் அந்த மேட்டரை கவனித்து பகிர்கிறேன் என்று நினைக்கிறேன்.

படத்தில் அரசியல் தலைவர் நமோ நாராயணன் இருவரின் சேவையை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளிப்பதாக ஒரு காட்சி இருக்கும். அதன் தொடர்ச்சியாக மற்ற தொண்டர்கள் நமோநாராணனை சூழ்ந்துக் கொண்டு "எனக்கு ஏன் அது போல் அன்பளிப்பு தரவில்லை" என்று கேட்கும் போது அதற்கு அவர் "நீயும் அவர்களைப் போல் சங்கிலியை முன்பே கொடுத்து மேடையில் போடச் சொல் போடுகிறேன்" என்பார்.


இது அப்படியே அப்பட்டமாக வனவாசத்திலிருந்து சுடப்பட்ட காட்சியாகும். கண்ணதாசன் எப்படி விவரித்து இருப்பார் என்றால் 1957ல் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதற்கான பாராட்டு விழாவில் அண்ணா அவர்கள் வெற்றிக்கு காரணமான கலைஞருக்கு மோதிரம் அணிவித்து இருப்பார்.

இதனை கண்டு திடுக்கிட்ட கண்ணதாசன் அவர்கள் கூட்டம் முடிந்ததும் அண்ணாவிடம் போய் நானும் தான் இந்த தேர்தலில் கடுமையாக உழைத்தேன் எனக்கு ஏன் மோதிரம் அணிவிக்கவில்லை என்று கேட்கும் போது நீயும் கலைஞரைப் போல் மோதிரத்தை முன்பே கொண்டு வந்து கொடுத்திருந்தால் உனக்கும் அதே போல் மேடையில் அணிவித்து இருப்பேன் என்று சொன்னாராம்.


இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மைக்குள் நாம் போக வேண்டாம். காட்சி எங்கிருந்து சுடப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் போதும்.

படத்தின் கதையைப் பற்றி படம் எடுத்தவர்களும் கவலைப்பட வில்லை. பார்த்தவர்களும் கவலைப்படவில்லை. ஒரு மாதிரியான நகைச்சுவை தோரணங்களுடன் கூடிய படம். பார்க்கும் போது சிரித்து விட்டு வெளியில் வந்து சிரித்தோம் என்று யோசிக்க வைக்கக்கூடிய வகை படம் தான். இதுவும்.

படத்தினை விமர்சனம் செய்கிறேன் என்று உங்களைப் போட்டு அறுக்க விரும்பவில்லை. படத்தின் உங்கள் பார்வைக்கும் என் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை மட்டும் விளக்க விரும்புகிறேன்.


படத்தில் குறிப்பிட்டு உள்ளது போல் ரயில்வே காலனியில் குடியிருக்கும் பசங்க இன்று வரை ரயிலடியில் உக்கார்ந்து பொழுது போக்குவது சாதாரண விஷயம். எங்கள் ஊரில் கூட தியாகேசன், மதி, பாலா, வெங்கிட்டு மற்றும் பல நண்பர்கள் இன்றும் இதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவர்களது வீடு ரயில்வே ஸ்டேசனுக்கு அருகிலேயே இருக்கும். ஸ்டேசனில் பணிபுரிபவர்கள் கூட சொந்தக்காரர்களாகவே இருப்பார்கள். அதனால் அவர்கள் நேரம் காலம் தெரியாமல் பொழுது போக்கும் இடம் ரயில்வே ஸ்டேசன் தான்.

அதுபோல் திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேசனை காட்டியிருக்கிறார்கள். ரவுடியிசம் அதிகமாக வளர்வது ரயில்வே குடியிருப்புகளில் தான். திருச்சி ரயில்வே காலனியில் தான் சென்ற ஆட்சியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட முட்டை ரவி உள்ளிட்ட பல ரவுடிகள் இருந்தனர்.

சென்னையில் அயனாவரம் ரயில்வே குவார்ட்டர்ஸ் மோசமான ஏரியா. இன்றும் இரவு நேரங்களில் நடமாடுவது பாதுகாப்பில்லாத ஒன்று. ஆள்கடத்தல் எல்லாம் மாதம் ஒரு முறை நடக்கக்கூடியது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைவான ஏரியா.

அதனை அப்படியே கொஞ்சம் நகைச்சுவை கலந்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி நகைச்சுவை தோரணங்களால் நம்மை சில இடங்களில் சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

பிந்து மாதவியிடம் அடிபட்ட சோகத்தை விமல் கூறும் போது நடக்கும் பார்ட்டியில் ஒருத்தன் மட்டும் குடிப்பதை மட்டும் செய்து கொண்டு இருக்கும் காட்சியிலும், ஓட்டுப் பெட்டியில் 30க்கு பதில் 38 ஓட்டு விழுந்ததை பெருமையாக சொல்லும் காட்சியிலும் மட்டும் கண்ணில் நீர் வர சிரித்தேன்.

சில  இடங்களில் புன்சிரிப்பு மட்டுமே.

நடிகைகள், நடிப்பு, பாடல், ஒளிப்பதிவு, இசை என எல்லாத்தையும் மற்றவர்கள் பிரித்து மேய்ந்து விட்டதால் நான் அதனுள் செல்லவில்லை.

மொத்தத்தில் படம் செகண்ட் குவாலிட்டி ஓகேஓகே.

ஆரூர் மூனா செந்தில்




39 comments:

  1. எங்கிருந்தெல்லாம் சுடுகிறார்கள்...!

    நலத்துடன் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Get well soon senthil. Take care health-Manivannan>.p

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிவண்ணன்

      Delete
  3. தோழர் உங்களது விமர்சனம் அருமை

    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலசுப்பிரமணியன்

      Delete
  4. அதற்குள் பதிவா... இருந்தும் நலமுடன் பதிவிட வாழ்த்துக்கள்...

    கண்ணதாசன் - அண்ணா - கலைஞர் புதிய செய்தி எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது கை அரிக்குதே சீனு.

      Delete
  5. Hope you are fine now. Got to know details through Madras Bavan Sivakumar.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா.

      Delete
  6. நான் நம்ம பதிவர்களின் விமர்சனம் படித்தவுடன் பார்க்க வேண்டாம் என முடிவு செய்து விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சின்ன குறையெல்லாம் பெரிசாக்கி விட்டனர் என்றே தோன்றுகிறது

      Delete
  7. உடல் நலம் தேவலையா? உங்கள் கடமை உணர்ச்சி கண்கலங்க வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஒரு கடமையும் இல்லீங்கோ. தனிமை போரடிக்கிறது.

      Delete
  8. இதை படிங்க்னா

    http://goundamanifans.blogspot.com/2013/04/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. ஏன் என்கிட்டயேவா? அது இப்ப தமிழ்மணம் மகுடத்தில் இருக்கிறது தெரியுமா.

      Delete
    2. எல்லாம் சரி தான். நீங்க தி மு க அனுதாபினு தெரியாம போச்சி.. ஏன் இப்டி..

      Delete
    3. நான் திமுகவா? இதுக்கு என்னை தேசத்துரோகின்னு சொல்லியிருக்கலாம்

      Delete
    4. இப்போ தான் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உடல் நலம் முற்றிலும் குணமாக வாழ்த்துக்கள்.

      Delete
    5. இதுக்கு பேர் தான போட்டு வாங்குறதா

      Delete
    6. நீர் பலமான சரக்கு தான் ஓய்.

      Delete
  9. Replies
    1. நன்றி மாப்ள. இப்ப ஓகே.

      Delete
  10. எல்லாம் சரி தான். நீங்க தி மு க அனுதாபினு தெரியாம போச்சி.. ஏன் இப்டி..

    ReplyDelete
    Replies
    1. இந்த வாய புடுங்குற வேலையெல்லாம் வேண்டாம். அப்புறம் நான் கண்டபடி உபிக்களை திட்ட மறுபடியும் அடுத்த சச்சரவா.

      Delete
  11. மீண்டும் உடல்நிலை தேறி உங்களின் பதிவைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. வாழ்க நலமுடன், வளமுடன்! படம் கலகலப்புக்க கியாரண்டி போல் தெரிகிறது. பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கணேஷ் அண்ணா

      Delete
  12. யோவ் உனக்கு உடம்பு சரியில்லாம போறதுக்கு வேற நாளே கிடைக்கலையா... ஏப்ரல் ஒன்னாம் தேதி சிவா கால் பண்ணி விஷயத்தை சொன்னாரு... போங்க தம்பி எங்களையெல்லாம் யாரும் ஏமாத்த முடியாது'ன்னு சொல்லி போனை வச்சிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நல்லா ஏமாந்தீங்களா

      நா சிரிக்கிறேன் சிரிக்கிறேன்.... சிரிப்பு சிரிப்பா வருது

      Delete
    2. சிவா மருத்துவமனைக்கு வந்தபோது சொன்னார் நீங்கள் நம்பவில்லை என்பதை. யோவ் இதுல நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்தா நோய் வரும்.

      Delete
  13. அருமை மற்றும் எளிமையான பதிவு.ஆனாலும் எங்க தியாகேசனை business பண்றவரா நீங்க பார்க்கவில்லையா?நன்றி

    ReplyDelete
    Replies
    1. தியாகேசன் என் தம்பியின் வகுப்புத்தோழன். சிறுவயதில் இருந்தே பழக்கம். அப்பொழுது நடந்த சம்பவங்களைத்தான் சொன்னேன். இன்று பாப்ளி பாய்ஸில் உக்கார்ந்திருந்தாலும் அவனது கொண்டாட்டங்கள் ரயில்வே ஸ்டேசனை சுற்றித் தான் நடக்கிறது.

      உங்க மச்சான் நல்லவர் என்பது திருவாரூருக்கே தெரியுமுங்கோ.

      Delete
  14. நாங்க தாம்பரம் ரயில்வே காலனியில் 12 வருடங்கள் இருந்தோம்.வெயிலே தெரியாமல் அமைதியாக இருக்கும். இப்போதும் ஸ்டேஷன் போகும் போது காலனியினை ஏக்கமாய் பார்த்து போவது உண்டு. நிறைய வீடுகள் அழிந்து போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் உள்ள பல ரயில்வே குவாட்டர்ஸ்களின் நிலைமை அதுதான் அமுதா கிருஷ்ணா.

      Delete
  15. பாஸ், இப்போ உடம்புக்கு ஓகேதானே?

    ///மொத்தத்தில் படம் செகண்ட் குவாலிட்டி ஓகே ஓகே.
    /// அதேதான்... அதேதான்...
    திரும்பவும் சிங்கம் மாதிரி போயி, சேட்டை பார்த்துட்டு ஒரு விமர்சனம் போடுங்க ஜி.. வெயிடிங்...

    ReplyDelete
  16. உடம்பை பத்திரமா பார்த்துக்கங்கண்ணே! அப்புறம் வாசிக்க பதிவில்லாம எங்க நிலைமை என்னாத்துக்கு ஆவுறது..

    ReplyDelete
    Replies
    1. பாத்துக்கிறேன் நன்றி நண்பா

      Delete
  17. படத்தின் தலைப்பே சிரிக்க வைக்கின்றது.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...