சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, April 26, 2013

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

இன்றும் தொழிற்சங்க தேர்தல் இருந்தும் தொழிற்சாலையின் உள்ளேயே சரக்கும் பிரியாணியும் கிடைத்தும் கூட அனைத்தையும் தவிர்த்து விட்டு காரணமே இல்லாமல் இன்று சினிமாவுக்கு போக வைத்தது இந்த படத்தின் டீசர் தான்.


ஆனால் போன பிறகு தான் தெரிந்தது இதற்கு பதில் தொழிற்சாலை உள்ளேயே குவார்ட்டர் விட்டுகினு பிரியாணி துன்ட்டு யாராவது ரெண்டு யூனியன் தலைவனுங்களை நேற்று மாதிரி இன்றும் சாத்தியிருக்கலாம் என்று. ஆனாலும் விதி வலியது.

படத்தின் டிரெய்லரில் இருந்து துணுக்கு நகைச்சுவை படம் முழுவதும் விரவி கிடக்கும் என எண்ண வைத்து மக்களை திரையரங்கிற்கு வர வைத்ததில் இந்த பட இயக்குனரின் திறமை முக்கிய பங்கு வகிக்கிறது.

படத்தின் கதை என்ன? கல்லூரியில் கடைசி மதிப்பெண் பெறும் நாயகனும் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் நாயகியும் ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் போது சந்திக்கிறார்கள். நாயகனுக்கு நாயகி மேல் காதல் வருகிறது. அரைமணிநேரத்தில் நாயகிக்கும் காதல் வந்து விடுகிறது.


மேலும் ஒரு கால் மணிநேரத்தில் நாயகியின் வீட்டில் யாரும் இல்லாத நாளில் காண்டம் வாங்கி வந்து பாதுகாப்பாக பஜனை நடக்கிறது.  நாயகனை சென்னையில் தவிக்க விட்டு அம்பேரிக்காவுக்கு படிக்கச் செல்கிறாள். ஆனால் பாருங்கள். மேனிபேக்சரிங் டிபெக்ட் காரணமாக குழந்தை உண்டாகி விடுகிறது.

சென்னைக்கு திரும்பி வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறந்து பல ஆண்டுகள் ஆகிய பிறகும் நாயகனுக்கு பொறுப்பு வராமல் வீட்டிலேயே குழந்தையுடன் விளையாண்டு காலத்தை கழிக்கிறார்.


ஒரு உச்ச ராகுகால நேரத்தில் இந்த குழந்தை நாயகிக்கும் மகேஷ் என்ற ஒருவனுக்கும் பிறந்தது என்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. மகேஷை தேடிப் புறப்படுகிறான். மகேஷ் கிடைத்தானா, குழந்தை யாருக்கு பிறந்தது என்பது தான் படத்தின் கதை.

சொல்லும் போது சுவாரஸ்யமான கதையாக தெரிந்தாலும் எடுத்த விதத்தில் மெச்சூரிட்டி இல்லாத காரணத்தால் படம் பப்படமாகி விட்டது. பாவம் தயாரிப்பாளர் அன்பழகன். ஏற்கனவே ஆதிபகவனில் பெரிய சைஸ் அல்வா வாங்கி வீட்டில் வைத்தவர், இந்த படத்தினால் சிறிய சைஸ் அல்வா உபரியாக கிடைத்திருக்கிறது.

நாயகன் சந்தீப் பார்க்க நன்றாக இருக்கிறார். நல்ல களையான முகம். சிறிது முயற்சித்தால் நடிப்பு கூடி வரும். இந்த படத்தை வைத்து இன்னும் சில படங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் ரியாக்சன் கம்மியாக இருக்கிறது.



நாயகி டிம்பிள் டிரைலரிலும் முதல் காட்சியிலும் பார்க்க ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கச் செய்தவர், போகப் போக அட்டுப் பீஸூ போல் தோற்றமளிக்கிறார். இந்தப் படம் கிடைத்ததே பெரிய விஷயம். மேக்கப் மட்டும் இல்லையென்றால் ப்ப்பா பேய் மாதிரி தான் இருப்பார்.

கொஞ்சமாவது படத்தில் உட்கார வைப்பது நண்டு ஜெகனின் காமெடி தான். அதுவும் அளவுக்கு அதிகமாக போய் ஆபாசத்தில் நெளிய வைக்கிறது. சரளமாக வகைதொகையில்லாமல் ஏ ஜோக் படம் முழுவதும் விரவி கிடக்கிறது. படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்ததற்கு காரணம் இந்த ஜோக்குகள் தான்.

படத்தில் ஜெகனுக்கு இரண்டு முறை லுல்லாவில் அடிபடுகிறது. முதல் முறை பவுடர் தெறித்து நரம்பு கட்டாகிறது. இரண்டாவது முறை வாய் வழியாக ..ட்டை வெளி வந்து பறவையாய் பறக்கிறது. இவ்வளவு தடைகளையும் தாண்டி குழந்தை பிறப்பது வாவ் மெடிக்கல் மிராக்கிள்.

படம் முழுவதுமே ஒரு நாடகத்தனத்துடன் எடுக்கப்பட்டு இருக்கிறது. ரோபோ சங்கர் வடிவேல் பாலாஜி காட்சிகள் அப்பட்டமான ஆபாசம். அப்பாவும் மகனும் இப்படியா பிட்டு படம் பார்க்க சண்டை போட்டுக் கொள்வார்கள்.

படத்தில் உள்ள ஒரு குத்தாட்டத்தில் ஆடும் நடிகை பயங்கர ப்ரச்சோதகமாக இருக்கிறார்.  சரின்னா இதைப் பண்ணனும் இல்லைனா பண்ணினவன் .... தொட்டுக் கும்பிடனும்.  நானே டென்சனாகிட்டேன்.

படத்தின் ஒரே மிகப்பெரிய ப்ளஸ் படத்தின் டிரெய்லர் தான். அதனை பார்த்து விட்டு படம் பார்க்க வருபவர்கள் தான் இவர்களின் டார்கெட். மற்றப்படி போகனும்னு நினைச்சீங்கன்னா அது உங்க தலையெழுத்து.

ஆரூர் மூனா செந்தில்


24 comments:

  1. இந்த படம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' மாதிரி இருக்குமோ என்று நினைத்து இன்று இரவுக் காட்சிக்கு செல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இப்படி ஒரு மொக்கையிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி செந்தில்.

    ReplyDelete
  2. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்கனு நினைக்கிறன். என்ஜாய் பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. அதை தாங்குறதுக்கு தான நாம இருக்கோம்.

      Delete
  3. "தொழிற்சாலை உள்ளேயே குவார்ட்டர் விட்டுகினு பிரியாணி துன்ட்டு "



    திரும்பவும் full swing ல களம் இறங்கிட்டிங்க போல



    தம்பி . . .




    ஏன் இப்டி

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, இல்லை அண்ணா ஒரு புளோவுக்கு தான் சொன்னேன். என்னால் குடிக்க முடியாது. மாதம் ஒரு முறை என்பது தான் கணக்கு. நேற்று தான் தொழிற்சாலை தேர்தலுக்காக பார்ட்டி நடந்தது. இன்றும் குடித்தால் நான் வீட்டை விட்டு வெளியில் போக வேண்டியது தான்.

      Delete
  4. உங்க தலைஎழுத்து :)) நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி

      Delete
  5. pls write mrs.tamil (mr.rajakumaran 's)vimarsanam boss

    ReplyDelete
    Replies
    1. இதற்கு முந்தைய பதிவை பார்க்கவும் பாஸ்.

      Delete
  6. ரொம்பப் பாவம் நீங்க... பாரபட்சமில்லாம எல்லா படமும் பாக்கறீங்க அதுவும் முக்கியமான புரோகிராமையெல்லாம் விட்டுட்டு...

    ReplyDelete
    Replies
    1. புரோகிராம் எல்லாம் இல்லீங்க. அங்கேயே இருந்தா சரக்கடிச்சிட்டு சண்டை போட்டிருப்பேன்.

      Delete
  7. நன்றி தல மீ ஜஸ்ட் எஸ்கேப் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  8. நான் ராஜாவாக போகிறேன் பார்த்தேன்..அந்த படத்துக்கு பதிலா.கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கொரு கொடுமை அவுத்து போட்டு ஆடுச்சாம்..அப்படித்தான் ஆச்சு எனக்கும்.சூர மொக்கை.நல்லவேளை யா.மகேஷ் போகல.

    ReplyDelete
    Replies
    1. அங்கேயும் சேம் பிளட்டா, நன்றி ஜீவா

      Delete
  9. நானும் டீசர் பார்த்து எதிர்பார்த்து இருந்தேன், சூர மொக்கையா.... நான் பிழைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் என்னை வச்சே டெஸ்ட் பண்ணுங்க.

      Delete
  10. ஆரூர் மூனா, இந்த நாளை உங்கள் டைரியில் குறித்துக்கொள்ளுங்கள்... டிம்பிள் சோப்பேடை அட்டு பீஸு என்று சொன்னதற்காக நீங்கள் வருத்தப்படுவீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. அந்த குத்தாட்டம் போட்ட பிகரை கம்பேர் பண்ணா ஹீரோயின் அட்டு பிகர் தான்.

      Delete
  11. யாருடா மகேஷ் ? Mahesh who are you ?
    ஏன் பார்த்தீங்க ? why have you seen ?
    இனிமேல் பார்ப்பீங்க ? will you see again ?

    நல்லவேளை நான் பார்க்கலை? Good time me no see ...... ! ! !

    ReplyDelete
  12. நான் நேற்றே எஸ்கேப் ஆகிட்டேன் உங்க முக நூல் ஸ்டேடஸ் படிச்சுட்டு

    ReplyDelete
  13. மொக்கை பதிவைப் போட்டு தலைப்பை வைத்து ஆளை இழுப்பது பதிவுலகில் தான் நடக்குதுன்ன சினிமாவிலுமா..ஐயோ.............ஐயோ...........

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...