சேட்டை ரிலீசன்று தான் என்டிஆரின் பாட்ஷாவும் ரிலீசானது. நானும் என் வீட்டம்மாவும் சேர்ந்து செல்ல திட்டமிட்டிருந்தோம். கடைசியில் வீட்டம்மா வராததால் நான் சேட்டை சென்றேன். இது போல் தவற விடும் படங்கள் ஹிட்டாவது வழக்கம். அது போலவே இந்த படமும் ஹிட்டோ ஹிட்.
இன்று மதியம் செல்லலாம் என்று முடிவெடுத்து சென்றோம். நாங்கள் மட்டுமே டிக்கெட் வாங்கியிருந்தோம். படம் போடுவார்களா என்று சந்தேகமாக இருந்தது. நேற்று கூட படம் பார்க்க யாருமில்லாததால் கெளரவம் படத்தையும் பாட்ஷா படத்தையும் கேன்சல் செய்திருந்தார்களாம்.
உள்ளே சென்று அமர்ந்தால் எங்களுடன் சேர்ந்து திரையரங்கில் அமர்ந்திருந்தவர்கள் 6 பேர் மட்டுமே. ஏஜிஎஸ் வில்லிவாக்கம் போன்ற திரையரங்குகளிலேயே இந்த நிலைமை என்றால் சென்னையில் உள்ள சாதாரண திரையரங்குகள் மூடப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
என் மனைவி என்டிஆரின் தீவிர ரசிகை என்பதால் வேறு வழியில்லாமல் நானும் என்டிஆரின் ரசிகன். சென்னைக்கு மீண்டும் வந்த பிறகு வந்த என்டிஆரின் படங்கள் ஊசரவெல்லி, தம்மு படங்களை முதல் நாள் முதல் காட்சியே பார்த்தவன். இந்த படத்தை தான் முதல் நாள் தவற விட்டு விட்டேன்.
படத்தின் கதைக்கு அவர்கள் ரொம்ப மெனக்கெடவில்லை. இயக்குனரின் முந்தைய படமான தூக்குடுவின் காட்சிகளை புரட்டிப் போட்டு என்டிஆருக்காக கூடுதலாக சற்று மசாலாவை கூட்டி பாட்ஷாவை படைத்திருக்கிறார்கள்.
படத்தில் பாட்ஷாவாக வரும் என்டிஆர் ஒரு வளர்ந்து வரும் சர்வதேச டான். அவர் ஏற்கனவே பெரிய டானாக இருக்கும் கெல்லி டோர்ஜியுடன் மோதுகிறார். இத்தாலிக்கு வந்து காஜலை ஏகப்பட்ட நாடகங்கள் நடத்தி காதலிக்கிறார். அங்கிருந்து ஐதராபாத் வந்து சில பல கொலைகள் செய்து கெல்லி டோர்ஜியை வரவழைத்து கொன்று போடுகிறார். படம் சுபம்.
முதலில் இந்த படத்தின் முதல் பிளஸ்ஸாக நான் நினைப்பது மகேஷ் பாபு தான். அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்கிறீர்களா. படத்தின் துவக்கத்திலும் இடையிலும் பின்னணி குரலில் கதை சொல்வது அவர் தான்.
தமிழ்நாட்டில் இது போல் நடக்கவே நடக்காது. ஓரு முன்னணி ஹீரோவின் படத்தில் மற்றுமொரு சூப்பர் ஸ்டார் நடிகர் புகழ்ந்து பேச மாட்டார். இது மிகப்பெரிய மாற்றம்.
முற்றிலும் புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றத்தில் என்டிஆர். படத்தில் ப்ரேமுக்கு ப்ரேம் அவர் தான் படத்தை ஆக்ரமித்து அசத்தியிருக்கிறார். நடனத்தில் வழக்கம் போலவே கலக்கியிருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சூப்பர். முதல் பைட்டில் அடி விழும் போதே என் அருகில் அமர்ந்திருந்த தெலுகு பெண் விசிலடித்து தான் ஒரு என்டிஆர் ரசிகை என்பதை நிரூபித்தார்.
காஜல் அகர்வால் அழகு பொம்மையாக வந்து பாடல்களுக்கு நடனமாடி செல்கிறார். எங்கு லூசுப் பொண்ணாக வந்து இம்சிப்பாரோ என்று பயந்தேன். நல்ல வேளை அப்படியில்லை.
படத்தின் மிகப்பெரிய பலம் பிரம்மானந்தம் மற்றும் எம்எஸ் நாராயணனின் காமெடி தான். சீனு வைட்லாவுக்கு எப்படி இவர்களை வைத்து படத்தை போரடிக்காமல் நகர்த்த வேண்டும் என்பது சரியாக தெரிந்திருக்கிறது.
பிரம்மானந்தம் தோன்றும் காட்சியில் தப்புத் தப்பாக பதில் சொல்லி நாசரிடம் திட்டு வாங்கும் காட்சியில் தெலுகு பெண் சத்தம் போட்டு சிரித்து சிலாகித்து மகிழ்ந்தார். பிரம்மானந்தம் வந்து போகும் அனைத்து காட்சியிலும் கைதட்டி சிரித்து மகிழ்ந்தார் தெலுகு பெண்.
கல்யாண காட்சியில் பெண்கள் எல்லாம் தவறுதலாக தண்ணியடித்து விட்டு சீனியர் என்டிஆரின் பாடல்களுக்கு ஜூனியருடன் சேர்ந்து போடும் குத்தாட்டம் பார்த்ததும் தெலுகு பெண் உற்சாகமாக ஆடவே ஆரம்பித்து விட்டார். சமாளித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது.
என்னைப் பொறுத்தவரை தூக்குடுவுடன் ஒப்பிடும் போது இது சற்று குறைச்சல் தான். ஆனால் என்டிஆருக்கு சந்தேகமில்லாமல் கேரியர் ஹிட்டாக இந்த படம் அமையும். என்டிஆருக்கு இந்த ஆண்டின் பம்பர் ஹிட் படம் அமைந்திருப்பது சந்தோஷமே.
நான் குண்டாக இருப்பதால் முன்பெல்லாம் என்டிஆருடன் தான் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வேன். சாம்பா, நா அல்லுடு, ராக்கி போன்ற படங்களில் அவர் அந்த ஆட்டம் போடும் போது சற்று முயற்சித்தால் நான் கூட ஆட முடியும் என்று நினைத்து மனதை தேற்றிக் கொள்வேன்.
ஆனால் எமதொங்கா படத்தில் உடம்பை குறைத்து வந்ததும் நான் சற்று வருத்தப்பட்டேன். அப்படியே படிப்படியாக முன்னேறி இந்தப் படத்தில் பர்பெக்ட் பிட்னெஸ்சுக்கு வந்து என்னை ஏக்கப் பெருமூச்சு விட வைத்து விட்டார்.
லாஜிக் மட்டும் பார்க்காமல் இருந்தால் ஆக்சன், காமெடி என பர்பெக்ட் எண்டர்டெயினரை கண்டு ரசிக்கலாம். தமிழில் கூட ரீமேக் படமாக வரும் வாய்ப்பு உள்ளது.
ஒரு தெலுகு பெண் படத்தை விசிலடித்து கை தட்டி ரசித்து மகிழ்ந்தார் என்று சொன்னேன் அல்லவா. அது என் வீட்டம்மா தான் என்ற உண்மையை சொல்ல நினைக்கிறேன். ஆனால் உண்மையை சொன்னால் படித்து விட்டு வந்து எங்கே டோஸ் விடுவாரோ என்று பயமாகவும் இருக்கிறது.
ஆரூர் மூனா செந்தில்
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு விவரங்கள்

//படிப்படியாக முன்னேறி இந்தப் படத்தில் பர்பெக்ட் பிட்னெஸ்சுக்கு வந்து என்னை ஏக்கப் பெருமூச்சு விட வைத்து விட்டார்.//
ReplyDeleteநீங்களும் உடம்பைக் குறைக்க வேண்டிய நேரம் வந்திருச்சோ....
//ஆனால் உண்மையை சொன்னால் எங்கே உதைப்பாரோ என்று பயமாகவும் இருக்கிறது.//
விசில் தானே.. அடிச்சிட்டுப் போகட்டும்...
நன்றி ஸ்கூல் பையன்
Deleteசென்னை வரும் போது ஆட்டத்தை பார்க்கிறேன்...
ReplyDeleteடோஸ் கண்டிப்பாக உண்டு...!
நன்றி தனபாலன்
Deleteநீங்களும் திருமதி தமிழ் படத்தை பார்க்க போனிர்கலாமே, பார்த்த பாதி படத்துக்காகவது விமர்சனம் எழுதலாமே, அந்த படத்து விமர்சனம் எத்தன படிச்சாலும் போர் அடிக்கல.
ReplyDeleteநாளைக்கு போட்டுருவோம்
Deletewaiting.....
Deleteபிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறது இது தானோ. என்னைக் கொண்டு போய் தியேட்டரில் கதற விட்டு இப்ப உமக்கு விமர்சனம் கேக்குதா. சரி பார்த்த வரை போட்டு விடுறேன்.
Delete""உண்மையை சொன்னால் படித்து விட்டு வந்து எங்கே டோஸ் விடுவாரோ என்று பயமாகவும் இருக்கிறது""
ReplyDeleteசோறு வேணும்ன்னா பயந்து தானா பாஸ் ஆகணும் ... :(
இப்படி பட்டுனு போட்டு உடைக்கக்கூடாது பாஸ்.
Deleteబాద్షా సినిమా ప్రివ్యూ ధన్యవాదాలు :-)
ReplyDeleteమీ సమాధానం ధన్యవాదాలు
Deleteசெந்தில் ரொம்ப ஓவர் ! உங்க மனைவிக்கு தமிழ் படிக்க தெரியுமா ,
ReplyDeleteபார்த்துப்பா சாப்பாட்டுக்கு பிரச்சனை வந்துட போகுது .
அதெல்லாம் படிக்க மாட்டாங்க என்ற தைரியத்தில் தான் எழுதுகிறேன்.
Delete