சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, April 12, 2014

பஞ்சேந்திரியா - மாயா பஜாரும், ஏர்டெல் பொண்ணும்

பர்மா பஜார்ல இருந்து அள்ளிக்கிட்டு வந்த டிவிடிக்களில் இந்த படத்தை மட்டும் ரொம்ப நாட்களாக பார்க்காமல் இருந்தேன். காரணம் ஒன்றுமில்லை. சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். சூப்பர், பிரமாதமாக இருந்தது. நான் படத்தின் விமர்சனத்தை எழுதவில்லை. அதற்கு ஜாக்கி இருக்காப்ல, இன்னும் பல ஹாலிவுட் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த படத்தில் நான் ரசித்த ஒரு மாஜிக் காட்சியையும் அதற்கான தந்திர முடிச்சையும் உங்களிடம் பகிர்கிறேன்.

படத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒரு அரங்கில் மாஜிக் காட்சியை நிகழ்த்துவார்கள். அது என்னவென்றால் பல்லாயிரம் பேர் அமர்ந்திருக்கும் அந்த அரங்கில் இருக்கும் ஒருவரை ராண்டமாக தேர்ந்தெடுத்து அவர் கணக்கு வைத்து இருக்கும் வங்கியில் இருக்கும் பணத்தை அவரை வைத்தே திருடுவது.

மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க பந்து குலுக்கி ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அவர் ப்ரெஞ்சுக்காரர். அவர் வங்கி கணக்கு இருப்பதோ ப்ரான்ஸில். அந்த அரங்கில் இருந்தே அவரை வங்கியின் உள் அனுப்பி திருட வேண்டும், இது தான் டாஸ்க்.

அவரை மேடைக்கு அழைத்து அவரின் கையில் ஒரு ப்ளேயிங்கார்டை கொடுத்து அதில் கையெழுத்திட வைத்து அதனையும் அந்த ஷோவின் டிக்கெட்டையும் அவரிடமே கொடுத்து பேங்க் வாலட்டின் உள் வைத்து விட்டு பணத்தை திருடி வரும் படி சொல்கிறார்கள்.

அவரை லைட்டாக மெஸ்மரைஸ் செய்து அவருக்கு கேமிராவுடன் கூடிய ஹெல்மெட் மாட்டி விட்டு ஒரு பொட்டிக்குள் நுழைத்து மூடி உள்ளே தள்ளுகிறார்கள். 

அடுத்த வினாடி அவர் அவரின் பேங்க் வாலட்டின் உள்ளே விழுகிறார். அதிலிருந்து அவரது தலையில் இருக்கும் காமிரா மூலம் மற்றவர்கள் என்ன நடக்கிறது என்பதை அரங்கினுள் தெரிந்து கொள்கிறார்கள். 

ப்ரெஞ்சுக்காரர் மேஜிக்காரர்களின் சொல்படி ஒரு பட்டனை தட்ட பணத்திற்கு மேலே இருக்கும் சிம்னி வழியாக காற்று உறிஞ்ச அதன் வழியாக பணம் மேலே எழும்புகிறது.

அதே நேரம் சரியாக வங்கியை திறக்க பேங்க்காரர்கள் கதவின் அருகே இருக்கிறார்கள். பணம் பாதி சிம்னி வழியே நுழைகிறது. வாலட்டின் கதவை திறக்கப் போகிறார்கள். முழு பணமும் உள்ளே போய் அவர் வைத்த ப்ளேயிங் கார்டும் ஷோ டிக்கெட்டும் மட்டும் மிஞ்ச ப்ரெஞ்சுக்காரரும் மாயமாகி அமெரிக்கா வந்து விடுகிறார். பேங்க்காரர்கள் கதவை திறந்தால் அதிர்ச்சி அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். 

இது எப்படி சாத்தியம். ஆனால் இது பக்கா ப்ளான் பண்ண திருட்டு. அதற்கு பொருந்தும் மாதிரியான பதிலை படத்தில் இயக்குனர் வைத்து இருக்கிறார். பாருங்கள் சூப்பராக இருக்கும்

படத்தின் பெயர் Now You See me
-------------------------------------------------------

இதுக்கு மேல எப்படிய்யா இறங்க முடியும்


-------------------------------------------------

இன்னிக்கி ஆபீஸ் நம்பருக்கு ஏர்டெல் பிராட்பேண்ட் கஸ்டமர் கேர்லயிருந்து போன் வந்தது. பாவம் அந்த பொண்ணு, வேலைக்கு புதுசுபோல. என்கிட்ட பேசி புது ப்ளானை விளக்கறதுக்குள்ள அதுக்கு வேர்த்து கொட்டிடுச்சி.

நாம சும்மாவே லந்து கொடுப்போம். புதுசா ஒருத்தர் மாட்னா விடுவோமா என்ன, பத்து நிமிசம் கலாய்ச்சேன். அந்த பெண்ணும் ஒவ்வொரு முறையும் சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் மேனேஜர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லி கட் பண்ணி கட் பண்ணி மூணு முறை கூப்ட்டுச்சி, 

ஒரு லெவலுக்கு மேல அந்த பொண்ணு திணறியதை பார்த்ததும் பாவமாயிடுச்சி. கேள்விகள் எதுவும் கேட்காம அமைதியா இருந்து எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு என் ப்ராண்ட்பேன்ட் ப்ளானை மாத்திக்கிட்டேன்.

நானாவது பரவாயில்லை, இன்னும் மோசமா கலாய்க்கிறவனுங்ககிட்ட மாட்னா அழ விட்டுடுவானுங்க. உண்மையிலேயே இந்த வேலை பார்க்குற பொண்ணுங்க பாவம் தான் போல.

----------------------------------------------------

ஒரு ப்ளாஷ்பேக் தருணம்

படத்தில் உள்ள அனைவரும் எஸ்ஐயிட்டி அருகில் இருக்கும் ஒரு தாய் ரெஸ்டாரண்ட்டில் புல் கட்டு கட்டி விட்டு வந்த போது கொடுத்த போஸ். 
ஆரூர் மூனா

6 comments:

 1. இதுக்கு மேல எப்படிய்யா இறங்க முடியும்//

  பதுங்கு குழி தொண்டிற வேண்டியதுதான் போல...

  புல்கட்டு கட்டிட்டு வந்துருகிறதை வயிறே காட்டுது.

  ReplyDelete
 2. அடுத்து ஒரு 5 ஸ்டார் ஹோட்டல்ல சந்திப்போம்.

  ReplyDelete
 3. இனிமேல் எந்த லெவலுக்கு மேலும் போகாதீங்க - புல் கட்டு கட்டினதையும் சொன்னேன்...!

  ReplyDelete
 4. உங்களை மாதிரி கஸ்டமர் கிட்ட பேசுறதுக்குன்னு தேர்ந்த ஊழியர்களை நியமிக்கப் போறாங்களாம். ஏர்டெல்ல சொன்னாங்க. போட்டோல கேபிள் தவிர எல்லாரும் ஏன் இவ்வளவு சீரியஸா இருக்கீங்க?

  ReplyDelete
 5. fourman magic begins.............

  ReplyDelete
 6. பாவம் அந்த ஏர்டெல் பொண்ணு.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...