நான் அம்பத்தூரில் இருந்த வரை காலை எட்டு மணி சிறப்பு காட்சிக்கு போய்க் கொண்டு இருந்தேன். அதன் பிறகு பெரம்பூர் வந்ததும் சிறப்புக் காட்சிக்கு அதிகம் மெனக்கெடுவதில்லை.
ஏஜிஎஸ் அல்லது எஸ்2வில் இருக்கும் சிறப்புக் காட்சிகளைத்தான் பார்த்து வந்தேன். இந்த முறை எங்கள் பகுதியில் எங்குமே சிறப்புக் காட்சிகள் இல்லை. ராக்கியில் 08.30 மணிக்காட்சி இருந்தது.
நான் மட்டும் கிளம்பலாம் என்று பார்த்தால் வீட்டில் தம்பியும் பங்காளியும் படத்துக்கு வர தயாராக இருந்தார்கள். அப்பா, அம்மாவிடம் படத்துக்கு என்று சொல்லிவிட்டு கிளம்ப முடியாது.
நான் வேலைக்கு போவதாக சொல்லி கிளம்பி லோகோ ஸ்டேசனில் பைக்கை விட்டு காத்திருந்தேன். பங்காளி தி.நகருக்கு போவதாக சொல்லிவிட்டு நடந்து வர தம்பி காரை வாட்டர் சர்வீஸ் செய்து வருவதாக எடுத்து வந்தான்.
மூவரும் காரில் ஏறி அம்பத்தூருக்கு பயணமானோம். அப்பவே மணி 08.15. இனி கிளம்பி எட்டரைக்குள் சேர முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும் வண்டியை விரட்டினால் லூகாஸ் பிரிட்ஜ் தாண்டியதும் பயங்கர டிராபிக்,
வண்டியை கொரட்டூர் சிக்னலில் வலது புறம் திருப்பி பால்பண்ணை ரோட்டில் சென்று பைபாஸ் ரோட்டை கடந்து அம்பத்தூர் எஸ்டேட் உள்ளே நுழைந்து ஆட்டோ செல்லும் சந்தில் காரை சுகுராக விட்டு கனராபேங்க்கை அடையும் போது மணி 08.40. காரை பார்க் செய்து அரக்கப்பரக்க உள்ளே நுழைந்தால் முதல் பாடல் ஓடிக் கொண்டு இருந்தது.
தம்பியும் பங்காளியும் இப்படியெல்லாம் சிரமப்பட்டு படம் பார்ப்பதெல்லாம் தேவையா என்று வாக்குவாதம் செய்தார்கள். இதுவும் நம்ம வரலாற்றில் வரும் என்பது அவர்களுக்கு தெரியுமா என்ன.
---------------------------------------------------------------
இதுதான் பயணிகள் ரயில்
-------------------------------------------------------
வாரம் ஒரு வாசக நண்பர் அறிமுகம்.
சிங்கப்பூரில் ஒரு நண்பர் இருக்கிறார், அவரது பெயர் ஹம்சா முகமது. சிங்கப்பூரில் சொந்தமாக ஹோட்டல் வைத்து இருக்கிறார். நம் தோத்தவண்டா வலைத்தளத்தில் நெடுநாள் வாசகர், அதனாலேயே நண்பர்.
எந்த படம் பார்ப்பதாக இருந்தாலும் நமது விமர்சனத்தை படித்து விட்டு தான் செல்வார். அது போல் எனக்கு முன்னால் சிங்கப்பூரில் படம் பார்த்து விட்டு நன்றாக இருந்தால் எனக்கு சாட் செய்து படம் பார்த்து விமர்சனம் போடும்படி ரெகமண்ட் செய்வார்.
நிறைய பேசியிருக்கிறோம். நேரில் சந்தித்ததில்லை. ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் அழைப்பு விடுப்பார். நான் அந்த சமயங்களில் எதாவது ஒரு வேலையில் சிக்கியிருப்பேன். இப்படியாக நான்கு முறை நடந்து இருக்கிறது.
ஆனால் அவர் சலித்துக் கொள்ளவே மாட்டார். இந்த முறையும் அப்படியே ஆனது. அடுத்த முறை லீவு போட்டு சந்திக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். கண்டிப்பாக மீட் பண்ணுவோம் நண்பா.
அடுத்த வாரம் ராணுவத்தில் பணிபுரியும் ராஜீவ் நிஷாந்த்.
-------------------------------------------------------
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா
----------------------------------------------------------------
படித்த புத்தகம்
வெல்லிங்டன் என்ற புத்தகம் சுகுமாரன் எழுதியது. புத்தக கண்காட்சியில் பிரபாகரனின் வற்புறுத்தலுக்காக வாங்கினேன். முதல் விமர்சன கட்டுரையில் கூட இந்த இடம் உருவான கதை என்று இருந்தது.
படிக்கத் தொடங்கிய பிறகு தான் எல்லாம் போச்சு என்று தெரிந்தது. முதல் இரண்டு பகுதிகள் மட்டுமே. கோயமுத்தூர் ஆங்கிலேய கலெக்டர் ஒருவர் யாருமே நுழையாத மேற்கு தொடர்ச்சி மலைக்கு ரோடு போடுவதையும் பங்களாக்கள் கட்டுவதை பற்றியும் இருந்தது.
சரி சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்தேன். பிறகு கதை தவ்வி தற்காலத்திற்கு வந்து நொண்டியடிக்க ஆரம்பித்தது. ஒரு கோவையில் இருந்து ஒரு சிறுவன் தத்துக் கொடுக்கப்பட்டு வெல்லிங்டன் வருகிறான். அங்கு நடக்கும் சண்டை, சச்சரவு, கும்மாளங்கள் தான் கதை. சாதாரண கதை தான். வார்த்தைப்படுத்தியதும் சுமார் தான். சவசவவென்று நகர்கிறது.
ஆனால் என்னை என்னவோ இதில் இருக்கு என்று நம்பி வாங்க வைத்தார்கள் பாருங்கள். அதில் தான் அவர்களின் வெற்றி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் தோற்றவன் நானாக மட்டுமே இருக்கட்டும்.
ஆரூர் மூனா
how is the screen play of 'maan karate' somebody says that 2nd half is deviating from 1st half.http://bullsstreetdotcom.blogspot.in
ReplyDeleteNext Jackie ya? Enna kodumai ithu?
ReplyDeleteரயிலை காணாம்....!
ReplyDeleteAwesome maamu.
ReplyDelete