சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, April 4, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

காலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் விசிலடித்து ரசிக்கிறோம். காரணம் அதை சொல்பவர் சிவகார்த்திகேயன்.


ஏற்கனவே நிறைய படங்களில் வந்த க்ளிஷே காட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் ரசிக்கிறோம் காரணம் அந்த காட்சிகளில் இருப்பவர் சிவகார்த்திகேயன். நாம் ஏற்கனவே தொலைக்காட்சி புண்ணியத்தில் சிவகார்த்திகேயனை நம்ம வீட்டு ஆளாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அவர் அதற்கான பலனை சினிமாவில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்.

எனக்கு தெரிந்து 2005 அல்லது 2006 காலகட்டத்தில் சாதாரணமாக சிவகார்த்திகேயன் முன்வரிசையில் இருக்க நான் உதயம் திரையரங்கில் ஏதோ ஒரு படம் பார்த்து இருக்கிறேன். இன்று ராக்கியில் காலை 08.30 மணி சிறப்பு காட்சி சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படத்தை பார்க்கிறேன். 

சாதித்து விட்டாயடா சிவகார்த்திகேயா. நான்கு கம்ப்யுட்டர் இஞ்சினியர் நண்பர்களுக்கு சாமியார் மூலமாக சில மாதங்களுக்கு பிறகு வரவேண்டிய நாளிதழ் கிடைக்கிறது. அதில் உள்ள செய்திப்படி குத்துசண்டை போட்டியில் பீட்டர் என்பவர் குத்து சண்டை போட்டியில் இரண்டு கோடி வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆனால் உண்மையில் பீட்டர் ராயபுரத்தில் வெட்டியாக சுற்றிக் கொண்டு இருக்கும் வாலிபன். குத்துசண்டை பற்றி அனாஆவன்னா கூட தெரியாது. அவனை ஸ்பான்சர்ஷிப் செய்து அவனுக்கு கிடைக்கப் போகும் பரிசுப்பணத்தை பெற நினைக்கிறார்கள். இது நடந்ததா என்பது தான் படத்தின் கதை.


இதை பேப்பர் நியுஸ், சாமியார் என்ற மோல்ட்டை எடுத்து விட்டு பார்த்தால் சாதாரண கதை தான். ஆனால் அந்த மோல்ட் தான் படத்திற்கு ஒரு விறுவிறுப்பை கொடுத்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறது.

நாயகனாக சிவகார்த்திகேயன், நமக்கு பிடித்த ஆள் ஆகிட்டாப்ல. அதனால் நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். நன்றாக நடிக்கிறார். மாஸ் ஹீரோ ஆகி விட்டார். கதையை தேர்ந்தெடுப்பதில் சறுக்காமல், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல், பில்ட்அப் காட்டாமல் இப்படியே தொடர்ந்தால் தமிழ்சினிமாவின் மணிமகுடம் சாருக்கு தான்.


ஹன்சிகா நாயகியாக இளைத்து அசத்தியிருக்கிறார். நடித்தே ஆக வேண்டிய பாத்திரம் என்பதால் நடித்து இருக்கிறார். நடிப்பு என்றால் நடிகர்திலகம் அளவுக்கு இல்லை. அவர் பாக்கெட் பேனா அளவுக்கு தான்.டார்லிங் டம்பக்கு பாடல் முன்பே டீசராக வந்த போது அசத்தியிருந்தது. குட்டைப் பாவாடையில் ஆட்டம்  போட்டு இளசுகளின் இதயத்தில் பால் வார்த்து இருக்கிறார்.

படத்தில் சதீஷின் ஒன்லைனர் காமெடிகள் கைதட்டல்களை அள்ளுகிறது. சதீஷ் வாகை சூடவா படத்தில் தான் கவனிக்க வைக்கும் அளவுக்கு சில காட்சிகள் நடித்து இருந்தார்.  மூன்று வருடத்திற்குள் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி. இன்னும் சில படங்கள் இது போல் அமைந்தால் சந்தானம் சீட்டை பறித்து விடுவார்.

ஏற்கனவே ஹிட்டான பாடல்கள் பார்ப்பதற்கும் குளுகுளுவென்று இருக்கிறது. 

சூரியும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து அபத்த காமெடியா இருந்தாலும் அதை மூளைக்கு எட்ட விடாமல் சிரிக்க வைத்து விட்டு செல்கிறார்.

சிவா ப்ரிமிலினரி ரவுண்டுகளில் ஜெயிப்பதை சற்று காமெடி குறைத்து விட்டு அவர் முயற்சியில் ஜெயிப்பது போல் இருந்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்கும். பைனல் வரை ஜாலியாக வந்து விடுவது தான் லைட்டாக உறுத்துகிறது.

மற்றபடி எந்த குறையும் இல்லை. குடும்பத்துடன் சென்று கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் சிரித்து விட்டு வரலாம். இந்த ஆண்டின் கோடை விடுமுறையை நிறைவாக்க வந்திருக்கும் எண்டர்டெயினர் மூவி.

ஆரூர் மூனா.

3 comments:

  1. என்ன விரைவான விமர்சனம். ஆக... சி.கா.வுக்கு மற்றொரு வெற்றிப்படம் ரெடி என்கிறீர்கள்... எண்டர்டெய்னரை அவசியம் பார்த்துரலாம்.

    ReplyDelete
  2. I don't remember Sathish acted in Vakai soodava.. pls check

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...