சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, September 3, 2013

பதிவர் சந்திப்பின் முதல்நாள் ஆன்மீகம் தேடிய பயணம்

இந்த பதிவை நேரடியான அர்த்தத்துடன் எழுதப் போவதில்லை, முழுவதும் பின்நவீனத்துவம் தான். ஆகச்சிறந்த படிப்பாளிகளுக்கு எளிதாக புரியும். படுதிராபையான ஆட்களுக்கு அது கெட்டது போலவே தெரியும். மகாநல்லவர்களுக்கு இது புரியவே புரியாது. நீங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள் என்பது நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய விஷயம்.


நான் பாட்டுக்கு ஒழுங்கா இருந்தேன். நேத்து நம்ம நண்பர் சொறிஞ்சி விட்டதுலேர்ந்து பின்நவீனத்துவமும் மகாதியானமும் நம்மளை போட்டு ஆட்டு ஆட்டுனு ஆட்டிப் படைக்கிது. இந்த தெய்வீகநிலை குறைய ஒருவாரமாவது ஆகும்னு நினைக்கிறேன். அதுவரை என்னால் எழுதப்படுபவை எல்லாம் பின்நவீனத்துவத்துடன் கூடிய அவதானிப்பான பதிவாகத் தான் இருக்கும்.

இனி பதிவுக்கு போவோம்.

பதிவர் சந்திப்புக்கு பதிவர்களை தினமும் அழைத்து அழைத்து சங்கவி, பிரகாஷ், சுரேஷ் இவர்களுடன் தினமும் பதிவர்களை அழைப்பதைப் பற்றி பேசிப்பேசி சிவா, செல்வின், கேஆர்பி இவர்களிடம் உணவு ஏற்பாட்டைப் பற்றி பேசிப் பேசி கடைசி ஒரு வாரம் முழுவதும் கொஞ்சம் ஒளிவட்டத்துடனே சுற்றினேன்.


வெள்ளிக்கிழமை இரவு நண்பர்கள் வெளியூரிலிருந்து கிளம்பியதை கன்பார்ம் பண்ணியதில் இருந்து எனக்கு தூக்கமே வரவில்லை. விடியற்காலை வரை முழித்திருந்து அப்புறம் தூங்கி தாமதமாக எழுந்து கிளம்பினேன்.

வெளங்காதவன் வந்து விட்டதாலும் பன்னிக்குட்டி வருவதாக இருந்ததாலும் டம்மிக்கு ஒரு நண்பரை இவர்கள் பெயரில் சபையில் உலாவ ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டு கிளம்பினேன். அறைக்கு சென்று நண்பர்களை சந்தித்து அளவளாவினேன்.


வீடுசுரேஷ், இரவுவானம் சுரேஷ், சசிமோகன் அப்புறம் வெளங்காதவன் இவர்களை சந்தித்தது வரை அமைதியாக இருந்த அறை சற்று நேரத்தில் எல்லாம் அலற ஆரம்பித்தது, ஆமாம் நீங்கள் எதிர்பார்த்தது போலவே நக்கீரன் கோகுலுடன் வந்து விட்டார்.

ஏற்பாட்டுக் குழுவில் இருந்து பாலகணேஷ், சீனு, ரூபக்ராம் ஆகியோரும் வந்து விட்டனர். அறையில் இருந்து எழுந்த கூச்சலில் மற்ற அறையில் இருந்தவர்கள் முதல் விடுதி உரிமையாளர்கள் வரை பம்மி பதுங்க ஆரம்பித்தனர்.

வரும்போது மகாதியானத்திற்காக பாண்டிச்சேரியில் இருந்து கமண்டலமும் புலித்தோலும் வாங்கி வந்திருந்தார் நக்கீரன். ஒரு இருக்கையும் ஒரு கமண்டலமும் மட்டும் இருந்ததால் தியானம் கூட செய்ய முடியாது, மகாதியானம் செய்ய வேண்டியிருக்கிறது, எனவே மான்தோல், கூடுதலாக சில கமண்டலங்கள், அர்ச்சனைப் பொருட்கள் வாங்கி வர வடபழனி கோயிலுக்கு செல்வின் விரைந்தார்.


மகாதியானத்தில் ஈடுபட வேண்டுமென்றால் கடும்விரதம் மேற்கொள்ள வேண்டும். அந்த நேரம் பார்த்து அசைவம் சாப்பிட்டு வந்த சீனுவும் ரூபக்ராமும் தியானத்தை தொடர முடியாமல் வெளியேறினர். பேட்பெல்லோஸ்.

தீவிர மகாதியானம் ஆரம்பமாகி உச்சநிலையை அடைந்த போது பதிவர் நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் வீட்டில் இருந்து பிரியாணி வருவதாக தகவல் வந்தடைந்தது. விரதம் இருக்கும் நேரத்தில் அசைவமா என்று யோசித்தோம்.

அன்புக்கும் ஆன்மீகத்திற்கும் நடந்த போட்டியில் அன்பு தான் ஜெயித்தது. சைதை அஜீஸ் அன்புக்கு கட்டுப்பட்டு பிரியாணி தின்பதென்று முடிவு செய்து மகாதியானம் கைவிடப்பட்டது. எல்லோரும் பிரியாணியை ஒரு கட்டு கட்டி விரதத்தை முடித்துக் கொண்டோம். ஆகா அருமையான பிரியாணி நன்றி அஜீஸ்.

அன்பர் நக்கீரன் அவர்கள் பிரியாணியை அனைவருக்கும் ஊட்டி விட்டு சமத்துவத்தை வலியுறுத்தினார். அந்த நேரம் பார்த்து வந்த தெய்வீக கவிஞர் சங்கவியும் சமத்துவத்தில் பங்கேற்றார். முதல்இடப் பதிவர் மோகன் குமார் அவர்கள் கூட நக்கீரனின் அன்புச் சங்கிலியில் இருந்து விடுபட முடியவில்லை.

மகாதியானம் முடிந்து சமத்துவ தர்மப்படி உண்டு களித்ததால் வந்த களைப்பை நித்திரையில் ஆழ்ந்து முத்தெடுக்க முடிவு செய்து அவர் அவர்களும் அவரவர் அறைக்கு சென்று முத்தெடுக்கத் தொடங்கினோம்.

இருள் கவ்வத் தொடங்கியது. ஆந்தையின் கூக்குரல் கேட்டது. கண் திறந்து பார்த்தால் நான் மட்டுமே முத்தெடுத்து முடித்திருந்தேன். மற்றவர்கள் தொடர்ந்து முத்தெடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிலர் நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

சாயரட்சை காலத்து தியானமும், நடுநிசி கால மகாதியானமும் தொடர வேண்டியிருந்ததால் அனைவரையும் எழுப்பி தயார்படுத்தினேன். பூஜைப் பொருட்களும் கமண்டல நீரும் மிச்சமிருந்ததால் மறுபடியும் கோயிலுக்கு செல்ல வேண்டிய தேவையில்லாமல் இருந்தது.

தொடங்கி திவ்யமாக தியானம் சென்று கொண்டு இருந்தது. பக்திமணம் அறையெங்கும் கமழ்ந்தது. சற்று கூடுதலாக புகை வந்தது தான் சிரமமாக இருந்தது. இருந்தாலும் சாயரட்சை பூஜையை முடித்து நடுநிசி கால மகாதியானத்திற்கு செல்ல முற்பட்டோம்.

அய்யகோ என்னவொரு கொடுமை. அர்ச்சனை பொருட்களும் கமண்டல நீரும் காலியாகி இருந்தது. மீண்டும் வாங்கி வந்து மகாதியானத்தை துவக்கிய போதுதான் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது.

ஆமாம், பக்தி முத்திய அந்த நேரத்தில் தான் அந்த ஸ்டேட்டஸை அடித்து முகநூலில் அனுப்பினேன். நான் துறவிமானாக மாற என்னை தூண்டிய செய்கையின் மூலக் காரணம் அதுதான். அதன்பிறகு நாங்கள் ஆனந்த அஜபா நடனம் ஆடியது, வீதிஉலா வந்தது எல்லாம் எங்களின் வாழ்க்கை வரலாற்றில் வரும்.

நானும் மேன்மக்களாக முயற்சித்து என்னுடைய இரண்டாவது பக்தி பயணத்தை துவங்கியுள்ளேன். ஜெய் போலோநாத், அன்பே சிவம். ஆத்திரம் ஆன்மீகத்திற்கு சத்ரு. சமாதானம், சன்னிதானம் நோக்கி ஆன்மீக தேடலோடு பயணிக்கும்

ஆரூர் மூனா செந்தில்

47 comments:

 1. மெகா தியானம் தொடரட்டும்...! ஜெய் ஜெய் போலோநாத்...

  ReplyDelete
  Replies
  1. உரக்கச் சொல்லுங்கள் ஜெய் ஜெய் போலோநாத்

   Delete
 2. எக்ஸ்சலன்ட்.....பக்தி மார்க்கம்...இப்படியே தொடர்ந்தாள் நல்லா இருக்கும்....அப்புறம்..மகா குருவே....நாளை புதன் கிழமை என்று தங்களுக்கு நினைவுட்டுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நினைவில் உள்ளது சீடரே, கஸ்னாக்கா கஸ் அண்டங்காக்கை உஸ்

   Delete
 3. வரும்போது மகாதியானத்திற்காக பாண்டிச்சேரியில் இருந்து கமண்டலமும் புலித்தோலும் வாங்கி வந்திருந்தார் நக்கீரன். ஒரு இருக்கையும் ஒரு கமண்டலமும் மட்டும் இருந்ததால் தியானம் கூட செய்ய முடியாது, மகாதியானம் செய்ய வேண்டியிருக்கிறது, எனவே மான்தோல், கூடுதலாக சில கமண்டலங்கள், அர்ச்சனைப் பொருட்கள் வாங்கி வர வடபழனி கோயிலுக்கு செல்வின் விரைந்தார்.

  இங்க தான் புலித்தோல் கடத்தராங்களா...........
  கூண்டோட உள்ளே போடுங்கா இந்த சாமியாருங்களா

  ReplyDelete
  Replies
  1. நீர் ஒரு பின்நவீனத்துவ பின்னூட்டவாதி தான்

   Delete

 4. அடடா , இப்போது தானே ரகசியம் தெரிந்தது நிறைய
  உடன் பதிவுகள் ஏன் வரவில்லை என்பது.
  எல்லாம் த்யானத்தின் போது வழங்கப்பட்ட
  தீர்த்தத்தின் மகிமையே என்று.
  பாவம் ஆன்மீகம் . விட்டு விடுங்கள் .
  வீரராக நேருக்கு நேர் பதிவிடுங்கள் .
  இம்சை தாங்கவில்லை.

  யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் !

  ReplyDelete
  Replies
  1. இது என்ன உலகப் போரா நேருக்கு நேராக சண்டையிட, அமைதியை நேசியுங்கள்.

   Delete
 5. கடைசி வரைக்கும் எனக்கு தங்களின் அருளாசியும் தீர்த்தமும் கிடைக்கவே இல்லை.பூஜை முடிந்து பிரசாதமும் வரவில்லை...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எங்கள் ஆசிரமத்திற்கு வருகை தரவே இல்லையே. வந்திருந்தால் அனைத்து அருளாசிகளும் கிடைக்கப் பெற்று இருக்கும்.

   Delete
  2. வெகுநாளாக கிஸ்தியும் கட்டவில்லை திரை வரவில்லை இதற்க்கெல்லாம் சேர்த்து வட்டியும் செலுத்தவில்லை அடேய் வெள்ளையதேவா................. என்ன ஜீவா இப்படி உணர்ச்சிவசபட்டா எப்படி ... நல்லா டீப் ப்ரீத் எடுத்துகங்க இன்னும் நல்லா.........இழுத்து விடுங்க இப்போ பெட்டரா இருக்கா ? இப்போ அரே ஒ சாம்பான்னு சொல்லிகிட்டே ....பச்சை கடையோனை தேடி சென்று தீர்த்தம் அருந்தவும் ....

   Delete
  3. அரே ஒ சாம்பா

   Delete
 6. வடபழனி ஏரியா முழுவதும் அன்று இரவில் இருந்து விடியும் வரை எல்லோருக்கும் இஸ்க்கு இஸ்க்கு ..என்று தான் கேட்டதாம் ....என்னே நம் தவ வலிமை .............

  ReplyDelete
  Replies
  1. அடுத்த ஆண்டு சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் சென்று நம் தவவலிமையை பெருக்கிக் கொள்வோம்.

   Delete
  2. அமாம் நம் தவவலிமையால் சென்னிமலையை நகர்த்தி பரங்கிமலை பக்கத்தில் கொண்டு வந்து வைத்துவிடுவோம் ..........அரே ஒ சாம்பா ...................

   Delete
  3. நல்லாயிருக்கே இந்த யோசனை அரே ஒ சாம்பா

   Delete
 7. ஜெய் ஜெய் போலேநாத்...

  குருவே நமக...

  கூடுதலாக சில கமலண்டங்களை வாங்கிவந்து எம்மை தாகசந்தியில் நனைத்த தங்கள் சிஷ்யர் அஞ்சாசிங்கத்திற்கு தங்கள் ஆசியை கொடுக்கவும் இந்த சிஷ்யனின் வேண்டுகோளை பரிசீலிக்க வேண்டுகிறேன் சுவாமி....

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஆகட்டும், தும்ததா

   Delete
 8. சூப்பரா புரிஞ்சுது சுவாமிஜி

  ReplyDelete
  Replies
  1. அப்படியே தொடருவோம்

   Delete
 9. இந்த அற்புதமான சந்திப்பில் தியானத்தில் உள்ள பல்வேறு நிலைகளை விளக்கி எனக்கு தீர்த்தமும் வழங்கிய குரு ஆரூர் மூனாவையும் அவரின் தலைமை சிஷ்யர் திரு நக்ஸ் மாமாஜியும் வணங்குகிறேன் ..

  மற்றும் என்னுடன் தீர்த்த யாகத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தி மான்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கம்கள் ...

  ஜெய் போலோநாத்
  ஜெய் மேன்சன் கவுஸாய தீர்த்த புண்ணியமே நமோ நம ...

  ReplyDelete
  Replies
  1. ஜெய் போலோநாத்

   Delete
 10. கமண்டல தீர்த்தம் இருக்கும் வரை மகா தியானம்தான்!உலகே அன்பு மயம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்புக்கு நன்றி அடையாறு அஜித். ஜெய் போலோநாத்

   Delete
 11. எல்லாம் சரி அதென்ன பாதாம் கலரில் வேட்டி சட்டை இப்பத்தான் முதன் முறையாய் பார்க்கிறேன்

  எதாவது பின்நவீனத்துவ குறியீடா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அரவிந்தன் அண்ணே. குறியீடை வைத்தாயிற்று ஆனால் அதற்கு காரணம் யோசித்துக் கொண்டுள்ளோம். கிடைத்து விடும் என்று நம்புகிறோம்

   Delete
 12. மேன்சன் ஹவுஸ்சாய நமக...!
  பகார்டி புல்லாய நமக....
  சைதை அஜிஸ் பிரியாணியாய நமக
  எலும்பே இல்லாத கறியாய நமக
  பிளாக் கிராம்பு சிகரட்டாய நமக
  ஏ.சி போடாத மாஸாபி கெஸ்ட் ஹவுஸ் ஒழிகாய நமக
  நாங்க வருவதற்கு முன்னாடியே ரூம் போடாத சிவா கல்யாணமாக நமக
  இரவு வானம் நாலுகால்ல நடந்தாய நமக
  ஆருர் மூனாவை தூக்க முடியல நமக
  பன்னிக்குட்டி ராமசாமி வரலை நமக
  ச்சே இந்த குடிகாரய்ங்க கூட சேரவே கூடாது.....

  ReplyDelete
  Replies
  1. ஜெய் போலோநாத் அரே ஒ சாம்பா

   Delete
 13. சத்தியமாக நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். என்ன ? கொஞ்சம் லேட் !
  நாமெல்லாம் கல்யாண வீட்லேய கட்டிக்கொண்டு அழும் பார்ட்டிகள். மேலே சொல்லவேண்டாம். எனக்கு ஒரு சிறு கவலை // நான் சென்னையில் இல்லாமல் போனது// ஒன்று மட்டும் சர்வ உண்மை.
  அன்பே சிவம் !!

  ReplyDelete
  Replies
  1. அன்பே மாணிக்கம் அண்ணன்

   Delete
 14. ஒண்ணுமே புரியலைங்க.

  ReplyDelete
  Replies
  1. அய்யா உங்களுக்கு புரியாதது தான் நல்லது,

   Delete
 15. என் அறைக்கு வந்து அருளாசி வழங்கிய சுவாமி நாய் நக்ஸ் ன் ஆசிர்வாதத்தை பெற்ற நான் பாக்கியவானே.

  ReplyDelete
  Replies
  1. ஓ அது வேற நடந்ததா

   Delete
 16. Really I dont understand... Senthil what happened to u

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாட்களுக்குள் வெளிவந்த நான்கு பதிவுகளை படித்துப் பாருங்கள் புரியும்

   Delete
 17. குடிகார தேவ்டியா பசங்க சேர்ந்து குடித்து கும்மாளம் போட்டதற்கு பெயர் பதிவர் சந்திப்பு. உங்களை நம்பி வந்த பெண் பதிவர்கள் உங்களிடம் பட்ட பாட்டைச் சொல்லி அழும் போது தெரிந்தது உங்களின் காம லட்சனம். அனைவரும் காமக் கொடூரர்கள் என்று அந்தப் பெண் பதிவர் புலம்பியது தான் மிச்சம்

  ReplyDelete
  Replies
  1. குடிகாரனெல்லாம் தேவடியாப்பசங்க, பெண் பதிவர்கள் கிட்ட பேசிக்கிட்டு இருந்தவர்கள் எல்லாம் காமக் கொடூரர்கள், அருமை. என்னே உந்தன் கண்டுபிடிப்பு. நாங்களெல்லாம் உங்ககிட்ட கிளாஸ் எடுத்துக்கனும் போல.

   அன்பே சிவம். அரே ஓ சாம்பா

   Delete
 18. இப்படி ஒரு மஹா தியானத்தில் கலந்து கொள்ள மிலிட்டரியிருந்து சில பல விஷேச பூஜைப் பொருட்களோடு கலந்திருக்கலாமோ ???? சூனா..பானா.... இன்னொரு பதிவர்சந்திப்பு வராமலா போகும்... நம்ம அரூர் மூனா இன்னொரு மஹா தியானத்திற்கு ஏற்பாடு பண்ணாமலா போவாரு.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பண்ணிடுவோம

   Delete
  2. இரண்டு பதிவுகளை படித்தேன். நீங்கள் ஏற்கனவே பல வருடமா ஆன்மீக பாதையில் தானே இருக்கீங்க !!!

   அப்புறம் என்ன புதுசா !!!... உங்கள் ஆன்மீக அனுபவங்களை ஒரு குறுந்தகட்டில் வெளியிட்டால் நன்று !!!...

   பக்தி நறுமணம் வீசுகிறது...!!! உங்கள் பதிவில்.. அருமை அருமை

   அகம் பிரம்மாஸ்மி !!!

   Delete
  3. அவ்வளவு தான் மணிகண்டன், அரை மணிநேரத்தில் உலகை புரிந்த நீங்கள் ஒரு வளரும் ஞானி

   Delete
 19. அருமையான தியானம் ரசித்தேன். பதிவர் திருவிழா என்றதும் கொஞ்சம் கவனமாக வாசிப்பது. இது வித்தியாசமாக உள்ளதே என்று புகுந்தேன்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 20. நான் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. எனக்கு அந்த தீர்த்தம் எப்போ கிடைக்கும் மூனான்டவரே,,,,

  ReplyDelete
 21. Hello.. adutha pathivar thiyanthukku advance booking open...  sivaparkavi
  http://sivaparkavi.wordpress.com/

  ReplyDelete
 22. ஹா...ஹா... ரசித்தேன்.

  ReplyDelete
 23. சுவாமிஜி இந்த வருடம் என்னால் தீட்சை பெற வர முடியவில்லை.... அடுத்த வருடத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்ள முடியுமா ?!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...