கேஆர்பி செந்தில் : நிகழ்ச்சியில் உணவு ஏற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி செல்லும் பொறுப்பை ஏற்றுள்ளார். நிகழ்ச்சியில் உணவு வகைகள் தரமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணகர்த்தா. உணவுக்கென பெரிய அளவில் நன்கொடை வசூல் செய்து கொடுத்தவர். ஒரே சமயத்தில் மிகப்பெரிய புத்திசாலியாகவும் அடுத்த வினாடி ஒன்னும் தெரியாத பாப்பாவாகவும் மாறும் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி கேஆர்பி.
மதுமதி : வளர்ந்து வரும் இளம்(!!!) பாடலாசிரியர் கவிஞர் மதுமதி. மேடை பொறுப்பு, பரிசளிக்கும் கேடயம், சால்வைகள், பேனர்கள் மற்றும் விழா நிகழ்ச்சிகள் இறுதி செய்யும் பொறுப்பை ஏற்று திறம்பட செய்து வருகிறார். தமிழ் சினிமா திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் மற்ற வேலைப்பளுவுக்கு இடையே அலைந்து திரிந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார். கவிஞர் என்பதற்காக விழாவில் கவிதை வாசித்து மற்றவர்களை இம்சிக்க விரும்பாத நல்ல மனிதர்.
டிஎன் முரளிதரன் : மேடை நிர்வாகத்தில் ஒரு பகுதி, பரிசளிப்பு கேடயம் சால்வைகள் பொறுப்பு போன்றவற்றை ஏற்றுள்ளார். அதிக நெருக்கமில்லாததால் கலாய்த்தால் அடிப்பாரோ என யோசித்து அப்படியே விடுகின்றேன்.
சிவக்குமார் : உணவு ஏற்பாடு, முதல் நாள் வருகை தரும் பதிவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்து செல்லுதல், சந்திப்பு அன்று வரும் பதிவர்களை வரவேற்றல் போன்ற பணிகளை செய்து வரும் தமன்னா ரசிகர் மன்ற திநகர் கிளை தலைவர். ஆலோசனை கூட்டங்களை பரபரவென விவாத களமாக்கும் படபடப்பான பேச்சாளர். சிவா ஒரு டீடோட்லர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
அரசன் : ஜிம்பாடி ராஜா என்ற பட்டப் பெயர் உடைய அரசன் தான் விழாவின் கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் கல்லாப்பொட்டி சிங்காரம். இவரது வங்கிக் கணக்கில் தான் விழாவுக்கான நன்கொடைகள் வரவு வைக்கப்படுகின்றன. வாரா வாரம் ஆலோசனை கூட்டங்களை ஏற்பாடு செய்வது இவர் பொறுப்பு தான். மன்மதன் பார்ட் 2 எடுத்தால் நாயகனாக நடிக்க காத்திருக்கும் கட்டிளங்காளை.
-----------------------------------------
பதிவர் சந்திப்பில் பப்பே முறையில் வழங்கப்படும் மதிய உணவு வகைகள்
அசைவம்
பைனாப்பிள் கேசரி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
சைவம்
பைனாப்பிள் கேசரி
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
-----------------------------------------
செல்வின் : உணவு ஏற்பாடு, முதல் நாள் வருகை தரும் பதிவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்து செல்லுதல், சந்திப்பு அன்று வரும் பதிவர்களை வரவேற்றல் போன்ற பணிகளை செய்து வரும் வரலாற்று ஆய்வாளர். திருவொற்றியூரில் பஞ்சாயத்துகளை கவனிக்கும் பொறுப்புகளுக்கு இடையிலும் ஆலோசனை கூட்டங்களுக்கு வந்து கருத்துக்களை பதிவு செய்யும் ஹிஸ்டரி வாத்தியார்.
சரவணன் : விழாவில் பதிவர் அறிமுகத்திற்காகவும், விழா மலரில் போடுவதற்காககவும் கலந்து கொள்ளும் பதிவர்களின் விவரங்களை தொகுக்கும் சிரமமான பணியை செய்து வருகிறார். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் எங்களுடன் சேர்ந்து வெளியில் சென்று லேட்டாக வீட்டுக்கு சென்றதால் கும்மாங்குத்து வாங்கி, இப்பவெல்லாம் வண்டியை வீட்டில் விட்டு விட்டு அடுத்தவர் பைக்கில் வந்து கூட்டம் முடிந்ததுமே வீட்டுக்கு செல்லும் புத்திசாலி.
மோகன் குமார் : தனிப்பட்ட அலுவல் காரணமாக ஆலோசனை கூட்டத்திற்கு வராமுடியாமல் போனாலும் வந்த வரை விழா பணிகளை செய்து வருகிறார் தொல்லைக்காட்சி ஓனர். விழாவுக்கு வேண்டிய புரொஜக்டர், திரை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். புத்தகம் வெளியிடும் வேலையிலும் பிஸியாக இருக்கிறார் விளிம்பு நிலை மனிதர்களின் தோழர்.
சீனு : இப்போது வேலை குறைவாக இருந்தாலும் விழாவன்று வருகை தரும் பதிவர்களுக்கு என்ட்ரி போட்டு அடையாள அட்டை கொடுத்து சாப்பாட்டு டோக்கன் கொடுத்து வந்த பதிவர்களின் விவரத்தை மேடைக்கு அனுப்பும் முக்கிய பொறுப்பு சீனுவுடையது தான். சொல்ல சாதாரணமாக இருந்தாலும் மிகுந்த டென்சனை கொடுக்கும் வேலை இது. வாரா வாரம் ஆலோசனை கூட்டம் முடிந்ததும் எங்களுடன் ஸ்கூல் பையன் நகர முயற்சிக்கும் போது நாங்க எல்லாம் மோசமானவர்கள் என்று அவரை பயமுறுத்தி வீட்டுக்கு கூட்டிச் செல்லுவது சீனு தான்.
ரூபக்ராம் : விழாவில் பதிவர் அறிமுகத்திற்காகவும், விழா மலரில் போடுவதற்காககவும் கலந்து கொள்ளும் பதிவர்களின் விவரங்களை தொகுக்கும் சிரமமான பணியை பகிர்ந்து செய்து வருகிறார். விழாவன்று வருகை தரும் பதிவர்களுக்கு என்ட்ரி போட்டு அடையாள அட்டை கொடுத்து சாப்பாட்டு டோக்கன் கொடுத்து வந்த பதிவர்களின் விவரத்தை மேடைக்கு அனுப்பும் முக்கிய பொறுப்பையும் பகிர்ந்து செய்வது இவர் தான். எப்போதுமே ஆலோசனை கூட்டத்தன்று மெளன விரதம் இருக்கும் நல்ல பையன்.
பிரபாகரன் : இவருக்கு இந்த முறை திருமணமாகி சில வாரங்களே ஆனதாலும் பல உறவினர்கள் வீட்டில் விருந்து வெட்ட வேண்டியிருந்ததாலும் பல முறை ஆலோசனை கூட்டத்திற்கு வர முடியாமல் போனது. உணவு ஏற்பாடு, முதல் நாள் வருகை தரும் பதிவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்து செல்லுதல், சந்திப்பு அன்று வரும் பதிவர்களை வரவேற்றல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.
முடியவில்லை இன்னும் மிச்சமிருக்கு...
ஆரூர் மூனா செந்தில்
மெனு சூப்பர்.. இதோ கிளம்பீட்டேன் அண்ணே..
ReplyDeleteதிருவிழா மாபெரும் வெற்றியடையும் என்பதில் ஐயமே இல்லை.. ஒவ்வொருவரின் உழைப்புக்கும் என் சல்யுட்..
நன்றி, வருக ஆவி. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
Deleteநான் சனிக்கிழமை காலையே வந்துடுவேன். எனக்கும் எதாவது வேலை இருந்தா கொடுங்க செய்றேன்.
ReplyDeleteகண்டிப்பாக விழாவன்று காலையில் நிறைய வேலைகள் காத்திருக்கின்றன.
Deleteஎனக்கு பிடிச்ச அயிட்டம் சிலது வெஜ் சாப்பாட்டுல இருக்குறதால ரெண்டு இடத்துலயும் சாப்பிட அனுமதி உண்டா?!
ReplyDeleteமுடிஞ்ச வரைக்கும் எல்லா வகையையும் ஒரு கை பாருங்க.
Deleteநிகழ்வு சிறப்புற நல்வாழ்த்துகள்.
ReplyDelete•
பொன்.வாசுதேவன்
நன்றி வாசுதேவன்.
Deleteசிவா ஒரு டீடோட்லர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
ReplyDelete>>
அதென்ன சிவாவுக்கு மட்டும் பெருசா ஒரு ஜை ஜப். அப்போ மத்தவங்கலாம் கெட்டவங்கன்னு மறைமுகமா சொல்ல வர்றீங்களா?! நானும் கொளுத்தி போடுவேனில்லை!!
அதை நீங்க தான் சொல்லியிருக்கீங்க. நாங்களும் தோசையை திருப்பி போடுவோம்ல.
Delete///வினி... நீ பசிக்கு சாப்பிடனும்னு அவளை கடுத்துக்கிட்டே இருந்தே... நான் ‘ பசி’ ன்னா என்னன்னு புரிய வச்சேன்.. !”///
ReplyDelete///அதிக நெருக்கமில்லாததால் கலாய்த்தால் அடிப்பாரோ என யோசித்து அப்படியே விடுகின்றேன்.///
யாரையும் கலாய்க்கலாம் அதுதான் பதிவர்களின் பழக்கம். அதை யாரும் தப்பா எடுத்துக்க மாட்டார்கள் என்பது என் கருத்து ஆனால் காலாய்க்கும் போது ஒன்றை மனதில் வைத்து கொள்ள வேண்டும் கலாய்ப்பது தப்பில்லை ஆனால் காயப்படுத்தாமல் கலாய்க்க வேண்டும்
கலாய்க்கிறதுக்காக யோசிக்கலை. நெருக்கம் இல்லாததால் அவரின் பலவீனம் ஒன்றுமே தெரிந்து கொள்ளவில்லை அதுதான் காரணம்.
Deleteஇந்த முறை தப்பிச்சிட்டேன். அப்படியே மெயின்டைன் பண்ணிட வேண்டியதுதான்.
Deleteநோட் பண்ணிக்கிறேன், அடுத்த பதிவர் சந்திப்பு வரை உங்களை பாலோ பண்றேன், தும்ததா.
Deleteதும்ததா. Ha ha ha
Deleteமுடிதளவு வர முயற்ச்"சிக்கிறேன்"...!
ReplyDeleteஏன் என்ன ஆச்சு தனபாலன், சொந்த வேலையா?
Deleteதனபாலன் சார் தவறாம வாங்க! உங்களுக்காக ரசிகர் கூட்டமே கத்துக்கிட்டு இருக்கு.
Deleteயோவ்.. நம்ம வக்கீல் சார அடிக்கனும்னு ஒரு பிளான் வச்சிருந்தியே... லீக் ஆயிருச்சா? ஆடு பம்முது????
Delete:)
//"சிக்கிறேன்"...!/////
Deleteஇல்லய்யா... ஆடு கண்டிப்பா வர்றேன்றத பின்னவீனத்துவமா சொல்லியிருக்கு...
ஆனா, வக்கீலைய்யா எதுக்கும் இடம் பொருள் பாத்து வரவும்
:-)
வரமுடியாதவர்களை அதிகம்
ReplyDeleteவருத்தப்படவைக்கும்
வருகிறவர்களை அசர வைக்கும்
அருமையான ஏற்பாடுகள்
பணிப்பங்கீடுகள்
குறிப்பாக சாப்பாட்டு மெனு
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அய்யா.
Deleteஒரு முக்கியமான ஆளு விட்டுப் போச்சேண்ணே....
ReplyDeleteயாரைச் சொல்றீங்க, திங்களன்று வெளியிட்ட பதிவில் பார்க்கவும்
Deleteமெனு டேஸ்டி....
ReplyDeleteஅது தான் வேணும் மச்சி
Deleteஎன் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது!
ReplyDeleteநன்றி அய்யா
Deleteதகவல் அறிந்தேன்....
ReplyDeleteயோவ் முதல்ல வேலையில் பங்குபெற வாய்யா
Deleteபிரமாதமான ஏற்பாடுகளை பற்றி படிக்கும் போதெல்லாம் பெருமையாக இருக்கிறது. நம்ம விழாவாச்சேனு கூடவே சந்தோசமும் சேர்ந்துக் கொள்கிறது.
ReplyDeleteஅருமையாக ஒவ்வொருவரின் பொறுப்பையும் குறிப்பிட்டு , மெனுவையும் சொல்லிட்டிங்க ! வாழ்த்துக்கள் !!
நன்றி கௌசல்யா ராஜ்
Deleteஉணவுப் பட்டியலே சுவையாக உள்ளது ஆரூர்!
ReplyDeleteநன்றி அய்யா, நீங்கள் எங்கள் குரு, நினைவில் வையுங்கள்
Deleteஎனக்கொரு வருத்தம் செந்தில்? இரண்டு மெனுவிலும் ஊறுகாய் இல்லையே
ReplyDeleteஒரு டப்பா வாங்கிடுவோம்ணே
Delete//இரண்டு மெனுவிலும் ஊறுகாய் இல்லையே///
Deleteமுன்னத்தநா ராத்திரிக்கும் சேத்து வாங்கிக்கவும்.
:)
அதை உன் நாக்கில் தடவிவிட ஒரு ஆளையும் ஏற்பாடு செய்யட்டுமா
Deleteவிழா களை கட்ட ஆரம்பித்துவிட்டது செந்தில்.
ReplyDeleteஜமாயுங்க ராஜா, வாழ்த்துக்கள்.அதுசரி,எங்களைப்போன்ற "பரதேசம்" வாழ்பவர்களுக்கு ஒன்றுமில்லையா?
ஆன்லைன்ல நேரடி ஒளிபரப்பு இருக்கிறது. நாங்கள் வளைத்து வளைத்து பிரியாணி கட்டுவதை பார்த்து மகிழுங்கள்.
Delete// ஆன்லைன்ல நேரடி ஒளிபரப்பு இருக்கிறது. நாங்கள் வளைத்து வளைத்து பிரியாணி கட்டுவதை பார்த்து மகிழுங்கள்.//
Delete---ஆரூர். முனா செந்தில்
பிரியாணி கட்டுவதை மட்டும்தானா?
பல வேலைகள் கழுத்து வரைக்கும் இருந்தாலும் காரியத்துல கண்ணா இருக்குற உங்க கடமை உணர்ச்சி கண்டு மெய் சிலிர்க்கிறேன் bro... :)
ReplyDeleteநன்றி சரவணபூபதி
Deleteவாழ்த்துக்கள் ஆருராரே!
ReplyDeleteசனிக்கிழமை காலையே வாரும்.
Deleteபதிவர் சந்திப்பை சிறப்பாக நடைபெற செய்துள்ள ஏற்பாடுகள் அறிந்து மிக்க மகிழ்ச்சி. அன்றைய தினம் நான் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், சென்ற ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. விழா சிறப்புடன் நடைபெற அயராது பணிபுரியும் அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நடனசபாபதி அய்யா
Deleteஅண்ணேன்...நான் தேடிப்புடிச்சி உங்க போட்டாவ என் பதிவுல morph effect-ல போட்டு இருக்கிறேன்....நல்ல லெக் பீஸ் சிக்கன் பிரியாணி
ReplyDeleteஇப்பவே எடுத்து ஓரமா வச்சிடுங்க....ஹி..ஹி
நல்லயானை காலா எடுத்து வைக்கிறேன்
Deleteசந்திப்பு சிறப்புற நிறைவேற வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ரமேஷ்குமார்
Deleteதுபாயில இருக்குறவங்களுக்கு அப் அண்ட் டவுண் டிக்கெட் போட்டு கொடுத்தீங்கன்னா புண்ணியமா இருக்கும். கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க.
ReplyDeleteஇவ்வளவு தானே உங்களுக்கு தனி ப்ளைட்டே அனுப்பிடுவோம்
Deleteபதிவர் சந்திப்புக் சந்திப்புக் குழு பற்றிய மிக சிறப்பான அறிமுகம்னே... மிக கலகலப்பான அறிமுகமும் கூட...
ReplyDeleteநன்றி சீனு
Deleteஇதுவரைக்கும் வரணுமா வேணாமான்னு நினைச்சிக்கிட்டிருக்கறவங்கள கூட வந்தே ஆகணுங்கறா மாதிரி கவர்ச்சியா இருக்கு உங்க எல்லாருடைய பதிவுகளும்.... இதுவரைக்கும் இந்த மாதிரி யாரும் நடத்துனதில்லேன்னு நிரூபிச்சிருவீங்க போலருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகார்ல வந்தா காம்பவுண்ட்டுக்குள்ள பார்க் பண்ண முடியுமா? ஆவடியிலருந்து டூவீலர்ல வர முடியாது. அதனாலதான்...
பார்க்கிங் செய்ய நிறைய இடம் இருக்கிறது, தாராளமாக எடுத்து வரலாம்
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி காவேரிகணேஷ்
DeleteArumaiyana unavu vagaikal
ReplyDelete