சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, December 8, 2011

கடுப்பாகி போன பேருந்து பயணம் - சென்னையிலிருந்து தஞ்சை ஜில்லா வரை.


அன்பார்ந்த வலைப்பூ ரசிகர்களுக்கு,

மிக நெருங்கிய சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்காக நானும் என் மனைவியும் சனியன்று சென்னையிலிருந்து புறப்பட்டு திருவாரூர் சென்று, அங்கிருந்து எனது பெற்றோருடன் இணைந்து மன்னார்குடி சென்று திருமணத்திலும், புதன் அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற வரவேற்பு மற்றும் கறிவிருந்தில் பங்கேற்று இன்று காலை தான் சென்னை வந்ததன் பயண கட்டுரை தான் இது. அனைத்து உணர்ச்சிகளும் கலந்த தொகுப்பு என்றும் வைத்துக் கொள்ளலாம். பயணத்திலும் விருந்திலும் பரபரப்பாக இருந்ததால் ஊரில் என்னால் பதிவிட முடியவில்லை.

சனியன்று சென்னையிலிருந்து திருவாரூர் செல்வதற்காக ஏற்கனவே டிராவல்ஸ்ஸில் (பெயர் வேண்டாம் தெரிந்தால் நாளைக்கு ஏண்டா பதிவில் டிராவல்ஸ்ஸின் பெயர் போட்டாய் என்று சொந்தக்கார பயலுவ சண்டைக்கு வருவானுங்க) போன் மூலம் புக் செய்திருந்தேன். ஆனால் அந்த சமயம் போன் அட்டெண்ட் செய்த அந்த நாதேரி சரக்கடித்திருந்ததால் என்னுடைய பெயரில் டிக்கெட் புக் செய்ய மறந்து விட்டிருந்தது. பின்னால் தான் அது எனக்கு தெரிய வந்தது.

இரவு 09.30 மணிக்கு பேருந்து என்பதால் நான் இரவு 09.15 மணிக்கு சென்று டிக்கெட் கேட்டேன். அப்போது தான் இவர்கள் என் பெயரில் டிக்கெட் புக் செய்யவேயில்லை என்று தெரிய வந்தது. மறுநாள் கல்யாண நாளாக இருந்ததினால் வேறெந்த தனியார் பேருந்திலும் டிக்கெட் கிடைக்கவில்லை. சிறிது நேரம் முயற்சித்து விட்டு பிறகு அரசுப் பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்து கிடைக்குதா என பார்க்கலாம் என்று அங்கு நடந்து சென்றோம். ஆட்டோக்காரரை கேட்டால் பாலம் வரை சென்று திரும்ப வேண்டியிருக்கும் அதனால் வர முடியாது என்று கூறி விட்டார் (நன்றி : கேரளாக்காரன்).

அரசுப் பேருந்து நிலையத்திற்கு இத்தனை லக்கேஜூடன் நடந்து சென்று பார்த்தால் ஒரு பேருந்திற்கு 200 பேர் என கூட்டம் அலைமோதுகிறது. சரி நேரடியாக திருவாரூருக்கு டிக்கெட் கிடைக்காது என்று முடிவு செய்து வேறெந்த வழியாகவும் ஊருக்குள் சென்று விடலாம் என்பதால் மயிலாடுதுறைக்கோ, கும்பகோணத்திற்கோ அல்லது நாகப்பட்டினத்திற்கோ பேருந்தில் சென்று விடலாம் என்று பார்த்தால் அந்தப்பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது, மணி வேறு 11.00 மேல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஒரு பேருந்து உள்நுழைந்தது. திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்து அது. அதில் டிக்கெட் கிடைத்தது. சரி 06.00 மணிக்கு தஞ்சாவூர் சென்றாலும் திருவாரூருக்கு 08.00 மணிக்கெல்லாம் சென்று விடலாம் என்று முடிவு செய்து ஏறி விட்டோம்.

மதுராந்தகம் சென்றதும் வண்டி பஞ்சர். ஒரு மணி நேரம் ஓட்டுனரும் நடத்துனரும் மிகவும் சிரமப்பட்டனர். ஏனென்றால் ஜாக்கி மிகவும் டைட்டாக இருந்ததாம். ஒரு வழியாக டயரை மாற்றி வண்டியை அங்கிருந்து எடுத்த போது மணி விடியற்காலை 03.00. விக்கிரவாண்டி தாண்டி வண்டி சென்று கொண்டிருந்த போது மறுபடியும் வண்டி நின்றது. 20 நிமிடங்களாக வண்டியை எடுக்கவில்லை, மணியாச்சே என்ன்வோ என்று இறங்கிப்பார்த்தால் மறுபக்கம் உள்ள டயரும் பஞ்சர். வண்டியில் ஸ்பேர் டயர் கிடையாது.

(தொடரும் ...)


ஆரூர் முனா செந்திலு

டிஸ்கி சுடச்சுட : கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்னான 200 ரன்களை கடந்து நாட்அவுட்டாக விளையாடிக்கொண்டிருக்கும் சேவக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


21 comments:

 1. அந்த தாடி வெச்ச படத்த முதல்ல தூக்கணும். அத பாத்தாலே கடுப்பாவுது.

  ReplyDelete
 2. Boss autokaaran... Change it to antokaarar please maathidunga no need of publish dis comment

  ReplyDelete
 3. அண்ணா நல்லா இருக்கு, அந்த சரக்கு அடிச்சிட்டு வாந்தி மேட்டர் வருதா ?????

  ReplyDelete
 4. என்னங்க ...அடிக்கடி சிரம படறீங்க போல.....

  ReplyDelete
 5. அண்ணாச்சி,
  இந்த மாதிரி மூணு பாராபோட்டு தொடரும் போட்டா எப்படி நாங்க மனுஷனாகுறது?

  ReplyDelete
 6. அண்ணாச்சி,
  இந்த மாதிரி மூணு பாராபோட்டு தொடரும் போட்டா எப்படி நாங்க மனுஷனாகுறது?

  ReplyDelete
 7. /// கக்கு - மாணிக்கம் said...

  அந்த தாடி வெச்ச படத்த முதல்ல தூக்கணும். அத பாத்தாலே கடுப்பாவுது. ///

  நாளைக்கு தூக்கிடுறேன்ணே

  ReplyDelete
 8. /// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

  Boss autokaaran... Change it to antokaarar please maathidunga no need of publish dis comment ///

  Ok vaa.

  ReplyDelete
 9. /// Ruthra said...

  அண்ணா நல்லா இருக்கு, அந்த சரக்கு அடிச்சிட்டு வாந்தி மேட்டர் வருதா ????? ///

  கண்டிப்பா அது இல்லாமலா, ஆனா அந்தளவுக்கு நடக்கலப்பா.

  ReplyDelete
 10. /// ரமேஷ் வைத்யா said...

  அண்ணாச்சி,
  இந்த மாதிரி மூணு பாராபோட்டு தொடரும் போட்டா எப்படி நாங்க மனுஷனாகுறது? ///


  இன்று முடியல அண்ணாச்சி, ரொம்ப களைப்பாக இருந்தது, அதுமட்டுமில்லாமல் RTO ஆபீஸில் வேலையிருந்ததால் நாளை விளக்கமாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 11. /// கோவை நேரம் said...

  என்னங்க ...அடிக்கடி சிரம படறீங்க போல.... ///

  அது என்னவோ நமக்கு அப்படித்தான் அமையுது

  ReplyDelete
 12. எதையுமே ப்ளான் பண்ணி செய்யலைன்னா இப்படித்தான் ஆகும் அண்ணே...

  ReplyDelete
 13. நன்றி கேரளாக்காரன்... அதை கேரளாக்காரர் என்று மாற்றவும்... இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்...

  ReplyDelete
 14. /// Philosophy Prabhakaran said...

  எதையுமே ப்ளான் பண்ணி செய்யலைன்னா இப்படித்தான் ஆகும் அண்ணே.. ///

  அதுனாலதான் பயணம் முழுவதும் எனக்கு பல்பு ஆனது.

  /// Philosophy Prabhakaran said...

  நன்றி கேரளாக்காரன்... அதை கேரளாக்காரர் என்று மாற்றவும்... இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்... ///

  நீர் நக்கல் திலகமய்யா, உம்மை அடித்துக் கொள்ள மற்றொருவர் பிறந்து தான் வரவேண்டும்

  ReplyDelete
 15. /// சி.பி.செந்தில்குமார் said...

  I EXPECT OSDHI VIMARSANAM FROM U S TER DAY. Y NOT RELEASE? ///  நேற்று ஊரிலிருந்து திரும்பி வர லேட்டாகி விட்டது. எனவே காலை 08.00 மணி சிறப்பு காட்சிக்கு செல்ல முடியவில்லை. மதியம் என்றால் நீங்கள் எழுதி விடுவீர்கள், எனக்கும் கேகே நகர் RTO அலுவலகத்தில் என் கார் RC புக் சம்பந்தமான பணியிருந்ததால் உங்கள் விமர்சனத்தை படித்து விட்டு செல்லலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் மிகவும் லேட் செய்து விட்டீர்கள். டபாங் வேறு பார்த்து விட்டேன். எனவே எழுதலைண்ணே.

  ReplyDelete
 16. நானும் இருமுறை இதைப் போல் அவஸ்தைப் பட்டதுண்டு.
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  இதையும் படிக்கலாமே:
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

  ReplyDelete
 17. கெட்ட அனுபவம்...

  ReplyDelete
 18. அருமை நடத்துங்கள்

  ReplyDelete
 19. என்ன அண்ணா சில நாட்களாக பதிவிடவில்லையா?

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...