சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, December 27, 2011

N S கிருஷ்ணனின் கடைசி நாள்...

தமிழகத்தின் கலைவாணர் என்றழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் ஏகப்பட்ட சொத்துகள் சம்பாதித்தவர் கடைசிகாலத்தில் அனைத்தையும் இழந்து படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப்படமான மதுரை வீரனில் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நடித்தனர். ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்த "யார் பையன்" படத்திலும் இந்த ஜோடி நடித்தது. ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் சிவாஜி கணேசன் , பானுமதி நடித் "அம்பிகாபதி" படத்தில் என்.எஸ்.கே. நடித்துக் கொண்டிருந்த நேரம்.

அப்போது (1957 ஆகஸ்டு) அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து, கலைவாணர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கலைவாணர் குணம் அடைந்து வருவதாகவும், 10 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஆகஸ்டு 29_ந்தேதி அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆகஸ்டு 30ந்தேதி காலை 11.10 மணிக்கு, தமது 49வது வயதில் காலமானார். செய்தி அறிந்ததும், சென்னை நகரில் உள்ள சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்பட திரை உலக நட்சத்திரங்கள், என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். பலர் கண்ணீர் விட்டு அழுதனர். வாழ்விலும், தாழ்விலும் கலைவாணரின் இணை பிரியாத நண்பராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்று கதறினார்.

மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஐ.ஜி. ஆபீஸ் அருகில் உள்ள மயானத்தில் உடல் தகனம் நடந்தது. "சிதை"க்கு கிருஷ்ணனின் மூத்த மகன் என்.எஸ்.கே.ராஜா தீ மூட்டினார். நாகையா தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, தியாகராஜ பாகவதர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், கண்ணதாசன் உள்பட 21 பேர் பேசினார்கள்.

எம்.ஜி.ஆர். பேச எழுந்தார். துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். பேச முடியாமல் மேடையை விட்டு இறங்கிவிட்டார். என்.எஸ்.கே. மரணத்துக்கு பிறகு, "அம்பிகாபதி" வெளிவந்தது. படத்தில், அவர் இறந்துவிடுவதாக கதையை முடித்து, அவருக்கு சிலை வைக்கப்படுவதாகக் காட்டினார்கள். கலைவாணர் மரணத்தால், தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

தமிழ் நடிகர், நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான். வருமானத்தில் பெரும் பகுதியை தர்மம் செய்வதற்கே செலவிட்டார். உதவி தேடி வருகிறவர்களை வெறும் கையுடன் அனுப்பமாட்டார்.

பணம் இல்லாத போது, வீட்டில் உள்ள வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுத்து இருக்கிறார். கலைவாணர் மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் நடித்தார். பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் 1974ம் ஆண்டு மே 23ந்தேதி காலமானார்.

ஆரூர் முனா செந்திலு

9 comments:

 1. nice article. keep it up man.

  ReplyDelete
 2. லே அவுட் மாத்தி இருக்கீங்க, ஓக்கே, ஆனா ஓட்டுப்பட்டை எதையும் காணோமே?

  ReplyDelete
 3. /// சி.பி.செந்தில்குமார் said...

  லே அவுட் மாத்தி இருக்கீங்க, ஓக்கே, ஆனா ஓட்டுப்பட்டை எதையும் காணோமே? ///
  டெம்ப்ளேட் மாத்திப் பார்த்தேன், நல்லாயில்லை பழையபடி வந்துட்டேன்ணே.

  ReplyDelete
 4. Ok...naan migavum manithanin
  seithi enbathaal
  vanakkathudan
  selkiren....

  ReplyDelete
 5. சிரிக்க,சிந்திக்க வைத்த மனிதர்.

  ReplyDelete
 6. விகடன் பொக்கிஷம் படிச்சா மாதிரி இருந்துச்சுங்க

  ReplyDelete
 7. ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றி தெரியாத பல தகவல்கள். அவருடைய பாடல்களை என் கணினியில் அடிக்கடி கேட்கும் அன்பர்களின் நானும் ஒருவன். நன்றி சார்!

  ReplyDelete
 8. சிந்திக்கவைக்கவும்...சிரிக்கவும்...வைத்த மாபெரும் கலைஞன் அவருடைய கடைசி நாட்களை குறிப்பிட்டு நினைவலைகளை மீட்டிவிட்டீர்கள்...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...