சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, December 31, 2011

ஆரூர் முனா செந்திலின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வலைப்பூ வாசிகளுக்கு வணக்கம்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வருடத்தின் கடைசி நாளான இன்று பதிவெழுதுகிறேன் என்று படிப்பவர்களின் கழுத்தை அறுக்க வேண்டாம் என்று நினைத்து எந்த ஒரு கட்டுரையையும் நான் எழுதப் போவதில்லை. இந்த வருடம் எனக்கு எப்படி சென்றது என்று பார்க்கும் போது 2009 மற்றும் 2010 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிக நல்ல விஷயங்களாகவே நடந்துள்ளது. பதிவெழுத துவங்கியதும், அதனால் புதிய நண்பர்கள் கிடைத்ததும் இந்த ஆண்டு தான். ரயில்வே பணிக்காக முதல் முறையாக தேர்வெழுதியதும் தேர்வில் வெற்றி பெற்று பணிஆணை கிடைக்கப்பெற்றதும் இந்த ஆண்டு தான். மூன்று வருடங்களுக்கு முன்பு சில வருத்தமான காரியங்களால் சென்னையை விட்டு செல்ல நேர்ந்தது, ஆனால் அதிலிருந்து மீண்டு மறுபடியும் சென்னைக்கு வந்தது இந்த ஆண்டு தான். இந்த நல்ல துவக்கம் இந்த ஆண்டும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.