சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, December 9, 2011

விஜய்யின் அடுத்த படமான துப்பாக்கி படப்பிடிப்பு துவங்கியது

விஜயின் அடுத்தபடமான துப்பாக்கியில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.விஜய் நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரிக்கிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளில் படத்தின் விளம்பரங்கள் பேப்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் படத்தை பிரபலப்படுத்த துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.ஏழாம் அறிவு படத்தின் அதிகாரபூர்வமான விளம்பரம் வெளிவரும் முன்பே படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதனால், இப்படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாவதை விரும்பவில்லையாம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

*******

2012ம் ஆண்டில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தமிழ் படங்கள் சில வெளியாக இருக்கின்றன.

எப்பொழுதும் இல்லாத வகையில் வரும் ஆண்டு ரஜினி - 'கோச்சடையான்', கமல் - 'விஸ்வரூபம்', விஜய் - 'நண்பன்', அஜீத் - 'பில்லா 2', சூர்யா - 'மாற்றான்', விக்ரம் - ' தாண்டவம்',சிம்பு - ' வேட்டை மன்னன்', தனுஷ் - ' 3 ', ஆர்யா, மாதவன் - ' வேட்டை ' என அனைத்து படங்களும் வெளிவருகின்றன.

********


விஜய் துப்பாக்கி படத்திற்கு பிறகு யோகன் - அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கடுத்த படமாக மதராஸபட்டிணம் இயக்குனர் விஜய்யுடன் இணையும் படம் உறுதியாகி உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறார் பிரபல பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் முதல் விஜய் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆரூர் முனா செந்திலு


2 comments:

  1. வீரனாக வந்து மனுஷனாகிட்டோம்...

    அப்படியே நீங்களும் உங்கள் பதிவை http://www.hotlinksin.com ல் இணைத்தீங்கன்னா இன்னும் நிறைய வீரர்கள் வந்து மனிதர்களாகி போவார்கள் என்பதில் சந்தேகமில்லை...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...