சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, December 17, 2011

கடுப்பாகி போன பேருந்து பயணம் - இறுதி பாகம்

கல்யாணம் முடிந்து புதுமண தம்பதிகள் மாப்பிள்ளை வீட்டுக்கு பாலும் பழமும் சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயத்திற்காக தம்பிக்கோட்டையில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றனர். உடன் சொந்தக்காரர்கள் குழுவும் சென்றோம். அங்கு சென்றதும் மாப்பிள்ளையின் சகோதரர் குடிகார குழுவுக்கு தனியாக சமிஞ்சை கொடுத்தார். நாங்கள் நால்வர் (நான், என் அத்தை மகன் சதீஷ், சித்தப்பா நீலா, தூரத்து உறவினரும் நண்பருமான சரவணன்) நைசாக நழுவி பின்புறமுள்ள தோப்பிற்கு சென்றோம். அங்கு மாப்பிள்ளையின் சகோதரர் கையில் ஐந்து கலயத்துடன் நின்றிருந்தார். அருகில் சென்று பார்த்தால் அனைத்திலும் பனங்கள். அதனை வாங்கி சுவைத்தால் அடடே என்னே அருமை. பனங்கள் உடன் சைடிஷ்ஷாக திருக்கை கருவாடு வறுவல். அன்றைக்கு சொர்க்கம் அங்கு தான் இருந்தது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு கள் அதுவும் சுண்ணாம்போ, மாத்திரையோ சேர்க்காத சுத்தமான பனங்கள். அரை மணிநேரம் அனைத்தையும் முடித்த பிறகு, ஆஹா அந்த அனுபவத்தை சொல்ல முடியாது, நீங்கள் அனுபவிக்கனும். சம்பிரதாய விழா முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம். மன்னார்குடியில் உள்ள மணப்பெண் வீட்டிற்கு வந்தோம்.

அன்று இரவு அந்த வீட்டில் முதல் இரவுக்கான ஏற்பாடுகள் நடந்தது. வீட்டில் அதிகளவில் வாண்டுகள் இருந்ததாலும், அவர்கள் வேண்டுமென்றே மணப்பெண்ணையும் மாப்பிள்ளையும் கலாய்த்துக் கொண்டிருந்த காரணத்தால் பெரிய அத்தான் அவர்கள் அனைவரையும் காரில் அள்ளிப்போட்டுக் கொண்டு திருவாரூருக்கு சென்று சினிமா பார்த்து வரும்படி கூறினார். அனைவரையும் அழைத்துக் கொண்டு நால்வர் குழு கிளம்பினோம். திருவாரூர் நடேஷ் தியேட்டருக்கு வந்து டிக்கெட் வாங்கி டிரைவருடன் நிற்கச்சொல்லி விட்டு நாங்கள் கிளம்பினோம். மணி அப்போதே 09.45. எனவே சரக்கை வாங்கி அரை லிட்டர் பெப்ஸியில் ஒரு ஆப் வீதம் கலந்து கொண்டு தியேட்டருக்குள் எடுத்துச் சென்றோம்.

படம் துவங்கியதும் நாங்கள் ஆரம்பிக்க, இந்த சின்னப்பசங்க இருக்கானுங்களே எல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல ஐந்து நிமிடத்திலேயே கண்டுபிடித்து விட்டார்கள். நாங்கள் மிக்ஸ் செய்து சரக்கடித்து கொண்டிருப்பதை. அவனுங்க வீட்டில் சொல்லி விடுவேன் என்று பயமுறுத்தியதால் அந்த பசங்களுக்கு ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து ஏதேனும் திங்க வாங்கிக்கங்கடா என்று தான் சொன்னேன். தியேட்டரில் உள்ள அனைத்து திண்பன்டங்களையும் வைத்துக் கொண்டு தின்றார்கள். ஆனாலும் ஏற்கனவே நான்கு முறை தியேட்டரிலேயே பார்த்தும் எனக்கு கொஞ்சமும் அலுக்காத படம் என்பதால் போராளி ஐந்தாவது முறையாக அங்கு அரங்கேற்றமானது. படம் முடிந்ததும் திரும்பவும் மன்னார்குடி வந்து பசங்களை வீட்டில் இறக்கி விட்டு நால்வர் குழு அருகில் உள்ள மேலவாசலுக்கு அத்தை வீட்டில் உறங்க சென்றோம். என் மனைவி மற்றும் பெற்றோர் மன்னார்குடியிலேயே தங்கி விட்டனர்.

அங்கிருந்து செல்லும் வழியில் சரக்கு போதவில்லை என்பதால் மீண்டும் பேருந்து நிலையம் அருகில் வந்தோம். சதீஷ் அங்கு ஹோட்டல் வைத்திருப்பதால் அவனுக்கு ஏரியா அத்துப்படி. எங்களை அங்கேயே நிற்கச்சொல்லி விட்டு அவர் காரில் சென்று 10 நிமிடம் சென்று வந்தான். கையில் முழு நெப்போலியன் சிரித்தார். பிறகு மேலவாசலுக்கு சென்று நெப்போலியனை கொன்று விட்டு படுத்தோம்.

விடிந்ததும் எழுந்து மன்னார்குடி வந்து என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தேன். மறுநாள் பட்டுக்கோட்டையில் மாப்பிள்ளை வீட்டாரின் சார்பில் கறிவிருந்து இருந்தது. மறுநாள் என் குடும்பத்துடன் மன்னார்குடி சென்று மனைவியையும் பெற்றோரையும் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பெரிய குழுவுடன் இணைத்துக் விட்டு நான் நால்வருடன் விலகினேன். பிறகென்ன வழக்கம் போல் கிளம்பும் போது VSOபிரகாஷை கொன்று செல்லும் வழியில் வடசேரியில் அதே நண்பர் கிடைக்காததால் நெப்போலியனை கொன்று பட்டுக்கோட்டை சென்றோம். அங்கு அருமையான கறிவிருந்து நடந்து கொண்டிருந்தது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் குருமா, நண்டு பிரட்டல் முட்டை மசாலா. ஆஹா. ஏற்கனவே இருவரை கொன்றதால் சாப்பாடு அருமையாக இருந்தது. விருந்தை முடித்து அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்று மீண்டும் திருவாரூர் வந்து அன்றிரவே கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.

என்ன தான் நாம் பிழைப்புக்காக வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்தாலும் இதுபோன்ற விஷேசங்களுக்காக ஒன்று கூடும் போது தான் தெரிகிறது. உண்மையான மகிழ்ச்சி என்பது உறவினர்களுடன் இருக்கும் போது தெரிகிறது. இது போன்ற மகிழ்ச்சிகள் தான் மனிதன் என்னும் மிருகத்தை மனிதனாக நடமாட உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு முன்பெல்லாம் நான் அநேக விஷேசங்களுக்கு செல்ல மாட்டேன். நான் வேலை பார்த்தது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம். அதன் பொது மேலாளார் எனக்கு தீபாவளி, பொங்கலுக்கு கூட விடுமுறை கொடுக்க மாட்டார். என் பெற்றோர் மட்டும் செல்வர். இப்பொழுது குடும்பஸ்தன் என்பதால் அனைத்து குடும்ப விஷேசங்களுக்கும் சென்றாக வேண்டிய கட்டாயம். ரொம்ப நெருக்கமாக இல்லாமல் சிறிது இடைவெளி விட்டு சந்திப்பதனால் கூட உறவினர்களுடன் நெருக்கம் அதிகமாக காரணமாக இருக்கலாம்.

நண்பர்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சி அது வேறு விதமாக இருக்கும். அது பாதுகாப்பில்லாதது. வண்டியை வேகமாக ஒட்டத்தூண்டும். ஆற்றில் டைவ் அடிக்கும் போதும். உள்நீச்சல் அடிக்கும் போதும் குடித்து விட்டு கலாட்டா செய்யும் போதும் பிறகு யோசித்து பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உறவினர்களுடன் இருக்கும் போது வரும் மகிழ்ச்சி பாதுகாப்பானது. இதுக்கு மேல் சொன்னால் எனக்கே நெஞ்ச நக்குற மாதிரி இருக்கு, எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி

ஆரூர் முனா செந்திலு


7 comments:

 1. Ennayavum unga sonthakkaarana yeththukkonga thala. Virunthu pattaya kelappudhu.

  ReplyDelete
 2. கடுப்பாகி போன பேருந்து பயணம் - இறுதி பாகம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கு பாஸ்..

  என்ன ரொம்ப அவசரத்துல.. இல்ல மப்புல எழுதினிங்களா?( சும்மா தமாசு கோவம் கூடாது)

  //எங்களை அங்கேயே நிற்கச்சொல்லி விட்டு அவர் காரில் சென்று 10 நிமிடம் சென்று வந்தான்// இந்த மாதிரி அங்காங்கே களைகள் இருக்கு..

  ReplyDelete
 3. படித்தேன். ரசித்தேன்.
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  என் வலையில்:
  "நீங்க மரமாக போறீங்க..."

  ReplyDelete
 4. குடிமகன் said...
  /எங்களை அங்கேயே நிற்கச்சொல்லி விட்டு அவர் காரில் சென்று 10 நிமிடம் சென்று வந்தான்/

  நன்றி குடிமகன், அவன் சென்று 10 நிமிடம் கழித்து வந்தான். என்று வந்திருக்க வேண்டும் ஆனால் அன்று ஈரோடு பதிவர் சந்திப்புக்கு கிளம்பி கொண்டிருந்த அவசரத்தில் தட்டச்சு செய்தது, அதனால் தான் பிழை.

  ReplyDelete
 5. /// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

  Ennayavum unga sonthakkaarana yeththukkonga thala. Virunthu pattaya kelappudhu. ///

  அடுத்த கல்யாணத்துல கண்டிப்பா நீதான் சீப் கெஸ்ட், போதுமா

  ReplyDelete
 6. moda kudikarara neenga...?
  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...