சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, March 21, 2012

பரோட்டா மாமாவும் புட் பிளாசாவும்...

சாதனையாளர்கள் என்றால் நாட்டின் பொருளாதரத்தை அசைத்துப் பார்த்தவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமில்லை, எடுத்துக் கொண்ட தொழிலை சாதாரண நிலையிலிருந்து உயரத்திற்கு கொண்டு சென்று அதன் தாக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் "இருந்தும் இல்லாமல் இரு" என்ற கொள்கைக்கு ஏற்ப வாழ்பவர்களும் தான்.



அந்த வழியில் மன்னார்குடி என்ற சிறு நகரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பரோட்டா மாமா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் அவரின் பெயர் சதீஸ், என்னுடைய அத்தைப் பையன். இவரைப் பற்றி ஏகப்பட்ட வில்லங்க விஷயங்களை போட்டு வாரிய பதிவுகளை மன்னார்குடியில் நிறைய பேர் படித்து அவரிடமே அந்த பதிவுகளைப் பற்றி கிண்டலடித்து விட்டனர். அவர் என் நல்ல விஷயங்களை எழுத மாட்டியா என்று அலுத்துக் கொண்டதால் அவருடைய நிறை பக்கத்தை இன்று பார்க்கப் போகிறோம். ஆனால் இந்த ஒரு பதிவு மட்டுமே நிறை பக்கத்தை கொண்டிருக்கும் மற்றபடி அவரது ரகசியங்கள் அடங்கிய பதிவுகள் இன்னும் பல வர இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சதீஸின் சிறு வயதிலேயே அவருடயை அம்மா ரத்தப்புற்று நோயில் இறந்து விட்டதால் அவருக்கு 21 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டனர். பிரதிஷா என்ற பெண் குழந்தையும் பிறந்து விட்டது. DHMCT (Diploma in Hotel Management & Catering Technology) முடித்த அவர் வேலைக்காக துபாய்க்கு சென்று சில மாதங்களிலேயே குடும்பத்தை பிரிந்திருக்க முடியாமல் திரும்பி வந்து விட்டார்.

இங்கு வந்து மன்னார்குடி பேருந்து நிலையத்தின் எதிரில் 5 பார்ட்னர்களுடன் சேர்ந்து புட் பிளாசா என்ற உணவகத்தை துவக்கினார். சில மாதங்களில் மற்ற பார்ட்னர்களின் பங்கினை அவர்களுக்கு கொடுத்து விட்டு தானே முழு ஓனரானார். அன்றிலிருந்து இன்று அவரை அயராது உழைக்கிறார். உணவகம் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் இருப்பதால் நன்றாக போகிறது.

அடுத்ததாக TATA ACE வண்டி ஒன்று வங்கிக்கடனில் வாங்கினார். அதனை ஒழுங்காக ஒட்டி முழு கடனையும் அடைத்து விட்டதால் அதே வங்கியில் மீண்டும் லோன் எடுத்து Tavera Chevrolet வண்டி ஒன்றும் எடுத்து டிராவல்ஸ் ஒன்றை துவக்கி அதனையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கிராம கவுன்சிலருக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் களப்பணி செய்து மக்களிடையே நல்லப் பெயரை பெற்று 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்று ஊராட்சி மன்ற துணைத்தலைவரானார்.

இன்றும் தான் பெரிய ஆள் என்ற நினைப்பில்லாமல் ஹோட்டலில் மாஸ்டர் வரவில்லையென்றால் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் எல்லாம் அவர் தான் போடுகிறார். டிரைவர் வரவில்லையென்றால் பல நாட்கள் கண் விழித்து வண்டி ஒட்டுகிறார். இன்று வரை பத்து பைசா கையூட்டு வாங்காமல் ஊராட்சி மக்களுக்கு என்ன தேவையென்றாலும் முன் நின்று செய்கிறார்.

கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் மன்னார்குடியில் நல்ல தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் வருவார் என்பதில் சந்தேகமில்லை. என் மச்சான் என்பதால் பல முறை அவரை கலாய்த்து பதிவுகள் போட்டுள்ளேன். அதற்காக கோவப்பட்டதும் இல்லை. சிரித்துக் கொண்டே ஏன்டா நான் தான் கிடைத்தேனா என்று சொல்லிச் செல்வார்.

உயரம் என்பது பத்தாவது மாடியில் மட்டும் இல்லை, முதல் செங்கலில் இருந்தே அது துவங்குகிறது என்பதை அவரைப் போல் நாமும் புரிந்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

டிஸ்கி 1 : சதீஸ் அவர்களே இந்த ஒரு பதிவு மட்டும் உங்களைப் பற்றி ஒழுங்காக வரும் என்பதையும் மீண்டும் தாங்கள் கலாய்க்கப்படுவீர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(இது நாய் நக்ஸ் இல்லீங்க)

டிஸ்கி 2 (சென்னைப் பதிவர்களுக்கு மட்டும்) : நம்ம நாய் நக்ஸ் நக்கீரன் அவர்கள் வரும் வெள்ளியன்று சென்னை வருவதாக இருக்கிறார். சென்னையில் உள்ள பதிவர்கள் எல்லோரும் வியாழன் இரவே எதாவது பஸ் பிடித்து ஆந்திரா அல்லது கேரளா பக்கம் சென்று விடுமாறோ அல்லது வெள்ளி மட்டும் தங்களது அலைபேசியை அணைத்து வைத்து விடுமாறோ கேட்டுக் கொள்ளப்படுகிறது. இல்லையென்றால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. தெரியாத்தனமாக நான் மாட்டிக் கொண்டேன். மேற்கொண்டு கேபிள் அண்ணனும் மாட்டிக் கொண்டதாக கேள்விப்பட்டேன். மற்றவர்களாவது தப்பிக்கட்டுமே என்று தான் இதனை வெளி்ப்படையாக அறிவிக்கிறேன். ஹி ஹி ஹி.

ஆரூர் மூனா செந்தில்

17 comments:

  1. /// உயரம் என்பது பத்தாவது மாடியில் மட்டும் இல்லை, முதல் செங்கலில் இருந்தே அது துவங்குகிறது என்பதை அவரைப் போல் நாமும் புரிந்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம். ///

    விளையாட்டா ஆரம்பிச்சி சீரியஸான விஷயத்தை மிக சாதாரணமாக சொல்லிட்டீங்க அண்ணா.

    ReplyDelete
  2. /// தஞ்சை குமணன் said...

    விளையாட்டா ஆரம்பிச்சி சீரியஸான விஷயத்தை மிக சாதாரணமாக சொல்லிட்டீங்க அண்ணா ///

    நன்றி குமணன்

    ReplyDelete
  3. /// Kovai Neram said...

    ஒரு விளம்பரம்...... ///

    நம்ம மச்சானுக்கு நாமளே சாமரம் வீசாட்டி எப்படி ஜீவா

    ReplyDelete
  4. Yowwwwwwwwwwwww....

    LOL-AA...??????????

    Nerula vqrqndi.....

    ReplyDelete
  5. நாய் நக்ஸ் வருகிறதை கேள்விபட்ட சிவா மாறுவேடத்தில் அலைவதாக வதந்தி....ஹஹ!

    ReplyDelete
  6. /// NAAI-NAKKS said...

    Yowwwwwwwwwwwww....

    LOL-AA...??????????

    Nerula vqrqndi..... ///

    நேர்ல வாங்க தலைவரே, நான் விசாரிச்ச வரைக்கும் முக்கால்வாசிப்பேர் நேத்து நைட்டே சென்னைய விட்டு எஸ்ஸாகிட்டாங்களாம்.

    ReplyDelete
  7. /// வீடு K.S.சுரேஸ்குமார் said...

    நாய் நக்ஸ் வருகிறதை கேள்விபட்ட சிவா மாறுவேடத்தில் அலைவதாக வதந்தி....ஹஹ! ///

    ஆமாம் சுரேஷ், கண்ணாடிய கழட்டிட்டு ஹேர்ஸ்டைல் மாத்திட்டு திருப்பதிக்கு பஸ் ஏறிட்டாராம்.

    ReplyDelete
  8. பரோட்டா மாமாவின் சேவைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ஆரூர் மூனா செந்தில் said...
    /// வீடு K.S.சுரேஸ்குமார் said...

    நாய் நக்ஸ் வருகிறதை கேள்விபட்ட சிவா மாறுவேடத்தில் அலைவதாக வதந்தி....ஹஹ! ///

    ஆமாம் சுரேஷ், கண்ணாடிய கழட்டிட்டு ஹேர்ஸ்டைல் மாத்திட்டு திருப்பதிக்கு பஸ் ஏறிட்டாராம்.//

    இங்க சிவகுமார்னு ஒரு மானஸ்தன் இருந்தானே...அவன் கெடைக்க மாட்டான். எட்றா ஓட்டம் சென்னைய விட்டு!!

    ReplyDelete
  10. // தெரியாத்தனமாக நான் மாட்டிக் கொண்டேன். மேற்கொண்டு கேபிள் அண்ணனும் மாட்டிக் கொண்டதாக கேள்விப்பட்டேன். //

    நாளைக்கி உங்களுக்கு இருக்கு தீபாவளி மிஸ்டர் செந்தில். கேபிள்..... ஆண்டவன் அவரை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவாராக!!

    ReplyDelete
  11. நக்கீரன் சென்னை விஜயம். சிதறி ஓடிய பிலாசபியும், செல்வினும்..பரபரப்பு ரிப்போர்ட் விரைவில்!!

    ReplyDelete
  12. பரோட்டா மாமவுக்கு வாழ்த்துக்கள்...

    நாய்நக்ஸ் சென்னையில் ரெண்டு நாய் பரிசாக அளிக்க வேண்டுகிறேன்...

    ReplyDelete
  13. /// ! சிவகுமார் ! said...

    பரோட்டா மாமாவின் சேவைக்கு வாழ்த்துகள். ///

    நன்றி சிவா

    ReplyDelete
  14. /// ! சிவகுமார் ! said...

    நக்கீரன் சென்னை விஜயம். சிதறி ஓடிய பிலாசபியும், செல்வினும்..பரபரப்பு ரிப்போர்ட் விரைவில்!! ///

    நாளை மறுநாள் இதுதான் பரபரப்பான பதிவோ.

    ReplyDelete
  15. /// சங்கவி said...

    பரோட்டா மாமவுக்கு வாழ்த்துக்கள்...

    நாய்நக்ஸ் சென்னையில் ரெண்டு நாய் பரிசாக அளிக்க வேண்டுகிறேன்... ///

    நன்றி சதீஷ்.

    நாளைக்கு நைட்டு தான் தெரியும் அவர் புதுசா நாய் வாங்குறாரா, இல்லைனா என் கழுத்திலேயே செயினை கட்டி இழுத்துட்டு போறாரான்னு.

    ReplyDelete
  16. செந்தில் சார்... தங்கள் மாமா தொலைபேசி என்ன தர முடியுமா. மே 1 2 நான் மன்னார்குடி செல்கிறேன். எனது குலதெய்வம் கோயில் மற்றும் வேறு சில சுற்றுலா செல்லவும் எனக்கு ஒரு நல்ல AC வண்டி தேவை. எனது குலதெய்வம் கோயில் இருபது ஒரு குக்க்ரமம். எனது ஈமெயில் அட்ரஸ் வெங்கி.பாலா@ஜிமெயில்.கம( venki.bala@gmail.com)

    நன்றி,
    வெங்கடேஷ்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...