சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, April 20, 2012

எந்த கடையில அரிசி வாங்குற

"எந்த கடையில அரிசி வாங்குற" இந்த வார்த்தை யாருக்கு அதிக பரிட்சயமாகியிருக்கோ தெரியாது ஆனால் எனக்கு அதிக பரிட்சயமான வார்த்தை இது தான். பிறந்ததிலிருந்தே குண்டாக இருப்பதனால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த ஒரு வாக்கியத்தில் அடைத்து விடலாம்.

மற்றவர்களை பட்டப்பெயர் வைத்தே அழைக்கும் தஞ்சை ஜில்லாவில் பிறந்த எனக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே பள்ளியில் நண்பர்களால் சூட்டப்பட்ட பட்டப்பெயர் "தடியன்". என்னை பெயர் சொல்லி அழைத்தவர்களை விட தடியன் என்று சொல்லி அழைத்தவர்கள் தான் அதிகம். ஆனால் நான் அந்த அளவுக்கு குண்டு கிடையாது என்பது அந்த காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை தற்போது பார்த்தால் தெரிகிறது.

சிறு வயதிலிருந்தே பெற்றோர்களால் அதிகம் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகி விட்டேன். மற்றக் குழந்தைகளை எல்லாம் பெற்றோர்கள் சாப்பிட வைக்க மிகுந்த பிரயத்தனப்பட்டு கொண்டிருக்கும் போது நான் மட்டும் அசைவ உணவுகளை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பேனாம். அப்புறம் எப்படி உடம்பு ஏறாமல் இருக்கும்.

ஆனால் அந்தளவுக்கு சாப்பிட்டு வலுவாக இருந்ததனால் தான் என்னால் உற்சாகமாக விளையாடவும் ஸ்டாமினா குறையாமல் வேலை செய்யவும் முடிந்தது. மற்ற நண்பர்கள் திருவாரூர் கமலாலய குளத்தை இரண்டு சுற்று மட்டுமே ஒடிக் கடக்க முடிந்த போது என்னால் ஆறு சுற்றுகள் ஒடிக் கடக்க முடிந்தது.

நான் பலசாலி என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்த போது 16 வயது வந்து சைட் அடிக்க தொடங்கிய போது தான் என்னுடைய நிறையாக நான் நினைத்து கொண்டிருந்தது குறையாக மாறிப்போனது. ஏதாவது ஒரு பொண்ணை நான் பார்த்தால், நண்பர்களே "நீ குண்டாக இருக்கிறாய் எனவே அவள் உன்னைப் பார்க்க மாட்டாள்" என்று சொல்லி சொல்லி என் மனது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் நான் குண்டு எனவே விலகிப் போ என்று சொல்ல ஆரம்பித்தது.

என்னை ஒரு பெண் மிகவும் விரும்பி காதலித்து இலைமறை காயாக என்னிடம் சொல்லியும் நான் மரமண்டையாக இருந்ததால் காதல் கை கழுவிப் போனது பின்னாளில் தெரிய வந்த போது வருத்தமாகத்தான் இருந்தது. அது போல் என் முறைப் பெண்ணொருத்தி என்னை விரும்பி நானாக வந்து காதலை சொல்லும் வரை காத்திருப்பேன் என்று இருந்திருக்கிறாள். அதுவும் என் தயக்கம் காரணமாக பறிபோனது.

பள்ளி முடிந்து கல்லூரிக்கு படிக்க வந்த போது எனக்கு வைக்கப்பட்ட பெயர் பெரியப்பா. எல்லாப் பெண்களும் என்னை பெரியப்பா என்று கூப்பிடும் போது எந்தப் பெண்ணை நான் காதலிக்க முடியும்.அப்படியும் ஒரு பெண்ணின் மீது எனக்கு ஈர்ப்பு வந்து சில காலம் தயக்கத்தி்ல் இருந்து பிறகு சொல்லலாம் என்று நினைக்கும் முன்பே வேறொருவன் தட்டிக் கொண்டு சென்று விட்டான்.

காதலில் நான் குண்டாக இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஏகப்பட்ட பல்புகள் வாங்கியிருந்தாலும் என்னுடைய 27 வயதில் அழகினை முன்னிலைப்படுத்தாமல் நல்ல குணம் மற்றும் ஆளுமைத்திறன் காரணமாக என்னுடன் பணிபுரிந்த பெண்ணின் மீது காதல் வந்து அவரையே திருமணம் செய்து கொண்டது அனைத்து சொதப்பல்களுக்கு விடிவுகாலமாக அமைந்து விட்டது.

குண்டாக இருந்ததனால் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்திருந்தாலும் பதின் வயது சைட் அடிக்கும் சிரமங்களை மட்டும் தனிப்பதிவாக இடலாம் என்று தோன்றியதால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

பெற்றோர்களே இனியாவது குழந்தைகளுக்கு சாப்பாட்டை திணித்து திணித்து அவர்களுக்கு இதுதான் ஆரோக்கியம் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நான் குண்டு என்ற தாழ்வு மனப்பான்மையை குழந்தைகளுக்கு உண்டாக்காதீர்கள். பின்னாளில் உங்கள் குழந்தையும் ஒரு நாள் இது போல் உங்களைத் திட்டி பதிவெழுதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்


21 comments:

  1. /// NAAI-NAKKS said...

    :)
    :)
    :) ///

    யோவ் பெரிய மனுசா, நீங்க நினைக்கிறத எழுத்தால எழுதுமய்யா.

    ReplyDelete
  2. Good one,
    How is your dad doing and how is his health, u didnt update about that.

    ReplyDelete
  3. /// Pebble said...

    Good one,
    How is your dad doing and how is his health, u didnt update about that. ///

    அண்ணா உங்க பின்னூட்டத்திற்கு நன்றிண்ணா, அப்பாவை ஆபரதேசன் முடிஞ்சி தையல் பிரிச்சி வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டேன், இதற்கு மேல் என் தம்பியும் தம்பி மனைவியும் பார்த்துக் கொள்வார்கள். அம்மாவும் கூட இருக்கிறார். இனிமேல் எதிர்காலத்தில் அவருக்கு கான்சர் வராமல் பார்த்துக் கொள்வது தான் என் பொறுப்பு.

    ReplyDelete
  4. குண்டாய் இருப்பதால் கவலை யில்லை மண்டாய் இருப்பதுதான் கவலை!
    தங்கள் தந்தை யார் முழு குணம் பெற இறைவனை வேண்டுகிறேன் தாங்கள் நலமா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு...தடியன் , பெரியப்பா இப்படி எத்தனையோ பட்ட பெயர் வைத்து இருந்த உண்மையை சொன்னதுக்கு ...நீங்க தஞ்சை மாவட்டம் தானே..அதுதான் அங்கு அரிசிக்கு பஞ்சமில்லை .அதனால் தான் நீங்கள் குண்டாகி விட்டீர்கள்...
    பரவாயில்லை..நீங்கள் ஒரு கருப்பு பிரபு...ஹி..ஹி.. ஹி (கருப்பு எம்ஜியார் தான் இருக்கணுமா )

    ReplyDelete
  6. இப்போதெல்லாம் குண்டு, மண்டு என்றெல்லாம் பார்ப்பதில்லை.. அழகு, அறிவைவிட, நல்ல சம்பாத்தியம் இருக்கா என தெரிந்துகொண்டுதான் காதலிக்கவே ஆரம்பிக்கிறார்கள் என நினக்கிறேன்.. எனவே நீங்கள் கவலைப்படுவதைப் போல ஒன்றும் இக்காலத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. குழந்தைகளை குண்டாக வளர்க்க வேண்டாம் என நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது உங்கள் மனதில் ஏற்பட்ட தாக்கத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டுகிறது. பகிர்வினுக்கு நன்றி திரு மூனா செந்தில் அவர்களே..!!!

    ReplyDelete
  7. தமிழ் மணம் டிராபிக் ரேன்க் ஏன் இவ்ளோ அதிகமா காட்டுது. டாட் காம் மாறியதில் வந்த விளைவா?

    ReplyDelete
  8. //ஆரூர் மூனா செந்தில் said...
    /// NAAI-NAKKS said...

    :)
    :)
    :) ///

    யோவ் பெரிய மனுசா, நீங்க நினைக்கிறத எழுத்தால எழுதுமய்யா.//

    அடுத்த தபா அவர் சென்னைக்கு வரட்டும். மொபைல்ல ஸ்மைலி சிம்பலை டெலிட் பண்ணிருவோம்.

    ReplyDelete
  9. செந்தில் அப்பா நலமா?

    ReplyDelete
  10. இப்பவும் கேட்கறய்யா "எந்த கடையில சரக்கு வாங்குற..."

    ReplyDelete
  11. /// புலவர் சா இராமாநுசம் said...
    குண்டாய் இருப்பதால் கவலை யில்லை மண்டாய் இருப்பதுதான் கவலை!
    தங்கள் தந்தை யார் முழு குணம் பெற இறைவனை வேண்டுகிறேன் தாங்கள் நலமா!

    புலவர் சா இராமாநுசம் ///

    நன்றி அய்யா, அப்பாவுக்கு பூரணமாக குணமாகி விட்டது. நலமுடன் உள்ளார்.

    ReplyDelete
  12. /// கோவை நேரம் said...

    உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு...தடியன் , பெரியப்பா இப்படி எத்தனையோ பட்ட பெயர் வைத்து இருந்த உண்மையை சொன்னதுக்கு ...நீங்க தஞ்சை மாவட்டம் தானே..அதுதான் அங்கு அரிசிக்கு பஞ்சமில்லை .அதனால் தான் நீங்கள் குண்டாகி விட்டீர்கள்...
    பரவாயில்லை..நீங்கள் ஒரு கருப்பு பிரபு...ஹி..ஹி.. ஹி (கருப்பு எம்ஜியார் தான் இருக்கணுமா ) ///

    நான் கருப்புன்னு யாருங்க சொன்னது. நான் மாம்பழக்கலரு ஜீவா. ஹி ஹி ஹி.

    ReplyDelete
  13. /// palani vel said...

    இப்போதெல்லாம் குண்டு, மண்டு என்றெல்லாம் பார்ப்பதில்லை.. அழகு, அறிவைவிட, நல்ல சம்பாத்தியம் இருக்கா என தெரிந்துகொண்டுதான் காதலிக்கவே ஆரம்பிக்கிறார்கள் என நினக்கிறேன்.. எனவே நீங்கள் கவலைப்படுவதைப் போல ஒன்றும் இக்காலத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. குழந்தைகளை குண்டாக வளர்க்க வேண்டாம் என நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது உங்கள் மனதில் ஏற்பட்ட தாக்கத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டுகிறது. பகிர்வினுக்கு நன்றி திரு மூனா செந்தில் அவர்களே..!!! ///

    தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பழனிவேல் அவர்களே.

    ReplyDelete
  14. /// மோகன் குமார் said...

    தமிழ் மணம் டிராபிக் ரேன்க் ஏன் இவ்ளோ அதிகமா காட்டுது. டாட் காம் மாறியதில் வந்த விளைவா? ///

    ஆமாண்ணே.

    ReplyDelete
  15. /// ! சிவகுமார் ! said...

    /// NAAI-NAKKS said...

    :)
    :)
    :) ///

    யோவ் பெரிய மனுசா, நீங்க நினைக்கிறத எழுத்தால எழுதுமய்யா.//

    அடுத்த தபா அவர் சென்னைக்கு வரட்டும். மொபைல்ல ஸ்மைலி சிம்பலை டெலிட் பண்ணிருவோம். ///

    அதெல்லாம் பத்தாது சிவா. ரெண்டு கட்டை விரல் நகத்தையும் புடுங்கணும்.

    ReplyDelete
  16. /// வீடு சுரேஸ்குமார் said...

    செந்தில் அப்பா நலமா? ///

    நன்றி சுரேஷ். அப்பா பூரண நலத்துடன் உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளார்.

    ReplyDelete
  17. /// வீடு சுரேஸ்குமார் said...

    இப்பவும் கேட்கறய்யா "எந்த கடையில சரக்கு வாங்குற..." ///

    ஹி ஹி ஹி எப்பவுமே எந்த ஊருலயுமே டாஸ்மார்க்ல தான் வாங்குறேன்.

    ReplyDelete
  18. பாஸ்,
    ரொம்ப வெளிப்படையா பேசி இருக்கேங்க.... உங்களுக்கு மனசு வெள்ளை. உடம்பை பத்தி எல்லாம் ரொம்ப அல்லடிக்காதேங்க !!

    ReplyDelete
  19. /// ராஜ் said...

    பாஸ்,
    ரொம்ப வெளிப்படையா பேசி இருக்கேங்க.... உங்களுக்கு மனசு வெள்ளை. உடம்பை பத்தி எல்லாம் ரொம்ப அல்லடிக்காதேங்க !! ///

    நன்றி ராஜ்.

    ReplyDelete
  20. சேம் பீலிங்...ஹெஹெ!

    ReplyDelete
  21. /// விக்கியுலகம் said...

    சேம் பீலிங்...ஹெஹெ! ///

    வணக்கம் மாமா, ஊருக்கு போயாச்சா?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...