சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, April 2, 2012

மக்கள் இயக்குனர் சேரன் இறுதிப் பகுதிசேரனின் அடுத்தப்படமாக பாண்டவர் பூமி வந்தது. மிக அருமையான படம். ஆனால் தோல்விப்படம். படத்தின் மையக்கருத்து இன்றைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு மிகவும் தேவை. அதாவது ஒரு கிராமத்திலிருந்து நகரத்திற்கு வேலை தேடி வருபவர்கள் அவர்களது உழைக்கும் காலம் முடிந்ததும் மீண்டும் சொந்த ஊரில் குடியேற வேண்டும். நகரம் அடுத்த தலைமுறைக்கு வேலை தர தயாராக வேண்டும். வேலை பார்த்த காலங்களில் சம்பாதித்த பணத்தை வைத்து கடைசி காலங்களில் விவசாயத்தை மீண்டும் தொடர வேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, படம் ஓடவில்லை.

நான் இந்த படம் வந்த போதே முடிவு செய்து விட்டேன். என்னுடைய கடைசி காலம என்பது திருவாரூர் சுற்றியுள்ள ஏதோ ஒரு கிராமத்தில் விவசாயம் பார்த்து தான் கழியும் என்பதை. என்றைக்கு சென்னை போன்ற பெருநகரங்கள் இது போன்ற மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறதோ அப்பொழுது தான் கிராமங்களில் இருந்து புதிதாக பிழைப்புக்கு வருபவர்கள் சென்னையில் அவர்களது பணிக்காலம் வரை சென்னையில் கழிக்க முடியும். இல்லையென்றால் கூடிய விரைவில் சென்னையின் பரப்பளவு விரிந்து தெற்கே திண்டிவனம் வரையும் வடக்கே ஆந்திராவுக்குள்ளும் செல்லும் என்பது கண்கூடாக தெரிகிறது.

அடுத்தது தேசிய விருது பெற்ற படங்களான ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து. இவை பெரிய வெற்றி பெற்று அனைவராலும் அதிகளவில் விமர்சிக்கப்பட்டு விட்டதால் நாம் இதனை தவிர்த்து அடுத்த படமான மாயக்கண்ணாடிக்கு வருவோம். 2007ல் வெளி வந்தது. படத்தின் கருத்து சினிமாவுக்கோ, மற்ற தொழில்களுக்கோ முயற்சிக்கும் போது கையில் இருக்கும் வேலையை விடக்கூடாது என்பதும் எதைப் பற்றிய முழு அறிவு இல்லாமல் இறங்குவது ஆபத்து என்பதும் தான். ஆனால் அந்தப்படம் இப்பொழுது வெளிவந்த 3 ஐப் போல் எதிர் விளைவாகி படுதோல்வி அடைந்தது.

கடைசியாக இயக்கிய படமான பொக்கிஷம். 1970களில் நடந்த ஒரு காதல், அது சந்திக்கும் பிரச்சனைகள், அந்த காதலின் தோல்வி, கடைசி வரை காதலுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் கதாநாயகி, கண்முன்னே கொண்டு வந்த 1970 காலக்கட்டம் என எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் குறை என்னவென்றால் அது சேரனின் முற்றிய முகம் தான். வேறு நடிகர்கள் நடித்திருந்தால் படம் நன்றாக ஒடியிருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் சிக்கலான விஷயம் இந்து முஸ்லீம் காதல், அதுவும் 1970களில் நாகூர் போன்ற சிற்றூரில் எப்படியிருக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டிய படம் இது. ஆனால் அதுவும் நன்றாக போகவில்லை.

எது எப்படியிருந்தாலும் கமர்சியல் என்ற பெயரில் மற்ற பெரிய இயக்குனர்களைப் போல் கவர்ச்சியை வலிந்து திணிக்காமல், 100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு படத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் வைத்து தான் படமெடுக்கும் சேரனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஆரூர் மூனா செந்தில்

21 comments:

 1. சேரனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.ஆங் நானும் சொல்லிக்கிறேன்

  ReplyDelete
 2. //100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல்,// மாயக் கண்ணாடி ஓடியிருந்தால் அதையும் செய்திருப்பார் சேரன்.

  ReplyDelete
 3. அடுத்து என்னத்தே கண்ணையாவைப் பற்றி எழுதவும்....வரும் ஆனா வராது அப்படின்னா...காண்டாயிருவேன்..ஹிஹி

  ReplyDelete
 4. நன்றாக எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

  சேரனை பொருத்தவரை உங்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். அனைத்து படங்களையும் ரசித்து பார்த்தேன். தவமாய் தவமிருந்து மற்றும் பிரிவோம் சந்திப்போம் இரண்டும் நான் மிகவும் ரசித்தவை.

  ReplyDelete
 5. /// வீடு சுரேஸ்குமார் said...

  சேரனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.ஆங் நானும் சொல்லிக்கிறேன் ///

  வணக்கமுங்கோ சுரேசு.

  ReplyDelete
 6. /// அமர பாரதி said...

  //100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல்,// மாயக் கண்ணாடி ஓடியிருந்தால் அதையும் செய்திருப்பார் சேரன். ///

  படத்தை மறுமுறை நல்லா பாருங்க. அது மாதிரி செய்யக்கூடாதுன்னு தான் சொல்லியிருப்பார்.

  ReplyDelete
 7. /// வீடு சுரேஸ்குமார் said...

  அடுத்து என்னத்தே கண்ணையாவைப் பற்றி எழுதவும்....வரும் ஆனா வராது அப்படின்னா...காண்டாயிருவேன்..ஹிஹி ///

  நீங்க காண்டாமிருகம் ஆனா தான் எழுதுவேன். ஹி ஹி ஹி.

  ReplyDelete
 8. /// Karthikeyan said...

  நன்றாக எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

  சேரனை பொருத்தவரை உங்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். அனைத்து படங்களையும் ரசித்து பார்த்தேன். தவமாய் தவமிருந்து மற்றும் பிரிவோம் சந்திப்போம் இரண்டும் நான் மிகவும் ரசித்தவை. ///

  தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கார்த்திக்கேயன்.

  ReplyDelete
 9. என்னது....பாண்டவர் பூமி ஓட வில்லையா.....அதில் வரும் தோழா தோழா மற்றும்..அவரவர் வாழ்க்கையில் ...இந்த இரண்டு பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தவை...பரத் வாஜ் குரலில் இதை கேட்க ரொம்ப பிடிக்கும்...

  ReplyDelete
 10. /// கோவை நேரம் said...

  என்னது....பாண்டவர் பூமி ஓட வில்லையா.....அதில் வரும் தோழா தோழா மற்றும்..அவரவர் வாழ்க்கையில் ...இந்த இரண்டு பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தவை...பரத் வாஜ் குரலில் இதை கேட்க ரொம்ப பிடிக்கும்... ///

  படம் நன்றாக இருந்தது. பாடல்களும் தான். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை ஜீவா.

  ReplyDelete
 11. /// NAAI-NAKKS said...

  நல்ல தொகுப்பு.... ///

  யோவ் பெரிய மனுசா இது உங்க வாயிலேருந்து வருதுல்ல அதான் பெரிய விஷயம்.

  ReplyDelete
 12. //கவர்ச்சியை வலிந்து திணிக்காமல், 100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு படத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் //

  நான் சேரனை ரசிப்பதற்கான காரணத்தை அழகாக இந்த சொற்களில் அடக்கிவிட்டீர்கள். நன்றி

  ReplyDelete
 13. /// ஹாலிவுட்ரசிகன் said...

  //கவர்ச்சியை வலிந்து திணிக்காமல், 100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு படத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் //

  நான் சேரனை ரசிப்பதற்கான காரணத்தை அழகாக இந்த சொற்களில் அடக்கிவிட்டீர்கள். நன்றி ///

  நன்றி ஹாலிவுட்ரசிகன்

  ReplyDelete
 14. //மக்கள் இயக்குனர் சேரன் இறுதிப் பகுதி//

  மக்கள் இயக்குனர் சேரன் நிறைவுப் பகுதி - ன்னு போட்டு இருக்கலாம், தலைப்பைப் படிக்கும் போதே 'பக்' ன்னு இருக்கு, சேரனா போய் சேர்ந்துட்டாரா ? சின்ன வயசாச்சே ன்னு நினைக்க வைக்குது.

  ReplyDelete
 15. /// கோவி.கண்ணன் said...

  மக்கள் இயக்குனர் சேரன் நிறைவுப் பகுதி - ன்னு போட்டு இருக்கலாம், தலைப்பைப் படிக்கும் போதே 'பக்' ன்னு இருக்கு, சேரனா போய் சேர்ந்துட்டாரா ? சின்ன வயசாச்சே ன்னு நினைக்க வைக்குது. ///

  நன்றி கண்ணன், எனக்கும் தப்பு புரியுது. இனி வரும் காலங்களில் மாத்திக் கொள்கிறேன்.

  ReplyDelete
 16. மாப்ள நல்லா எழுதி இருக்கீர் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. /// VANJOOR said...

  அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள் ///

  ஏங்க பெரிய மனுசரே, உங்களுக்கு விளம்பரம் வேணும்னா உங்க பதிவோடு நிப்பாட்டிக்கங்க, என் பதிவுல போடுற வேலையை இத்தோட விட்டுறுங்க. எனக்கு பிடிக்கலை.

  ReplyDelete
 18. /// விக்கியுலகம் said...

  மாப்ள நல்லா எழுதி இருக்கீர் வாழ்த்துக்கள்! ///

  நன்றி மாமா.

  ReplyDelete
 19. நல்ல ரசனையோடு எழுதி உள்ளீர்கள் ! நன்றி நண்பரே !

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...