சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, May 24, 2012

மக்கள் நாயகன் ராமராஜன்

ராமராஜன். மிகச்சில வருடங்களே தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அந்த உச்சத்தை வைத்து ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தை பிடித்தவர். என்னுடைய 10லிருந்து 13 வயதுக்குள் அந்த காலக்கட்டம் அடங்கும். அப்பொழுது எல்லாம் திருவாரூரைப் போன்ற சிறு நகரங்களில் ரசிகர் மன்றங்கள் திறப்பது என்பது ரசிகர்களிடையே மிகப்பிரபலமான விஷயம். எங்க ஊரு பாட்டுக்காரன் வந்தவுடனேயே எங்கள் தெரு அண்ணன்கள் எல்லாம் ராமராஜனுக்கு ரசிகர் மன்றம் திறக்க முடிவெடுத்தார்கள். எனக்கும் ராமராஜனைப் பிடிக்கும் என்பதால் அந்த வயதிலேயே மன்றத்தில் சேர்ந்து விட்டேன். பேனர் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலைகளை செய்ததால் எனக்கு துணைச் செயலாளர் பதவியும் கொடுத்தார்கள்.

எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன் ரசிகர் மன்ற துணைச் செயலாளர், எப்படியிருக்கு என் பதவியின் பெயர். அதன் பிறகு வந்த ஒவ்வொரு படங்களும் எங்களுக்கு திருவிழா தான். படம் வெளியாவதற்கு முன் தினம் தியேட்டரில் பேனர் கட்டுவது ஊரில் உள்ள முக்கிய சுவர்களில் ரசிகர் மன்றத்தின் சார்பாக போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலையெல்லாம் எனக்கு தான். அவரது பிறந்த நாள் வந்தால் அன்றைய தினத்தின் இரவில் டி.வி, டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து ராமராஜனின் படங்களை வரிசையாக திரையிடுவது போன்ற கேளிக்கைகள் எல்லாம் வழக்கமாக நடக்கும். மனசுக்கேத்த மகாராசா படம் வந்த போது தியேட்டரை அதகளம் செய்து விட்டோம்.

கரகாட்டகாரன் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் போது தியேட்டருக்கு ராமராஜன் வந்தார். அதற்கென லாட்டரி கடைக்கு சென்று பழைய லாட்டரிகளை பண்டல் பண்டலாக வாங்கி வந்து அவற்றை பொறுமையாக சுக்கு நூறாக கிழித்து மேடைக்கு மேல் ஐந்து பெட்டிகள் அமைத்து அவற்றில் நிரப்பி பெட்டியின் அடிப்பகுதியில் சிறு திறப்பு ஏற்படுத்தி அவற்றை நூலுடன் இணைத்து நூலை இழுத்தால் பெட்டியிலிருந்து பேப்பர்கள் அவரின் மீது விழும் படி செய்தோம். விழா முடிந்தவுடன் அது போல் செய்தது யாரென விசாரித்து எங்கள் மன்றத்தினர் அனைவரையும் அழைத்து பாராட்டி விட்டு சென்றார். அப்பொழுது எடுத்த போட்டோ வெகு நாட்களுக்கு மன்றம் இருந்த தியாகுவின் வீட்டு வெளிவராந்தாவில் இருந்து பிறகு நண்பன் சாம்பாரங்கனின் வீட்டு பரணில் கிடந்து பிறகு எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ராமராஜனின் அனைத்து படங்களுக்கும் முதல் நாள் திரையரங்குக்கு சென்று பார்த்து இருக்கிறேன். அதற்காக வீட்டில் எங்கப்பாவிடம் பெல்டால் அடியும் வாங்கியும் இருக்கிறேன். ஆனால் அவர் மீதான ஆர்வம் குறையவேயில்லை. அவரின் எல்லா படங்களின் பாட்டு புத்தகங்களும் என்னிடம் இருந்தன. அத்தனை பாடல் வரிகளும் பாடியவர் பெயர் விவரங்களும் பாடலின் ராக விவரங்களும் எனக்கு மனப்பாடமாக இருந்தன. காலம் மாறத் தொடங்கியது.

ராமராஜனுக்கு படங்கள் தோல்வியடையத் தொடங்கின. புதிய நடிகர்கள் அப்பொழுது சினிமாவில் நுழையத் தொடங்கினர். மன்றம் சோர்வடைய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல மன்றமே கலைக்கப்பட்டது. பிறகு அதே ரசிகர் மன்ற குழு வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தனர். நமக்கு சாதாரண மன்றங்கள் எல்லாம் வேண்டாம், மாவட்டத் தலைமை அல்லது நகரத் தலைமை ரசிகர் மன்றம் தான் வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்பொழுது பிரசாந்துக்கு எங்கள் பகுதியில் ரசிகர் மன்றமே இல்லாததால் நாம் ஆரம்பித்தால் மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் கிடைக்கும் என்று முடிவு செய்து மன்றம் துவக்கினர். அது போலவே மாவட்ட தலைமை ரசிகர் மன்றத்திற்கான அனுமதியும் பிரசாந்திடம் இருந்து கிடைத்தது. எனக்கு பிரசாந்த் பிடிக்காததால் நான் வெளி வந்து ஏற்கனவே எங்கள் தெருவில் இருந்த கலைவேந்தன் ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைந்து விட்டேன்.

அத்துடன் ராமராஜன் காலம் முடிவடைந்தாலும் எனக்கு வெகு நாட்களுக்கு அவரது படங்கள் மற்றும் பாடல்கள் நினைவில் இருந்தன. நாட்கள் செல்லச் செல்ல எல்லாம் மறந்து விட்டது. ஆனாலும் இப்போதும் எனது மிகச்சிறந்த இளையராஜா பாடல்கள் தொகுப்பில் ராமராஜனின் பாடல்களே அதிகம் இருக்கும். இப்பொழுதும் அந்த காலக்கட்டத்தைய ராமராஜன் படங்கள் டிவியில் போட்டால் படம் முடியும் வரை வேறு சேனல்கள் மாற்றாமல் பார்ப்பது என் வழக்கம்.

அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ராமராஜனிடம் உதவியாளராக இருந்த எங்கள் தூரத்து சொந்த பெரியப்பா ராதாகிருஷ்ணனின் வீட்டு சுபகாரியத்திற்கு ராமராஜன் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்யாருமே சென்று அவரிடம் நலம் விசாரிக்காமல் இருந்தது மட்டுமல்லாமல் கண்டுகொள்ளாமலும் இருந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, நான் மட்டும் அவரிடம் சென்று நலம் விசாரித்து விட்டு வந்தேன். ஒரு மனிதனின் வீழ்ச்சி இந்த அளவுக்கா இருக்க வேண்டும்.

இன்றும் என் மனைவி காலம் மாறி விட்டது அஜித், விஜய், தனுஷ், சிம்பு ஆகியோர் வந்து விட்டனர். ஆனால் நீங்கள் இன்னும் ராமராஜனின் ரசிகர் நிலையை மாற்றவேயில்லையே, நீங்கள் இன்னும் ராமராஜன் ரசிகர் என்று சொன்னால் உங்களை எல்லோரும் ஊர்நாட்டான் என்று கூறுவார்கள் என்று கூறி கிண்டலடிப்பாள். ஆனால் அந்த பால்ய வயதிலிருந்து பதின் வயதுக்குட்பட்ட காலங்களில் மனதை கொள்ளையடித்த ராமராஜனின் ரசிப்புத் தன்மையை என்னால் மாற்ற முடியவில்லையே


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : நேற்றிரவு என் பெரியப்பாவுடன் குடும்ப விழாவுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக திரு. ராமராஜன் அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். கொடுத்து விட்டு வந்து படுத்தபிறகும் அவரின் நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தது. அதற்காக தான் இந்த மீள் பதிவு.

21 comments:

  1. இராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் பல அரங்குகளில் ஒருவருடம் ஓடிய சாதனைகள் அதன் பிறகு முறியடிக்கப்படவில்லை. மற்ற படங்களை பெயரளவுக்கு ஓட்டுகின்றனர்

    ReplyDelete
  2. எனக்கும் ராமராஜன் படங்கள் ரொம்பவே பிடிக்கும். ' ஊர் விட்டு ஊர் வந்து ' படத்தை ஒரு பாட்டுக்காகவே அநேகமுறைகள் பார்த்தேன்.

    புகழ் பெற்ற நடிகர் சிலரின் நடிப்புக்கு, ராமராஜன் எவ்வளவோ தேவலை!

    சாதாரண இயல்பான நடிப்பு இல்லையோ!!!!

    ReplyDelete
  3. அருமையான பதிவு ...
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete
  4. nandraka irukkirathu....aanal ithai yerkanave padithathu pola irukkirathu...

    ReplyDelete
  5. ராமராஜனை போல மிகக் குறுகிய காலங்களில் புகழின் உச்சியை அடைந்தவர்கள் தமிழ்த்திரையுலகில் தற்போது வரை யாரும் இல்லை என்பதே உண்மை ..!

    ReplyDelete
  6. Karagattakaran padathil ulla athunai padal galum inimyaga irrukum matrum ungalin ninaivu varigai arumai oru manithanin vizchiyal yearpatta bathippu. Matrum antha uravinarai ningal nalam visaritha karanathal ungal BLOG vasagargalin idayathil ningatha idam pidithuvittirgal

    ReplyDelete
  7. என்ன அண்ணா திடிர்ன்னு ராமராஜன பத்தி பதிவு போட்டு இருக்கீங்க

    ReplyDelete
  8. அடடா தம்பி இந்த வார நட்சத்திரமா? ஊரில் இல்லாததால் தெரியலை வாழ்த்துகள்

    ReplyDelete
  9. //எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன் ரசிகர் மன்ற துணைச் செயலாளர், எப்படியிருக்கு என் பதவியின் பெயர்.//

    இப்பவுமா தல?

    ReplyDelete
  10. ராமராசன் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கிராமங்களில் வயல்களில் வேலைசெய்யும் பெண்களெல்லாம் வேலைமுடிந்து கூலியை வாங்கி நைட்ஷோ க்கு செல்வார்கள்.அந்தளவுக்கு தாய்குலங்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார்.இப்போ பாவம் 'தாய்க்கு(?)' கட்டுபட்டிருக்கிறார்.

    ReplyDelete
  11. /// கோவி.கண்ணன் said...

    இராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் பல அரங்குகளில் ஒருவருடம் ஓடிய சாதனைகள் அதன் பிறகு முறியடிக்கப்படவில்லை. மற்ற படங்களை பெயரளவுக்கு ஓட்டுகின்றனர் ///

    நீங்கள் சொல்வது தான் சரி கண்ணன்

    ReplyDelete
  12. /// துளசி கோபால் said...

    எனக்கும் ராமராஜன் படங்கள் ரொம்பவே பிடிக்கும். ' ஊர் விட்டு ஊர் வந்து ' படத்தை ஒரு பாட்டுக்காகவே அநேகமுறைகள் பார்த்தேன்.

    புகழ் பெற்ற நடிகர் சிலரின் நடிப்புக்கு, ராமராஜன் எவ்வளவோ தேவலை!

    சாதாரண இயல்பான நடிப்பு இல்லையோ!!!! ///

    அந்த இயல்பான நடிப்புக்காகவே எனக்கு ராமராஜனை பிடிக்கும்

    ReplyDelete
  13. /// krishy said...

    அருமையான பதிவு ... ///

    மிக்க நன்றிண்ணே

    ReplyDelete
  14. /// வலைஞன் said...

    வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும் ///

    நன்றி வலைஞன்

    ReplyDelete
  15. /// M.NAGOOR MEERAN said...

    nandraka irukkirathu....aanal ithai yerkanave padithathu pola irukkirathu... ///

    ஆமாம் மீரான் இது மீள் பதிவு தான்.

    ReplyDelete
  16. /// வரலாற்று சுவடுகள் said...

    ராமராஜனை போல மிகக் குறுகிய காலங்களில் புகழின் உச்சியை அடைந்தவர்கள் தமிழ்த்திரையுலகில் தற்போது வரை யாரும் இல்லை என்பதே உண்மை ..! ///

    நீங்கள் சொல்வதே சரி

    ReplyDelete
  17. /// SNEHANASHOK said...

    Karagattakaran padathil ulla athunai padal galum inimyaga irrukum matrum ungalin ninaivu varigai arumai oru manithanin vizchiyal yearpatta bathippu. Matrum antha uravinarai ningal nalam visaritha karanathal ungal BLOG vasagargalin idayathil ningatha idam pidithuvittirgal ///

    நன்றி அசோக்கு, ஓ சாரி சாரி சினேகன் அசோக்கு,

    ReplyDelete
  18. /// அன்பை தேடி,,அன்பு said...

    என்ன அண்ணா திடிர்ன்னு ராமராஜன பத்தி பதிவு போட்டு இருக்கீங்க ///

    என்ன இப்புடி கேட்டுப்புட்டீங்க எங்கத் தங்கத் தலைவரு ராமராஜன் அல்லவா.

    ReplyDelete
  19. /// மோகன் குமார் said...

    அடடா தம்பி இந்த வார நட்சத்திரமா? ஊரில் இல்லாததால் தெரியலை வாழ்த்துகள் ///

    அண்ணா வணக்கம்ணா. கொஞ்ச நாட்களாக நீங்கள் இல்லாமல் வலையுலகம் டல்லடித்து விட்டது. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  20. /// Manimaran said...

    //எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன் ரசிகர் மன்ற துணைச் செயலாளர், எப்படியிருக்கு என் பதவியின் பெயர்.//

    இப்பவுமா தல? ///

    கொஞ்ச நாள் சங்கத்தை வச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா சங்கம் அபராதத்துலேயே ஒடிக்கிட்டு இருந்ததுனால கலைச்சிட்டோம்.

    ReplyDelete
  21. ஆபாசம் இல்லாமல் அலட்டல் இல்லாமல் சமுக விடயத்தை நல்லாக உள்வாங்கி நடிப்பதில் எனக்கும் ராமராஜனைப்பிடிக்கும் அவர் படங்களில் என்னைப்பெத்த ராஜா நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு மறக்க முடியாது எனக்கு அவரின் எல்லாப்படங்களையும் பிடிக்கும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...