சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, October 21, 2013

குறும்படம் இயக்குவது எப்படி

இயக்குனர் நண்பர் சுரேஷ் அழைப்பின் பேரில் நேற்று நான் செல்வினுடன் ஏவிஎம் பிரிவியூ தியேட்டரில் ஓட்டம் என்ற குறும்படத்தின் பிரிவியூ ஷோவுக்கு சென்றிருந்தேன். படம் பற்றி சொல்ல எதுவுமில்லை. ஆனால் வெறும் 15 நிமிடம் மட்டுமே ஓடிய இந்த குறும்படத்தின் பட்ஜெட்டும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ரொம்பவே மலைக்க வைத்தது.


சினிமாவுக்கு சம்பந்தமேயில்லாமல் என்னைப் போலும் செல்வினைப் போலும் இருப்பவர்கள் பட்ஜெட் அதிகமாகி விடுமோ என்று பார்த்து பார்த்து செலவுகளை குறைத்துக் கொண்டு குறும்படமெடுக்க ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

இவ்வளவு காசு செலவு பண்ணி ஒரு குறும்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்னும் போது தான் யோசனையாக இருக்கிறது, இத்தனைக்கும் இயக்குனர் சொந்தமாக செலவு பண்ணியிருக்கிறார். பட்ஜெட் ஒன்றரை லட்சமாம். இப்பொதெல்லாம் ஒரு குறும்படத்தை போட்டுக் காட்டி வாய்ப்பு கேட்பது பேஷனாகி போய் விட்டது.

சினேகா, பிரசன்னா, நடிகை சங்கவி, ஏஆர்முருகதாஸின் தம்பி வத்திக்குச்சி நாயகன் இன்னும் ஏராளமான சிறப்பு விருந்தினர்களுடன் மூன்று ஷோ பிரிவியூ. ஒரு ஷோவுக்கு 100 பேர் படம் பார்த்திருப்பார்கள். இயக்குனர் மாத்தியோசிச்சி தான் வாய்ப்பு தேடியுள்ளார்.


நடிகை சங்கவி என்னா கலரு, என்னா ஸ்ட்ரக்சரு ப்பா அப்படியே டென்சனாயிட்டேன். இன்னும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றியது. சீனியர் நடிகையை சைட் அடிக்கிறான் என்று கிண்டல் செய்வார்களே என்று தான் பம்மினேன். ஆனால் என்னை விட ஒரு வயது தான் சங்கவி மூத்தவர் என்பது கூடுதல் தகவல்.

இவர்களுக்கான கவர்ச்சி தான் இவர்களின் பலம். நான் இதுவரை எந்த சினிமா விழாக்களுக்கும் சென்றதில்லை. சினிமாக்காரர்கள் இருக்கும் இடத்திற்கும் சென்றதில்லை. ஆனால் இவர்கள் சந்திக்கும் ஒரு இடம் எப்படியிருக்கும் என்பதை நேற்று தான் ஆவென்று வாயை திறந்து கொண்டே பாா்த்தேன்.


சாதித்த நடிகர்கள் முதல் சாதிக்கத் துடிக்கும் துணை இயக்குனர்கள் வரை அங்கு சந்தித்தேன். ஒருவர் தாடியுடன் (இவர் குறும்படத்தின் இயக்குனரல்ல, ஒரே சமயத்துல ரெண்டு பேரும் தாடி வச்சி நாம அடையாளம் சொல்லவே சிரமப்பட வேண்டியிருக்கிறது) வந்திருந்தார். இயக்குனர் சுரேஷின் நண்பர். எங்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கும் போது புதிதாக படம் இயக்க வாய்ப்பு வந்திருப்பதாக சுரேஷ் தெரிவித்தார்.




சுரேஷ் மற்றும் அவரது துணை இயக்குனர் நண்பர்களிடம் எங்களது குறும்படத்தை பற்றி விவரிக்கும் போது இயக்கம் என்றால் என்ன என்றும் படபிடிப்பு என்றால் செய்ய வேண்டிய நடைமுறைகள் பற்றியும் சுரேஷ் விவரித்தார். அனுபவப்பட்ட துணை இயக்குனர்கள் முன்பு நாம் ஒன்றுமேயில்லை என்று எனக்கு புரிந்தது.

படபிடிப்பில் லைட்டிங் செய் வேண்டிய அவசியம் பற்றியும் தொழில் முறை நடிகர்களாக இருந்தால் தான் சாலையில் நடக்கும் ஷூட்டிங்கில் கூச்சமில்லாமல் நடிப்பார்கள் என்றும் சுரேஷ் சொன்ன போது நிறையவே புரிந்தது. ஆனால் புரிய வேண்டியது இன்னும் மலை அளவுக்கு இருப்பது தான் நிஜம்.

இருந்தும் முன்னே பின்னே ஷூட்டிங் பார்த்திராத எந்த சினிமாவின் டிஸ்கசனிலும் அமர்ந்திராத நான் வீ்ட்டில் தனியாக உட்கார்ந்து திரைக்கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே காமெடியாக இருக்கிறது.

இருந்தாலும் இத்தனை வருட சினிமா பார்த்த அனுபவங்களும், சினிமாவின் மீதான ஆசையும், சினிமாவின் கவர்ச்சியும் தான் இந்த குறும்படம் இயக்க வேண்டும் என்ற ஆசையை கொளுந்து விட்டு எரிய வைக்கிறது.

செல்வின் கதை திரைக்கதையை தயார் செய்து ஸ்டோரி போர்டு கூட தயார் செய்து விட்டு லொகேசன் பார்க்க சென்றுள்ளார். இ்ன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஷூட்டிங் முடிந்து அடுத்த மாதம் உங்கள் பார்வைக்கு வந்து விடும். நாம கொஞ்சம் ஸ்லோ, எழுத்து வேலைகள் முடியவே இரண்டு மாதம் ஆகிவிடும். மூன்று மாதத்திற்கு பிறகு தான் ஷூட்டிங்.

ஒரு கை பார்த்துடுவோம். என் அதிகபட்ச உழைப்பை போட்டு குறும்படத்தை எடுக்கிறேன். நல்லாயிருந்தா மக்கள் பார்வைக்கு, இல்லாவிட்டால் என் கம்ப்யூட்டர் ரீசைக்கிள்பின்னுக்கு என்று இருந்து விட வேண்டியது தான்.

ஆரூர் மூனா

46 comments:

  1. புரிய வேண்டியது மலை அளவு இருந்தாலும் நம்பிக்கையோடு தொடங்குங்கள்... வெற்றி நிச்சயம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
    2. @திண்டுக்கல் தனபாலன்... எப்படிணே இவ்ளோ சீக்கிரம் வந்து கமெண்ட் போடறீங்க... Great..

      Delete
    3. அதுல தனபாலனை அடிச்சிக்கவே முடியாது

      Delete
  2. புதிய பாதைகு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரகாஷ்

      Delete
  3. நீங்கள் கண்டிப்பாக ஜெய்பீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே

      Delete
  4. Replies
    1. நன்றி தினேஷ்

      Delete
  5. உங்கள் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. மூணு மாசம் காத்திருக்கவும் ராஜா

      Delete
  6. Today almost all film lovers are bitten by the "short Film" bug.
    All the best.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சங்கர் சார்

      Delete
  7. வடசென்னை தயாராயிடிச்சி.. தென் சென்னை மட்டும் தேங்கா பறித்துக் கொண்டிருக்கலாமா.. கமான் கய்ஸ்.. ( நல்ல விஷயத்துக்காக கொளுத்திப் போட்டா தப்பே இல்லேன்னு எங்க ஆரூரானந்தா சொல்லியிருக்கார்.. அரே ஓ சாம்பா!!

    ReplyDelete
    Replies
    1. இதத்தானய்யா முதல்ல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். வடசென்னையா இருந்தா என்ன தென்சென்னையா இருந்தா என்ன முதல்ல கேமிராவுக்காக ஒன்னு சேர்ற வழிய பார்க்க சொல்லுங்கய்யா

      Delete
  8. Best wishes for your upcoming venture. Please do not spend all of your hard earned money on this. The movie field is a bottomless pit when it comes to this, and is like a quicksand - once you are in, you get dragged in, and no way out. God Bless... rajamani

    ReplyDelete
    Replies
    1. உங்களது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்கிறேன் நன்றி ராஜாமணி

      Delete
  9. வாழ்த்துகள்யா..கனவிலும் பேச்சிலும் உழல்வதைவிட, செயலில் இறங்குபது பெட்டர்!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் தான் நன்றி செங்கோவி

      Delete
  10. நம்பிக்கையோடு தொடங்குங்கள் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  11. வாழ்த்துக்கள் மச்சி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாப்ள

      Delete
  12. முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார், முடியை கட்டி மலையை இழுப்போம் மக்கா வந்தா மலை போனா முடி தட்ஸ் ஆல்...

    வாழ்த்துக்கள் வெற்றி பெற.....

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்..எனக்கொரு சான்ஸ் வேணும் மாம்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி. உன்னைப் போல் ஒரு கிளாமரான கதாநாயகனைத் தான் தேடிக் கொண்டு இருக்கிறேன்

      Delete
  14. Replies
    1. நன்றி ஜீவன் சுப்பு

      Delete
  15. Replies
    1. நன்றி சக்தி முருகேசன்

      Delete

  16. வாழ்த்துக்கள்...

    தல...இன்றைய விலைவாசியில் ஒண்ணரை லட்சம் பட்ஜெட்டுக்கு வாய் பிளந்தா எப்படி?

    2006ல் தங்கர்பச்சானின் உதவியாளராக இருந்த ஒருவர் இயக்கிய குறும்படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்துக்கு செலவு இதை தாண்டியிருக்கும். ஸ்கிரிப்டில் எழுதியது 21 சீன். ஆனால் இயக்குனர் நினைத்த மாதிரி நாலைந்து காட்சிகள் எடுத்திருந்தால் அதிகம். மற்ற எல்லா காட்சிகளும்?... காம்ப்ரமைஸ்தான்.

    பண்ருட்டி பகுதியில் ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. நான் முதன் முதலில் இந்த படப்பிடிப்பில்தான் வேலை செய்கிறேன் என்பதை கரகாட்டக்காரன் காலத்திலிருந்து பீல்டில் இருக்கும் ஒரு உதவி இயக்குனர் நம்ப மறுத்துவிட்டார். தேங்க்ஸ் டூ பல்வேறு லைப்ரரி புக்ஸ் மற்றும் சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம்.

    25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த படத்தில் வேலை செய்ததில் ஒரு படம் எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று கற்றதுதான் அதிகம். அதை பொது வெளியில் எழுதுவது நாகரிகமாக இருக்காது.

    போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படிக்கும் கிராமத்து சிறுவன் திருடனாகிவிடுவதுதான் கதை.
    அந்த அனுபவத்தை வெச்சு ப்ளாக் எழுத ஆரம்பிச்ச காலத்துல நான் கொடுத்த அலப்பறை பதிவு இங்கே....
    http://writersaran.blogspot.in/2010/01/blog-post_2655.html



    யூ டியூபில் காணக்கிடைக்கும் குறும்படம் இங்கே.
    http://www.youtube.com/watch?v=ZhjPHf9Yxa8


    --
    ******

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குறும்படம் அனுபவமில்லாமல் செய்தது என்றே நினைக்கிறேன்.

      செலவு என்றால் ஒரு நாள் கேமிரா வாடகை 15000 வரும், எடிட்டிங் 10000 வரும், பின்னணி இசை 5000ம் நடிகர் நடிகைகள் செலவு 10000 வரும். இதர செலவுகள் 5000 வரும். ஆனால் எங்கள் திட்டப்படி கேமிரா சொந்தமாக வாங்கியதால் ஒளிப்பதிவும் நண்பரே எடிட்டராக இருப்பதால் அந்த செலவும் நடிகர்கள் செலவில்லாமல் நண்பர்களே நடிப்பதால் அந்த செலவும் இருக்காது. பின்னணி இசை மட்டும் தான் செலவு கணக்கில் வரும். இது தான் நாங்கள் திட்டமிட்டுள்ள பட்ஜெட்

      Delete
  17. Kannadi pottachu, Thoppi podanu , konjam thadiyum....

    ReplyDelete
  18. மற்றவர்களின் தவறுகளை நன்கு கவனித்து அது உங்கள் படத்துல வராத மாதிரி பார்த்துக்கோங்க, படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கோவ்

      Delete
  19. வெற்றிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி

      Delete
  20. ஒரு நாள் கேமிரா வாடகை 15000 . . . good joke

    ReplyDelete
  21. Good decision... Try to post your short film in Facebook...

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்... அதே சமயம் சங்கவிக்கு என்ன வயசுன்னு போடல...?
    என்கிட்டயும் ஒரு குறும்படம் எடுக்கும் அளவுக்கு ஒரு கதை இருக்கு (சின்ன நாட் தான்) கதை எங்கிருந்தும் திருடல... ஒரு நாள் கனவில் கண்டது

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...