சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, October 1, 2013

ராஜாராணி படம் பார்த்த கதை

வெள்ளியன்று என் முதல் சாய்ஸாக இருந்தது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தான். ஆனால் காலையில் முதல் காட்சி பெரும்பாலான திரையரங்கங்களில் வெளியாகவில்லை. அடுத்த ஆப்சன் என்னவென்று தேடிய போது ராஜாராணி அம்பத்தூர் திரையரங்கங்களில் காலை 8 மணிக்காட்சி இருக்கிறது என்பதை அறிந்து புறப்பட முடிவு செய்தேன்.


ஊரிலிருந்து அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். வேலை நேரத்தில் சினிமாவுக்கு போகிறேன் என்று சொன்னால் அப்பா டின்னு கட்டி விடுவார் என்பதால் அவசரமாக அம்பத்தூரில் ஒரு வேலை இருக்கிறது. அதனை முடித்து விட்டு வருகிறேன் என்று வீட்டில் கப்சா விட்டு கிளம்பினேன்.

கடும் டிராபிக்குகிடையில் அம்பத்தூர் செல்ல லேட்டாகியது. ராக்கி வரை செல்ல முடியாது அதனால் முருகனில் பார்த்து விடலாம் என்று வண்டியை முருகனுக்கு விட்டேன். தியேட்டர் வாசலில் ஈ காக்கா இல்லை, ஆனால் போஸ்டரில் காலை 8 மணிக்காட்சி உண்டு என்று போட்டிருந்தது.

மண்டை காய்ந்து போய் வண்டியை வெளியில் நிறுத்தி உள்ளே சென்று விசாரித்தால் யாருமே முன்பதிவு செய்யாததால் காட்சியை ரத்து செய்து விட்டார்கள் என்று தெரிந்தது. வட போச்சே என்று மறுபடியும் வண்டியை கிளப்பி ராக்கிக்கு விரைந்தேன்.


வாசலில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்தது. இரண்டு திரையரங்கிற்கும் எவ்வளவு வித்தியாசம். வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு டிக்கெட் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். ஒரு குரூப் பால் பாக்கெட்டை பிய்த்து பாலபிஷேகம் செய்ய விரைந்து கொண்டு இருந்தனர்.

பட்டாசு வாசலில் வெடித்து பட்டையை கிளப்பிக் கொண்டு இருந்தது. என்னடா இது ஆர்யாவுக்கு இவ்வளவு வெறிப்பிடித்த ரசிகர்களா என்று யோசித்துக் கொண்டே டிக்கெட் எடுத்தேன்.

டிக்கெட் எடுத்துப் பார்த்தால் சி வரிசையில் நம்பர் இருந்தது. இருக்கும் கூட்டத்திற்கும் சி வரிசை டிக்கெட்டிற்கும் சம்பந்தமேயில்லையே என்று குழம்பிப் போய் வண்டியை எடுக்கப் போனால் ரேய் நானா இக்கடக்கி ராரா என்று சத்தம் கேட்டது.


அப்பத்தான் ஸ்ரைக்கானது அடடா இன்று பவன் கல்யாணின் அத்தண்டிக்கடி தாரடி படம் ரிலீஸ் ஆச்சே, பயலுக அத்தனைப் பேரும் கொல்டிங்க என்று. வாசலில் வேல்டெக் கல்லூரியின் பவன்கல்யாண் ரசிகர் மன்றம் என்ற பேனர் வேறு.

சென்னையிலேயே இப்படி என்றால் ஆந்திராவில் படம் பயங்கரமாக களை கட்டியிருக்கும். முன்பே தெரிந்திருந்தால் ஆந்திராவுக்கு சென்றிருப்பேன். ச்சே சான்ஸை மி்ஸ் செய்து விட்டேன் என்று வருந்திக் கொண்டே அரங்கினுள் சென்றேன்.

மொத்தமே ஆறு வரிசைகள் மட்டுமே நிறைந்திருந்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் காட்சி பத்து பேருடன் ஏஜிஎஸ்ஸில் பார்த்ததை விட இது எவ்வளவோ தேவலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

படமும் தொடங்கியது, சந்தோஷத்துடன் ஒரு வழியாக மெளனராகத்தின் சாயலிலேயே முடிந்தது.

படம் முடிந்து வெளியில் வந்தால் எனக்கு முன்னால் வெளியில் வந்த கல்லூரி மாணவர்கள் அலறிக் கொண்டு உள்ளே வந்தனர். என்னடாவென்று வெளியில் வந்து பார்த்தால் தான் தெரிந்தது. டிவியில் இருந்து வெளியில் வருபவர்களை படம் எப்படியிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

காலேஜ் கட் அடிச்ச பசங்க சினிமாவுக்கு போனது தெரிந்து விடுமே என்று தான் உள்ளே வந்து இருக்கின்றனர். நாமும் பந்தாவாக வெளியில் வந்து படம் சூப்பர், என்று பாராட்டி விட்டு வெளியில் வந்தேன். வெயில் சுட்டெரித்தது.

இருந்தாலும் விமர்சனம் டைப்படித்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் வெயிலை பொருட்படுத்தாமல் அவ்வளவு டிராபிக்கு இடையிலும் வீட்டிற்கு வந்து டைப் அடித்த பிறகு தான் தண்ணீரே குடித்தேன் என்றால் என் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்வது.

ஆரூர் மூனா

டிஸ்கி 1 : நல்ல வேளையாக நாளை காலை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் ஏஜிஎஸ்ஸில் காலை எட்டு மணிக்காட்சி இருக்கிறது. நாளை லீவு என்பதால் அப்பாவுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாகி விட்டது.

டிஸ்கி 2 : வேறு வழியில்லை ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்த கதை கூட தனிப்பதிவாகிறது. நீங்கள் படித்து தான் ஆகவேண்டும்.

11 comments:

  1. sir i am your fan and your writing style really super,neenga facebook la irukengala?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கோ. நன்றிங்கோ, www.facebook.com/senthilkkum என்ற முகவரிக்கு வரவும்

      Delete
  2. நம்ம திருவாரூர் நடேஷ்- தியேட்டர்லதான் ராஜா ராணி ரிலீஸ்.

    முதல் நாள், முதல் காட்சி தியேட்டர் வாசலில் கல்லூரி யூத்து கூட்டம்தான் அதிகம்.

    நேற்று (ஞாயிறு) மாலை காட்சி 6.10 மணிக்குள் ஹவுஸ் புல்.

    சற்று பெரிய இடைவெளிக்கு பிறகு இப்படி ஹவுஸ் புல் ஆவதை பார்த்தேன்.

    (நம்ம அலுவலகம் தியேட்டருக்கு எதிரில்தான். ஆனால் படம் பார்க்க அவ்வளவு எளிதில் நேரம் ஒதுக்க முடிவதில்லை.)

    ReplyDelete
    Replies
    1. நானும் சென்ற முறை ஊருக்கு வந்த போது பார்க்க முயற்சித்தேன். நேரமின்மையால் முடியவில்லை. நன்றி சரவணன்

      Delete
  3. வேலை நேரத்தில் சினிமாவுக்கு போகிறேன் என்று சொன்னால் அப்பா டின்னு கட்டி விடுவார்
    >>
    அப்படியா சங்கதி!! இருங்க இருங்க இதை ஸ்கேன் பண்ணி அப்பாவுக்கு படிக்க அனுப்பறேன்.

    ReplyDelete
    Replies
    1. நம்மளை போட்டுக் கொடுக்குறதுலயே இருக்கீங்களே

      Delete
  4. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- உங்க review - காஹ வெய்ட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, நாளை 12 மணி போல போட்டுருவோம்

      Delete
  5. படிச்சுருவோம் குருவே.. ஜெய் போலோநாத்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆவி,

      அரே ஓ சாம்பா

      Delete
  6. அண்ணே நானும் நேற்று தான் படம் பார்த்தேன் காலை ராஜா ராணி மதியம் ஓநயும் ஆட்டு குட்டியும் ரெண்டுமே சூப்பர்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...