சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, October 2, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - சினிமா விமர்சனம்

ரெண்டு மூணு கதைகள், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து ஒரு இடத்திற்கு கொண்டு வந்து முடிக்கும் சிம்புவின் வானம் பட டைப் கதை தான். ஆனால் இதில் ஒரு கதை மட்டும் சுமாராக இருப்பதால் நம்மளை தியேட்டரை விட்டு வெளியே இழுக்கிறது. மற்றபடி வித்தியாசமான முயற்சிதான்.


கொஞ்சம் அசந்திருந்தாலும் வ குவாட்டர் கட்டிங் ஆகியிருக்க வேண்டிய படம் இது. ஆனால் கடைசி அரைமணிநேர காமெடி கலாட்டாக்கள் படத்தை சற்று தூக்கி நிறுத்தியிருக்கிறது. இருந்தாலும் சூது கவ்வும் போல் பரிபூரண கலாட்டா படம் பார்த்த திருப்தி இல்லை.

சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின், அவருக்கும் சுவாதிக்கும் காதல், அவரது வேலையின் பிரச்சனைகள், குடித்து விட்டு வண்டியை ஓட்டி ஒரு பெண்மணிக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், உயிருக்கு போராடும் இந்த பெண்மணியை காப்பாற்ற வேண்டும்


அஸ்வின் குடித்த ஒயின்சாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் விஜய்சேதுபதி செல்போனை திருடி தப்பித்து விடுகின்றனர், உயிருக்கு போராடும் பெண்மணிக்கு விஜய்சேதுபதியின் அரிய வகை ரத்தம் தேவை. கொலை செய்த இடத்தில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவன்

இவை எல்லாம் சரியாகி விஜய்சேதுபதியின் ரத்தம் பெண்மணிக்கு கிடைத்ததா, அஸ்வினின் காதல் என்னவானது, கொலையாளிகள் சிக்கினரா, செல்போன் விஜய்சேதுபதிக்கு திரும்ப கிடைத்ததா, விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவர் தப்பித்தாரா போன்ற கேள்விகளுக்கு பதிலை குடி குடியை கெடுக்கும் என்ற மெஸேஜை வைத்து முடித்து நம்மளை வீட்டுக்கு அனுப்புகின்றனர்.


படம் நான் எதிர்பார்த்து போன அளவுக்கு இல்லை, சுமார் மூஞ்சி குமார் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனாலும் படத்தில் சில காட்சிகள் அடித்து துவம்சம் பண்ணியிருக்கின்றன. சூரியின் கேரக்டரும் ஓகே ஓகேயில் சந்தானத்தின் காதலியாக வருவாரே அவரின் கேரக்டரும் ஓவர்டோஸாகி சற்று ஜெர்க்கை கொடுக்கின்றன.

படம் எப்படியிருந்தாலும் விஜய்சேதுபதிக்கு இந்த படம் மற்றுமொரு வெற்றிப்படிக்கல் தான். கேரக்டரைசேசனிலும் டயலாக் டெலிவரியிலும் மனிதர் பின்னி எடுக்கிறார். நந்திதா மீது ஒரு தலை காதல் கொண்டு அவரை டார்ச்சர் செய்யும் போதும்,

பசுபதியிடம் தன் காதலை மொக்கை இங்கிலீஷூடன் விவரிக்கும் போதும் இடைவேளைக்குப் பிறகு ஆஃப்புக்கு அலையும் போதும், க்ளைமாக்ஸில் காதலியை இம்ப்ரெஸ் செய்ய ரத்தம் கொடுக்க செல்லும் போதும் அசத்தோ அசத்து என்று அசத்தியிருக்கிறார்.


பாலாவாக அஸ்வின் சற்று படித்து காதலியிடமும் உயரதிகாரியிடமும் சூழ்நிலைக்கேற்ப பொய் சொல்லி சமாளிக்கும் இன்றைய நடுத்தர வர்க்க இளைஞர்களை கண்முன் நிறுத்துகிறார். அதுவும் ஒரே வீட்டில் இருந்து நான்கு நண்பர்களும் உயரதிகாரியிடம் வெவ்வேறு சூழ்நிலையில் இருப்பதாக நம்ப வைக்கும் காட்சியில் விசில் பறக்கிறது.

நந்திதா விஜய்சேதுபதியை காதலிக்காமல் திட்டிக் கொண்டே இருப்பதும் கடைசி நேர இக்கட்டிற்காக விஜய்சேதுபதியிடம் நெருங்கி வந்து ரத்தம் கொடுக்க வைப்பதும், கடைசியில் காதலுக்கு முந்தைய நிலையை அடையும் போதும் நன்றாக இருக்கிறது.

சென்னையில் வாழும் டிபிக்கல் பெண் கதாபாத்திரம் ஸ்வாதிக்கு. ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் கண்டுபிடிக்கும் போதும், காதலன் பொய் சொல்வதை கண்டுபிடித்து அவன் எங்கு இருப்பான் என யூகித்து அங்கு சென்று பிடிக்கும் போதும் பிரச்சனைகளில் அவனை விட்டு விலகிச் செல்லாமலும் சிறப்பாக செய்துள்ளார்.

பசுபதி சுகர்பேஷண்ட் தாதா. நேரத்திற்கு சாப்பிட முடியாமல் விஜய்சேதுபதியின் காதலுக்கு பஞ்சாயத்து செய்யும் போது சிரிக்க வைக்கிறார். ஒவ்வொரு எக்ஸ்பிரசனும் தேர்ந்த நடிகர் என்பதை தெரிய வைக்கிறது.

படத்தில் விசில் அள்ளும் ஒரு காட்சி தமிழ் பையனை மலையாளி நண்பன் ஒருத்தன் கூடவே இருந்து தண்ணியடித்து விட்டு தமிழன் போதையில் மேனேஜரை திட்டும் போது செல்போனில் ரெக்கார்டு செய்து அதனை அப்படியே மேனேஜரிடம் காண்பித்து ப்ரமோஷன் கேட்கும் காட்சி. அதற்கு காம்ப்ரமைசாகத்தான் மேனேஜர் கதாபாத்திரத்தையும் மலையாளியாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இன்னும் பல கதாபாத்திரங்கள் கன்னாபின்னாவென்று பேசி கடுப்பை கிளப்புகின்றன. உதாரணத்திற்கு ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக வருபவர் டயலாக் டெலிவரி எரிச்சலூட்டுகிறது.

ரோபோ சங்கருக்கு கூட சிறிய பாத்திரம், சிறப்பாக செய்துள்ளார்.

படம் முழுக்கவே டாஸ்மார்க்கில் காட்சிகளை வைத்து விட்டு குடித்து விட்டு வண்டியை ஓட்ட வேண்டாம் என்று மெஸேஜ் சொல்லும் படம். அட்றா அட்றா.

ஒரு முறை பார்க்கலாம்.

ஆரூர் மூனா

18 comments:

  1. அய்யோ விஜய் சேதுபதி இதற்கு தான் ஆசைப்பட்டாய் \\\\

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி

      Delete
  2. mmmmm..... appo parkalaamaa vendaamaa ?! kulambuthey !

    ReplyDelete
    Replies
    1. மனசை திடப்படுத்திக் கொண்டே பாருங்க

      Delete
  3. semma fast(unga vimarsantha sonnen) ! nallaruku!!! nallarukku!!!
    itharkkuthan aasai pattinga senthil

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுவாமிநாதன்

      Delete
  4. ரொம்ப நல்லா இருக்கும்னு நினைத்தேன். படம் லேசா அடி வாங்கும் போல இருக்கே..

    ஆமா இவ்ளோ படம் பார்க்குறீங்க, வீட்ல தங்கமணிய கூட்டி போவீங்களா?

    ReplyDelete
    Replies
    1. முதல்நாள் முதல்காட்சிக்கு வரமாட்டார். நான் பார்த்து நல்ல படமக இருந்தால் ஒரு வாரம் கழித்து சேர்ந்து போவோம்

      Delete
  5. ஆசையை துறக்க முடியாமல் யானும் மாட்டிக் கொண்டேன் குருவே!!

    ReplyDelete
    Replies
    1. சேர்ந்தே மாட்டிக் கொண்டோமா

      Delete
  6. விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு சறுக்கலா . . . . அடுத்த படத்திலாவது விட்டதை பிடிப்பார என்று பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. பார்ப்போம் நன்றி யோக்கியன்

      Delete
  7. நெருடலில்லாத இயல்பான விமர்சனம்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பழனி

      Delete
    2. Saw first day in Mayajal. VIjaySethipathiya nambi ponnen... Padam Sema Mokkai ..

      Delete
    3. நன்றி இமயா

      Delete
  8. உங்களோட ஸ்டைல்ல இருந்து கொஞ்சம் வேறுபட்டிருக்கு விமர்சனம்..

    நான் நிறைய எதிர்பார்த்தேன்...

    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...