சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, October 11, 2013

நய்யாண்டி - சினிமா விமர்சனம்

இன்னிக்கி மனசு முழுக்க ராமைய்யா ஒஸ்தாவய்யா பார்க்க வேண்டும் என்று தான் அடித்துக் கொண்டது. ஆனால் கூட வந்த நண்பனின் வற்புறுத்தலால் தான் நய்யாண்டி போக வேண்டியதாயிற்று.


சற்குணத்தின் மேல் இருந்த அதிதீவிர நம்பிக்கையினால் தான் தைரியமாக படத்தில் நுழைந்தேன். ஆனால் பாருங்கள் முகத்தில் சாணியை மொழுகி அப்பியிருக்கிறார்கள். தனித்துவமான இயக்குனர்கள் பெரிய நடிகர்களுடன் ஒன்று சேரும் போது காணாமல் போவதை இந்த தமிழ் சினிமா நிறைய பார்த்திருக்கிறது. அந்த வரிசையில் இனி சற்குணமும் சேருகிறார்.

சற்குணத்தின் பலம் நேட்டிவிட்டி தான் முதல் படமான களவாணியி்ல் ஒரத்தநாடு அதனை சுற்றியுள்ள கிராமங்கள் சரியான அளவிட்டும் இயற்கையாகவும் இருக்கும். வாகை சூடவாவில் கூட அப்படித்தான். வாகை சூடவா படம் பார்த்து க்ளைமாக்ஸில் நெகிழ்ந்து போய் கண்ணில் நீர் விட்டவன்.


எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப தலையில் அடித்துக் கொண்டு இருக்கிறேன். அதற்காக படம் பார்க்கவே முடியாமல் சூர மொக்கை என்று சொல்ல முடியாது. வாகை சூடவா இயக்குனரின் அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பில் போனது தான் பிரச்சனை.

படத்தின் கதை பெரிசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. 20 வருசத்துக்கு முன்பு வள்ளி வரப் போறா என்று ஒரு படம் வந்தது. பாண்டியராஜன் ஹீரோ, வீட்ல விசேங்க படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்தவர் தான் ஹீரோயின்.

அந்த படத்திற்கு மூலம் ஒரு மலையாளப் படம் ஜெயராம் ஷோபனா நடித்தது. சூப்பர் ஹிட்டான அந்த படத்தை ரீமேக்கி சொதப்பியது தான் வள்ளி வரப் போறா. அந்த படத்தை இன்னும் சொதப்பி எடுத்து இருக்கும் படம் தான் நய்யாண்டி.


ஒரு குடும்பம் மூன்று ஆம்பளைப் பசங்க, மூத்தவர்கள் இருவருக்கும் வயது கடந்து திருமணமாகவில்லை. வெளியூருக்கு வரும் கடைசி பையனுக்கு ஒரு காதலும் அதனால் திருமணமும் முடிந்து விடுகிறது.

வீட்டுக்கு தெரிய படுத்த முடியாமல் அந்த கடைசி பையன் ஹீரோயினை வேலைக்காரி போல் வீட்டுக்கு அழைத்து வருகிறான். அவளை மற்ற இரண்டு பசங்களுக்கும் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்க கடைசியில் உண்மை தெரிய வந்து குடும்பம் ஒன்றாவதே கதை.

நான் மேற்சொன்ன மூன்று படங்களின் கதையும் ஒன்று தான்.

இதில் ஸ்பெசலாக தஞ்சை ஏரியாவை இந்த கதையின் மேல் தோய்த்து தந்து இருக்கிறார் சற்குணம். இப்ப வரைக்கும் எனக்கு சற்குணத்தின் திறமை மேல் நம்பிக்கை இருக்கிறது. தனுஷ் இதில் நடித்ததனால் காம்பரமைசுக்காக இந்த படம் இந்த வடிவத்தை அடைந்து இருக்கும் என நினைக்கிறேன்.

சில காமடிகள் சிரிக்க வைக்கிறது. பல காமெடிகள் கடுப்படிக்கின்றன. இன்னும் சொல்லி உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை.

நன்றி

நஸ்ரியாவைப் பத்தி சொல்லனும்னு எதிர்பார்த்தீங்கன்னா ஸாரி. எனக்கு வண்டை வண்டையா வார்த்தை வருது. இது பொதுஇடம் என்பதனால் நாகரீகம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

எப்பொழுதும் ஒரு படத்தை பார்த்து நான் விமர்சனம் எழுதும் அளவுக்கு இந்த பதிவில் கண்ட்டெண்ட் இருக்காது. நான் என்ன செய்ய சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

நய்யாண்டி - நந்தவனத்தில் ஒரு ஆண்டி, போட்டான் தலையில் ஒரு ஒலக்கை வெடி

ஆரூர் மூனா

20 comments:

 1. கடைசியா சப்புனு போயிடுச்சே....

  ReplyDelete
 2. டிவில போட்டால் கூட பார்க்க வேணாமா!?

  ReplyDelete
 3. எந்தா சாரே.... தேக்னக்கேலியே லாயக் நஹி ஹை க்யா ????

  ReplyDelete
 4. இங்க திருப்பூர்ல படம் ரிலீஸ் ஆகலாம் பெட்டி வரலையாம் அதனால் ரிசர்வ் பண்ணவங்களுக்கு எல்லாம் பணத்தை திருப்பிக் கொடுத்தாங்க அப்புறம் எல்லாரும் வணக்கம் சென்னை படத்துக்கு போய் பாதியோட பாதி பேர் எழுந்திருச்சு வந்துட்டாங்க வணக்கம் சென்னை படம் படு பயங்கரமான மொக்கை படம் .

  ReplyDelete
 5. இங்க திருப்பூர்ல படம் ரிலீஸ் ஆகலாம் பெட்டி வரலையாம் அதனால் ரிசர்வ் பண்ணவங்களுக்கு எல்லாம் பணத்தை திருப்பிக் கொடுத்தாங்க அப்புறம் எல்லாரும் வணக்கம் சென்னை படத்துக்கு போய் பாதியோட பாதி பேர் எழுந்திருச்சு வந்துட்டாங்க வணக்கம் சென்னை படம் படு பயங்கரமான மொக்கை படம் .

  ReplyDelete
 6. படத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல்தான் நஸ்ரியாவை வைத்து இத்தனை பப்ளிகுட்டியா? மலையாளப் படத்தில் ஜெகதிஸ் பின்னியிருப்பார்.

  நேற்று அத்துணை வேலை பளுவில் இருந்தும் வீட்டிற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. இன்னொரு நாள் சாவகாசமாக சந்தித்து பேச வேண்டும்.

  ஜமால் முஹம்மது

  ReplyDelete
 7. ஹஹஹா. நான்தான் வணக்கம் சென்னை பார்த்து ஏமாந்துடட்டேன்னு நினைச்சேன்.

  ReplyDelete
 8. ஜானகிராமன் படத்துல கவுண்டமணி திருட்டு கல்யாணம் பண்ணி, சிங் வேஷத்துல பொண்டாட்டிய கூட்டிட்டு வந்து வீட்ல வெச்சிருப்பார், குழந்தையெல்லாம் பிறந்துடும், குழந்தை அழுகும் சத்தம் கேக்குதேன்னு செந்தில் தேடுவார்...... செம காமெடி ட்ராக்... அதான் இப்ப ஞாபகத்துக்கு வருது

  ReplyDelete
 9. நல்ல வேளை வண்டை வண்டையா வார்த்தைகளை வெளியிடவில்லை...

  ReplyDelete
 10. நய்யாண்டி - நந்தவனத்தில் ஒரு ஆண்டி, போட்டான் தலையில் ஒரு ஒலக்கை வெடி.........சரவெடி விமர்சனம்

  ReplyDelete
 11. அழுத்தமான கதையோட நல்லா இயக்குறதுக்கு தயாரா ஆயிரம் உதவி இயக்குனர்கள் இருந்தாலும், திருமலை படத்துல விவேக்கை டேக் டைவர்சன்னு சொல்லி ஊர் பூராவும் சுத்தி விட்டு திருப்பதியில கொண்டு போய் இறக்கி விடுற மாதிரி பெரிய ஹீரோக்கள் படத்தை அவங்களே காலி பண்ணிடுறாங்களோ?

  ReplyDelete
 12. எனக்கும் தான் வண்டை வண்டையா வார்த்தை வருது. அந்த கம்ப்ளைன்ட்-ல அவ்வளவு க்ளியரா தான் சார்ந்த மதம்னு குறிப்பிட்டு (தேவையின்றி) ஒழுங்கா இருக்க மக்களுக்கு இடையே பிரச்சனையை கிளப்ப பார்த்துச்சு.

  இதுக்கு முன்னால அந்த பொண்ண எனக்கு ரொம்ப பிடித்தது என்னவோ உண்மை. இப்போ அத பார்த்தாலே வெறுப்பா இருக்கு.

  தமிழ் சினிமால ஒருத்தனும் அதுக்கு இனிமேல் வாய்ப்பு கொடுக்க கூடாது.

  ReplyDelete
 13. படம் மொக்கையா?

  நாங்க புறக்கணிப்பு பண்ணிட்டோம்

  ReplyDelete
 14. // நந்தவனத்தில் ஒரு ஆண்டி//

  nasriyaavooda appan

  ReplyDelete
 15. Dear Mr.Senthil,
  Greetings. My name is Sriram. My sister wants to write kalaasi rcc exam. Need tips from u. Pls help. my mail id is sristan at gmail dot com

  ReplyDelete
 16. எதிர்பார்த்தமாதிரி இல்லை ,'நஹி 'யாண்டின்னு சொல்லலாமா ?

  ReplyDelete

 17. படம் அவ்வளவு மொக்கையா...தப்பிச்சேன்..

  ReplyDelete
 18. எதிர்பார்த்த மாதிரி பட்ல் இல்லையா? தப்பித்தேன்

  ReplyDelete
 19. அண்ணே, ராமையா வஸ்தாவையா படம் எதிர் பார்த்து போகாதீங்க.அப்பறம் ஏமாந்து போவிருவீங்க.
  பாட்ஷா படம் அளவிற்கு கூட இல்லை.அப்படியே ஆதி படம் கதை மட்டும்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...