சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, October 29, 2013

பஞ்சேந்திரியா - ஆரம்பம் முதல்நாள் முதல்காட்சி

கொஞ்ச நாளா பதிவு பக்கமே வரமுடியல. இன்னைக்கும் விட்டுட்டா சரியா இருக்காதுன்னு தான் வலுக்கட்டாயமா உக்காந்து பதிவு போடுறேன். ச்சே வேலைக்கு போயி சமைச்சி பாத்திரம் கழுவி வீடு கூட்டி ஒரே குஷ்டமப்பா.

--------------------------------------------

ஆரம்பம் படத்திற்கு காலை நாலு மணிக்காட்சி ராக்கி தியேட்டரில் இருந்தது. கங்காவில் 5 மணிக்காட்சி இருந்தது. எப்பொழுது விஜய் டிவி படத்தை வாங்கியதாக தகவல் வந்ததோ உடனே அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. வாழ்க ஜனநாயகம்.

நேற்று நான் எனக்கும் போலி பன்னிக்குட்டிக்கு மட்டும் டிக்கெட் வாங்கியிருந்தேன். இன்று சிவாவுக்கும் செல்வினுக்கும் என் நண்பன் அசோக்குக்கும் டிக்கெட் வாங்க வேண்டி வந்ததால் மறுபடியும் பிருந்தா திரையரங்கிற்கு சென்று விசாரித்ததால் டிக்கெட் முடிந்து விட்டது என்று தெரிவித்தார்கள்.

பிறகு நம்ம பவரை பயன்படுத்தி எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து ஒரு வழியாக டிக்கெட் வாங்கி விட்டேன். ஆக 31ம் தேதி காலை ஆறு மணிக்கு நான், செல்வின், சிவா மற்றும் என் நண்பர்களுடன் பிருந்தாவில் காலை ஆறு மணிக்காட்சி ஆரம்பம்.

-----------------------------------------------------

----------------------------------------------------
குறும்பட ஆர்வம் வந்து ஏகப்பட்ட குறும்படங்கள் பார்த்தாச்சு. எதைப் பார்த்தாலும் ஒரே கேமிரா ஆங்கிள் நினைப்புத்தான். ஏன் இந்த ஷாட்டை இப்படி வைத்தான் அப்படி வைத்தான் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

நானும் செல்வினும் தான் முதலில் துவக்கினேன். பதிவர்களில் நிறைய பேர் இப்போது தொடர ஆரம்பித்து இருக்கிறார்கள். நல்ல விஷயம். இவர்களில் யாராவது ஒருவர் உயரம் தொடப்போவது நிச்சயம்.

மயிலனை வைத்து ஒரு கைக்குட்டையும் சில காதல்களும் என்ற குறும்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். வசனத்தை ஒரு பிரபல பதிவர் எழுதுகிறார். இன்னும் பதினைந்து நாட்களில் எல்லா ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளும் முடிந்து விடும். அதன் பிறகு இரண்டு நாள் படப்பிடிப்பு பத்து நாள் போஸ்ட் புரொடக்சன் முடித்து வெளியிட திட்டம்.

எதுவரை போகிறது என்று பார்ப்போம்.

---------------------------------------------------------


 -----------------------------------------------------

வடஇந்தியாகாரனுங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் இருந்து ஒருவன் சென்னைக்கு வேலைக்கு வருகிறான். ஒரு வருடத்தில் அவன் கிராமத்தில் உள்ள பெரும்பாலானோரை வேலைக்கு கொண்டு வந்து விடுகிறான்.

இப்பொழுது ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கும் அதுதான் நடக்கிறது. ஆர்ஆர்பி எக்சாம் எழுதி வேலை கிடைத்து சென்னை வந்த ராஜஸ்தானி ஒருவன் இப்பொழுது அப்ரென்ஸில் சேர்த்து விட நானூறு ஊர்க்காரர்களை அழைத்து வந்து இருக்கிறான். காலியிடம் என்னவோ 215 தான்.

நம்ம ஆட்களுக்கு இந்த விஷயத்தை சொல்லிச் சேரச் சொன்னால் அடபோங்க அண்ணே. நான் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆவேன் அல்லது ஆபீசர் ஆவேன் என்பது தான் பதிலாக இருக்கிறது.

பத்தாவது முடித்த ஒருவன் ரயில்வேயில் அப்ரெண்டிஸ் முடித்து பிறகு ஆர்ஆர்பி எக்சாமில் தேர்ச்சியடைந்தால் ஆரம்ப சம்பளமே 21000 ரூபாய். 3ம் வகுப்பு ஏசி பாஸ். வேலைப்பளு கிடையவே கிடையாது. ஆனால் இந்த வேலைக்கு வருவதற்கு நம்ம ஆட்களுக்கு கசக்கிறது.

ஆரூர் மூனா

23 comments:

  1. ஆரம்பம் - வாழ்த்துக்கள்... யாராவது ஒருவர் - பலர் உயரம் தொடட்டும்... நம் ஆட்களுக்கு சோம்பேறித்தனம் தான்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  2. /ஆர்ஆர்பி எக்சாமில் தேர்ச்சியடைந்தால் ஆரம்ப சம்பளமே 21000 ரூபாய். 3ம் வகுப்பு ஏசி பாஸ். வேலைப்பளு கிடையவே கிடையாது. ஆனால் இந்த வேலைக்கு வருவதற்கு நம்ம ஆட்களுக்கு கசக்கிறது./

    ஒரு வேளை இதே வேலை ராஜஸ்தான்ல கிடைச்சா நம்ம ஆளுங்க போவாங்களோ என்னவோ

    ReplyDelete
    Replies
    1. செய்தாலும் செய்வார்கள்

      Delete
  3. [[ ஆரம்ப சம்பளமே 21000 ரூபாய்]] மாத சம்பளமா?
    மாத சம்பளம் என்றால் முட்டாள் தமிழர்கள்! கஷ்டப்படட்டும்.

    மேலும், தண்டவாளம் போற எடமெல்லாம் ஓசிலே போகலாமே!

    நல்ல பதிவு.
    என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  4. நான் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆவேன் அல்லது ஆபீசர் ஆவேன் என்பது தான் பதிலாக இருக்கிறது. --நாமெல்லாம் அமெரிக்கா ஐரோப்பா வந்து குண்டி கழுவுற பரம்பரையாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நெத்தியடி

      Delete
  5. வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்

      Delete
  6. எனக்கும் வட இந்தியர்களை பார்த்து இதே ஆச்சர்யம் உண்டு ரயில்வே வேலை என்றில்லை, பானிபூரி விற்பவரும் இதே உத்தியை கடைபிடிபதுண்டு .

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டு தான் சலீம்

      Delete
  7. செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்வதெல்லாம்
    மேடைப்பேச்சு, வெட்டிபேச்சு என அழகாக உணர்த்தி இருக்கிரீர்கள்.

    அண்மையில் அமேரிக்கா சென்ற பொழுது, அங்கு நயாகரா பக்கத்தில் பபலோ என்ற ஒரு நகரில் ஒரு இந்திய உணவகம் இருந்தது.
    அதில் உணவு வழங்கும் நபர்களில் ஒருவராக, நம்ம பக்கத்து முகம் ஒன்று கண்டு வியந்தேன்.

    வியந்ததின் காரணம் அவர்கள் எம்.சி.ஏ படித்தவராம். திருமணம் ஆகி கணவருடன் அங்கே செட்டில் ஆகி விட்டார்களாம். கணவர் எதோ ஒரு வங்கியில் வேலை. இவருக்கு இவர் படிப்புக்கு உகந்த வேலை அதே இடத்தில் கிடைக்க வில்லை என்பதால், கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு அவர்களும் ஒரு நாளைக்கு 40 முதல் 50 டாலர் ஊதியம் பெறுகிறார்களாம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல உதாரணம் சொன்னீர்கள் ஐயா

      Delete
  8. Photo Supernna....

    -Kavitha Saran, Ernakulam

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிதா

      Delete
  9. கைக்குட்டை படம் வெற்றி பெற்று வெள்ளித்திரை பட வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகள். ப்ரிவியூ ஷோவுக்கு என்னை கூப்பிடனும் இல்லாட்டி கோவிச்சுக்குவேன். ஆரம்பம் படம் பார்த்துட்டு சீக்கிரம் விமர்சனம் போடுங்க. சினிமா ஆசையில்லாத எனக்கு என்னமோ அந்த படம் பார்க்கனும்ன்னு தோணுது,

    ReplyDelete
    Replies
    1. ப்ரிவியூ ஷோவுக்கு முதல் டிக்கெட்டு உங்களுக்கு தான்

      Delete
  10. மயிலனை வைத்து ஒரு கைக்குட்டையும் சில காதல்களும் என்ற குறும்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். வசனத்தை ஒரு பிரபல பதிவர் எழுதுகிறார். இன்னும் பதினைந்து நாட்களில் எல்லா ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளும் முடிந்து விடும். அதன் பிறகு இரண்டு நாள் படப்பிடிப்பு பத்து நாள் போஸ்ட் புரொடக்சன் முடித்து வெளியிட திட்டம்///
    மிக மகிழ்ச்சியான செய்தி... பிரமாண்ட வெற்றிபெற்று அடுத்தகட்டத்தை தொட மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரதர்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சாய்ரோஸ்

      Delete
  11. Replies
    1. ஒரு காமெடிக்கு போட்டதுங்க

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...