முதலில் வலைத்தளம் துவங்க வேண்டும். பின்ன என்ன பொட்டிக்கடையா துவங்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது மைண்ட் வாய்ஸில் கேட்கிறது. இருந்தாலும் முறையாக சொல்லித்தர வேண்டியது ஒரு சக பதிவனின் கடமையல்லவா. பின்ன எப்படி புதியவர்களை என் சார்பு ஆளாக உருவாக்குவது.
சுயநலம் என்று நினைக்கத் தோன்றுதோ, இல்லை இது பொதுநலம் கலந்த சுயநலம். எப்படி தடாகத்தில் இருக்கும் அழுக்குகளை மீன்கள் தின்று சுத்தப்படுத்துகின்றனவோ அது போல என் சார்பு ஆள் என்பது போல் தங்களை உருவாக்காவிட்டால் நீங்கள், அடுத்த ஏரியாவுக்கு சென்று என்னையே பொலி போட தற்கொலைப்படையாக மாற வாய்ப்புள்ளதால் முன்பே உசாராகி நண்பனாக்கி பக்கத்தில் உக்கார வைத்து விட வேண்டும். இது தான் நான் தங்களுக்கு கற்று தரும் பால பாடம்.
தெரிந்த பதிவர், தெரியாத பதிவர் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல், தமிழ், தெலுகு, மலையாளம் போன்ற மொழி பாகுபாடு பார்க்காமல் எல்லா பதிவருக்கும் பாலோயராக சேர வேண்டும். ஒரு நாளைக்கு நூறுக்கு குறையாமல் பாலோயர் ஆவதை வழக்கமாக கொண்டால் தங்களுக்கு 10 பாலோயர் கிடைப்பது நிச்சயம்.
அது மாதிரி நல்ல பதிவு, மோசமான பதிவு என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லா பதிவிலும் சூப்பர், அருமை, த.ம 112, கூ.பி 210 என சாத்வீக பின்னூட்டங்களை தொடங்க வேண்டும்.
இதுவரை நீங்கள் செய்தது சாத்வீக முறை, அடுத்தது பிரச்சோதகம், மெதுவாக ஒட்டகம் கூடாரத்தினுள் தலையை விடுவது போல் ஆரம்பிக்க வேண்டும்.
முதலில் சினிமாவுக்கு வருவோம். நாம் படம் வெளியாகும் நாளன்று அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் மாற்றான், கடல் போன்ற படங்கள் வெளியாகும் நாள் அன்று விடுமுறை எடுத்து சினிமா விமர்சனம் எழுதினால் ஹிட்ஸ்கள் அள்ளும்.
திரையரங்கிற்கு போகும் போதே லேப்டாப் எடுத்து செல்லுதல் நலம். சிபி செந்தில் குமார் போன்றவர்கள் படம் முடியும் முன்னே வெளியில் வந்து தோராயமாக க்ளைமாக்ஸ் முடிவு செய்து டைப்ப ஆரம்பித்து விடுவதால் தங்களுக்கு ஹிட்ஸ் சற்று குறையும்.
திரைப்படத்தை பற்றிய எந்த தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. சுமாராக நாமே ஒளிப்பதிவு சூப்பர், இசை பரவாயில்லை, படத்தொகுப்பு அருமை என அடித்து விட வேண்டும்.
அவ்வளவு தான், நீங்கள் ஒரு கட்டத்தை தாண்டி விடுவீர்கள். ஹிட்ஸ் வர ஆரம்பித்து விடும். அதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியாது. அடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பிக்க வேண்டும்.
சாப்பிடும் உணவகங்களை பற்றிய பதிவுகளை எழுத துவங்க வேண்டும். அதற்கு நான் பெரிதாக எழுதத் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்கு முக்கிய விஷயமாக கேபிளிடம் இருந்து டிவைன் என்ற வார்த்தையை கடன் வாங்கிக் கொள்ள வேண்டும். எல்லா வாக்கியத்துக்கும் டிவைன் என்று போட்டு முடிக்க வேண்டும்.
உதாரணமாக கடைக்குள் நுழைந்தேன் டிவைன். டேபிளில் அமர்ந்து மெனு கார்டை எடுத்தேன் டிவைன். சாப்பாடு சூடாக இருந்ததால் ஊதி ஊதி சாப்பிட்டேன் டிவைன் இப்படி.
அதற்காக நாம் சாப்பிடும் உணவின் சுவையை சொல்ல வேண்டிய அவசியமே கிடையாதே. நமக்குத்தான் இட்லிக்கு மாவு அரைத்த மாவுக்கு உப்பு போடாமல் இட்லி சுட்டுக் கொடுத்தால் கூட வாயை மூடிக் கொண்டு சாப்பிடும் ஆள் ஆச்சே. அதனால் என்ன பிரச்சனை.
நம்ம கோவைநேரம் ஜீவாவைப் போல் தட்டில் உணவை நாலு ஆங்கிள்களில் போட்டோவாக எடுக்க வேண்டும். பிறகு பில் பேப்பரை ஒரு போட்டோ எடுத்து பதிவில் போட்டு விடவும். முடிந்தால் வீடு திரும்பல் மோகன் அண்ணனைப் போல் சமையற்காரர், காலி தட்டு, டேபிள் சேர், விளையாடிக் கொண்டு இருக்கும் குழந்தைகள் என புகைப்படம் எடுத்து பதிவில் போட்டால் ஹிட்ஸ் அள்ளும்.
அவ்வளவுதான் நீங்கள் ஒரளவுக்கு பிரபலமான பதிவராகி விட்டீர்கள். அடுத்தது பயானகம். தங்களைப் பார்த்தால் எல்லா பதிவரும் பயப்பட்டு ஒதுங்க வேண்டும். இதற்கு நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய துறைகள் சரக்கும், மதமும். நாம கட்டிங்கிற்கு மட்டையாகும் ஆளாக கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் புல்லடித்து மவுண்ட் ரோட்டில் பைக்கில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக பதிவில் போட வேண்டும்.
மற்றொரு குடிகார பதிவரிடம் ஓப்பனாக சரக்கு அடிப்பதைப் பற்றி சாட் செய்ய வேண்டும். அப்போது தான் ஒரு குடியை வெறுக்கும் மதவாத பதிவர் அந்த சம்பாஷணையை போட்டோஷாட் எடுத்துப் போட்டு உங்கள் மானத்தை வாங்குவார். பிறகு நீங்கள் சண்டைக்கு போய் அவர் சட்டையையும் கிழித்து விட்டு உங்களது சட்டையையும் கிழித்துக் கொள்ளவும். பிறகு பதிவுலகில் நீங்கள் தான் அசைக்க முடியாத நாயகர்.
இன்னும் எழுதலாம் தான், ஆனால் இதற்கே என் சட்டை கிழிபடும் நிலை உள்ளதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இந்த பதிவில் கிழிக்கப்பட்ட சட்டையின் எண்ணிக்கையை வைத்து இதே மேட்டரை சற்று விரிவாக எழுதுகிறேன்.
ஆரூர் மூனா செந்தில்
செந்தில் அண்ணே இந்த அறிவுரையை மூன்று வருடம் முன்பு கொடுத்திருக்கக்கூடாதா? நான் விடிய விடிய கடையை தொறந்து வச்சாலும் ஹிட்ஸ் வரமாட்டீங்குதே.
ReplyDeleteஹி ஹி ஹி, நன்றி கும்மாச்சி.
Deleteஹா ஹா செம செம! - எல்லாமே சூப்பர் ஐடியாக்கள்!
ReplyDeleteநன்றி மணி.
Deleteநெசமாவே... சூப்பர்... அருமையான பதிவு...!
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteஅகா..!அருமை!
ReplyDeleteநன்றி மச்சி.
Deleteத.ம.ஏழரை
ReplyDeleteப.ஜ.க சின்னம் தாமரை..!
ஆருர் நக்ஸ் என்றாலே சரக்கு முத்திரை
இதை படிச்ச மார்க்கமான ஆளுகளுக்கு வராது நித்திரை!
கவிஞர் ஆருர் மூனா பேரவை
ண்ணா, இந்த ரவைய வச்சி உப்புமா செய்ய முடியுங்களாண்ணா.
Deleteயோவ் முன்னாடி போட்ட கமெண்ட் எக்கட...?
ReplyDeleteமச்சி, அதுவா ஸ்பேம்ல போய் உக்காந்துகிச்சி.
Deleteடிவைன்
ReplyDeleteநன்றி யோகன்.
Deleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஎன் தளத்தையும் பாருங்கள்
http://petrathu.blogspot.in
நன்றி சிவா. நீங்க செய்திருப்பது சீப்பான வழிமுறை.
Deleteஅடக்கொடுமையே...இதுல ஒரு குவாலிட்டி கூட எங்கிட்ட இல்லையே...இந்த லெட்சணத்துல டாட்காம் மெயிண்டெய்ன் பண்றதுக்கு வேற தெண்ட செலவு.
ReplyDeleteதிருவாரூர் சரவணன்
அட இதுல என்னங்க இருக்கு, இப்பவே முயற்சியை ஆரம்பிங்க, ஆறுமாசத்துல நீங்க தான் ராஜா.
Deleteஅண்ணே இது என்னோட மொதொ கமண்ட்... உங்க வழில நானும் வந்து பிராபல பதிவராக வாழ்த்துங்கண்ணே!
ReplyDeleteதமிழ் தென்றல்
முதல் பின்னூட்டம் என்பதாலும் புதிய பதிவர் என்பதாலும் வாழ்த்துக்கள். சத்தியமா இது என் வழி இல்லீங்கோ. பொதுவழி. யார் வேண்டுமானாலும் வரலாம்.
Deleteநான் சாத்வீகத்தையும் ப்ரசோதகத்தையும் கலந்து அடிக்கிறேன்னு நினைக்கிறேன்... ஹிஹி...
ReplyDeletehaiyoo..........................
ReplyDeleteநன்றி பாலா
Delete//திரையரங்கிற்கு போகும் போதே லேப்டாப் எடுத்து செல்லுதல் நலம். சிபி செந்தில் குமார் போன்றவர்கள் படம் முடியும் முன்னே வெளியில் வந்து தோராயமாக க்ளைமாக்ஸ் முடிவு செய்து டைப்ப ஆரம்பித்து விடுவதால் தங்களுக்கு ஹிட்ஸ் சற்று குறையும்.// super arumai guruve namaha.சிரிச்சி சிரிச்சி வயிறூ புண்ணாச்சி
ReplyDeleteநன்றி அன்பழகன்
Deleteநீங்க இப்டி செஞ்சதே இல்லையா சார் என்னும் வார்த்தைக் கையாடலை சேர்க்காதது குறித்து பெரிதும் வருத்தம் கொள்கிறேன்....
ReplyDeleteஇலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி என்பது குறித்தும் தாங்கள் பதிவு எழுத வேண்டும் என்பது என் அவா
சீனு நீ சொல்வதெல்லாம் ஒளிவட்ட பதிவராக வர ஆசைப்படும் நண்பர்களுக்கு, அதையும் எழுதுகிறேன்.
DeleteDivine
ReplyDeleteநன்றி விக்கி
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி அய்யா
Deleteஇந்த விஷயம்லாம் தெரியாம இத்தன நாள் காலத்த ஓட்டிட்டனே செந்தில்! அடுத்ததா ஆதிபகவன் படத்துக்கு ரிலீஸாகறதுக்கு முதல்நாளே விமர்சனம்(?) போட்டு மிகப் பிரபல பதிவர் ஆயிடறேன். ஹி... ஹி... சாப்பாட்டைப் பத்தி எழுதறது இதுவரைக்கும் டரை பண்ணலை. பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுது. அப்புறம்.... கடைசியா ஏதோ சொல்லியிருக்கீங்களே... சரக்கு, கட்டிங்னு.... அதெல்லாம் இன்னா? ஹி... ஹி....
ReplyDeleteஅண்ணே, வணக்கம்ணே. கடைசி கட்டத்துக்கு விளக்கம் சொல்லி நல்ல பதிவரான உங்களை கெடுக்க விரும்பவில்லை. ஹி ஹி ஹி.
Deleteஒரு விடயத்தை விட்டுட்டீங்களே பாஸ் சாரு பற்றி எழுதினால் பிச்சுக்குமே..... மற்ற ஐடியாக்கள் எல்லாமே சூப்பர்...எல்லாரும் அண்ணன் சி.பியால் பாதிக்கப்பட்டவர்கள் போல் இருக்கு எல்லா இடமும் புகழ் பரப்புறீங்க அவர் எப்படி ஒரே நாள்ள இத்தனை போஸ்ட் போடுறார்ன்னு புரியல பில் எகிறாது
ReplyDeleteஉங்க ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்கிறேன், அடுத்த பதிவில் போட்டு அசத்தி விடலாம்.
Deleteபின்னூட்டம் மட்டும் இடும் என்னை போன்ற சோம்பேறி பின்னூட்ட திலகங்களை (சத்தியமா அது நான் தான் )பற்றி ஒரு பதிவு போடுங்களேன்
ReplyDeleteநன்றி அஜீம்பாஷா, அடுத்த பதிவில் உங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்கிறேன்.
Deleteவாத்தியார்ன்னா இப்படியிருக்கனும்.
ReplyDeleteபுதுக்கண்ணுகளா! படிங்க..பயன் பெறுங்க:)
நன்றி ராஜ நடராஜன்.
Deleteஇன்னும் ரெண்டு மூணு பாயிண்ட் இருக்கு தலைவரே .யாராவது ஒளிவட்ட பதிவரிடம் உறன்டை இழுக்கலாம் .....சண்டை நடக்கும் இடத்தில் வான்ட்டடாக போயி ஆஜர் ஆகலாம் ..
ReplyDeleteசெல்வின் இது எல்லாம் இலக்கிய ஒளிவட்ட பதிவர் ஆவது எப்படி என்ற பதிவில் சேர்த்து கொள்கிறேன்.
Deleteடாக்டரை விட்டுடீங்களே! டாக்டரை பத்தி எழுதிட்டீங்கன்னா ஹிட்ஸ் அள்ளும்ல
ReplyDeleteநன்றி கார்த்திக், அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்.
Deleteதோழர்.ஆனா மூனா,
ReplyDeleteசீக்கிரமா அடுத்த பதிவ போட்டு கிடு கிடுன்னு ஓட்ட போடும் ஓய்.
ஒரு துலுக்கன் தமிழ்மண மகுடத்துக்கு படையெடுத்து வாரான் பாரும்.
நீதிமான் நண்பரே, நீங்கள் யார் என்று எனக்கு தெரியும், நான் யார் என்று உங்களுக்கு தெரியும், என் சட்டையை கிழிக்க முயற்சிக்க வேண்டாம். உங்களுக்கு கூட ஆடை அணியும் பழக்கம் உண்டு என்று நினைக்கிறேன். பிறகு டர்ர்ர்ரு தான்.
Deleteபொத்தாம்பொதுவாக எல்லா இசுலாமியரையும் என்று குறிப்பிட வேண்டாம். மதவாதம் பேசும் இசுலாமியர் என்று சொல்லுங்கள். என்னுடன் ரயில்வேயில் பணிபுரியும் கேங் பார்ட்னர் ஒரு இசுலாமியர் தான். நான் இந்த மாதிரி மதவாதம் பேசுபவர்களை திட்டுவது அவருக்கு கூட தெரியும். அவர் என்னை தவறாக நினைப்பதில்லை, நானும் அவரிடம் இன்றளவும் சகோதர பாசம் தான் காட்டுகிறேன்.
மதவாதம் பேசுபவர் இந்துவாக இருந்தாலும், கிறிஸ்துவராக இருந்தாலும் என் எதிர்ப்பை பதிவு செய்வேன். யாரும் எதுவும் சொல்லி விடுவார்களோ என்று யோசிக்க மாட்டேன். உங்கள் மதப்பிரச்சாரத்தை பொதுவில் வந்து வாந்தியாக எடுக்கும் போதுதான் எதிர்வினையாற்ற வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.
உங்கள் பக்தியை உங்கள் வீட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மதத்தை பெருமைப்படுத்தும் செயல் என்று நீங்கள் நினைக்கும் விஷயத்தை பரப்பினால் பெரியார் மண்ணில் பிறந்த நான் இது போன்ற மூடப்பழக்கங்களை எதிர்க்கவே செய்வேன்.
வார்த்தைகளில் கவனம் தேவை நண்பரே. இனிமேல் மதவெறி கொண்டவர்களையும் அவர்களின் பதிவுகளையும் எதிர்க்கும் ஆரூர் மூனா செந்தில் என்றே போட்டுக் கொள்ளுங்கள்.
த.ம 0 ......ஹி!!! ஹி!!! நாந்தான் மொத ஒட்டு :))
ReplyDeleteஆ.மூ.செந்தில் அவர்களே .....
ReplyDeleteகருத்து என்கிற பெயரில் இன்னான்னமொ கிறுக்குகிற பின்னூட்டவாதிகளாகிய எங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் அடுத்த பதிவில் ..
Sandaiyila kiliyaatha sattai enga irukku thalaivarae.........
ReplyDelete