சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, January 28, 2013

இந்து முஸ்லீம் இடையே பிளவை ஏற்படுத்த நினைக்கும் பதிவர்

ஒரு இசுலாமிய பதிவர் இந்த மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கிறார். முதலில் பதிவை படியுங்கள். பிறகு என் கருத்தை கூறுகிறேன்.


அமீரின் ஆதிபகவனுக்கு சிக்கல்.. இப்போது ஆட்சேபணை இந்துக்களிடமிருந்து...!
>> Monday, January 28, 2013

அமீர் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ஆதிபகவன் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

இந்தப் படம் இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி வெளியிடும் முன் படத்தைத் திரையிட்டுக் காட்டக் கோரியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களாக உள்ள கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் ‘ஜெயம்' ரவி நடித்த ‘ஆதிபகவன்' படத்துக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.

அதில், "இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்' என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார்.  தற்போது ‘ஆதிபகவன்' என்ற படத்தை எடுக்கிறார்.

‘ஆதிபகவன்' என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும்.  ‘ஆதிபகவன்' படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம்.

எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும்.

‘ஆதிபகவன்‘ தலைப்பையும் நீக்க வேண்டும்," என்று கோரியுள்ளார்.

SOURCE:http://tamil.oneindia.in/movies/news/2013/01/ameer-s-aadhi-bhagavan-trouble-now-168751.html


( இந்த அறிவு ஜீவி லேபிள்ல என்ன போட்டிருக்கு பாருங்க.)

படித்து முடிச்சாச்சா, இதை எழுதிய பெரிய மனுசன் தலைப்புல எல்லா இந்துக்களும் ஆட்சேபணை தெரிவிப்பது மாதிரி போட்டிருக்கிறார்.  ஏன்யா கொஞ்சமாவது புத்தி இருக்காதா, இந்த ஆட்சேபணை எடுத்து ஒரு மிகச்சில நபர்கள் உள்ள ஒரு அமைப்பு, அவனுங்க தான் கொஞ்சம் கூட நாகரிகமில்லாம தெண்டத்துக்கு ஒரு மனுவை கொடுத்திருந்தாங்கனாக்கா, நீங்க எப்படியா அது ஒட்டு மொத்த இந்துக்களின் கருத்தாக எடுத்துக்குவீங்க.

உனக்கு என்ன புத்தி தெரியுமா, எப்பொழுதும் இந்துவும் இசுலாமியனும் அடிச்சிக்கனும். பரபரப்பா நீங்க அரசியல் பண்ணனும், உங்க சமூகத்துல தான் தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் வேறு வழியில்லாமல் இசுலாமிய அமைப்புகளை ஆதரிக்கனும், இல்லையென்றால் புதுகை அப்துல்லா அண்ணன் இன்னும் சில இசுலாமிய நண்பர்கள் மேல் சேற்றை வாரி இறைத்த மாதிரி இறைப்பீர்கள்.

இந்துக்களுக்கு அப்படி கிடையாது. எண்ணிப் பார்த்தால் மிகச்சில அறிவில்லா உணர்ச்சி வசப்படக்கூடிய நபர்கள் மட்டுமே ஆதிபகவன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பெரும்பான்மையான இந்துக்களிடமிருந்தே ஆதரவு கிடைக்காது என்று தெரியும்.

அவர்களது அமைப்பு இந்துக்கள் மத்தியில் பிரபலமானால் போதும், அதற்கு இது ஒரு வாய்ப்பு. இது அவர்களுக்கும் தெரியும்.

ஆனால் நீங்கள் ஒரு சகுனி, கூனி, நாரதர். இரு மதத்தினர் ஒன்றாக இருந்தால் பொறுக்காது.எப்பொழுதும் அடுத்தவர் சண்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வெளங்கிடும் ராசாக்களா.

உனக்கு உன் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. கரெக்டா, உன் பெருமையை உன்னுடன் வச்சிக்கோ, என் பெருமையை என்னுடன் வச்சிக்கிறேன். நீயும் நானும் சந்திக்கும் போது மனிதத்துவம் தெரிந்தால் போதும். எப்ப தான் தங்கங்களா உங்களுக்கு புரியப்போகுது.

-----------------------------

http://vimeo.com/58302985
என்ற ஒரு வீடியோவில் ஒரு இசுலாமியர் என்று கூறிக் கொள்ளும் ஒரு வெளங்காவெட்டி பேசியிருக்கிற பேச்சப்பாருங்கள். இசுலாமியர்கள் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் சுத்தமாக விட்டுப் போகும். எங்கிருந்து வந்தது இந்தளவுக்கு உங்களுக்கு இந்துக்கள் மேல் காழ்ப்புணர்ச்சி.

நிறைய நண்பர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது போல் பேசும் நபர்கள் சவுதியிலிருந்து இயக்கபடுகிறார்கள் என்று. எனக்கு நம்பிக்கையில்லாமல் இருந்தது, என்ன தான் மதம் ஒன்றாக இருந்தாலும் இனத்தால் தமிழன் என்பதையே முன்னெடுத்து இது போன்ற விஷமப் பிரச்சாரங்களில் ஈடுபட மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அத்தனையும் பொய் என்று இப்பொழுது கண்டு கொண்டேன்.

தந்தையையும் மகளையும் சேர்த்து வைத்து வைத்து கொச்சைப்படுத்தி பேசும் உனக்கு என்ன மயித்துக்கு மரியாதை தரனும். நூறு பேரை கூட்டி வச்சி ஒரு அரங்கினுள் இது போல் வெக்கம்கெட்டு பேசினால் நீ வீரனா. மானம்கெட்டவனே.

உன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் பெண்கள், எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஜடங்கள் என்ற நினைப்பா. நான் எந்த இடத்தில் உன்னை நேரில் பார்த்தாலும் காறித் துப்புவேனே தவிர உன்னை மனித ஜென்மமாகவே நினைக்க மாட்டேன்.

எந்த ஒரு இசுலாமிய பதிவர் இந்த பயல் பேச்சுக்கு ஒத்து ஊதினாலும் அவருக்கும் இனி எங்குமே மரியாதை கிடையாது. இனி எந்த இடத்திலும் நீங்களும் நாங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்ற நிலையை எடுக்க வைத்து விடாதீர்கள்.

ஆரூர் மூனா செந்தில்


58 comments:

 1. இன்றைய மாலைமுரசிலும் செய்தியை பார்த்தேன். நீங்கள் கூறிய குற்றசாட்டு அப்படி பார்த்தால் மாலைமுரசுக்கும் பொருந்தும்.மாலை முரசு செய்திதாள் இசுலாமியர்களின் செய்திதாள் கிடையாது. என்னுடைய கருத்து நீங்கள் கமலுடைய படத்தை தடை செய்ததால் ஏற்பட்ட மனகுமறலில் உள்ளீர்கள்.அதனுடைய வெளிப்பாடு தான் இந்த இந்துத்துவ மற்றும் அமெரிக்கா அடிவருடி பதிவு.

  ReplyDelete
  Replies
  1. அய்யா நான் அந்த செய்தியை சொல்லவில்லை, அதை அப்படியே தட்ஸ் தமிழில் இருந்து காப்பியடித்து போட்டிருக்கிறார்கள். தலைப்பை தான் வில்லங்கமாக வைத்திருக்கிறார்கள். பிரச்சனை ஒய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இது தேவையா?

   இது தான் என் கேள்வி.

   Delete
 2. சகோ செந்தில்,
  நான் அமீரின் படத்தை ஆதரிக்கிறேன். இதே போல் சில விள்ங்காத இந்துத்வ ஆளுக செய்வதை எப்படி எல்லா இந்துக்களின் செயலாக சொல்லலாம்.

  அமீரின் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறேன்!!

  முஸ்லிம்கள் இப்படி சொல்லட்டுமே!!

  நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்வாகன். இதைத்தான் நானும் சொல்றேன். அமீர் இசுலாமியர் என்பதற்காக அவர் படைப்பை நான் எதிர்த்தால் நான் ஒரு அடிமுட்டாள் என்பதை நான் அறிவேன்.

   இதுக்காகவே இதை சொல்ல வேண்டியிருக்கிறது,

   ஐ சப்போர்ட் அமீர்

   Delete
 3. //என்ற ஒரு வீடியோவில் ஒரு இசுலாமியர் என்று கூறிக் கொள்ளும் ஒரு வெளங்காவெட்டி பேசியிருக்கிற பேச்சப்பாருங்கள்.
  //

  போங்க பாஸ் இவனுங்க பேச்சை ஏன் கணக்குல எடுத்துகிரிங்க ?? சூரியன பாத்து நாய் குறைத்ததாக எடுத்துக்குங்க ...

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க ராஜா. இருந்தாலும் யாராவது நாய் மேல கல்லெடுத்து விடனும்ல.

   Delete
 4. என் மதம் பெரிது என நினைப்பது தப்பில்லை
  ஆனால்
  என் மதம் மட்டும் தான் பெரிசு என நினைப்பதுதான்
  பிரச்சனைக்கு காரணாம்

  ReplyDelete
  Replies
  1. அடடா ஆசிரியரே, நெத்தியடி.

   Delete
 5. மச்சி பொறுமை..!
  அண்ணன் அப்துல்லா அவர்கள் திருப்பூரில் பொது மேடையில் பகிரங்கமாக திரைப்படத்தை தடை போடுவது பாசிசம் என்றார்,
  இந்த வீடியோவை கண்ட போது பகீரென்றது. நடுநிலையாளர்களையும் இவர்கள் இந்த பீ.ஜே குரூப் தவறாக அவதூறாக பேசி விடுமோ என் அஞ்சுகின்றேன்! அதனால் ஆதரவு தரும் இஸ்லாமிய தோழர்கள் எந்த கருத்தும் கூறாமல் இருப்பதே சாலச் சிறந்தது!

  ReplyDelete
  Replies
  1. மச்சி, இந்த பதிவின் சாராம்சமே அமீருக்கு நாம் சப்போர்ட் செய்கிறோம் என்பது தான். அப்துல்லா அண்ணன் போன்ற நடுநிலையாளர்கள் அமைதியாக இருப்பதே நமக்கு பலம் தான்.

   Delete
 6. உங்களிடமிருந்து இவ்வளவு கோபமான பதிவா ? எதிர்பார்க்கவில்லை

  நீங்கள் கமலுடைய படத்தை தடை செய்ததால் ஏற்பட்ட மனகுமறலில் உள்ளீர்கள்.

  தினமலரில் சினிமாக்காரர்களை பற்றி ஒரு செய்தி வந்த பொழுது அதை அவர்கள் கருத்து சுதந்திரம் என விட்டிருக்கலாம் ..ஆனால் அதற்க்கு எதிராக மேடை போட்டு கிழி கிழி என கிழித்துவிட்டார்கள் ..

  http://www.youtube.com/watch?v=3lMr2h0pJsw&noredirect=1

  ReplyDelete
  Replies
  1. கமலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், அவர் என்ன என் மாமாவா, சித்தப்பாவா. நீங்க வேற. அமீர் மேட்டரை வச்சி அரசியல் பண்றதைத்தான் எதிர்க்கிறேன்.

   Delete
 7. சகோ செந்தில்,

  சலாம்,

  வாஞ்சூர் அவர்களின் அந்த பதிவு உங்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியதற்கு வருந்துகின்றேன். உண்மை என்னவென்றால் அவர் தட்ஸ்தமிழ் ஊடகத்தில் வந்துள்ள செய்தியை அப்படியே பிரசுரித்துள்ளார் (தலைப்பையும் சேர்த்து).

  பார்க்க: http://tamil.oneindia.in/movies/news/2013/01/ameer-s-aadhi-bhagavan-trouble-now-168751.html

  நன்றி..

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை ஆஷிக். விளக்கத்திற்கு நன்றி. ஆனால் பிரச்சனை ஒருவருடையது இல்லை, அதுவும் நான் எந்த இசுலாமிய பதிவர்களையும் குறிப்பிடவில்லை. அமீரை எதிர்க்கும் இந்துக்களைத்தான் எதிர்க்கிறேன்.

   Delete
  2. சகோ ஆஸிக் ,

   வாஞ்சூர் பாய்க்கு எதையாவது வெட்டி(??) ஒட்டுவதே வேலை!!

   அதே போல் அவருடைய இதுதன் இந்தியா பதிவுகளுக்கும், உண்மை என்ற‌ பெயரில் பிற மதங்களை ஆபாசமாக் விமர்சிப்பதற்கும், நமது முதல்வர் நடித்த சில திரைப்பட பாடல்கள் பற்றி கூட சில விமர்சனங்கள் என் மன‌தை புண்படுத்துகிறது அதற்கும் வருந்துங்கள்!!


   நன்றி!!

   Delete
  3. செய்தி பகிர்வுக்கு ஆட்சேபனை இல்லை.. அதற்கு அவர் குடுத்துள்ள lables... சரியா...

   Delete
 8. அருமையான பதிவு செந்தில்.. கலகம் மூட்டியே கட்சியில் பெரியாள் ஆகிவிடலாம் என்று நினைகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீனு. நீங்கள் சொல்வது தான் சரி.

   Delete
 9. வெல்டன் செந்தில்!

  இது சாதாரண நெத்தியடி அல்ல. சரியான செருப்படி!

  இனியேனும், அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களும் “நாம் அனைவரும் இந்துக்கள் அல்லது இந்தியர்கள்” என்ற ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தமிழ் சிங்கம். நீங்க அஞ்சா சிங்கத்துக்கு உறவா?

   Delete
 10. இல்லை நண்பரே!

  இனியும் பொறுக்கத் தேவையில்லை.

  கமல் இவருடைய குடும்பத்தை சீண்டினாரா?

  இந்துக்களே, இனிமேலாவது ரவுத்திரம் பழகுங்கள்.

  தினமும் காலையில் பள்ளிவாசல்களில் இருந்து வரும் ஒப்பாரி சத்தத்திற்கு stay order வாங்குங்கள்.

  காலங்காத்தால குல்லா இம்சை தாங்க முடியல!

  ReplyDelete
 11. இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளில் உள்ள மத சுதந்திரத்தை சில மதவெறியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்துக்களோ, கிறிஸ்துவர்களோ மதத்தை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் சகிப்பத்தன்மையோடு இருப்பதை சில இஸ்லாமிய மதவெறியர்கள் தங்களுக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ள விழைகிறார்கள். மதத்தை பற்றி பேசாத நீங்களே கூட இப்போது இந்து என்று நினைக்க வாய்த்த இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு வித நோக்கத்தோடுதான் இப்படி செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. கமல் போன்ற ஒரு நாத்திகவாதியையே இந்து வெறியன் என கூசாமல் பேசும் இந்த மத வெறியர்கள் இந்து மற்றும் கிருஸ்துவ மதத்தை பற்றி ஏதாவது பேசினாலே அவர்களை மத தீவிரவாதி என்று முத்திரை குத்தி இந்திய அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகளுக்குள் புகுந்து இன்னும் பல சிக்கல்களை உண்டாக்குவது நிச்சயம். தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒரு மதவெறி என்னும் சுழலில் மாட்டிக்கொண்டு விட்டோம். சகிப்புத்தன்மை நமக்கு மட்டுமிருந்தால் போதாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டிய நேரமிது.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீங்க காரிகன், தங்களின் கருத்துக்கு நன்றி.

   Delete
 12. @ செந்தில்

  //http://vimeo.com/58302985
  என்ற ஒரு வீடியோவில் ஒரு இசுலாமியர் என்று கூறிக் கொள்ளும் ஒரு வெளங்காவெட்டி பேசியிருக்கிற பேச்சப்பாருங்கள். இசுலாமியர்கள் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் சுத்தமாக விட்டுப் போகும். எங்கிருந்து வந்தது இந்தளவுக்கு உங்களுக்கு இந்துக்கள் மேல் காழ்ப்புணர்ச்சி.//

  இது சம்பந்தமாக என் முகநூளில் நான் பதிந்துள்ள போஸ்ட் கீழே. மேலும் சம்பந்தப்பட்ட நபரிடம் மெயில் மூலமாகவும், தொலைப்பேசி வாயிலாகவும் கண்டனங்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்..

  ***
  பிஜே அவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனம்..

  ஏகத்துவத்தை என்னுள் இறைவன் விதைக்க காரணமாய் இருந்தவர்களில் ஒருவர் நீங்கள். உங்களின் சமீபத்திய பேச்சில் சில வார்த்தைகளை கேட்ட போது ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். மிக மோசமான முன்னுதாரணம் இது. உணர்ச்சிவசத்தில் பேசிய ஒன்றாக இருக்கும் என்றே என் மனத்தை தேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றேன். கண்ணியத்தை எங்களுக்கு எடுத்துரைத்த நீங்களா இப்படி பேசினீர்கள்? இன்னுமே நம்பமுடியவில்லை. உங்களின் இந்த பேச்சிற்கு எனது கடும் கண்டனத்தை பதிந்துக்கொள்ளும் இந்நேரத்தில் சம்பத்தப்பட்ட பேச்சுக்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
  ***

  நன்றி..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆஷிக். இது தான் சகோதரத்துவம். நிறைவுடன் சொல்கிறேன் நன்றி சகோதரரே.

   Delete
 13. எனக்கு கூடத்தான் முஸ்லிம் ஷகிலா, முஸ்லிம் ரேஷ்மா, முஸ்லிம் மும்தாஜ், முஸ்லிம் கும்தாஜ், முஸ்லிம் குஷ்பு படங்களை பிடிக்கலை. இவங்க நடிச்ச படங்களைப் பார்த்தால் கெட்டுவிடுவேன்.

  அதற்கு நான் என்ன செய்தேன்?

  இவங்க படங்களை avoid செய்தேன்.

  நீங்களும் இப்படி avoid செய்யுங்களேண்டா....!

  படம் பார்க்க பணம் கட்டுனவங்களை, படத்தைப் பார்க்க விடுங்களேண்டா......!

  ReplyDelete
  Replies
  1. ரைட்டு தான் சிங்கம். கொஞ்சம் வாங்க போங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.

   Delete
  2. ஆரூர் மூனா செந்தில்
   ரைட்டு தான் சிங்கம். கொஞ்சம் வாங்க போங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.

   நண்பரே... நான் சொல்வது மதவெறியர்களை மட்டுமே

   Delete
 14. நீங்க வாஞ்சூர் (எ) Unmaikal பத்தி சொல்லி இருக்கீங்கனு நினைக்கிறன், என்னை பொறுத்த வரை அந்த ஆள் பதிவரே, இல்ல இல்ல இஸ்லாமியாரே கிடையாது. மத வெறி பிடிச்ச பைத்தியக்காரன். தலிபான் தீவிரவாதி மாதிரி செயல்படுவான். எப்ப தான் இந்தியா அழிஞ்சு போயுரும்ன்னு காத்துகிட்டு இருப்பான். கூடிய சிக்கிரம் அவன் பண்ணுற கிரிமினல் வேளைக்கு பெருசா மாட்டுவான். என்னை பொறுத்த வரை அவனோட ப்ளாக் பக்கம் போறது கூட பாவம் தான்.

  பதிவுக்கு சம்பந்தமே இல்லாம லிங்க் கமெண்ட் மட்டுமே போடுவான், அந்த ஆளோட கமெண்ட்ஸ்சை தங்கள் பதிவுகளில் மத்த பதிவர்கள் நீக்கி விட்டாலே போதும்.

  ஹிந்து அமைப்பினர் "ஆதி பகவான்" சர்ச்சையை வீம்புக்கு ஏற்படுத்தி இருக்காங்க. முட்டாள்தனமான காரியம் இது. இதுவும் கலாச்சார பயங்கரவாதம் தான்.
  அமீர் நல்ல கலைஞன். ஹிந்துவாகிய நான் "ஐ சப்போர்ட் அமீர்"

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ். நீங்கள் என் இனம், தமிழினம். தங்களுக்கு கைவலிக்க குலுக்குகிறேன்.

   Delete
  2. செந்தில்,
   அமீர் முஸ்லிம் என்கிறதே இப்ப தான் எனக்கு Strike ஆகுது.

   Delete
  3. "நீங்க வாஞ்சூர் (எ) Unmaikal பத்தி சொல்லி இருக்கீங்கனு நினைக்கிறன், என்னை பொறுத்த வரை அந்த ஆள் பதிவரே, இல்ல இல்ல இஸ்லாமியாரே கிடையாது. மத வெறி பிடிச்ச பைத்தியக்காரன். தலிபான் தீவிரவாதி மாதிரி செயல்படுவான்."

   ராஜ் நீங்கள் சொல்வது மிகவும் சரி. நான் அவரை பல இடங்களில் மத வெறி பிடித்த மிருகம் என்று திட்டி பின்னோட்ட மிட்டிருக்கின்றேன். இதுவரை வேறு எந்த இஸ்லாமிய பதிவரையும் திட்டியதில்லை.

   அமீர் நல்ல கலைஞன். பிறப்பால் கிரிஸ்தவனாகிய நான் "ஐ சப்போர்ட் அமீர்"

   உண்மையில் தமிழ் நாட்டில் நடப்பது குறிப்பிட சொற்ப எண்ணிக்கை கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் (வகாபிகள்) நடத்தப்படும் மதவாத அரசியல்.

   இதனால் பெரும்பான்மையாக இருக்கும் அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களை எதிரிகளாக/விரோதிகளாக பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கினேன்.

   இன்னொரு மோசமான மதவாத வெறி பிடித்தவர் "மர்மயோகி" என்ற பெயரில் பதிவு போடுகின்றார்.


   Delete
 15. தங்களின் கோபம் நியாயமானது...சில நல்ல பாயிண்டுகளை தவிர்த்து மோசமான தனி நபர் தாக்குதலில் ஈடுபட்ட அந்த பேச்சின் தன்மையை நானும் கண்டிக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஹாஜா மைதீன். இதுதான் சகோதரத்துவம்.

   Delete
 16. நீயும் நானும் சந்திக்கும் போது மனிதத்துவம் தெரிந்தால் போதும். எப்ப தான் தங்கங்களா உங்களுக்கு புரியப்போகுது.
  உண்மையான உங்களின் கேள்வியை எல்லோரும் புரிந்துகொண்டால் மதமின்றி மனிதனாக முடியும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவியாழி அண்ணே.

   Delete
 17. விருமாண்டியானாலும், விஸ்வரூபமானாலும், ஆதிபகவன் ஆனாலும் கருத்து சுதந்திரத்தின் பக்கமே நிற்போம்.

  மதவெறி பிடித்த கழிசடைகளை விட்டுத்தள்ளுங்கள் செந்தில்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி செங்கோவி.

   Delete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. //கமலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், அவர் என்ன என் மாமாவா, சித்தப்பாவா. நீங்க வேற. அமீர் மேட்டரை வச்சி அரசியல் பண்றதைத்தான் எதிர்க்கிறேன்.//மிகச் சரியான கூற்று.இவ்வளவு கோபத்துடன் நீங்கள் பதிவிட்டு இதுவரை படித்ததில்லை.நடுநிலையாளர்களின் எண்ணத்தை நன்றாகவே எடுத்துரைத்துள்ளீர்கள்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி சுஜி.

   Delete
 20. ஆ.மூ .செந்தில் அவர்களே ,
  //‘ஆதிபகவன்' என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும். ‘ஆதிபகவன்' படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். //
  இந்துக்களின் ஆதிபகவான் சிவபெருமான் [தந்தை ] இங்கே பிள்ளையார் [மகன் ]எப்படி,எப்போது ஆதிபகவான் ஆனார் என்பது புரியவில்லை ..!!
  மேலும் ஆதிபகவான் என்பது பொதுப்பெயர் ,முஸ்லிம்களும் ,கிறித்துவர்களும் ,இந்துக்களும் சொல்வதுதான் ..இதில் ஆட்சேபனை ஏதுமில்லை ஒருவேளை படத்தில் மத உணர்வுகளை சீண்டியிருந்தால் ,யார்வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம் ...உ .த .உச்ச மன்ற தீர்ப்பு உள்ளது .....
  ஆமிரின் படம் பார்க்காமலேயே தாங்கள் ஆமிருக்கு சப்போர்ட் செய்வது வியப்பாக உள்ளது ...ஒருவேளை படப்பெயர் 'ஆதிபகவான் ' உள்ளே பக்கா 'ஜல்சா ' இருந்தாலுமா ...??!!
  அதுசரி இந்துமத வேதத்தின் படி ஆதிபகவான்
  'விஷ்ணு ' உண்மை இப்படியிருக்க , இங்கே சிவபெருமாள் ??? ஒரே குழப்பமாக இருக்கே ..
  ஒருக்கால் அந்த வக்கீலுங்க தப்பா சொல்லிட்டாங்களா இல்லே நீங்க தப்பா எழுதிட்டிங்களா ...??!!
  கருத்து சுதந்திரம் ,படைப்பு சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்றால் நாளைக்கே அமெரிக்காவை போல பக்கா BF படங்கள் வந்தால் , நீங்கள் ஆதரிப்பீர்களா ..??
  நல்லவேளை "பிதா மகன் " தப்பித்து விட்டது இல்லேன்னா டைரக்டர் பாலாவை கிறித்துவர்கள் ஒரு வழி பண்ணியிருக்கலாம் .
  இனி இது போல தமாசுகளை அடிக்கடி நாட்டுல பார்க்கலாம் ...ஹா ...ஹா ..ஹா

  ReplyDelete
  Replies
  1. சகோ நாசர்,
   நாம் நாத்திகர் என்றாலும் , மதப்பிரச்சாரம் செய்யும் கலை நன்கு அறிந்தவர்.

   உங்களுக்கு என்ன பிரச்சினை ஆதிபகவான் என்பது எப்படி சிவன்,வினாயகர் என இருவரையும் குறிக்கும் எனப்துதானே!!

   நல்லா கேளுங்கோ.
   இந்துமதம் என்பது ஒருமதம் அல்ல பல மதங்களின் கலவை.ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு முழுமுதற் கடவுள். காலப்போக்கில் மதங்கள் இணைய வேண்டி இருந்ததால் , ஓவ்வொரு கடவுளுக்கும் ஒரு உறவும் கற்பித்தார்கள்

   ஆகவே சிவ பெருமான்,வினாயகர் உள்ளிட்ட இருவருமே ஆதிபகவன்தான்!!

   நம்ம் உலகின் அருட்கொடை நபி(சல்) அவர்களும் காஃபிர் குரேசிகள் வணங்கி வந்த சில கடவுள்கள் பெயரை மட்டும் வைத்து அவை அனைத்தும் ஒரே கடவுளின் அம்சம் என ஓரிறை மதம் உருவாக்கினான்ர்.
   அல்லாவின் 99 பெயர்களும் குரேசிகளின் 99 வெவ்வேறு கடவுள்கள்,
   ஆகவே 99 கடவுள்கள் சேர்ந்து ஒரே கடவுள் ஆகும் போது, ஒரு க்டவுள் இன்னொன்றின் மகன் ஆவதில் த்வறு இல்லை!!

   இன்னும் கேள்வி கேட்கலாம்!!
   http://en.wikipedia.org/wiki/Names_of_God_in_Islam

   http://www.hknet.org.nz/names-of-Allah-page.htm

   http://www.ldolphin.org/impersonal.html

   Thank you

   Delete
  2. அய்யா, அவரது லேபிளையும் பார்த்து விட்டு கருத்து சொல்ல வந்திருக்கலாம்.

   Delete
  3. தங்களின் விளக்கங்களுக்கு நன்றி சார்வாகன்

   Delete
 21. தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் நிச்சயம் கமலுக்கு மிக முக்கிய பங்குண்டு. தன் படம் தோல்வி அடைந்தாலும் மாற்று சிந்தனை முயற்சியில் தளராமல் தடம் பதித்துக்கொண்டிருப்பவர். உலக நாயகன், மகா கலைஞன் என்று போற்றுபவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், சேவை வரி செலுத்த முடியாத ஏழைகளான சக கலைஞர்கள் உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் போட தெரிகிறது, ஆனால் தன் சக கலைஞன் பாதிக்கப்பட்டுள்ளானே என்று ஒரு அறிக்கை கூட விட தெரியவில்லை. உலக நாயகன் இன்று தனித்து விடப்பட்டுள்ளார் என்று நினைக்கும் போது மனம் கணக்கிறது. இதில் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு கலைஞனோ அல்லது அவனது பொருளாதாரமோ அல்ல, மாறாக கருத்துரிமை களவாடப்பட்டுள்ளது.இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் சாதனை பெட்டகத்தை திறந்து பார்க்கையில் மிச்சம் இருக்க போவது அலெக்ஸ் பாண்டியன் போன்ற மலிவான எச்சங்களே!!!... சிறந்த படைப்புகள் வளராமலேயே சவக்குழிக்குள் சென்றிருக்கும்.. அதற்கான சாவு மணி தான் இன்று அடிக்கப்பட்டுள்ளது!!!... (விஸ்வரூபம் பிரச்னையை சந்தித்த முதல் நாள் முகநூளில் என் பதிவு.. ஒரு சில மதவெறியர்கள் செய்யும் பிரச்சனையால் மனம் சங்கட பட்டு போய் உள்ளது.
  )

  ReplyDelete
 22. //கருத்து சுதந்திரம் ,படைப்பு சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்றால் நாளைக்கே அமெரிக்காவை போல பக்கா BF படங்கள் வந்தால் , நீங்கள் ஆதரிப்பீர்களா ..??///

  BF மாதிரி படத்துக்கு எல்லாம் இந்தியாவுல சென்சார் கிடைக்காது பாஸ். வேணுமா கள்ள மார்க்கெட் இல்லாட்டி மூர் மார்கெட்ல் ஒளிச்சு விப்பாங்க. தியேட்டர்ல எல்லாம் படத்தை ரீலீஸ் பண்ண மாட்டாங்க.

  ReplyDelete
  Replies
  1. நல்ல மார்க்கெட்டுக்கும் கள்ள மார்க்கெட்டுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை ராஜ்.

   Delete
 23. "நீங்க வாஞ்சூர் (எ) Unmaikal பத்தி சொல்லி இருக்கீங்கனு நினைக்கிறன், என்னை பொறுத்த வரை அந்த ஆள் பதிவரே, இல்ல இல்ல இஸ்லாமியாரே கிடையாது. மத வெறி பிடிச்ச பைத்தியக்காரன். தலிபான் தீவிரவாதி மாதிரி செயல்படுவான்."

  ராஜ் நீங்கள் சொல்வது மிகவும் சரி. நான் அவரை பல இடங்களில் மத வெறி பிடித்த மிருகம் என்று திட்டி பின்னோட்ட மிட்டிருக்கின்றேன். இதுவரை வேறு எந்த இஸ்லாமிய பதிவரையும் திட்டியதில்லை.

  அமீர் நல்ல கலைஞன். பிறப்பால் கிரிஸ்தவனாகிய நான் "ஐ சப்போர்ட் அமீர்"

  உண்மையில் தமிழ் நாட்டில் நடப்பது குறிப்பிட சொற்ப எண்ணிக்கை கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் (வகாபிகள்) நடத்தப்படும் மதவாத அரசியல்.

  இதனால் பெரும்பான்மையாக இருக்கும் அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களை எதிரிகளாக/விரோதிகளாக பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கினேன்.

  இன்னொரு மோசமான மதவாத வெறி பிடித்தவர் "மர்மயோகி" என்ற பெயரில் பதிவு போடுகின்றார்.  ReplyDelete
 24. இசுலாமிய பதிவர்கள் அதுவும் தமிழில் பதிவு எழுதுபவர்கள் பொது தளங்களில் இங்கிதம் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள்.

  அவர்கள் பதிவில் ஒரு மறுமொழி இட்டால் உடனே அசுலாம் அழைக்கும், இன்சா அல்ஹா என்று தெறிவிக்கிறார்கள் அதற்கு பதில் அழகிய தமிழில் வணக்கம் நன்றி போன்ற சொற்க்களை பயன் படுத்தலாமே.

  யாராவது ஜெய் ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் ஸ்ரீராம் என்று வனக்கம் கூறினால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்பார்களா?

  ReplyDelete
 25. "யாராவது ஜெய் ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் ஸ்ரீராம் என்று வனக்கம் கூறினால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்பார்களா?"
  இனிமேல் நான் அந்த முறையை கைகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

  கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  ReplyDelete
 26. எல்லோரும் மரியாதையாக பின்னூட்டம் போட்டிருப்பதால் எனது கண்டனத்தை மட்டும் பதிவு செய்கிறேன்..!

  ReplyDelete
 27. இது போன்ற அசாதாரணமான சூழ்நிலையில் நாம் வரம்பு மீறாமலும் வார்த்தைகளில் நாகரிகத்தை கடைபிடித்தும் பக்கச்சார்பின்றியும் முதிர்ச்சியாகவும் செயல்பட்டு, நாம் பதிவர்கள் என்ற ஒற்றுமையைக் காக்க கடமைப்பட்டுள்ளோம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்து சொல்லி, மேலும் பிரச்சினையை சிக்கலாக்கி சமூகத்தின் அமைதியை கேள்விக்குறியாக்காமல், பதிவர்கள் என்ற முறையிலும் இந்தியர்கள் என்ற முறையிலும் இப்பிரச்சினையை அணுகுவோம். சக முஸ்லிம் பதிவர்கள் தவறிழைக்கும் போது கண்டிக்கும் போக்கை சென்ற காலங்களிலும் முஸ்லிம் பதிவர்கள் செய்த வரலாறு உண்டு என்று நினைவுப்படுத்திக்கொள்வோம். இந்த சூழ்நிலையில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிய உதவும். ஒரே இனம், ஒரே மொழி, ஒரே தேசம். வழிபாடு மட்டுமே வெவ்வேறு என்பதை நினைவுப்படுத்திக்கொள்வோம்.

  ReplyDelete
 28. இன்னும் கொஞ்சம் காரமா நான் போடலாம்ன்னு நினைத்திருந்தேன் . நீங்க முந்திகிட்டீங்க .
  இங்க ஏற்க்கனவே ஒரு சிங்கம் வந்து குதறிட்டி போயிருக்கு போல் .
  அந்த வீடியோ ......ஹ்ம்ம் என்னத்த சொல்ல இப்போ தான் அவரு இனிசியலுக்கு ஏத்தமாதிரி பேச ஆரம்பிச்சிருக்காரு ...

  ReplyDelete
 29. இந்து மத வெறியர்களால் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று(ஜன 30).
  காந்தியை சுட்டுக் கொன்ற R.S.S.காரன் கோட்சே கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்திக்கொண்டு இசுலாமியர்களின்மீது பழிபோட முஸ்லிகளைப் போல் சுன்னத் செய்து கொண்டிருந்தான்.
  அந் நெருக்கடியான சூழலில் மத வெறியர்களின் கலவரத்தை தடுக்க தந்தை பெரியார் அவர்கள் வானொலி மூலமாக பேசினார். மக்களுக்கு தெளிவுபடுத்தினார். காந்தியை சுட்டுக் கொன்றவன் இசுலாமியர் அல்ல. தயவு செய்து எங்கேயும் மதக் கலவரங்கள் வரக்கூடாது என்று சொன்னார்.அமைதி காக்கவேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
  அதற்குப் பிறகு காந்தியாரைச் சுட்டுக்கொன்றது கோட்சே என்ற மராத்திய பார்ப்பனன் என்ற தகவல் வெளியானது. தந்தை பெரியார் அவர்கள் எழுதினார்கள் துப்பாக்கிப் பிடித்த கைக்குப் பின்னாலே என்ன சதி என்பதைத்தான் பார்க்கவேண்டுமே தவிர வன்முறை கூடாது. எந்த பார்ப்பனர்க்கும் யாரும் தீங்கு செய்துவிடக் கூடாது என்று தந்தை பெரியார் அவர்கள் வேண்டுகோள் விடுத்து அமைதி காத்தார்.
  காந்தியார் அவர்கள் சுடப்பட்ட செய்தி கேட்டவுடன் அன்றைய பம்பாய் மாநிலத்தில் பல பகுதிகளில் அக்ரகாரங்கள் சூறையாடப்பட்டன. மராத்திய பார்ப்பனர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை மொரார்ஜி தேசாய் அவர்கள் ஆதாரப்பூர்வமாக எழுதியிருந்தார்கள்.ஆனால் தமிழ்நாட்டிலே அதுபோன்ற கலவரங்கள் நடைபெற்றதா? கிடையாது. எதற்காக இதை சொல்லுகின்றோம். நாங்கள் மனித நேயத்தை மறக்காதவர்கள்.
  நன்றி ; விடுதலை 21.12.06

  ReplyDelete
 30. ‎1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

  2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

  3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

  4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

  5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

  6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

  7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

  8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

  9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

  10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

  11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

  12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

  13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

  14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?
  ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

  15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

  16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

  2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

  2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

  2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

  2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

  2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

  2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

  2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

  2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

  2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

  2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

  2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

  2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

  2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

  இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.


  இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

  மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.


  இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

  இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

  இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.


  Thanks to CBI, NIA, ATS, Indian Press Release websites.

  ReplyDelete
 31. எல்லாவற்றுக்கும் ஆதாரம் வைத்துள்ளார்களாம் எதுய்யா அதாரம் afganishtan காரன் போய் அமெரிக்க மேல குண்ட போட்டானா, அவன் பாட்டுக்கு அவன் நாட்டுல இருக்கான் நீ பொய் அவமேல குண்ட போட்டா அவன் என்ன பூ செண்டு குடுத்து உன்னை வரவேர்பானா.இன்னொரு விஷயம் பின்லேடன் உன்னைவிட அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியா இருந்தான் அவன் கதி என்ன ஆச்சு , அதே கதிதான் உனக்கும்.

  எங்கள் உறவுகளை உயிரோடு எரித்தீர்கள் ,தாயின் வயிறை கிழித்து குழந்தையை எடுத்தீர்கள், சொத்துக்களை அளித்தீர்கள் நங்கள் பொறுமை காத்தோம் , அனால் எங்கள் மார்க்கத்தை இழிவு படுத்தினால் நங்கள் போருதுகொள்ளமட்டோம் ஏனென்றால் அது எங்கள் உயிரை,செல்வத்தை விட மேலானது, என்றேனும்ஒருநாள் சாகத்தான் போகிறோம் அது எங்கள் மார்கத்திற்காக இருந்தால் அதை விட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை .

  ReplyDelete
 32. @ சகோ சார்வாகன்

  ஒரு கதம்பமான பதிலை கொடுத்துட்டீங்க உங்க பதிலை நீங்க சார்ந்திருக்கும் கூட்டமே ஏத்துக்காது ...
  சகோ நாகூர் மீரான் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது
  நாத்திக முகமூடி போட்டுக்கொண்ட பக்கா ஆத்திகன் என்று ..
  உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் தளம் இதுவல்ல .
  பின்னொரு நாளில், வேற தளத்தில் சந்தித்து நிறைய பேசுவோம்
  நாகரீகமாக ....இறைநாடினால்
  இங்கே ஒருத்தர் [ஷாஹிப் ஷா] என்னமா பொங்குறார் ...
  அவர அடக்க முடியுமா கொஞ்சம் TRY பண்ணுங்களேன் ..!!

  @ ஆ.மூ.செந்தில்

  VIMEO வீடியோவை பார்த்தேன் , சங்கடமாக இருக்கிறது ....அப்படி பேசியிருக்க கூடாது அதற்காக எப்போவாது அவர் நினைத்து வருந்துவார் என்றே நினைக்கிறேன் ....
  விடுப்பில் ஊருக்கு போகும் அவசரத்தில் இருந்ததினால் உடனே ஆத்திகர் சார்வாகனுக்கு பதில் அளிக்க முடியவில்லை...
  எதிலும் கட்டுப்பாடு இல்லா சுதந்திரம் அழிவையே தரும்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...