சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, February 19, 2013

பிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி.

ஏற்கனவே பிரபல பதிவராவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா. அதன் அடுத்த கட்டம் இலக்கிய ஒளிவட்ட பதிவராவது. இதற்கு நாம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். சில பல வம்பு வழக்குகள் இருக்கும். அதில் சத்தமில்லாமல் சரண்டாகி சமாதானமாகி விடும்.


முதலில் கவிதைகள். பெரிய விஷயமெல்லாம் இல்லை. நாலு வார்த்தைகள் சேர்த்த மாதிரி டைப்படித்து ரெண்டு ரெண்டு வார்த்தைகளுக்கு ஒரு முறை எண்டர் அடித்தால் கவிதை வந்து விடும்.

அடுத்த கட்டமாக எதுகை மோனை பொருத்தமான இரண்டு வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு அம்மா சும்மா. சோறு போட்டு ஊட்டி விட்டாள் அம்மா, அவளுக்கு முன்னால் எல்லாரும் சும்மா. எப்பூடி. அவ்வளவு தான். இதை வைத்து சில மாதங்கள் ஒட்ட வேண்டும்.

நம்மைப் போல கவிதை என்ற பெயரில் சில பேர் கொலையா கொன்டுகிட்டு இருப்பாங்க. அவங்க பதிவுக்கு போய் கவிதை புரியவில்லை என்றாலும் அருமை சூப்பர் என்று பின்னூட்டமிட்டு ஓட்டையும் போட்டு விட்டு வர வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கியவாதி பதிவரும் உங்களுக்கு ஓட்டு போடுவார்.


கவிதைகளை போட்டு புரட்டி எடுத்து ஒரு வழி ஆக்கிய பின்னர். பின்நவீனத்துவம் என்ற பகுதிக்கு வர வேண்டும். எனக்கு கூட இப்ப வரை பின்நவீனத்துவத்துக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் எந்த பதிவிலும் அந்த வார்த்தை வருகிற மாதிரி பார்த்துக் கொள்கிறேன் அல்லவா, அது தான் பின்நவீனத்துவம்.

பெரிய கவிஞர் ஆகிவிட்டோம் என்று முடிவெடுத்த பின்னால் எழுதிய எல்லா மொக்கைக் கவிதைகளையும் எடுத்து புத்தகமாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கவிதை புத்தக வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்.

விழாவுக்கு பதிவர்களை அழைக்கும் போது கொஞ்சம் மிரட்டும் தொனியில் பேச வேண்டும். அதாவது விழாவுக்கு வர வேண்டும் அல்லது புத்தகத்தை படித்து விட்டு மதிப்புரை எழுதித்தர வேண்டும் என்று சொன்னால் எல்லாப்பதிவரும் தானாக வந்து விடுவார்கள்.


வந்தவர்களையும் சும்மாவிடக்கூடாது. புத்தகத்தை இலவசமாக கொடுக்கும் போது முதல் பக்கத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். கூடவே போட்டோவும் எடுத்து பதிவில் போட்டு அசத்த வேண்டும். இப்படி கவிதையை கொலையாக் கொன்ட பிறகு அடுத்தக் கட்டத்திற்கு தாவ வேண்டும்.

ஷகீலா, சிலுக்கு இவர்களைப் பற்றி கட்டுரைகள் எழுத வேண்டும். சும்மா ஹிட்ஸ் பிச்சிக்கிக்கும். நாம் மட்டும் தான் எழுத உரிமை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் இது போல் எழுதினால் ஆபாச பதிவர் என்ற பட்டம் கொடுத்து சிரிக்க வேண்டும்.

வார்த்தைகளை புதிதாக போட்டு அசத்த வேண்டும். ஆகச்சிறந்த, அவதானிப்பு, படுதிராபை போன்ற வார்த்தைகளை எல்லாப்பதிவிலும் இடம் பெறும்படி செய்ய வேண்டும். இன்னும் சிவப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களில் உள்ள வார்த்தைகளை எடுத்து கையாள பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.


இதுவரை நமது பதிவில் பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி சொல்லி வந்த நாம், இனி யாரையும் மதிக்கக்கூடாது. யாருக்கும் பின்னூட்டமும் இடக்கூடாது. நம்மளை எந்த பதிவர் கேள்வி கேட்டாலும் போடா வாடா என்று அழைத்துதான் பதிலளிக்க வேண்டும்.

புத்தங்கள் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒரு அட்டுத் தொடர் எழுத வேண்டும். இனிப்புத் தண்ணி என்ற பெயரில் எழுத ஆரம்பிக்க வேண்டும். தொடரின் ஒவ்வொரு பகுதியும் நெஞ்சை நக்க வேண்டும். பிறகு ஏதாவது ஒரு இளிச்சவாய ஸ்பான்சரைப் பிடித்து பாதி காசு நாம் போட்டு ஒரு புத்தகத்தை வெளியிட்ட பின்பு அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை நம் பதிவின் வலது மூலையில் இடம் பெறும் படி லேஅவுட் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பதிவர் சந்திப்புக்கு அடிக்கடி வரக்கூடாது. வந்தாலும் எந்த வேலையும் இழுத்துப் போட்டு செய்யக்கூடாது. கலந்து கொண்ட பதிவர்களையும் இளக்காரமாக பார்க்க வேண்டும். பதிவர் சந்திப்புக்கு வரும் போது சரக்கடித்து தான் வர வேண்டும். அடிக்கடி ஹா ஹா என சத்தம் போட்டு சிரிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் எல்லார் கவனத்தையும் நம் பக்கம் ஈர்க்கும்படி செய்து அசத்தி விடலாம்.

ஒரு இலக்கிய அமைப்பை பிடித்து அதன் அமைப்பாளர்களிடம் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்து அவர்கள் கொடுக்கும் ஒரு விருதை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நம் வலைப்பக்கத்தில் வழக்கம்போல மாட்டிக் கொள்ள வேண்டும்.

இனி பதிவுகளில் எழுதுவதை குறைத்துக் கொண்டு ப்ளஸ்ஸில் அதிகம் இடுகைகளை இட வேண்டும். அதுவும் புதிதாக எழுதத் தொடங்கியவர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்க வேண்டும். அவர்களை குண்டான் வாயன், அண்டா வாயன் என்று அழைத்து பரிகாசம் செய்ய வேண்டும்.

முக்கியமாக முன் முகம் நாயின் பின்பக்கம் போல இருக்கு என்று அசிங்கமாக பேசி எதிராளியின் வாயைப்பிடுங்கி அவர்கள் நிதானம் தவறி கெட்ட வார்த்தைகளை விட்டதும் நம்முடைய பின்னூட்டங்களை சத்தம் போடாமல் டெலிட் செய்து விட வேண்டும். அவ்வளவு தான். இனி வரும் எல்லாக் காலங்களிலும் நாம் தான் இலக்கியப் பதிவர்.




ஆரூர் மூனா செந்தில்

98 comments:

  1. ஹா... ஹா... பிச்சி உதறிட்டீங்க... ஒளி வட்டம் இப்படி தானா...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. இப்படிதாங்க....சம்பந்தமே இல்லாம கமெண்ட்,,,,,பதிவு போட்டு,,,,

      கீழ பாருங்களேன்.....உலக மகா கமெண்ட்ஐ.....

      இப்படியே மெயின்டைன் பண்ணிங்கன்னா கமெண்ட் நிறிய வந்து,,,,,,எல்லா திரட்டியிலும் முன்னாடி வரும்.....

      மத்த கமெண்ட்ஐ படியுங்கள்.....பாருங்கள்.....

      பதிவு புரியும்.............

      Delete
  2. இவ்வளவு செஞ்சு என்ன லாபம் , சுய தம்பட்டம் அடிசுக்கிலமே தவிர விவரம் தெரிஞ்ச யாரும் மதிக்க மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது நமக்கு எதுக்கு பாஷா, பிரபலமானா பத்தாதா?

      Delete
  3. உங்க தலைக்கு பின்னாடியும் ஒரு ஒளிவட்டம் தெரியுதுங்களே சகோ!அது வர இப்படித்தான் முயற்சி செய்தீங்களோ!

    ReplyDelete
    Replies
    1. அப்படியிலீங்க நாம அந்த பக்கம் போகலீங்க. இலக்கியம் நமக்கு அலர்ஜியாச்சே.

      Delete
  4. ரொம்ப விவரமாவே கிளாஸ் எடுத்திருக்கீங்க! தேங்க்ஸ்!

    ReplyDelete
  5. எனக்கு கூட இப்ப வரை பின்நவீனத்துவத்துக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் எந்த பதிவிலும் அந்த வார்த்தை வருகிற மாதிரி பார்த்துக் கொள்கிறேன் அல்லவா, அது தான் பின்நவீனத்துவம்// ஹி ஹி அங்க நிக்கிறீங்க நீங்க

    பதிவுலகத்தில இவளவும் இருகா புதுசால்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி நன்றி கிருத்திகன்

      Delete
  6. பிரபல பதிவராக மட்டுமில்லை... பிராப்ள பதிவராக ஆகலாம்...

    பின்நவீனத்துவமான (!) பதிவு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.

      Delete
    2. ஏன்யா தெரியாத மாதிரியே நடிக்குற......??????
      செந்தில்......இதுவும் ஓ.வ.ப,----ரா???????????????

      Delete
    3. அண்ணா மன்னிச்சிடுங்கண்ணா, இந்த பின்னூட்டமும் எனக்கு புரியல. எவ்வளவு பெரிய எலக்கியவியாதிக்கும் புரியாத பின்னூட்டம் போடுறதுல நீங்க கில்லிண்ணா.

      Delete
    4. கர்ர்ர்ரர்ர்ர்ர்....................ம்ம்ம்மம்மம்ம்ம்ம் அதேதான்........

      Delete
    5. வாயா..........வா.........ஜோடி போட்டுக்கொவோமா.............ஜோடி..........

      Delete
    6. வேணாம்......திருந்திட்டியா......அப்படின்னு பட்சி.......சொன்னுச்சி............

      Delete
    7. யோவ் ஊருக்கே தெரியுமேய்யா, உனக்கும் எனக்கும் தான் சோடின்னு. இந்த சோடிய அடிச்சிக்க வேற குரூப்ப சோடி போட்டு வரச் சொல்லு பார்ப்போம்.

      Delete
    8. அண்ணாத்த பொங்குறத பார்த்தாக புல் டைட் போல இருக்கே.

      Delete
    9. நான் தானேய்யா திருந்தினேன். நீங்க எல்லாம் பயங்கர பார்ம்ல இருக்கீங்க போல இருக்கே.

      Delete
    10. அது இனி தான் தேடனும்....
      ஆனால்....கிடைக்காது.............

      இரும்....

      கொஞ்சம்.___________ பிறகு வருகிறேன்.......

      Delete
    11. சரி சரி எனக்கு புரியுது. ஐயம் வெயிட்டிங்

      Delete
  7. //முதலில் கவிதைகள். பெரிய விஷயமெல்லாம் இல்லை. நாலு வார்த்தைகள் சேர்த்த மாதிரி டைப்படித்து ரெண்டு ரெண்டு வார்த்தைகளுக்கு ஒரு முறை எண்டர் அடித்தால் கவிதை வந்து விடும்.////

    அருமையான கண்டுபிடிப்பு அன்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்

      Delete
  8. ஆகச்சிறந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. அவதானிப்பான பாராட்டு, இருந்தாலும் நன்றி கோகுல்

      Delete
  9. நம்மள வச்சு காமடி கீமடி பண்லயே...வேணும்னா சொல்லுங்க கவிதைங்கற பேர்ல கிறுக்குறத விட்டுர்றேன்...அவ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் இல்லீங்க ரெவரி. இதை பிரிச்சிப் பார்த்தால் எல்லாப் பதிவருமே சண்டைக்கு வருவாங்க. பொதுவாப் பாருங்க. இது சம்பந்தப்பட்ட ஏகப்பட்ட பேரு உங்களுக்கு ஞாபகம் வரும்.

      Delete
  10. அடடா.... இதெல்லாம் எனக்குத் தெரியாம போச்சே....

    தெரிஞ்சிருந்தா....
    ம்ம்ம்... இனிமேல் தெரிஞ்சி என்ன வர போவுது.
    உங்கள் பதிவைப் படிச்ச எல்லோரும் இன்னேரம்
    ஒளிவட்டம் வாங்கிவிட்டு இருப்பார்கள்.

    கடைசியா வர்றது நமக்குப் பிடிக்காது.
    அதனால் ஆரூர் அண்ணா... உங்கள்
    கண்டுபிடிப்புகளை நான் கடைபிடிக்க மாட்டேன்.

    பகிர்வு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா செல்வம்

      Delete
  11. அருமை. இந்தப் பதிவைப் படித்ததில் நான் அவதானித்தது என்னவென்றால், இது ஒரு ஆகச் சிறந்த பதிவுல் என்பதுடன் பின் நவீனத்துவ கோட்பைக் கொண்டு எழுதப்பது என்றே தோன்றுகிறது. இதற்கு எதிர் பதிவு ஏதேனும் எழுதப் பட்டால் அது ஒரு படு திராபையான ஒன்றாக இருக்கும் என்பதே திண்ணம். ;-)

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதிவை படித்ததுமே நீங்கள் இந்த அளவுக்கு முன்னேறி விட்டீர்கள் என்றால் நீங்கள் தான் உண்மையான இலக்கிய ஒளிவட்ட பதிவர்

      Delete
  12. கூகிள்காரன் புண்ணியத்துல எல்லாம் நடக்குது.
    யார் படிச்சாலும் அவங்கள சொல்ற மாதிரியே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன்

      Delete
  13. செந்தில்......உன் திராபையான கமெண்ட் செக்ஸயன்ஐ
    தூக்கிவிட்டு--OPEN IN NEW WINDOW தாயா......

    கொலையா...கொல்லுது.....

    ReplyDelete
    Replies
    1. மாத்திடுறேன் தல.

      Delete
  14. நீ மாத்தாத வரை நான் வர மாட்டேன்........

    உனக்கு நிம்மதி......!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் நீங்க உண்மைய படக்குன்னு போட்டு உடைச்சிடக் கூடாது

      Delete
  15. மக்களே...பார்த்துக்குங்க...........இந்த மாதிரி கமெண்ட் செக்சன் வச்சாலும் நீங்க.....பி.ஒ.வ.பதிவர் ஆகலாம்.........

    இதுக்கு உண்டான தனி அமன்ட் வந்துடனும்......

    :))))))))))))

    ReplyDelete
    Replies
    1. இதுல க்ளூ வேற குடுப்பிங்களாண்ணே நீங்க வெளங்கிடும்.

      Delete
  16. //இதுவரை நமது பதிவில் பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி சொல்லி வந்த நாம், இனி யாரையும் மதிக்கக்கூடாது// இதுதான் ரொம்ப முக்கியம்.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, நமக்கு ஏதாவது ஒன்னு தெரிய வந்ததுன்னா அது வேற ஒருத்தருக்கும் தெரியாது அப்படின்னு முடிவு செஞ்சுக்கனும். உதாரணத்துக்கு சூரியன் கிழக்கே உதிக்கும் அல்லது வாயினால்தான் சாப்பிட வேண்டும் - அப்படிங்கறத ஒரு பதிவா போடனும்.

    தனக்கு தெரியாத விஷயங்களே உலகத்தில் இல்லை என்று நம்புவதும் ஒரு முக்கிய சங்கதி. ஏதாவது பின்னூட்டங்கள் சிறிதே அளவு விமர்சனமாக வந்தாலும் அதை சொல்பவர்களை எதிரிகளாகவும் தன்னுடைய புகழையும் முன்னேற்றத்தையும் கண்டு பொறுக்க முடியாத பொறாமைக் காரர்களாகவும் எண்ண வேண்டும். அந்தப் பின்னூட்டங்களை ஒன்றையோ இரண்டையோ மட்டும் வெளியிட்டு தன்னை ஒரு ஜனநாயக வாதியாக காட்டிக் கொள்வது மிக மிக முக்கியம். மற்றதை வெளியிடக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இம்ம்புட்டு சீரியஸ்.............?????????

      யோவ்வ்வ் செந்திலு காரு.........
      உமக்கு வெட்ரிடியா...........என்ஜாய்...........

      உமது நோக்கம் .........நிறைவெரிடுச்சி............

      Delete
    2. வெற்றி.....
      மாத்தி படிக்கவும்.......

      :))))))))))))))

      Delete
    3. சரியாக சொன்னீர்கள் அமரபாரதி.

      Delete
    4. நக்ஸூ நம்மளால ரெண்டு பேரு பிரபலமானா நமக்கு சந்தோசம் தானே

      Delete
  17. யோவ்வ்வ்வவ்வ்வ்வ்...FB-ல நீ எந்த கருமத்தையாவது விளையாடும்........

    அத மத்தவங்களுக்கு அனுப்பி டார்ச்சர் பண்ணுறாங்க பாரு....அவங்களும்....

    ஒ.வ.பதிவர்தான்யா...............

    (நான் உன்னை சொல்லலை.....)

    :)))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. அது இல்லையா அவனுங்களா ரெக்வஸ்ட் போற மாதிரி வச்சிருக்கானுங்க, எனக்கே தெரியல, நான் என்ன பண்ணுவேன்.

      Delete
  18. நக்கீரன் அண்ணே புல் பார்ம்ல இருக்காரு போல.

    ReplyDelete
    Replies
    1. இல்ல இல்ல. இப்ப வரைக்கும் ஆப் பார்ம்ல தான் இருக்காரு. 12 மணிக்கு தான் ஃபுல்லத்தொடும்.

      Delete
    2. அவருக்கு ஆப் க்கு எல்லாம் பார்மே வராதுன்னுல்ல கேள்விப் பட்டிருக்கேன்.

      Delete
    3. அதனால தான் இப்ப வரைக்கும் அண்ணன் ஸ்லோ பார்ம்ல இருக்காரு. இல்லைனா அவரு கூட வாதம் பண்றதுக்கே இன்னொருத்தரு ஃபுல்லடிச்சிட்டு வரணும்.

      Delete
  19. சீரியஸ் இல்ல அண்ணே, சிரியஸ் மட்டும் தான். இன்னும் நிறைய இருக்கு. செந்திலோட அடுத்தடுத்த பதிவுகள்ல பின்னூட்டமா போடலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. அதான் வரும் பதிவுகள்....அப்படின்னு தலைப்பு கொடுத்திருக்காருள்ள...........

      பதிவு வரலைன்னா............

      செந்தில் தானே தற்கொலை பண்ணிப்பேன்னு என்கிட்டே ரகசியமா
      சொன்னதை நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேனே.........!!!!!!!!

      Delete
    2. அட, நீங்களே ஒரு பதிவா போட்டுடுங்க அமரபாரதி.

      Delete
    3. //தானே தற்கொலை பண்ணிப்பேன்னு // அடடே தானே பண்ணினாத்தாண்ணே அது தற்கொலை இல்லன்னா அது கொலை.

      Delete
    4. அப்படி இல்லைய்யா, எனக்கு ஒரு இடத்துல இந்த தலைப்புல பதிவு போடனும்னு தோணும். ஆனா கொஞ்ச நேரத்துல மறந்துடுவேன். மறக்கக்கூடாதுன்னு தான் சைடுல எழுதி வச்சிருக்கேன். எப்ப எனக்கு ப்ளாங்க்கா மைண்ட் இருக்கோ ஒரு தலைப்ப எடுத்து பதிவா எழுத ஆரம்பிச்சிடுவேன்.

      Delete
    5. //நீங்களே ஒரு பதிவா போட்டுடுங்க அமரபாரதி.// பாத்தீங்களா, உங்களுக்கு நான் என்ன செஞ்சேன். எட்டு வருஷமா சோதனைப் பதிவு ஒன்ன மட்டும் வெச்சுக்கிட்டு பின்னூட்டரா மட்டும் சந்தோஷமா இருக்கேன். எனக்கில்ல அது. எனக்கு வேண்டாம்.

      Delete
    6. இவ்வளவு விஷயங்கள் வச்சிருக்கீங்களே, தயங்காம சும்மா எழுதுங்க பாஸ். சந்தேகமிருந்தா ஒரு டிராப்ட் எழுதி அனுப்புங்க. நான் படிச்சிட்டு நல்லாயிருக்குன்னு சொன்னா வெளியிடலாம்ல.

      Delete
    7. அப்படி இல்லைய்யா, எனக்கு ஒரு இடத்துல இந்த தலைப்புல பதிவு போடனும்னு தோணும். ஆனா கொஞ்ச நேரத்துல மறந்துடுவேன். மறக்கக்கூடாதுன்னு தான் சைடுல எழுதி வச்சிருக்கேன். எப்ப எனக்கு ப்ளாங்க்கா மைண்ட் இருக்கோ ஒரு தலைப்ப எடுத்து பதிவா எழுத ஆரம்பிச்சிடுவேன்.//////////////////////////////////////////////////////////


      அப்ப நீதான்யா...உலகம் என்ன ....சூரிய குடும்பத்திலேயே நம்பர் ஒன்.............

      நான் சொல்லுவது....சூரியன் ,நிலா,செவ்வாய் குடும்பத்தை பத்தி.......

      இனி யாராவது கமெண்ட் போடுவாங்க...???????????

      Delete
    8. இவ்வளவு விஷயங்கள் வச்சிருக்கீங்களே, தயங்காம சும்மா எழுதுங்க பாஸ். சந்தேகமிருந்தா ஒரு டிராப்ட் எழுதி அனுப்புங்க. நான் படிச்சிட்டு நல்லாயிருக்குன்னு சொன்னா வெளியிடலாம்ல.//////////////////


      ஒரு தற்கொலை நிச்சயம்..........
      அந்த குடும்பத்தை யார் காப்பாத்துவான்களோ???????????

      Delete
    9. ம்ஹூம். செந்தில் மாதிரி பதிவர்கள் எழுதுவதைப் படிப்பதே போதும் ;-)

      Delete
    10. எதுல நம்பர் 1 அப்படிங்கிறத தெளிவா சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

      Delete
    11. நாங்கள்லாம் ஸ்டேடியத்துல உக்காந்துக்கிட்டு கை தட்டற ஆளுங்க. இறங்கி விளையாடுறவங்க இல்ல.

      Delete
    12. ஏன்யா நீங்கதான் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. எழுத வர்றவங்களையும் ஏங்கானும் தடுக்கறீர்.

      Delete
    13. அப்படியில்ல அமரபாரதி. உங்க எழுத்து நடை நல்லாயிருக்கு. தயக்கத்தை மட்டும் உடைங்க, நாங்களெல்லாம் படிச்சி மகிழ்வோம்ல.

      Delete
    14. விளையாடிப் பாருங்க அமரபாரதி.

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
    16. செந்தில் அண்ணே, தங்களுக்கு ஓட்டுவதற்கு இன்று வேறு யாரும் கிடைக்கவில்லையா? வாருங்கள் ஒன்று சேர்ந்து வேறு யாரையாவது ஓட்டுவதற்கு பிடிப்போம்.

      Delete
  20. யோவ்வ்வ்வவ்வ்வவ்வ்வ்......
    வவ்வால் பதிவ படிக்க ஒரு நாள் ஆகும் போலயே.....

    படிக்க விடுங்கையா..........

    பெரியயயய்யயயயய்யாய பதிவு............

    ReplyDelete
    Replies
    1. நான் படிச்சிட்டேன். நீ படிச்சிட்டு வா. நான் கிளம்புறேன். குட்நைட்.

      Delete
    2. எந்த ரூம்........??????
      நம்பர்,,,,,லாட்ஜ் பேர் என்ன......???????

      Delete
    3. ம் சித்த வைத்தியர், ரூம் நம்பர் 130, AS லாட்ஜ், வடக்கு வீதி, சிதம்பரம். போதுமா

      Delete
  21. நான் படிச்சிட்டேன். நீ படிச்சிட்டு வா. நான் கிளம்புறேன். குட்நைட்.//////////////////

    கதை விடாதீரும்....

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா படிச்சேங்க.

      Delete
  22. இப்படி விட்டுட்டு போனாலும்........அவரும் ஓ.வ.பதி........தான்........

    ReplyDelete
    Replies
    1. ஏங்க தூக்கம் வருதுங்க.

      Delete
  23. யாத்தே... எம்புட்டு பின்னூட்டங்கள்...

    குறிப்பிட்ட இரண்டு பேரின் மீது தனிமனித வன்மத்தை கக்கியிருக்கும் ஆரூர் மூனாவிற்கு என் கடுமையான கண்டனங்கள்...

    இந்த பதிவுக்கும் ஒளிவட்டங்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஜின் ஜாக்.....ஜின் ஜக்,,,,,

      இதுவும் யாரையுன் குறிப்பிடுபை அல்ல....(^&#&^&*(^&*$^&^@&*^#^$&^&^$*&)(*&@).......
      பேர் இந்த குறியீடில் இருக்கு......

      @ பிரபா....
      யார்கிட்ட.....?????????

      Delete
    2. அவங்க பாட்டுக்கு செவனேன்னு போயிக்கிட்டு இருக்காங்க. ஏன் பிரபா வேட்டிக்குள்ள இழுத்து விடுற.

      Delete
  24. நான் ரொம்ப லேட். இருந்தாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போகிறேன்.

    பதிவு அட்டகாசமா இருக்கு. நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கந்தசாமி அய்யா.

      Delete
  25. Replies
    1. நன்றி மனோகரன்

      Delete
  26. மச்சி உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி

      Delete
  27. //இன்னும் சிவப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களில் உள்ள வார்த்தைகளை எடுத்து கையாள பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.//

    அண்ணே அது சிலப்பதிகாரம்னு நெனைக்கிறேன் .....

    ReplyDelete
    Replies
    1. தப்புத்தப்பா எழுதினாலும் அவங்க பிரபல பதிவர் தானுங்கோ.

      Delete
  28. Replies
    1. நன்றி கார்த்திக்

      Delete
  29. பதிவர்கள் பல விதம் என் பிரச்சனை என்னவென்றால் வாஜ்ஜுர் என்பவனால் என் மன நிலை பாதிக்கப் படுமோ என்ற பயம் தாங்க முடியல அவன் வாந்திய என்னை போன்று எத்தனை பேர் தமிழ்மணம் வர பயந்து திரும்பிச் செல்கிறார்களோ.......

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு முதல் மணி கட்டியப்பவே திருந்தியிருக்கனும். விடுங்க ரெண்டாவது மணிய பெரிசா கட்டுவோம். நேரமிருந்தால் இன்னைக்கு கட்டப் பாக்குறேன்.

      Delete
  30. வழிமொழிகிறேன் செந்தில்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுமதி.

      Delete
  31. Best One Senthil.. Recent days your writing shows lot of maturity and values..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மோகன்.

      Delete
  32. நன்றி தமிழ் இளங்கோ. நான் படித்து விட்டு என் கருத்தை பகிர்கிறேன்.

    ReplyDelete
  33. தலைப்பை மட்டும் தாங்க பார்த்தேன்(நேரமின்மை தான் காரணம்). பார்க்கும்போதே தெரியுது அனைத்து பதிவர்களுக்குமே பயனுள்ள பதிவுனு. இப்போதைக்கு எனக்கு இது தேவைப்படல. முதலில் அரைகுறையாக எழுதக்கூடிய நான் ஒரு பதிவராக முயற்சி செய்றேன். அப்புறம்தான் எல்லாம்.

    உங்கள் தளத்திற்கு வருவது இதுவே முதல் முறை. நேரம் கிடைக்கும்போது இந்த பதிவையும், மற்ற பதிவுகளையும் படிச்சிட்டு கருத்துசொல்றேன்.

    மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...