சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, July 30, 2012

பஞ்சேந்திரியா - ககன் நரங் உடன் செத்தக்கிளி

லண்டன் ஒலிம்பிக் 2012ல் இந்தியாவுக்கு முதல் பதக்கம் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. இறுதிப் போட்டி துவங்கியதிலிருந்தே முன்னணியில் இருந்த ககன் 7வது சுற்றில் சட்டென்று 4ம் இடத்திற்கு இறங்கிப் போய் அதிர்ச்சியளித்தார்.

அடுத்த சுற்றில் சுதாரித்துக் கொண்டு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்து இந்தியாவின் பதக்க வேட்டையை துவக்கி வைத்துள்ளார். சாமானியனாக நடக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாட்டில் ஏகப்பட்ட கோபம் இருந்தாலும் இந்த வெண்கலப் பதக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ககன் நரங்கிற்கு தோத்தவன்டா வலைப்பதிவின் வாழ்த்துக்கள். இந்தியாவின் பதக்க வேட்டை தொடரவும் வாழ்த்துகிறது.

--------------------------------

ரயில்வேயில் சக ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருப்பது பலப்பல புதிய தகவல்களை சுவாரஸ்யத்துடன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் 55வயதை கடந்தவர்கள் ஆனால் கடந்த 35 வருடங்களாக ஒரே குழுவாக பணியாற்றிக் கொண்டிருப்பதால் வாடா போடா என்று தான் அழைத்துப் பழகி கலாய்த்துக் கொள்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் ராஜேந்திரன். வயது 59. மற்றவர்கள் அவரை செத்தக்கிளி, செத்தக்கிளி என்று கலாய்ப்பார்கள் (காரணம் கூறவும் வேண்டுமோ). நேற்று பயங்கர கடுப்பாகி ஒரு கதையை எடுத்து விட்டார் பாருங்கள் நான் சிரித்து முடிக்க மட்டும் கால் மணிநேரமாகியிருக்கிறது.

கதை இதுதான். நம்ம கதாநாயகர் ராஜேந்திரன், சில வருடங்களுக்கு முன்பாக ராஜமுந்திரியின் அருகில் இருக்கும் பெத்தாபுரம் சென்றாராம். பெத்தாபுரம் என்ற ஊர் எதற்கு புகழ்பெற்றது என்பது வாலிப வயோதிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நம்ம ஹீரோ ஒரு விடுதிக்கு சென்று ஒனரம்மாவிடம் (ஹீரோயின்) கில்மாவிற்கு புகழ்பெற்ற சரசம்மா (துணை ஹீரோயின்) வேண்டும் என்று கேட்டாராம்.

அந்த விடுதி என்பது முழு அறையாக இருக்காது. ஒரு பெரிய வராண்டாவில் தட்டி வைத்து சிறுசிறு தடுப்புகளாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும்.சரசம்மாவை ஒரு தடுப்புக்குள் நம்ம ஹீரோ அழைத்துச் சென்று கில்மாவை ஆரம்பித்தாராம். சிறிது நேரத்தில் 'ஆ' 'ஐயோ' 'அம்மா' என்று அலறல் ஒலி வெளியில் கேட்டிருக்கிறது. பயந்து போன ஓனரம்மா என்ன ஏது என்று விசாரிக்க தடுப்புக்குள் நுழைந்து 'ஏன் சத்தம் போடுகிறாய்' என்று கேட்டாராம்.

சரசம்மா 'இவர் பயங்கர அப்பாடக்கரா இருக்கிறார் என்னால் சமாளிக்க முடியாது' என்றாராம். அதற்கு சிரித்த ஓனரம்மா அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ. அந்த காலத்தில் பெரிய கில்மாவான என்னை சமாளி என்று சவால் விட்டு களத்தில் இறங்கினாராம். மீண்டும் சிறிது நேரத்தில் 'ஆ' 'ஐயோ' 'அம்மா' என்று அலறல் ஒலி வெளியில் கேட்டதாம். எல்லாம் முடிந்ததும் வெளியில் வந்த ஹீரோ ஓனரம்மாவிடம் காசை கொடுத்தாராம். ஓனரம்மா வெட்கப்பட்டுக் கொண்டே 'உனக்கு மட்டும் ஃப்ரீ' என்றாராம்.

கதையை சொல்லிவிட்டு அடுத்து ஒரு பஞ்ச் டயலாக் அடித்தார். என்ன தெரியுமா "என்னை கலாயக்காதீங்கடா என் கிளி இப்பக்கூட கொத்தும் தெரியுமா"

----------------------------------

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான நுழைவுத்தேர்வு வரும் டிசம்பரில் நடைபெறுகிறது. அதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாள் நாளை. எனவே B.Sc (Physics), ITI மற்றும் அப்ரெண்டிஸ் முடித்தவர்கள் நாளை மாலை 05.30க்குள் RRB அலுவலகத்தில் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும். நேரமில்லை என்று நினைப்பவர்கள் நேரடியாக RRB, Chemmai அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விடலாம். அலுவலகம் அமைந்துள்ள இடம் எழும்பூரில் எத்திராஜ் காலேஜின் பின்புறம்.

மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்து விடாதீர்கள். நாளை கடைசி.

-----------------------------------

சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்திற்கு DEEE மற்றும் BE(EEE) முடித்தவர்களுக்கான இன்டர்வியூ சென்னையில் வரும் 9 மற்றும் 10ம் தேதி நடைபெறுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவை senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் அல்லது 8883072993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

------------------------------------

இனிதே பிறந்த நாள் காணும் பிறந்ததிலிருந்து இன்று வரை யூத்தாக மட்டுமே இருக்கும் எங்கள் அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள் பல்லாண்டு காலம் பூத்துக்குலுங்கும் இளமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அதே போல் அதே நாள் பிறந்த நாள் காணும் வாழும் வரலாறு, கழக போர்வாள், புதுக்கோட்டையின் சங்கம், எங்கள் தங்கம் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களுக்கு புதுகை அப்துல்லா பாசறையின் சார்பாக பிறந்தநாள் வாழத்துக்கள்.

ஆரூர் மூனா செந்தில்


26 comments:

  1. ககன் நரங் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    கேபிள் சங்கர் அவர்களுக்கும், புதுகை அப்துல்லா அவர்களுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு நன்றி...
    (த.ம. 2)



    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  2. missed to mention which medal narang get...& congrage to narang.....bt worry coz bindra losses......

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரிசெய்து விட்டேன் பாலகணேசன்

      Delete
  3. ககன் நரங்கிற்கு வாழ்த்துக்கள். துப்பாக்கி சுடுதல் தவிர்த்துப்பார்த்தால் இந்தியாவிற்கு குத்து சண்டையில் தான் அடுத்த வாய்ப்பு.

    ----------

    யூத்தான மூத்த பதிவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    --------
    ஓய் அங்கே நெல்லூர்ல 50 பேரு டிரெயின் தீவிபத்துல உயிரோட கருகி செத்துட்டாங்க,நீர் என்னனா பெத்தாபுரத்தில கிளிக்கொத்தின கில்மா கதைய சொல்லிக்கிட்டு இருக்கீர்,அதுவும் ரயில்வேய்ல இருந்துக்கிட்டு?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதைப் போல் தான் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.

      -----

      ஹி ஹி சும்மா ஒரு பகிர்வுக்கு ஜொள்ளலாம்னு சே சொல்லலாம்னு.

      Delete
  4. கலந்து கட்டி அருமையான பதிவு .. என் நன்றிகள் சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரசன்

      Delete
  5. Replies
    1. அண்ணே சொல்ல வந்தத புரியுற மாதிரி சொல்லிட்டுப் போங்க, எப்பப் பார்த்தாலும் கமல் மாதிரி புரியாமலே பேசிக்கிட்டு, அடுத்த முறை நேர்ல பார்த்தேன், நடுமண்டையில நங்குன்னு கொட்டிப்புடுவேன்

      Delete
    2. நக்ஸ்னு பேரு வச்சிருக்கார்ல நக்கல்ல அக்குள்ல வச்சிருப்பார் அதான் சிரிக்கிறார்..சொல்லிட்டு சிரிச்சா நாங்களும் கூட சேர்ந்து சிரிப்போம்ல :-))

      Delete
    3. வேணும்னா நக்ஸ் அண்ணனுடைய செல் நம்பர் தர்றேன் வவ்வால். ஒருமுறை பேசிப்பாருங்க. அப்ப உணருவீங்க எங்க அண்ணன் யாருன்னு. நீங்க தயாரா?

      Delete
    4. மூனா,

      அவரு எங்க மாவட்டம் தானே ,பின்ன என்ன மாதிரி நக்கலா தான் இருப்பார்.நான் வேற அடிக்கடிப்பொயிட்டு வர்ர ஊரு ,எதாவது ஏடாக்கூடாமா கோர்த்து விட்ராதீர் ,வாண்டியார் ஆள் வச்சு போட்டுறப்போறார் என்னை :-))

      Delete
    5. எங்க அண்ணன் அவ்வளவு டெரர் எல்லாம் இல்லை. அதனால நீங்க பயப்பட வேண்டாம் வவ்வால். ஒரு முறை பேசிப் பார்த்து விட்டு என்ன ஃபீல் பண்றீங்கன்னு சொல்லுங்க அது போதும்.

      Delete
    6. காத்திருக்கிறேன்...வௌவால்....
      தொலை பேசவும்...

      Delete
    7. நான் ரோஓஓஓம்ப சாது வவ்வால்....
      நக்கல்னா என்னான்னே தெரியாதுன்னா பார்துக்குங்களேன்....
      :-))))))

      Delete
    8. ஆமா எங்கண்ணன் ரொம்ப நல்லவரு அவ்வ்வ்வ்வ்.....

      Delete
    9. யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...செந்திலு.....
      இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி....???????

      சட்டு புட்டுன்னு கான்பிரன்ஸ் போட்டு தர்றது.....

      Delete
    10. ஆனா ஒண்ணு...நீ குறுக்கால பெசப்பிடாது....
      சொல்லிபுட்டேன்....

      Delete
    11. வவ்வால்..நக்கி மாமா கூட போன்ல பேசறதுக்கு கூவத்துல குப்புற டைவ் அடிக்கலாம்! எனக்கும், ஆருர் மூனாவுக்கும் தான் அந்த கலவரம் பத்துன நிலவரம் தெரியும்.

      Delete
    12. ஏன்....?எங்களுக்கு தெரியாதாக்கும்.....!

      யோவ் நக்ஸ் சும்மா இந்தபக்கம் வந்தேயா.!போனை போட்டாறதையா...?
      எதோ செத்தகிளின்னு சொன்னாப்டி! வந்தேன்!

      Delete
    13. ஆஹா, என்னை காலி செய்ய ஒரு சதி திட்டமே தீட்டி இருக்காரே மூனா,

      சிவகுமார்,

      வாத்து சிக்கும் வவ்வால் சிக்காது, தண்ணியில கூட தடம் பார்ப்போம்ல :-))

      Delete
    14. எப்படி தலை...உங்களை பத்தி நீங்களே பேசிக்கிட்டா எப்படி...??????????????

      கொஞ்சம் போன் பன்னி தான் பாக்குறது....

      இந்த..தீ குளிப்பையும் தாண்டிதான் வரது...??????????

      (எப்படியும் மெயில் தடம் அறிதல் வச்சிருப்பார்...வருவாரூஊஊஉ.....)

      Delete
    15. உடனே வந்தா..சில பேரை கலாய்க்கலாம்.......
      நாம செத்து செத்து விளையாடலாம்....

      Delete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்களும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களும்! அருமையான தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
  7. ஏதோ வெங்கலமாவது கிடைச்சுதே வாங்கி கொடுத்த ககன் நரங் அவர்களுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பு

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...