தூறல் நின்னு போச்சு படம் நேற்று ஆதித்யாவில் பார்த்தேன். இந்த படத்தை எத்தனை முறை பார்த்துள்ளேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு மிக மிக பிடித்த படம் நான் விரும்பும் வாழ்க்கை இது போன்ற கிராமத்தில் தான் இருக்கிறது.
வெள்ளந்தியான கிராமத்து மனிதர்கள் இயல்பாக காட்டப்பட்ட மிகச் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று. நம்பியார், செந்தாமரை, செந்தில், சூர்யகாந்த் போன்ற கதாபாத்திரங்கள் எனது பூர்விக கிராமத்தில் அச்சு அசலாக இருந்தனர்.
பெண்பார்க்கும் படலம் கூட அச்சு அசல் அப்படியேத்தான் இருக்கும். என் அத்தையை பெண் பார்க்க வந்த போது நடந்த சம்பவங்கள் இப்படித்தான் இருந்தது. அதுவும் மாப்பிள்ளை 4 வருசமா பியுசி படித்தவர் என்ற வசனம் இதுபோன்ற பெண்பார்க்கும் படலங்களில் சகஜமாக புழங்கப்பட்ட ஒன்று.
இன்று கிராமங்கள் அதற்கான அடையாளத்தை இழந்து விட்டன. அதுவும் முக்கியமாக என் தாய்வழி கிராமமான ஆதனூர் நகரத்தின் சாயலை தன்னையறியாமலே அடைந்து விட்டன.
வெள்ளந்தி கிராம பெண்கள் தாவணியை கைவிட்டு நைட்டிக்குள் அடைக்கலமாகி விட்டனர். சைக்கிள்களில் மாலைப் பொழுதுகளில் நீடாமங்கலத்திற்கு போய் பொழுதை கழித்து வரும் பழக்கம் பரணுக்குள் போய் விட்டது.
பம்புசெட்டில் அரைமணி நேரம் வரை குளிக்கும் பழக்கம் அந்த ஊர்க்காரனுக்கு கூட மறந்து போய் விட்டது. கிராமத்து துவக்கப்பள்ளிகளில் படித்த குழந்தைகள் போட்டோக்களில் மட்டும் தான் நிற்கின்றனர்.
துவக்கப்பள்ளிக்கு நீடாமங்கலமும் மேல்நிலைப்பள்ளிக்கு மன்னார்குடியும் தஞ்சாவூரும் ஆதனூருக்கு புறக்கால் கம்பளம் விரித்து காத்திருக்கிறது. பள்ளிப்பேருந்துகள் மணிக்கொரு தரம் புறப்படுகின்றன.
ஆண்டுக்கு இரண்டு மூட்டை நெல் வாங்கி வீட்டிற்கே வந்து முடி வெட்டிய மருத்துவர்கள் சென்னைகளில் மேன்சன்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். சைக்கிளில் ஆட்டுக்கறி கொண்டு வந்து வீட்டுக்கு வீடு எடை பார்த்து வெட்டிக் கொடுத்த கரீம்பாய் காலமாகிவிட அவரது வாரிசுகள் அரபுநாடுகளில் வேலைபார்க்கின்றனர்.
பண்ணையாட்களாக வேலை பார்த்து வந்து ராசு, மருதன், வேலாயி, அளப்பி போன்றோர் 100 நாட்கள் வேலைநாள் திட்டத்துடனும் ரேசன்கடை இலவச அரிசியுடனும் வீடுகளிலேயே சன்டிவியின் மதிய நாடகங்களை துணைக்கு வைத்துக் கொண்டு தேங்கி விட்டனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு முப்போகம் விளைந்த தாத்தாவின் தெற்கே உள்ள நிலம் தரிசாகி கிடக்கிறது. மேற்கே உள்ள நிலம் தென்னந்தோப்பாகி விட்டது. தாத்தா காலத்து விவசாயிகள் சுடுகாட்டில் எரிக்கப்பட்டு விட்டனர்.
இப்பொழுது எனக்கு கோவம் கோவமாக வருகிறது எதற்கு என் அப்பாவுக்கு அரசு வேலை கிடைத்தது, எதற்காக அவர் கிராமத்தை விட்டு நகரத்திற்கு வந்தார். நான் ஏன் நகரத்தில் படித்தேன், ஏன் பிழைப்புத் தேடி பெருநகரத்திற்கு வந்தேன், ஓய்வு பெறும் காலம் வரை ஏன் இங்கேயே வாழ வேண்டியிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் மிஞ்சி நிற்பது யோசனை மட்டும் தான். அதற்கான காரணங்கள் மட்டும் கிடைக்கவே இல்லை.
நான் ராமராஜனை ஆதர்ச நாயகனாக ஏற்றுக் கொண்டதற்கு காரணம் கூட என் கிராமத்து பாசம் தான் என்று எண்ணுகிறேன். அரண்மனைக் கிளியை கொண்டாடுகிறேன். புதுநெல்லு புதுநாத்து பாடல்களை அனிச்சையாக என் வாய் முணுமுணுக்கிறது.
விரும்பிய கிராமத்து வாழ்க்கையும் கிடைக்காமல், கிடைத்த பெருநகர வாழ்க்கைக்குள்ளும் கவனத்தை திசை திருப்ப முடியாமல் இருதலைக் கொள்ளியாக தவிக்கிறேன்.
நான் பணியிலிருந்து ஒய்வு பெற்று ஒரு கிராமத்தில் தான் வாழ உச்தேசித்தேன். ஆனால் அந்த காலக்கட்டங்களுள் அந்த கிராமம் கூட சென்னைக்கு நிகராக வளர்ந்து விடுமோ என்ற அச்சம் தான் எனக்குள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆரூர் மூனா செந்தில்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...
ReplyDeleteநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே...
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே...
திண்டுக்கல் சித்தர் தனபாலன் வாழ்க வாழ்க
Deleteஆம்.நிச்சயம் மறக்க முடியாதது .ஆனாலும் மீண்டும் மீண்டும் விரும்புவதுதான் கிராமத்து வாழ்க்கை
ReplyDeleteநன்றி கவியாழி அண்ணே
Deleteஅதே நிலைமையில் தான் நானும் உள்ளேன் ஆரூர் மூனா அண்ணா ...........
ReplyDeleteநன்றி நண்பா
Deleteபுலி வாலை பிடித்தாயிற்று.. தப்ப வேறு வழி இல்லை.
ReplyDeleteஒரு வகையில் எல்லோரும் அப்படி தான்.. அது நகரமோ அல்லது வேறு நாடோ!!!
சரியாகச் சொன்னீர்கள்
Deletenowadaysnvillages are in noway better than a city
ReplyDeleteநன்றி சிவஞானம்ஜி
Deletenowadays villages are in noway better than a city
ReplyDeleteநமது கிராமங்கள் செத்து பலவருடம் ஆகிவிட்டது
ReplyDeleteகடல் பயணங்கள் சுரேஷ் எழுதிய இந்த பதிவா முடிஞ்சா படிங்க :(
http://www.kadalpayanangal.com/2013/09/blog-post_23.html
நன்றி கமலக்கண்ணன்
Deleteஅநேகமாக எல்லா நகரங்களில் வாழும் மனிதர்களுக்கும் இந்த கவலை வந்து விட்டது என்று சொன்னால் மிகையாகாது ...நாம் திரும்பி செல்வதற்கு முன் சென்னையை விட ,அமெரிக்காவை விட கிராமங்கள் முன்னேறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கிராமங்கள் மாறக்கூடாது என்று நினைப்பது ஒரு வகையான சுயநலம்....யாருக்குதான் இல்லை சுயநலம்...அன்புடன்.....
ReplyDeleteநன்றி சேவியர்
Deletenanum pala murai yosichu irukken nakara valkai vidavum kirama valkaitan arokiyamakavum santhoshamakavum irukkum enru. anal kalam maariyathal namum mara vendi irukku sir.
ReplyDeleteநன்றி மகேஷ்
Deleteபோகிற போக்கில் கிராமங்கள்என்பதே வார்த்தைகளில் மட்டும்தான் இருக்கும்
ReplyDeleteநன்றி ஜெயக்குமார்
Deleteஅருமையான, மனதை கிளரும் பதிவு நண்பரே..... நான் சென்ற வாரம் இதே போல் ஒரு பதிவை எழுதினேன், அதை படித்தால் உங்களுக்கும் பிடிக்கலாம்......
ReplyDeletehttp://www.kadalpayanangal.com/2013/09/blog-post_23.html
உங்கள் பதிவை ஏற்கனவே படித்து விட்டேன். நன்றி சுரேஷ்
Deleteமறுபடியும் ஒரு ஆட்டோகிராப்பா...லவ் போர்சன காணோம்...எங்கள மாதிரி கிராமத்துல இருக்கறவங்களுக்கு நகரத்துக்கு போகணும்னு ஆசை..உங்களுக்கு கிராமத்துக்கா...
ReplyDeleteநன்றி முருகேசன்
Deletearumaiyaana ninaivugal .....
ReplyDeleteniraya perukku idhey maadhiri vayadhaana kaalaththil giramathirukku poi vida vendum ena aasai
irukiradhu ....
நன்றி அருண் பிரசாத்
Deleteநகரம் என்னும் நரகத்தில் நாம் வாழ ஆரம்பித்த பின் கிராம் கணக்கில் கூட நினைக்க மறந்திட்ட கிராமத்தினை கண் முன் கொண்டு வந்ததற்கு நன்ற அண்ணே!!
ReplyDeleteநன்றி ஆவி
Deleteஅரே ஓ சாம்பா
முப்போகம் விளைந்த தாத்தாவின் தெற்கே உள்ள நிலம் தரிசாகி கிடக்கிறது. மேற்கே உள்ள நிலம் தென்னந்தோப்பாகி விட்டது.
ReplyDelete>>
இன்னுமா ஃபிளாட் போட்டு விக்காம இருக்கீங்க?!
யக்கா குசும்பா, அடங்க மாட்டேன்றீங்களே. இது இன்னும் வளர வேண்டிய கிராமம்க்கா
Deleteநானும் உங்களைபோல் கிராமத்தை விட்டு பிரிந்துபோன பாவி தான் செந்தில்.தவறான அரசியல்வாதிகளினால்தான் இந்த நிலைமை.இன்ஜினியரிங்,தொழில்கல்வி ,எல்லாம் நடத்தும் அரசாங்கம் வேலையை மட்டும் நம் பகுதிகளில் உருவாக்குவதே இல்லை.நாகை துறைமுகத்தை மனதில் கொண்டு ஒரு தொழில் பேட்டையை நம் பகுதியில் உருவாக்கி இருந்தால் நாம் எல்லாம் ஏன் நம் மண்ணை விட்டு பிரிந்து போக வேண்டும் ?அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே !
ReplyDeleteமுரளி
தங்களின் கருத்துக்கு நன்றி முரளி
Deleteபலருக்கும் கிராமத்து ஏக்கம்தான்.
ReplyDelete"அந்த கிராமம் கூட சென்னைக்கு நிகராக வளர்ந்து விடுமோ......." காலமாற்றத்தில் வளர்ச்சி தவிர்க்க முடியாததும் கூட.
நன்றி மாதேவி
Deleteகிராமங்கள் குறித்த தங்கள் ஆதங்கம் புரிகிறது! கால மாற்றத்தில் அழிந்து கொண்டிருக்கின்றன எல்லா கிராமங்களும்! என்ன செய்வது?
ReplyDeleteஎல்லாம் காலத்தின் கட்டாயம், நன்றி சுரேஸ்
Deleteஎது கிடைக்கவில்லை என்றாலும் சுத்தமான காற்று கிடைக்கிறது ......மழைக்காலங்களில் குளங்களும் நிறைகின்றன .....மரங்களும் நிறைய .....வாழ்க்கைசெலவும் குறைவே ........
ReplyDelete'சிறியதே அழகு 'என்று தேவைகளுக்கு உட்பட்டு இயங்கும் வகையில் ஆசைகளை வளர்த்துக்கொள்பவர்களுக்கு சிற்றூர்கள் இனிமையாகவே இருக்கும் ....நானும் சென்னையில் 15 ஆண்டுக்காலமும் ஒரு வெளிநாட்டில் 10 ஆண்டுக்காலமும் வசித்தவன்தான்....இப்போதும் மன்னார்குடிக்கருகில் மகிழ்ச்சியுடன் ....இரு சக்கர வாகனங்களை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டே ....!