சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, November 1, 2013

ஆரம்பம் படம் பார்த்த கதை

ஸ்டார் வேல்யு நடிகர்களின் படங்களை பார்க்கும் போது கிடைக்கும் பரவசம் மற்ற படங்களுக்கு கிடைக்காது. முக்கியமாக ரசிகர்களின் அலப்பறைகள், படத்தை விட அதைத்தான் அதிகம் ரசிப்பேன்.


இந்த முறையும் ஆரம்பம் படத்திற்கு முதல் காட்சி எத்தனைய மணியாக இருந்தாலும் போய் விடுவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் முதல் காட்சி எத்தனை மணிக்கு துவக்கம் என்ற க்ளியர் பிக்சர் கிடைக்கவில்லை.

அம்பத்தூர் திரையரங்கங்களில் நாலு மணிக்காட்சி இது போன்ற பெரிய படங்களுக்கு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு முன்பதிவு துவங்கியதும் 11 மணிக்கு தான் முதல் காட்சி என்று அறிவித்தார்கள். கொளத்தூர் கங்காவில் 5 மணிக்காட்சி உண்டு என்று அறிவித்தவர்கள் இடையில் என்ன நடந்தோ முதல் காட்சி 9 மணிக்கு என்று மாற்றி விட்டார்கள்.

பிறகு ஒரு வழியாக பிருந்தாவில் 6 மணிக்காட்சி இருக்கிறது என்று தெரிய வந்ததும் டிக்கெட் எடுத்து விட்டேன். இந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக். கடந்த வாரத்தில் நான் சிவா செல்வின் கேஆர்பி வீட்டில் சந்தித்த போது சிவா "என்னிடம் 4 மணி அல்லது 5 மணிக்காட்சி என்றால் மட்டும் எனக்கும் சேர்த்து எடுக்கவும். அதற்கப்புறம் காட்சி என்றால் வேண்டாம்" என்றார்.


செல்வினுக்கு வெளியூர் செல்ல வேண்டிய புரோகிராம் இருந்ததால் அவர் வரவில்லை என்று சொல்லி விட்டார். ப்ளாஷ்பேக் ஓவர். டிக்கெட் எடுத்ததும் சிவாவுக்கு போன் செய்தால் 6 மணிக்காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கும் எடுத்திருக்கலாமே என்றார். எனக்குள் டொய்ங் என்று பல்பு எரிந்தது.

சரி நம்ம சிவா தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டு இப்ப டிக்கெட் எடுத்து வரவா என்று கேட்டேன். அதெல்லாம் வேண்டாம், இப்ப எடுத்தால் வரிசை மாறி நான் தனியே உட்கார வேண்டியிருக்கும் என்றார். சரிங்க யாரையாவது புடிச்சு பக்கத்து சீட்டு வாங்கி வர்றேன் என்று சொல்லி விட்டு அரங்கிற்கு சென்றால் ஹவுஸ்புல் போர்டு மாட்டி விட்டான்.




சிவாவிடம் எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டேன். இதற்கிடையில் செல்வின் வெளியூர் புரோகிராம் கேன்சலானதால் அவருக்கும் ஒரு டிக்கெட் எடுக்க வேண்டியிருந்தது. என் நண்பன் அசோக் அப்புறம் போலி பன்னிக்குட்டி இருவரும் வருகிறோம் என்று சொன்னதால் மொத்தம் நாலு டிக்கெட் எடுக்க வேண்டியிருந்தது.

நண்பனின் நண்பன் ஒருவன். அவனது மாமனார் பிருந்தா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். அவரைப் பிடித்து கூடுதல் பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கியாச்சி.

இந்த இடத்தில் பிருந்தா திரையரங்கை பற்றிய ஒரு பிளாஷ்பேக் அனுபவம்.

நான் சென்னைக்கு அப்ரெண்டிஸ் படிப்பதற்காக வந்த சமயம். நண்பர்கள் ஒன்று சேர்ந்து காதலுக்கு மரியாதை படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது சென்னையில் பெரிய படங்கள் கூட சில திரையரங்கில் மட்டும் தான் படம் வெளியாகும்.


படம் பெரிய ஹிட்டானதால் எங்குமே டிக்கெட் கிடைக்கவில்லை. பிருந்தாவில் ஒருவழியாக முன்பதிவு செய்து பத்து பேர் போக இருந்தோம். அப்போது என் நண்பன் தணிகைவேல் நான் கார் எடுத்து வருகிறேன் அதில் போகலாம் என்றான்.

எல்லோரும் காத்திருக்க வந்தது காண்டசா கார். அதில் இருந்த நாலு கதவுகளில் மூன்று ரிப்பேர் ஒரு கதவு தான் திறக்கும். கிண்டலடித்துக் கொண்டே பத்து பேரும் அந்த காரில் முண்டியடித்துக் கொண்டு ஏறினோம்.

சர்ரென்று வேகமாக சென்ற கார் திரையரங்கின் உள்ளே நுழைந்தது. ஏற்கனவே ஹவுல்புல்லானதால் பிளாக் டிக்கெட் விற்பவர்கள் காரை சூழ்ந்து டிக்கெட் வேண்டுமா என்று கேட்டார்கள். அது மட்டுமில்லாமல் வித்தியாசமான காராக இருந்ததால் அரங்கில் இருந்த கூட்டம் எங்களையே நோக்கியது.

ஒரு கதவை திறந்து கொண்டு பத்து பேரும் இறங்கியதைப் பார்த்து மொத்த கூட்டமும் கொல்லென சிரித்தது. மானம் போனது தான் மிச்சம். அதன் பிறகு நிறைய படங்கள் அங்கு தான் பார்த்திருக்கிறேன். முக்கியமாக 1996 முதல் 2002 வரை வெளியான ரஜினி படங்கள் எல்லாம் இங்கு தான் பார்த்தேன்.

பிருந்தா பிளாஷ்பேக் ஓவர்.

காலை அரக்கப்பரக்க எழுந்து நண்பர்களை அழைத்துக் கொண்டு திரையரங்கிற்கு சென்றால் ஆல்ரெடி சிவாவும் செல்வினும் ஆஜராகியிருந்தனர். எல்லோரும் சேர்ந்து திரையரங்கின் உள் சென்று அமர்ந்தோம்.

ஒரு அதிதீவிர அஜித் ரசிகன் போல. விஜய் ஒரு %$^&$# பய என்று கத்திக் கொண்டே இருந்தான். ஆகா ஏழரையை கூட்டுவானுங்க போலயே என்று நினைத்த போது போலீஸ் வந்து அவனை அதட்டி அமர்த்தியது. அதன் பிறகு அவனிடம் இருந்து சத்தமே இல்லை.

இதுக்கு மேல நடந்தது எல்லாம் விமர்சனத்தில் சொல்லியாச்சி.

அதனால ஆங் ஒரு மேட்டர்.

இடைவேளையில் ஒன்னுக்கடிக்க சென்ற போது எனக்கு முன்னால் ஒருவன்  ஒன்னுக்கு போய்க் கொண்டு இருந்தான். எனக்கு அடுத்த வரிசையில் சிவா அடுத்தது செல்வின் நின்றோம். ஒவ்வொருவராக மாறிக் கொண்டே இருக்க எனக்கு முன் நின்றவன் மட்டும் இடத்தை விட்டு அகலவில்லை.

சிவாவும் செல்வினும் கூட காரியத்தை முடித்து விட்டு அரங்கிற்கு சென்று விட்டார்கள். அப்பவும் அவன் வெளியேறவே இல்லை. எனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குதுன்னு சலித்துக் கொண்டு அடுத்த வரிசைக்கு மாறினேன். கிட்டத்தட்ட பத்து நிமிடம் அவன் இடத்தை ஆக்ரமித்து இருந்தான். அவன் வயிறு என்ன வாட்டர் டேங்க்கா.

ஆரூர் மூனா


நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், குடு்மபத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள்.

நாளை காலை 7.30 மணிக்காட்சி ஆல்இன்ஆல் அழகுராஜா, விமர்சனம் 11.30க்கு நமது வலைத்தளத்தில் படிக்கலாம். விமர்சனம் அடித்து முடித்ததும் அடுத்த காட்சி பாண்டிய நாடு படத்திற்கு கிளம்ப வேண்டியது தான். ஊரில் இருந்தால் வேலை இருக்கும் ஒரு சினிமாவுக்கு மேல் போக முடியாது. சென்னையில் வீட்டில் தனியாக இருப்பதால் பொழுதுபோக்க சினிமாவுக்கு தான் போயாகனும்.

12 comments:

  1. வாட்டர் டேங்க் - க்ளியர் பிக்சர் இல்லை...! ஹிஹி...

    வீட்டில் நலமா...?

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நலம் தனபாலன்.

      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  2. ஹா... ஹா... ஹா... இதே போல காத்திருந்து எனக்கு முன்னிருப்பவன் குடம் குடமாய் போக... வயிறெரிந்த அனுபவம் எனக்கும் உண்டு செந்தில். ஸேம் பிளட்! நாளை சுடச்சுட விமர்சனம் வரும் என்று ட்ரெய்லர் வேற போட்டு ஆர்வத்தைக் கிளப்பிட்டீங்க..! (எப்டில்லாம் ரீடர்ஸை இழுக்கறாங்கப்பா...!) உங்களுக்கு மீண்டும் என் மகிழ்வான தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேது தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. It's already 12:30 on 2nd NOv. I am waiting for the review of ஆல்இன்ஆல் அழகுராஜா

    ReplyDelete
    Replies
    1. படம் பத்து மணிக்கெல்லாம் முடிஞ்சி வெளியே வந்துட்டேன், ஆனா பார்த்த மயக்கம் இன்னும் தெளியல, அதான் இப்ப போட்டுடுறேன்.

      Delete
  6. படத்தை விட படம் பார்த்த கதை...........திகில்
    தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரிதி அண்ணா

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...