சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்

கண்டிப்பாக இது புது முயற்சி தான் அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இதனை ரசிக்கும் மக்களின் சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். என் கூடவே அமர்ந்து பார்த்த இரண்டு பிரகஸ்பதிகளுக்கே படம் புரியலை, மற்றவர்களை சொல்லவா வேணும்.


பாண்டஸி படங்களுக்குள் நாம் லாஜிக் பார்க்க முடியாது. அதனை சிருஷ்டிப்பவரின் மண்டைக்குள் என்ன ஓடுகிறதோ அது அப்படியே காட்சியாகும். அதனால் லாஜிக் என்ற வஸ்துவை புறக்கணித்து விட்டு படத்தை பார்ப்பதே சாலச் சிறந்தது.

ஒரு உலகம் அதில் ஒரு ஆர்யா ஒரு அனுஷ்கா அவர்களுக்குள் சிலபல ஈகோ மோதல்களுக்கு பிறகு காதல் வருகிறது. சரியாக இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இடைவேளை திருப்பத்திற்காக புல்தடுக்கி செத்துப் போகிறார் அனுஷ்கா.


இரண்டாம் உலகம் அதில் ஒரு ஆர்யா ஒரு அனுஷ்கா, ஆனால் அந்த உலகத்தில் காதல் என்ற கருமாந்திரம் கிடையாது. பிடிச்சவளை தூக்கிக்கிட்டு போய் குடும்பம் நடத்த வேண்டியது தான். அப்படித்தான் இரண்டாம் உலகத்து ஆர்யாவும் அனுஷ்காவும் இருக்கின்றனர். 

அந்த ஊருக்கு ஒரு கன்னித்தாய் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செழிப்பாக இருப்பதால் மற்றொரு கூட்டம் அவரை கடத்த முயற்சிக்கிறது. அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் அந்த கன்னித்தாய் இரண்டாம் உலகத்தில் காதலை நுழைத்து நாஸ்தி பண்ண முடிவெடுக்கிறார். 


அதற்காக முதல் உலகத்தில் காதலி செத்துப் போன சோகத்தில் இருக்கும் ஆர்யாவை கொண்டு வந்து இரண்டாம் உலகத்தில் விட்டு காதலை விதைக்கிறார். அங்கு காதல் முளைத்ததும் அவரை தண்ணிக்குள் தள்ளி விட்டு மூன்றாம் உலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கு ஒரு அனுஷ்காவை பார்த்து காதலை விவசாயம் செய்ய வைக்கிறார்.

இதனால் இந்த படத்திற்கு அடுத்த பாகம் வருவதற்காக சூழ்நிலைகள் தெரிகிறது. மக்களே உஷாராகிக்கவும்.


நான் செல்வராகவனின் ரசிகனாக இருப்பதற்கு காரணம் அவரின் காட்சிப்படுத்தும் திறமை தான். ஒரு காட்சியை இவ்வளவு டீடெயிலிங்காக சில பல குறியீடுகளை வைத்து ரசிக்கும் படி செய்வதற்கு மனிதரை அடிச்சிக்கவே முடியாது.


அது ஓவர் டோஸாகி சில காட்சிகளை தலைகீழாக நின்று பார்த்தாலும் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாதபடி போய் விடுவது தான் சோகம். இந்த படத்திலும் இந்த இரண்டும் இருக்கிறது.

படத்திற்கு ஆணிவேராய் இருப்பது அனுஷ்கா தான். துவக்கத்திலிருந்து இறுதி வரை அவரை சுற்றி தான் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தனது பெர்பார்மன்ஸால் தாங்கி பிடிக்கிறார்.

இரண்டாம் உலகத்தில் யா ஹீ டிஸ்யும் டுமீல் டமால் என பல கோணங்களில் பறந்து பறந்து கன்பைட் காஞ்சனா வேடம் போட்டு இருக்கிறார். முதல் உலகத்தில் பார்த்து ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு பெர்பார்மன்ஸில் பின்னி எடுக்கிறார்.

ஆர்யா சிறந்த படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார். வெல்டன் ஆர்யா. எல்லா படத்திலும் வருவது போல நக்கலும் நையாண்டியுமான நடிப்பை தள்ளி வைத்து கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து இருக்கிறார். வினோத சிங்கத்துடன் கிராபிக்ஸ் பைட். பலே பலே ஆர்யா.

ஒரு சின்ன சம்பவத்தால் கூட ஒருத்தர் மீது காதல் வர வாய்ப்புள்ளது. அந்த காட்சியும் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். முதல் காதலில் சரியாக வந்து இருக்கிறது. 

பாடல்களில் இரண்டு நன்றாக இருக்கிறது. ஏற்கனவே டிரெய்லர்களில் கேட்டதால் ஹிட் அடித்து விட்டது. 

முதல் பாதி மிகச்சிறப்பாக சூப்பராக வந்து இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி தான் நொண்டியடிக்கிறது. மற்றபடி நன்றாக ரசித்து விட்டு வரலாம். மொக்கைப்படம்லாம் இல்லை.

காதலால் நாகரீகமடைந்த மனிதன் நாகரீகமில்லாத உலகத்தில் காதலை நுழைக்கிறான். அதனால் அந்த நாகரீகமில்லாத இரண்டாம் உலகம் நாகரீகம் அடையத் துவங்குகிறது என்பது தான் படத்தின் குறியீடு என்பது நான் பார்த்த வரையில் எனக்கு புரிந்தது. ஆனால் இது அப்படியே வேறு மாதிரி மற்றவருக்கு புரியும் என்பது தான் செல்வராகவன் டச்.

ஆரூர் மூனா

33 comments:

  1. "காதலால் நாகரீகமடைந்த மனிதன் நாகரீகமில்லாத உலகத்தில் காதலை நுழைக்கிறான். அதனால் அந்த நாகரீகமில்லாத இரண்டாம் உலகம் நாகரீகம் அடையத் துவங்குகிறது என்பது தான் படத்தின் குறியீடு என்பது நான் பார்த்த வரையில் எனக்கு புரிந்தது. "


    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் . .


    தல சுத்துதே தம்பி

    ReplyDelete
    Replies
    1. படிச்ச உங்களுக்கே சுத்துதே, பார்த்த என் கதியை நினைத்துப் பாருங்கள்

      Delete
    2. //படிச்ச உங்களுக்கே சுத்துதே, பார்த்த என் கதியை நினைத்துப் பாருங்கள்// :)

      Delete
  2. //இரண்டு பிரகஸ்பதிகளுக்கே படம் புரியலை//

    ??


    //பாண்டஸி படங்களுக்குள் நாம் லாஜிக் பார்க்க முடியாது. அதனை சிருஷ்டிப்பவரின் மண்டைக்குள் என்ன ஓடுகிறதோ அது அப்படியே காட்சியாகும். அதனால் லாஜிக் என்ற வஸ்துவை புறக்கணித்து விட்டு படத்தை பார்ப்பதே சாலச் சிறந்தது.//

    வழிமொழிகின்றேன் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவன் சுப்பு

      Delete
  3. //மற்றபடி நன்றாக ரசித்து விட்டு வரலாம்//

    யாரை அனுஷ்காவையா ?

    ReplyDelete
  4. ////இரண்டு பிரகஸ்பதிகளுக்கே படம் புரியலை//

    யார் அந்த அப்பாவிகள் ?

    ReplyDelete
    Replies
    1. ஒருத்தர் போலி பன்னிக்குட்டி, இன்னொருத்தரு அசோக்னு என் நண்பன்

      Delete


  5. திருவாரூர் நடேஷ் தியேட்டர்ல தீபாவளிக்கு அழகுராஜா.

    இப்போ இரண்டாம் உலகம்.

    ஆக மொத்தத்துல ...............

    ReplyDelete
    Replies
    1. வேறென்ன டமார்ர்ர்ரு தான்

      Delete
  6. இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
    இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    http://asokarajanandaraj.blogspot.in/2013/11/blog-post_22.html

    உங்களுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
    2. படம் பார்க்காமல் நெகட்டிவ் விமர்சனம் பரப்புவதை தவிர்க்கவும்..... செல்வராகவனுக்கு சரக்கு தீந்துபோசுன்னு யாரு சொன்னா ?

      Delete
    3. எனது கணினி Mother Board கோளாறு...

      Just visit : http://babyanandan.blogspot.in/2013/11/blog-post.html

      From Android

      Delete
  7. எங்கிட்டே மட்டும் சொல்லுங்க...
    எவ்ளவு வாங்கினீங்க செல்வராகவரிடம்?
    ஒரு படத்துக்கு கோனார் உரை போட்ட முதல் ஆள் நீர்தான்யா.

    ReplyDelete
    Replies
    1. பின்ன நான் பின்நவீனத்துவவாதி என்பதை எப்படிதான் மக்களுக்கு தெரியப்படுத்துறது

      Delete
  8. நாங்கல்லாம் 'ஆல் இன் ஆல் அழகு ராசாவுக்கே ' அசராதவிங்க இந்த படத்த விடுவோமா பார்த்துட வேண்டியதுதான் .

    படம் பார்த்த கதை மிஸ்ஸிங் ???

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு போட்டுடுவேன்

      Delete
  9. நல்லாயில்லை என்றாலும் இந்த டைரக்டரை விட்டே கொடுக்க மாட்டீங்க. அது தான் அந்த டைரக்டருக்கு நல்ல டைம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நன்றி அமுதா கிருஷ்ணா

      Delete
  10. Replies
    1. நன்றி வருண்

      Delete
  11. எனக்கு படம் பிடிச்சது அண்ணே.. வழக்கமான சைக்கோ டச் சை தவிர்த்து கிளீன் ஆ ஒரு படம் செல்வராகவன் கொடுத்தது ரொம்ப பிடித்தது.

    ReplyDelete
  12. என்ன மாதிரி ஆளுக்கு குறியீடெல்லாம் புரிஞ்சுக்கற அளவுக்கு ‘வெவரம்’ பத்தாது தம்பி...! ஒரு முறை பாத்தா தப்பில்லைங்கற அளவுக்கு உங்க விமர்சனம் சொல்றது மட்டும் புரியுது...!

    ReplyDelete
  13. காதலால் நாகரீகமடைந்த மனிதன் நாகரீகமில்லாத உலகத்தில் காதலை நுழைக்கிறான். அதனால் அந்த நாகரீகமில்லாத இரண்டாம் உலகம் நாகரீகம் அடையத் துவங்குகிறது என்பது தான் படத்தின் குறியீடு

    ஆகா ஆகா பேசாமா இந்த படத்த நீங்க எடுத்து இருக்கலாம் அண்ணே

    ReplyDelete
  14. புல்தடுக்கி செத்துப் போகிறார் அனுஷ்கா...........குசும்பு??

    ReplyDelete
  15. Kilincha padatha poi ippadi thooki pidikiringale... machi...

    sivaparkavi
    sivaparkavi.wordpress.com

    ReplyDelete
  16. புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்தால் தான் சினிமா ரசிக்கும்.........

    ReplyDelete
  17. இனியும் யாராவது செல்வராகவனை வைத்து படம் எடுத்தால்,குடும்பத்தோடு கோடம்பாக்கத்தில் பிச்சை எடுப்பதை பார்க்கலாம்.(தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து செல்வராகவனிடம் இருந்து 5 கோடி மதிப்புள்ள சொத்தை தயாரிப்பாளர் தன் வசப்படுத்திகொண்டார்.)

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...